நம்முடைய அன்றாட வாழ்விலே, நம் எல்லா செயலுக்கும் ஒரு வெகுமதி வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு தள்ளப்பட்டு உள்ளோம். உதாரணத்திற்கு, கிரெடிட்/டெபிட் கார்டைப் பயன்படுத்தும் போது, கார்டைப் பயன்படுத்துவதற்கு ரிவார்டு பாயிண்டுகள் உள்ளன. ஒரு கடையில் அதிகமாக வாங்கும்போது, கார்டில் ரிவார்டு புள்ளிகள் சேர்க்கப்படும். எனவே அந்த பொருள் வாங்கிய பின்பு நமக்கு ஆட்-ஆன் வெகுமதி கிடைக்கிறது. நாம் முதலில் வாங்கியதை விட அதிகமாகப் பெறுகிறோம், குறிப்பிட்ட நேரத்தில் 2X வெகுமதிகளைப் பெறுகிறோம். மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நாம் அந்த பாயிண்ட்களை சேர்த்துக் கொண்டே வந்து, அதை வைத்து நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அவற்றை மீட்டெடுக்கிறோம். இதை நம்மில் பலர் பண்ணிக்கொண்டு இருக்கலாம்.
ஆவிக்குரிய வாழ்வில் இதேபோன்ற சூழ்நிலையை இயேசு சீடர்களால் எதிர்கொண்டார், மத் 19:27-30
இதை நன்றாகப் புரிந்துகொள்ள, மத்தேயு 19:16-21ஐப் படிக்கவும். அங்கு இயேசு ஒரு "செல்வந்தரை" சந்திக்கிறார். அந்த மனிதர் நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் தான் பின்பற்றுவதாகக் கூறுகிறார், மேலும், நித்திய ஜீவனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு "உன்னுடைய எல்லா செல்வங்களையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்தால் நித்திய ஜீவனைப் பெறுவாய்” என்று கூறினார். இதைக் கேட்டு அந்த செல்வந்தர் மனம் சோர்ந்து அவரை விட்டு விலகிச் செல்கிறார்.
சீடர்கள் பக்கத்தில் நின்று இயேசுவுக்கும் / செல்வந்தருக்கும் நடந்த இந்த உரையாடல்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர். இதற்குப் பிறகு பேதுரு இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்,
'அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும்என்றான். 'மத்தேயு 19:27
பேதுருவின் கேள்வியை நான் சுருக்கமாக வேறு விதமாக சொல்கிறேன். "ஐசுவரியவானிடம் செல்வம் இருந்தது, ஆனால் எங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டு நாங்கள் உங்களுடன் வந்தோம், உங்களைப் பின்தொடர்வதால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? இதனால் எங்களுக்கு என்ன லாபம்?"
இயேசுவோடு இருந்த சீடர்களே இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கும் போது , "வெகுமதி மனப்பான்மை தலைமுறையில்" வாழும் நாம் பதிலுக்கு நமக்கு என்ன கிடைக்கும் என்ற அதே கேள்வியை இயேசுவிடம் நிச்சயமாகக் கேட்டிருப்போம்.
இயேசுவைப் பின்பற்றுவதன் வெகுமதிகள்
வெகுமதியைப் பொறுத்தவரை ஆண்டவர் செயல்படும் அடிப்படைக் கொள்கையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இயேசுவிற்கென்று ஒரு வெகுமதி கோட்பாடு உள்ளது: நமது தேவன் யாருக்கும் கடனாளியாக இருக்க மாட்டார். அவர் நமக்குத் திருப்பிக் கொடுப்பதை விட அதிகமாக நாம் அவருக்குக் கொடுப்பது சாத்தியமில்லை.
இயேசுவைப் பின்தொடர்வதன் வெகுமதியை நான் பார்க்கும் விதம் என்னவென்றால், நம்மிடம் இருக்கக்கூடிய ஆவிக்குரிய வளர்ச்சியின் அடிப்படையில் மத்தேயு 19 இல் கொடுக்கப்பட்ட வெகுமதிகளை மறுவரிசைப்படுத்தினேன்.
அடிப்படை வெகுமதி
இயேசு நம்முடன் இருக்கும்போது, நமக்குள் மகிழ்ச்சி / சமாதானம் மற்றும் தேவனின் அன்பு இருக்கும். அதுவே அவர் நமக்குக் கொடுக்கும் முதல் பரிசு.
பரிசுத்த ஆவியில் மகிழ்ச்சி, மனசாட்சியின் அமைதி, இயேசுவைப் பின்பற்றும் அனைவருக்கும் தேவனுடைய அன்பின் உணர்வு.
மனநிறைவு: நீங்கள் இயேசுவைப் பின்தொடரும்போது, மனநிறைவான மனநிலை இருக்கும். உங்களிடம் உள்ள எல்லாவற்றிலும், நீங்கள் மன நிறைவை உணர்வீர்கள். அதிகம் வேண்டும் என்ற ஆசை இருக்காது. பல சமயங்களில், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்களிடம் குறைவாக இருக்கலாம், ஆனால் உங்களிடம் உள்ளதை வைத்து நீங்கள் திருப்தி அடைவீர்கள்.
கடைசி / முதல் & முதல் / கடைசி – வெகுமதி
கடைசி / முதல் & முதல் / கடைசி - வெகுமதி இயேசு கூறிய உவமையிலிருந்து வருகிறது,
'ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.' மத்தேயு 19:30
பேதுருவும், சீஷர்களும் இயேசுவைப் பின்பற்றுவதற்காக அநேக காரியங்களை விட்டுவிட்டதை அறிந்திருந்தார்கள். பதிலுக்கு அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை அறிய பேதுரு விரும்பினார். பேதுருவுக்கும் சீடர்களுக்கும் வெகுமதி அளிக்கப்படும் என்று இந்த உவமையின் மூலம் இயேசு உறுதியளித்தார். உவமை கூறுவது போல் ஒருவர் இயேசுவிடம் கடைசி காலத்தில் வந்தால் அவருக்கு முதலில் வெகுமதி, முதலில் வந்தவர்க்கு கடைசி வெகுமதி என்று அர்த்தம் அல்ல. நம்முடைய தேவன் மனிதன் எதிர்பார்ப்பது போல் வெகுமதி அளிக்க மாட்டார்.
இந்த உவமை மக்கள் தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஆண்டவரிடம் வருவதைப் பற்றி பேசுகிறது என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் தொடக்கத்திலோ, இளமைப் பருவத்திலோ, முதுமையிலோ அல்லது இறுதியிலோ வரலாம். இது இயேசுவின் கிருபை மற்றும் வெகுமதி பற்றிய உவமையாக விளங்குகிறது.
பிந்தினோர் முந்தினாராயும், முந்தினோர் பிந்தினோராயும்: இது தேவனுடைய கிருபையின் சாராம்சம். அவர் தமது சித்தத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்ப மனிதனுக்கு வெகுமதி அளித்து ஆசீர்வதிக்கும்போது, அது மனிதர்களுக்குத் தகுதியானவற்றின்படி இருக்க வேண்டியது அவசியமில்லை.
சட்ட அமைப்பு கண்டுபிடிக்க எளிதானது: உங்களுக்கு தகுதியானதை நீங்கள் பெறுவீர்கள். ஆனால் கிருபையின் அமைப்பு நமக்கு அந்நியமானது: தேவன் நாம் யார் என்பதன்படி நம்மைக் கையாளுகிறார், நாம் என்ன கொண்டு உள்ளோம் என்பதன்படி அல்ல.
நம் தேவன் பாரபட்சம் காட்டாத தேவன், “'தேவனிடத்தில் பட்சபாதமில்லை. 'ரோமர் 2:11
விஷயம் என்னவென்றால், ஆண்டவருடைய பிள்ளைகள் யாவரும் ஒரே பரலோகத்திற்குச் சென்றாலும் அனைவரும் ஒரே வெகுமதியைப் பெற்றுக் கொள்வது இல்லை (அவர்கள் வெவ்வேறு அளவுகளில் வெகுமதியைப் பெறுவார்கள்).
கிருபையின் அடிப்படையில் தேவன் வெகுமதி அளிக்கிறார். எனவே நாம் ஆச்சரியங்களை எதிர்பார்க்க வேண்டும். அவர் ஒருபோதும் நியாயத்தில் குறைவாக இருக்க மாட்டார், ஆனால் அவர் விரும்பியபடி நியாயமானவராக இருப்பதற்கான உரிமையை அவர் வைத்திருக்கிறார். தேவனின் கிருபை எப்போதும் நீதியாய் செயல்படும்.
ஆண்டவருடைய கிருபை நமக்குத் தகுதியானதை விட அதிக ஆசீர்வாதத்தைத் தருவதில்லை - அது தகுதி கொள்கையிலிருந்து முற்றிலும் விலகி நமக்கு ஆசீர்வாதத்தைத் தருகிறது.
கிருபையின் கீழ் வாழ்வது இரு முனைகள் கொண்ட வாள் போன்றது. கிருபையின் கீழ், "இதைவிட நான் தகுதியானவன் அல்லவா" என்று நாம் தேவனிடம் புகார் செய்ய முடியாது; ஏனென்றால், "உனக்கு தகுதியானதை நான் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்களா?" என்று தேவன் பதிலளிப்பார்.
நூறு மடங்கு வெகுமதி
உலகில் நாம் செய்யும் தியாகங்களுக்கான வெகுமதிகளைக் குறித்து இயேசு விளக்குகிறார்.
'என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; 'மத்தேயு 19:29
இந்த வெகுமதி தேவனுடைய கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர் நமக்குத் திருப்பித் தருவதை விட அதிகமாக நாம் அவருக்குக் கொடுப்பது சாத்தியமில்லை.
உலகில் நாம் செய்யும் தியாகங்கள் / செயல்களைப் பற்றி இயேசு பேசுகிறார். அவர் தனியாக இங்கே சொல்லியவர்களுடன் மட்டும் இதை தொடர்புபடுத்தாதீர்கள், “வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது,”, முதல் வார்த்தையை படியுங்கள் “'என் நாமத்தினிமித்தம்”
“'இயேசுவின் நாமத்தினிமித்தம்” நீங்கள் என்ன தியாகம் செய்திருந்தாலும், அவர் நூறத்தனையாய் பலனைத் திருப்பித் தருவார். ஆவிக்குரிய அர்த்தத்தில் உண்மையாகவே நீங்கள் அவருக்காகச் செய்யும் அனைத்து தியாகங்களுக்கும் அதிகமாகத் தருவார்.
"நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்" என்பது தியாகத்திற்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது பரிசு, இயேசு இல்லாமல் நித்திய ஜீவனைப் பெற எந்த வழியும் இல்லை.
சிறப்பு மரியாதை வெகுமதி
நித்திய வெகுமதியைப் பற்றி பேசுமாறு பேதுருவிடம் இயேசு பதிலளித்தார்.
'அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப்பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல்வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 'மத்தேயு 19:28
இயேசுவோடு நித்தியத்தில் இருக்கும்போதுதான் வெகுமதியைப் புரிந்துகொள்வோம். நமக்கு இப்போது இதைக் கூறினால் புரியாது. அவ்வாறு புரிந்து கொள்ள முயற்சித்தால் வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவன் இதை நன்றாக விளக்கி உள்ளார்.
நியாயத்தீர்ப்பு இடத்தில் இயேசு சீடர்களுக்கு சிறப்பு மரியாதை குறித்து கூறுகிறார்: என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு சிம்மாசனங்களில் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நியாயந்தீர்ப்பீர்கள். சீடர்கள் வருங்கால நியாயத்தீர்ப்பில் ஒரு சிறப்புப் பங்கைக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை ஆயிரமாண்டு ராஜ்யத்தில் நிர்வாகத்தின் அர்த்தத்தில் இருக்கலாம். இதைப் பற்றி வெளிப்படுத்துதல் 21 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம், அதில் பல 12 குறிப்பிடப்பட்டுள்ளது.
'அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கேமூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்தவாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின்மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின்பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. 'வெளிப்படுத்தின விசேஷம் 21:12-14
“நகரத்தின் சுவரில் பன்னிரண்டு அஸ்திவாரங்கள் இருந்தன, அவைகளில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின்பெயர்கள் இருந்தன”. மத்தேயு 19:28ல் பன்னிரண்டு சிம்மாசனங்களைப் பற்றி இயேசு சீடர்களிடம் பேசியதை இது உறுதிப்படுத்துகிறது.
பன்னிரண்டு சிம்மாசனங்களில் நாம் எங்கே இருப்போம் என்பது இயேசுவுக்காக நாம் வாழும் நீதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அது பரலோகத்தில் நமது இடத்தை தீர்மானிக்கும். இயேசுவை நமது மூலைக்கல்லாக வைத்துக் கொண்டால், பலன்கள் அதிகமாக இருக்கும். 'அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல்கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; 'எபேசியர் 2:20
Comments