top of page
Kirupakaran

மயக்கமான மனநிலை


இது எனது 25 வது பதிவு. நான் முதலாவது இதற்காக இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு வாரமும் எழுத எனக்கு ஞானத்தை அளித்ததற்கும், அவருடைய ஆவியால் என்னை நிரப்பியதற்கும் நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன். படிப்பில் நான் ஒரு சராசரி மாணவன். என்னைப் பற்றி என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் சாட்சியமளிப்பார்கள். என்னை மாற்றியமைத்து இந்த வலைப்பதிவுகளை எழுத என்னைப் பயன்படுத்தியது ஆண்டவராகிய இயேசுவே. ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு நான் ஒரு சாட்சியாய் இருக்கிறேன். எல்லாப் புகழும் நம் உன்னதமான இயேசுவுக்கே சாரும்.


மயக்கமான மனநிலை - மயக்க மருந்துகள் என்பது உங்கள் மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும் ஒரு வகை மருந்து. அதை எடுத்துக் கொள்ளும் போது போது ஒரு தற்காலிகமான நிம்மதியை உணர முடியும். அதிக மன நோய் மற்றும் தூக்கக் கோளாறுகள் போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பொதுவாக மயக்க மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். மற்றொரு மயக்கம் மது போதையில் இருக்கும்போது வருவது. நமது இரத்த ஆல்கஹால் உள்ளடக்கம் (பிஏசி) 0.08% என்ற அளவிற்கு அதிகமாக இருக்கும் போது இந்த மயக்க நிலையை உணர முடியும்.


நான் கீழே உள்ள இந்த வார்த்தையைத் தியானிக்கும் போது, “மயக்கமான மனநிலை” என்ற இந்த செய்தியை தேவன் எனக்கு வெளிப்படுத்தினார்.


'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல்எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். ' 1 பேதுரு 5:8


இந்த வசனத்தை நாம் ஆழமாக ஆராய்ந்து பார்ப்போம்.


தெளிந்த புத்தி & விழித்திருப்பது


முதலாம் பகுதி “'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்”


மயக்க நிலைக்கு எதிர்மறை விழித்து இருப்பது. கடவுளின் பிள்ளைகளாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நான்கு குணங்கள் நம்மில் இருக்கும்போது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் மயக்க நிலைக்குத்தள்ளப்படுகிறோம்.


  • பெருமை - நாம் எதையாவது சாதிக்கும்போது பெருமிதம் கொள்கிறோம், நம்முடைய சொந்த வலிமையால் செய்து விட்டோம் என்று உணர்கிறோம். பெருமை நம் ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கிறது. நம் மனதில் வரும் பெருமை நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்மை ஒரு மயக்க நிலைக்குத் தள்ளும்.

  • கவலை - நாம் திட்டமிட்டு செய்ய விரும்பும் சில விஷயங்களைப் பற்றி பலவாறு கவலைப்படுகிறோம். இது வருவதற்கு முதல் காரணம் நாம் நம்முடைய சுயபலத்தை நம்பி பல காரியங்களைத் திட்டமிடுவது தான். பல நேரங்களில் நாம் ஆண்டவர்க்கு சித்தம்இல்லாத காரியங்களை செய்வதால் நமக்குள் கவலை / பதட்டம் உருவாகிறது. இது நம் ஆவிக்குரிய வாழ்க்கையை ஒரு மயக்க நிலைக்குக் கொண்டு செல்லக் கூடிய ஒரு பண்பு.

  • ஆசை - மனிதருடைய பல வகையான விருப்பங்களில் இருந்து ஆசை உண்டாகிறது. சிலருக்கு பணம் / சிலருக்கு பாலியல் காமம் /சிலருக்கு புகழ் என இன்னும் பல உள்ளன. இவற்றில் எதன் மீது வேண்டுமானாலும் ஆசை வரலாம். ஆனால் எப்பொழுது நம் ஆசை பாவத்திற்கு வழிவகுக்கிறதோ அப்பொழுது அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.

  • அவிசுவாசம் - சாத்தான் மிகப் பெரிய தந்திரவாதி. நாம் செய்யும் வேலையில் தேவன் இல்லை என்று நம்மை ஏமாற்றி, தேவன் மீதான விசுவாசத்தை நம்மிலிருந்து எடுத்து விட்டு, நம்முடைய சுய பலத்தை சார்ந்து இருக்கச் செய்வான். இது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை மயக்க நிலைக்குத் தள்ளும் காரியம்.


கெர்ச்சிக்கிறது / விழுங்குவது


இரண்டாம் பகுதி “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச்சுற்றித்திரிகிறான்”


“கெர்ச்சிக்கிற சிங்கம்போல்”


  • நாம் வாழ்க்கையில் கடந்து செல்லும் துன்புறுதல்களின் மூலம் சாத்தான் கர்ஜிக்கிறான்.

  • நம் வாழ்க்கையில் உள்ள சோதனையின் மூலம் சாத்தான் கர்ஜிக்கிறான், சோதனையைத் தூண்டுவதற்கு அவன் பல ஆசைகளைக் காட்டி நம்மை மயக்கி கர்ஜிக்கிறான்.

  • சாத்தான் பொய்களைச் சொல்லி கர்ஜிக்கிறான்.


“எவனை விழுங்கலாமோ” - "எவனை விழுங்கலாமோ" என்பது திருட்டுத்தனமாக செயல்படுவது. அநேக சமயங்களில் சில காரியங்கள் சாத்தானிடம் இருந்து வந்தது என்பதை நாம் உணராமல் இருப்போம். அவன் தந்திரமாக காரியங்களை செய்வான். மிக மெதுவாகவும், அமைதியாகவும் அவனை நாம் அடையாளம் காணாமல் இருக்கும் நிலையில் சாத்தான் செயல்படுவான்.


“வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” சாத்தானுடைய எந்தவொரு திருட்டுத்தனமான செயலுக்கும் நாம் அடிபணிந்தால், நாம் அவனுடைய வலையில் விழுவோம். அது நம்முடைய வாழ்க்கையில் தொல்லைகள் மற்றும் துன்பங்களுக்கு வழிவகுக்கும்.


பாடுகள்


பல முறை, இந்தக் கேள்வியை நாம் முன்வைக்கிறோம். ஆண்டவர் ஏன் இந்த துன்பங்களை எனக்கு மட்டும் தருகிறார் , மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், இது எனக்கு மட்டுமே நடக்கிறது என்று நினைக்கிறோம்.


'விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள்நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. ' 1 பேதுரு 5:9


நீங்கள் அனுபவிக்கும் பாடுகள் உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா கிறிஸ்தவர்களும் இந்த பாடுகளைத் தாண்டிச் செல்வது கட்டாயம். நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது அது நமக்குத் தெரிவதில்லை. மற்றவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்ற நமது கற்பனை தவறு. நமக்கு தேவனிடத்தில் அவிசுவாசம் வர வேண்டும் என்பதற்காக சாத்தான் தொடர்ந்து சொல்லும் பொய் தான் இது.


'கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமேகொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; ' 1 பேதுரு 5:10


  • நாம் துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில் தேவனின் கிருபை நம்மோடிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • கடவுளின் பிள்ளைகளாகிய நமக்கு சிறிது காலம் மட்டுமே இந்த துன்பத்தை கடவுள் அனுமதிப்பார். நாம் தூக்கத்திற்கு ஒரு மருந்து எடுத்துக் கொள்ளும்போது, சிறிது நேரம் கழித்து அதன் பலன் முடிந்துவிடும். அதேபோல், நம்மிடம் இருக்கும் துன்பம் சில காலம் மட்டுமே நம்மில் இருக்கும்.

  • அவர் உங்களை மீட்டெடுப்பார். இந்த துன்பத்திலிருந்து மீண்டு வெளியே வர ஒரு வழியைக் கொடுப்பார்.

  • மீட்டெடுத்தவுடன், அவர் நம்மை ஆவிக்குரிய ரீதியில் பலப்படுத்துவார். மேலும் அவருடனான நம்முடைய விசுவாசத்தை வேரூன்றச் செய்வார்.

  • இந்த துன்பங்கள் மூலம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை வலுவாகவும், கிறிஸ்துவுடனான நம் நெருக்கம் மேலும் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நமக்கு இந்த துன்பங்களை தேவன் அனுமதிக்கிறார்.


எப்படி தெளிந்த புத்தியோடிருப்பது & விழித்திருப்பது?


"'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்" என்று வார்த்தை கூறுகிறது. இந்தந்த செயல்கள் சாத்தானிடமிருந்து வந்தவை என்பதை அறிந்து கொள்ள நாம் எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?


1. பணிவு - நாம் ஒரு ஆடையை அணிகிறது போல பணிவும் / மனத்தாழ்மையும் கொண்டிருக்க வேண்டும். உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் நாம் ஆடையை அணியாமல் உடலின் முழுப்பகுதிக்கும் அணிகிறோம். அதே போல், நம் வாழ்வின் எல்லா செயல்களிலும் இந்த மனத்தாழ்மை இருக்க வேண்டும். “மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்””


'அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையைஅணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபைஅளிக்கிறார். '1 பேதுரு 5:5


2. தாழ்மையாய் இருப்பது - தாழ்மையுடன் இருங்கள். கடவுளிடம் சரணடையுங்கள். தேவன் உங்களுக்கு அருள் காட்டுவார். வசனம் 5- இல் “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்” என்றும் 6 வது வசனத்தில் “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு” என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர் அந்தந்த காலத்தில் உங்களை உயர்த்துவார். நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் அல்ல, தேவனின் நேரத்தில் உயர்த்துவார்.


'ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். ' 1 பேதுரு5:6


நாம் மனத்தாழ்மையையும் பணிவையும் குறித்து படிக்கிறோம். அவற்றுக்கிடையேயான வித்தியாசம் என்ன? நம் பணிவு என்பது தேவனின் ஒரு பாத்திரம். நமக்கு அது கிடைத்தவுடன், பணிவு மனத்தாழ்மையின் இனொரு பாத்திரமாக நமக்கு மாறுகிறது.


3. பிசாசை எதிர்க்க வேண்டும் - பிசாசு நமக்கு இச்சைகளைத் தருகிறான். இச்சைகள் பின்பு பாவமாக மாறுகிறது. ஆனால் தேவனின் வார்த்தை கூறுகிறது, "பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" என்று. எந்த ஒரு இச்சையும் சிறியதாக இருக்கும் போதே தேவனின் நாமத்தை சொல்லிக் கடிந்து கொள்ளும்போது அவன் நம்மை விட்டு விலகிவிடுவான்.


'ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டுஓடிப்போவான். 'யாக்கோபு 4:7


'விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்டபாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. ' 1 பேதுரு 5:9


4. கடவுளிடம் விசுவாசமாக இருங்கள் – இயேசுவின் மீது விசுவாசம் மற்றும் தேவனோடு நடப்பது இவற்றின் மூலமாக மட்டுமே நம்மால் மேலும் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் இருக்க முடியும். "கடவுளோடு நடப்பது" என்றால் கடவுளோடு நெருக்கமாக இருப்பது, அவருடைய கைகளைப் பிடித்து நடப்பது, எல்லாவற்றிற்கும் அவரையே சார்ந்திருப்பது என்பதாகும். இது நம்முடைய விசுவாசத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஒவ்வொரு நாளும் வார்த்தையைப் படிப்பது / தியானம் செய்வது, ஜெபம் செய்வது மற்றும் அவருடைய ஆலோசனையைக் கேட்பதன் மூலம் நாம் அவருடன் நெருக்கமாக இருக்க முடியும்.


'நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. கர்த்தர் தமதுஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.' சங்கீதம் 34:19-20,22


உங்களுக்குத் தொல்லைகள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் அவர் உங்களைப் பாதுகாப்பார். அவர்உங்களை விட்டு விலக மாட்டார், ஒருபோதும் கைவிடவும் மாட்டார். சங்கீதம் 34 அவர் நம்மை எப்படி நடத்துகிறார்என்பதற்கான நினைவூட்டலாகும். அவர் மீதுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள்.

120 views0 comments

Recent Posts

See All

댓글

별점 5점 중 0점을 주었습니다.
등록된 평점 없음

평점 추가
bottom of page