top of page
  • Kirupakaran

விசுவாசத் தொகுப்பு


நம்மில் பலருக்கு உள்ளுணர்வு இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏதாவது நடக்கும் என்று உணரும்பொழுது அது அப்படியே நடக்கும். ஆனால் தேவனுடனான கிறிஸ்தவ நடையில் விசுவாசம் வித்தியாசமானது. விசுவாசம் என்பது உங்களுடைய உள்ளுணர்விலிருந்து வேறுபட்டது. விசுவாசம் என்பது நீங்கள் விசுவாசிப்பதைப் பெற்றுக் கொள்ளுவீர்கள் என்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும், காரியங்கள் நடக்கும் முன்பே விசுவாசிப்பது. கிறிஸ்தவ விசுவாசத்தின் வரையறை எபிரேயர் 11:1 இல் கொடுக்கப்பட்டுள்ளது. "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது".


நாம் ஒவ்வொரு நாளும் ஆண்டவரோடு நடக்கும்போது, விசுவாசம் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு முக்கியமான அடிப்படையாக இருக்கிறது. விசுவாசம் இல்லாமல் நாம் தேவனைப் பிரியப்படுத்த முடியாது.

"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்". எபிரேயர் 11:6


தேவனுடைய மகிமையைக் காண்பதற்கு, விசுவாசத்தை மிகவும் திறம்படச் செய்ய, அது நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் பல ஒழுங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் விசுவாசம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுவதைப் பாருங்கள். "நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய்". 1 தீமோத்தேயு 6:11-12.


விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட, நமக்கு நீதி, தேவபக்தி, பொறுமை மற்றும் சாந்தகுணம் ஆகியவை தேவை. இதுவே விசுவாசத் தொகுப்பு. விசுவாசத்துடன் தொடர்புடைய பிற ஒழுங்குகள் என்னென்ன?


விசுவாசத்துடன் தொடர்புடைய ஒழுங்குகள்


பரிசுத்தமும் விசுவாசமும்

பரிசுத்தமும் விசுவாசமும் எவ்வாறு கைகோர்த்துச் செல்கின்றன என்பதற்கு வேதத்திலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். சிம்சோன் என்ற மனிதனைப் பாருங்கள். அவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். அவன் தனது வெறும் கைகளால் ஒரு சிங்கத்தை கிழித்துப் போடும் அளவிற்கு கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு வல்லமை அளித்திருந்தார்.

  • சிம்சோனின் பிறப்பும் ஆசீர்வாதமும் - "பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்". நியாயாதிபதிகள் 13:24-25

  • கர்த்தருடைய ஆவியானவர் மூலமாக சிம்சோனின் வல்லமை வெளிப்பட்டது.

"அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை". நியாயாதிபதிகள் 14:5-6

  • நியாயாதிபதிகள் 14,15 ஆம் அதிகாரங்களில் தேவனின் வல்லமையை மகிமைப்படுத்திய சிம்சோனின் பல காரியங்களை வாசிக்கலாம். 16ஆம் அதிகாரத்திற்கு வரும்போது, ​​அவன் ஒரு விபச்சாரியுடன் சென்று அவளுடன் இரவைக் கழித்த அவனது பாவமான செயலையும்,தெலீலாளுடனான அவனுடைய பரிசுத்தமற்ற சேர்க்கையின் காரணமாக, அவன் கண்களை இழந்ததையும் வாசிக்கலாம்.

"பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னைச் சிறுமைப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்". நியாயாதிபதிகள் 16:1,4-6,16-17,21

  • அவன் கண்களை இழந்த பிறகு, தேவ வல்லமையை இழந்தான். அது அவன் விபச்சாரிக்காகவும் பின்னர் தெலீலாளுக்காகவும் விழுந்த அவனது பரிசுத்தமற்ற செயலால் ஏற்பட்டது.

நமக்கான பாடம்

  • இயேசுவோடு நாம் நடக்கையில், இயேசுவின் மீதான நமது விசுவாசம் வலுவாகவும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை தேவனுடன் பரிசுத்தப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.


ஜெபம் மற்றும் உபவாசமும், விசுவாசமும்

“பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்”. எபேசியர் 6:16-18


  • ஆவிக்குரியப் போருக்கு எதிராக காத்துக் கொள்ள தேவனின் ஆயதவர்க்கத்தை பவுல் கற்பிக்கிறார். நம் விசுவாசம் இன்னும் வலுவாக இருக்க, "விசுவாசம் என்னும் கேடகத்தை" பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறார். “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே” ஜெபிக்கும்படி அறிவுறுத்துகிறார்.

  • நம்முடைய சொந்த விசுவாசத்திற்காக நாம் ஜெபிக்க வேண்டும். நாம் தேவ சித்தத்தோடு ஒன்றுபட்டால் மட்டுமே விசுவாசம் பயனுள்ளதாக இருக்கும். "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்". 1 யோவான் 5:14-15


வேத தியானிப்பும் விசுவாசமும்

"ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்". ரோமர் 10:17


  • கேள்வியினாலே - தேவனின் சத்தம்

  • கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் - வார்த்தையை மீண்டும் மீண்டும் தியானிப்பதன் மூலம் வருகிறது.

  • ஒரு கிறிஸ்தவரின் இரண்டு கைகள் - இடது கை: விசுவாசம் என்னும் கேடகம் / வலது கை: ஆவியின் பட்டயம் (தேவ வார்த்தை). அனைத்தும் சேர்ந்து "நீதியின் கவசம்" என்று அழைக்கப்படுகின்றன. "சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,". 2 கொரிந்தியர் 6:7

  • வேத தியானிப்பு விசுவாசத்தை வளர்க்க நமக்கு உதவுகிறது. இயேசுவின் மீதுள்ள விசுவாசம் வேதத்தை அதிகமாக தியானிக்க உதவுகிறது. தேவனின் நீதியுள்ள வார்த்தையின்படி நடப்பதன் மூலம் நாம் நிலைத்து நிற்கிறோம்.

  • நாம் அவருடைய வார்த்தையைப் புறக்கணித்தால், வேறு எதுவும் நம் விசுவாசத்தைத் தூண்ட முடியாது.

சாட்சியும் விசுவாசமும்

"விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்". 2 கொரிந்தியர் 4:13


  • இங்கே, பவுல் தேவ ஆவி தன்னை வழிநடத்துவதாக விசுவாசித்தார். அவர் தேவனுக்கு ஒரு ஜீவனுள்ள சாட்சியாக தன்னை நிரூபித்தார், அதனால் அவருடைய செயல்களின் மூலம், விசுவாசம் சுவிசேஷத்தை முன்னேற்ற முடியும்.

  • சுவிசேஷத்தை நாம் எவ்வளவு அதிகமாகப் பகிர்ந்து கொள்கிறோமோ, அந்தளவுக்கு சுவிசேஷத்தின் வல்லமையிலும் புரிதலிலும் நம்முடைய உறுதி அதிகமாக இருக்கும்!

  • நம்முடைய சாட்சியைப் பகிர்ந்துகொண்டு தேவனுக்குச் சாட்சியாக இருக்கும்போது விசுவாசம் அதிகரிக்கிறது.

தர்மமும் விசுவாசமும்

“என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்”. யாக்கோபு 2:14-17


  • “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்”.

  • விசுவாசத்தை பார்க்க முடியாது ... "கிரியைகளை" மட்டுமே பார்க்க முடியும், இங்கே பவுல் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் நாம் செய்யும் நல்ல செயல்களை விளக்குகிறார்.

  • இயேசு பாவிகளின், தொழுநோயாளிகளின் நண்பராக இருந்தபோது இதை தமது வாழ்க்கையில் நிரூபித்தார். ஏழைகளுக்கு உணவளிக்க அவர் அற்புதங்களைச் செய்தார். அதிலிருந்து, அவரது செயலால் தொடப்பட்ட ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

  • அதே போல் நாம் செய்யும் நல்ல கிரியைகளின் மூலம் நம் விசுவாசம் அதிகரிக்கிறது. ஒன்றுக்கொன்று துணையாக இருப்பது போல, நமது நற்கிரியைகள் விசுவாசத்தையும், விசுவாசம் நற்கிரியைகளையும் அதிகரிக்கிறது.





Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page