top of page
Kirupakaran

வேதாகமம்


நான் தேவனின் வார்த்தையைத் தியானித்துக் கொண்டிருக்கும்போது, இந்த அற்புதமான வசனத்தைப் படித்தேன். இந்தவசனம் நம்மில் அநேகருக்கு பரிச்சயமான ஒரு வசனம்.


'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும்கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.எபிரெயர் 4:12

இந்த வசனத்தின் மூலம் ஆண்டவர் எனக்குப் பல காரியங்களைக் கற்றுக் கொடுத்தார். அதை இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளேன்.

  1. தேவனுடைய வார்த்தை என்றால் என்ன?

  2. இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்றால் என்ன ?

  3. தேவனுடைய வார்த்தையின் சக்தியை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?


தேவனுடைய வார்த்தை என்றால் என்ன?


நாம் படித்த வேத வசனத்தை சற்றுப் பிரித்து ஆராய்ந்து பார்ப்போம் “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும்உள்ளதாயும்”


தேவனுடைய வார்த்தை என்பது நம்முடைய வேதாகமத்தைக் குறிக்கின்றது. வேதாகமம் நம்முடைய ஜீவ புஸ்தகம். வேதத்தைக் குறித்த, அறியப்படாத உண்மைகள் பலவற்றை நாம் இணையத்தில் காணலாம்.


  • பைபிள்”/ "வேதாகமம்" என்ற சொல் கிரேக்க வார்த்தையான “தா பிப்லியா” என்பதிலிருந்து வந்தது. இதற்கு “புத்தகங்கள்” அல்லது “சுருள்கள்” என்று பொருள்.

  • பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும் , புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் உள்ளன. மொத்தம் 2 கோடி வசனங்கள் உள்ளன.

  • பழைய ஏற்பாட்டை எழுத 1,000 ஆண்டுகள் எடுத்தது. புதிய ஏற்பாட்டை எழுதி முடிக்க 50-75 ஆண்டுகள் ஆனது.

  • இதில் 40 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பங்களிப்பு உள்ளது. ராஜாக்கள், விவசாயிகள், தீர்க்கதரிசிகள், தத்துவவாதிகள், மீனவர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்கள் என வாழ்க்கையின் பல நிலையில் உள்ளவர்கள் இதை எழுதி உள்ளனர்.

  • வேதாகமம் 690 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  • உலகின் மிகப்பெரிய மதங்களான கிறிஸ்தவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் உள்ளிட்டவை பழைய ஏற்பாட்டைப்பின்பற்றுகின்றன. இஸ்லாம் பழைய ஏற்பாட்டில் உள்ள சில புத்தகங்களை மட்டுமே பின்பற்றுகிறது.

  • வேதாகமத்தில் 6,000 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் உள்ளன. 3,000 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசன வசனங்கள்ஏற்கனவே ஏதோவொரு வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சுமார் 3,000 தீர்க்கதரிசனங்கள் இன்னும்நிறைவடையவில்லை.


“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்” – வேதாகமம் நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிந்துகொள்வதற்கான அடிப்படை மட்டும் அல்ல, இது நம் வாழ்வில் நமக்குத் தேவையான அனைத்தையும் தருகிறது (கீழேஇருக்கிற 10 குறிப்புகள் Blueletterbible.org இல் இருந்து எடுக்கப்பட்டது)


  1. தேவனின் வார்த்தை நாம் செய்யும் செயல்களுக்கு உண்மையான ஆரோக்கியம், பலன், செழிப்பு மற்றும் வெற்றியைக்கொண்டுவருகிறது (சங்கீதம் 1: 3).

  2. தேவனுடைய வார்த்தைக்கு குணப்படுத்தும் சக்தியும் அடக்குமுறையிலிருந்து விடுவிக்கும் சக்தியும் உண்டு (சங்கீதம்107: 20, மத்தேயு 8: 8, மத்தேயு 8:16).

  3. தேவனுடைய வார்த்தை நம்மை சுத்தப்படுத்துகிறது. தேவனின் வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிந்தால், நம்முடைய வழிகள்சுத்திகரிக்கப்படும் (சங்கீதம் 119: 9, யோவான் 15: 3, எபேசியர் 5:26).

  4. நம்முடைய இருதயங்களில் மறைந்திருக்கும் தேவனுடைய வார்த்தை பாவத்திலிருந்து நம்மைக் காக்கிறது (சங்கீதம்119: 11).

  5. தேவனுடைய வார்த்தை ஒரு ஆலோசகராய் இருக்கிறது. தேவனின் வார்த்தையில் நாம் மகிழ்ச்சியடையும்போது, அதுஅறிவுரை வழங்கி நமக்கு வழிகாட்டுகின்ற வளமான ஆதாரமாகிறது (சங்கீதம் 119: 24).

  6. தேவனின் வார்த்தை பலத்தின் ஆதாரமாகும் (சங்கீதம் 119: 28).

  7. தேவனின் வார்த்தை அதை விரும்புபவர்களுக்கு அமைதியைத் தருகிறது. அவை பாதுகாப்பானவை, பாதுகாப்பானஇடத்தில் நிற்கின்றன (சங்கீதம் 119: 165).

  8. தேவனுடைய வார்த்தையைக் கேட்பது விசுவாசத்தை உருவாக்குகிறது (ரோமர் 10:17).

  9. தேவனுடைய வார்த்தையைக் கேட்பது நித்திய ஜீவனுக்கு இன்றியமையாதது. தேவனுடைய வார்த்தையைக்கேட்காவிட்டால் ஒருவர் மரணத்தின் பாதையிலிருந்து ஜீவனுள்ள வாழ்க்கைக்கு செல்ல முடியாது (யோவான் 5:24, யாக்கோபு 1:21, 1 பேதுரு 1:23).

  10. தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படும் பொழுது பரிசுத்த ஆவியானவர் மிகுந்த பலத்துடன் செயல்பட முடியும்(அப்போஸ்தலர் 10:44).


இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்றால் என்ன ?


'தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும்கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.எபிரெயர் 4:12


இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும்– ஆசிரியர் ஏன், இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார் ?அதற்கு பதிலாக ஒரு வாள் அல்லது ஒரு கத்தி என்று அழைத்திருக்கலாம் .


இருபுறமும் கருக்குள்ள பட்டயம் இரு புறங்களிலும் வெட்டக்கூடிய திறன் கொண்டது. நாம் வாழ்க்கையில் இரண்டுபக்கங்களைக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தனிப்பட்ட வாழ்வு மற்றும் வெளியரங்கமான வாழ்வு. நாம் வேதத்தை படிக்கும்போது அது நம்முள் ஊடுருவிச் சென்று நம் இதயத்தின் உண்மையான நோக்கங்களை அறிந்து கொள்ளும் சக்தியைக் கொண்டது.


ஆன்மாவுக்கும் ஆவிக்கும் இடையிலான வேறுபாடுகள்

  • ஆத்மா நம்முடைய உள் வாழ்க்கையைப் பற்றிய தனித்துவத்தில் அதிக கவனம் செலுத்தும்.

  • ஆவி உள் வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட தொடர்பு (கிறிஸ்து ஏசுவின் பரிசுத்த ஆவி ) மற்றும்சக்தியில் அதிக கவனம் செலுத்தும்.

  • தேவனிடத்தில் இருந்து வரும் பரிசுத்த ஆவியை பல முறை சாத்தான் ஏமாற்றி தன்னுடைய கள்ள ஆவியைக்கொண்டுவருகிறான். ஆனால் நம் தேவன் எது பரிசுத்த ஆவி / கள்ள ஆவி என்று பகுத்தறியும் அறிவைநமக்குத் தருகின்றார்.

கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும்

  • கணுக்கள் என்பது மனிதனின் எல்லா உடல் உறுப்புகளையும் ஒன்றாக இணைக்கக்கூடிய உட்பாகம். ஊன் என்பது மனிதனின் வெளியே உள்ளதைக் குறிக்கும்.

  • அநேக நேரம் நாம் பழைய பகைகளை பல சந்ததிகளாகத் தொடர்ந்து வருவோம் (ஒரு கணுக்களைப் போல), தேவனுடைய வார்த்தை மறக்க முடியாத அந்த பழைய பகைகளில் இருந்து நம்மை மாற்றிக் கொடுக்கும் சக்தியைக் கொண்டது.

இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும்

  • எண்ணங்கள் (நினைவுகள்) - சிந்திப்பது தான் உண்மையில் எல்லாவற்றின் தொடக்கமாகும். எந்தவொருகண்டுபிடிப்பும், சாதனை அல்லது செயல்பாடும் ஒரு சிந்தனையில் தான் தொடங்குகிறது. இது மனிதனின்உள்ளார்ந்த தன்மை. எண்ணங்கள் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகின்றன.

  • மனப்பான்மை (யோசனைகள்) - நம் யோசனைகள் நம்முடைய மனப்பான்மையை உருவாக்குகின்றன. நாம்எவ்வாறு இருக்கவேண்டும் என்ற மனப்பான்மை நம் யோசனைகள் மூலம் வெளியாகும். சில நேரங்களில் வெகுதூரம் நடந்து சென்று கொண்டு இருக்கும்போது, இதற்கு மேல் நம்மால் முடியாது என்று யோசித்த உடன்நம்மால் நடக்க முடியாது அல்லது அப்போது தான் நமக்கு கால் வலிப்பது போன்று தோன்றும். இந்தநம்முடைய எண்ணத்தின் படியே செயலும் இருக்கும்.


தேவனுடைய வார்த்தையின் சக்தியை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?


தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு வழங்கப்பட்ட கடவுளின் பரிசுத்த வார்த்தை – வேதாகமம். இது நமக்கு பல சக்தியைதரும்.

ஆரம்பகால கிறிஸ்தவர்களிடம் அச்சிடப்பட்ட வேதாகமம் இல்லை அல்லது அவர்களின் சொந்த மொழியில்மொழிபெயர்க்கப்படவில்லை. இப்போது நம்மிடம் 690 வேதாகம மொழிபெயர்ப்புகள் உள்ளன. இது போதாது என்று நமக்கு பல வகையான மின் புத்தக / பதிப்புகள் உள்ளன.

நாம் வேதாகமத்தின் சக்தியை எவ்வாறு பெற்றுக் கொள்வது


வேதத்தை வாசிப்பது

  • தினமும் அதிகாலையில் வேதத்தை வாசிக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் பல காரியங்களால் சூழ்ந்து கொள்ளப்படுகிறோம். எந்த ஒரு காரியமும் நம்மை ஆட்கொள்ளும் முன்பாக , அதிகாலையில் நாம் வேதத்தைவாசிக்கவேண்டும். அந்த நாளில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை வேதம் நமக்கு வழங்கும்.

  • நமக்கு கஷ்டம் வரும்போது மட்டும் வேதத்தை வாசிப்பது சரி அல்ல, ஆண்டவரின் கிருபையை / இரக்கத்தைப் பெறவேண்டும் என்றால் வேதத்தை அனுதினமும் வாசிக்கவேண்டும்.

  • வேதத்தை வாசிக்கும் போது, நம்முடைய இருதயத்தில் / ஆத்துமாவில் சென்று கிரியை செய்யும் வலிமை அதற்கு உண்டு. வேதத்தை ஒரு சடங்காக படிக்காதீர்கள்.

  • வேதத்தை வாசிக்கும் போது ஆண்டவர் "எனக்கு என்ன சொல்கிறார் ?" என்ற எண்ணத்தோடு படியுங்கள். அநேகநேரம் நாம் படிப்பது நம்முடைய மூளைக்கு புரியாது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வந்து அவர்சொல்ல வேண்டிய காரியங்களைத் தெளிவுபடுத்துவார். நாம் ஒரு தாகத்தோடு படித்தால் மட்டும் தான் இந்தஅனுபவத்தை தேவன் நமக்கு அருளுவார்.

'அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாகநிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். ' எபிரெயர் 4:13


'அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொருவார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். ' மத்தேயு 4:4


வேதத்தை தியானிப்பது

  • வேதத்தை தியானிப்பது என்பது நமக்கு ஒரு நொடியில் வரும் காரியம் அல்ல. இதற்கு நாம் நேரம் ஒதுக்கவேண்டும். வேதத்தை தியானிப்பது நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒரு செயலாக இருக்கவேண்டும். ஆண்டவர்நம்மிடம் பேச அனுதினமும் ஏங்குகிறார். தியானிக்கும் பொழுது அவர் பரிசுத்த ஆவி மூலமாக நம்மோடு பேசுகிறார்.

  • நம்மில் அநேகர் வாட்ஸப் / யு ட்யூப் வாசகங்களைக் கேட்பதை தியானிப்பது என்று நினைக்கிறோம். வேதத்தைவாசித்து தியானிப்பது தான் உண்மையான தியானம்.

  • காலையில் எழுந்தவுடன் வேதத்தை வாசித்த பிறகு அவருடைய வார்த்தையைத் தியானிக்கவேண்டும். பல நேரம் நாம்படிக்கும் வசனங்கள் நம்முடைய மூளைக்குப் புரியாது. அந்த சமயங்களில் அதை மறுபடியும் மறுபடியும் படியுங்கள். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நம்முடைய வேதத்தின் புரிதல் மாறும். புரியாவிட்டால் ஏதேனும் ஒரு வேததியான புத்தகத்தைப் படியுங்கள். இதன் மூலம் ஆண்டவர் இன்னும் அதிகமாக பல வசனங்கள் மூலம் உங்களோடுபேசுவார். பல நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவருடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்துவார்.

  • நீங்கள் தியானிக்க நேரம் ஒதுக்கவில்லை என்றால், ஆண்டவர் உங்களுக்கு அர்த்தங்களை வெளிப்படுத்த மாட்டார்.

  • தியானிப்பது உங்களுக்கான கடவுளின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். கடவுளின் சித்தத்தைப் புரிந்துகொண்டவுடன், நீங்கள் அதற்கு ஒப்புக்கொடுக்கத் தொடங்குவீர்கள். உங்கள் வாழ்க்கைக்காக அவர்திட்டமிட்டுள்ள ஆசீர்வாதங்களை அவர் உங்களுக்குக் கொடுப்பார். சங்கீதம் 1 அதை நன்றாக விளக்குகிறது.

'கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன்பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிறமரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். ' சங்கீதம் 1:2-3

  • தேவன் விரும்பியபடி உங்கள் வாழ்க்கை சரியானதாக இருக்க வேண்டுமென்றால், அனுதினமும் தியானியுங்கள்.

ஜெபம்

  • ஜெபம் என்பது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கைக்கான ஆக்ஸிஜன். இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்றநம்பிக்கையை வைத்திருங்கள். அவர் உங்களுக்கு அருகில் இருக்கிறார் என்பதை மறந்து விடாதிருங்கள். நீங்கள்உங்கள் தந்தையிடம் எப்படிப் பேசுவீர்களோ, அப்படியே அவரை அப்பா என்று கூப்பிடுங்கள் . உங்கள்இருதயத்தை அவரிடம் திறந்து எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள். ஜெபிப்பது என்பது வேறு ஒன்றும்இல்லை, நாம் எப்படி நம்முடைய அப்பாவிடம் பேசுவமோ அதுப்போல நம்முடைய தேவனிடத்தில் பேசுவது தான்ஜெபம்.

  • நாம் அவரிடம் ஆவியில் நிறைந்து ஜெபிக்கும் போது அவர் நமக்கு பல காரியங்களை வெளிப்படுத்துவார்.பல நேரம்நாம் செல்லும் தவறான பாதையை வெளிப்படுத்துவார். நமக்காக அவர் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைக்காண்பிப்பார்.

  • அனுதினமும் ஜெபியுங்கள். அவர் தான் நம்முடைய வாழ்வை பரிசுத்தமாக்க முடியும்.

கஷ்ட காலங்களில் நமக்கு ஒரு வழிகாட்டி

  • தேவனுடைய வேதம் தாம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பட்டயம் / கவசம். என்னுடைய பதிவு "தேவனுடைய கவசம்" வாசியுங்கள் .

  • ஆண்டவரைப் பின் தொடரும் போது நமக்குப் பாடுகள் அனேகம் வரும், ஆனால் அந்தப் பாடுகளில் இருந்து நமக்கு பாதுகாப்பு தருவது தேவனுடைய வார்த்தை. பாடுகள் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையேஅல்ல.

'தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர்கேடகமாயிருக்கிறார். ' 2 சாமுவேல் 22:31


நீங்கள் வேதத்தை படிக்கும்போது சாத்தானிடமிருந்து வரும் போராட்டங்கள்

  • நம்மில் யாரும் வேதத்தைப் படிப்பதை சாத்தான் விரும்புவதில்லை.

  • நாம் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதில் சாத்தானுக்கு விருப்பமில்லை. ஆனால் நாம் அந்தவார்த்தையைத் தியானித்துப் புரிந்துகொண்டால் தேவ வார்த்தை நமக்குப் போராடும் சக்தியைக் கொடுக்கும். தேவனுடைய வார்த்தை நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை விடுவித்து, சாத்தான் நமக்குள் வைத்திருக்கும்அடிமைத்தனங்களிலிருந்து நம்மை விடுவிக்கும்.

  • பரிசுத்த வேதத்தைக் கண்டு சாத்தான் பயப்படுவான்.

  • நாம் வேதத்தை அறிந்தவுடன் சாத்தானின் தந்திரங்கள் / ஏமாற்றுதல்கள் நம்மில்செயல்பட முடியாது. சாத்தான்நம்மை சோதிக்கும் போது, கடவுளின் பிள்ளைகளாகிய நாம் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தவும், வனாந்தரத்தில் இயேசு செய்ததைப் போலவே அவனுக்குக் கட்டளையிடவும் நமக்கும் அதிகாரம் உண்டு.

  • வேதாகம அறிஞர்கள் / போதகர்கள் அனைவரையும் விட சாத்தானுக்கு வேதாகமம் நன்றாகத் தெரியும். அநேகநேரங்களில் பொய்யான ஆவிகள் மூலம் பரிசுத்த ஆவியானவரை பேசுவது போல தோற்றமளித்து அவன் நம்மை ஏமாற்றும் விஷயங்களில் நாம் கவனமாக இருக்கவேண்டும். எந்த ஒரு ஆவியானாலும் சோதித்து தேவனுடையபரிசுத்த ஆவியின் படி வழிநடத்தக் கேளுங்கள்.

  • நீங்கள் வேதத்தைப் படிக்கத் தொடங்கி அவருக்கு நெருக்கமான வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சாத்தான்நமக்குப் பல போராட்டங்களைக் கொண்டு வருவான். உங்கள் சூழ்நிலைகள் / பிரச்சனைகளை விட உங்கள் தேவன்பெரியவர்.


'ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின்சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ' எபேசியர் 6:12


'என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார். ' 2 சாமுவேல் 22:18


வேதம் வாக்குத்தத்தங்கள் நிறைந்தது. நாம் அந்த வாக்குத்தத்தங்களை முழுமையாக நம்பி அதை சார்ந்திருக்கும் பொழுது எந்த சூழ்நிலையிலும் பீதியடையமாட்டோம். இதுவே நமக்கு ஒரு நல்ல செய்தி !!!


 




1,409 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page