top of page
Kirupakaran

மனந்திரும்பாமற்போனால் கெட்டுப்போவீர்கள்


நாம் லூக்கா 13:1-4 வசனங்களை படிக்கும் போது, மனந்திரும்புதல் அல்லது அழிவு குறித்து இயேசு என்ன பேசினார் என்பதை இந்த வலைப்பதிவின் மூலம் புரிந்துகொள்ளலாம்.


பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப்பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? லூக்கா 13:1-4


அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து எருசலேமில் நடந்த ஒரு விஷயத்தைச் சொன்னார்கள் - ரோமானிய சட்டத்தை மீறிய சில கலிலேயர்களை தூக்கிலிட பிலாத்து சில படை வீரர்களை அனுப்பினான். அவர்கள் அங்கே வந்தபோது, கலிலேயர்கள் ஆராதனை செய்து பலிகளைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். படைவீரர்கள், அவர்கள் நின்ற இடத்திலேயே அவர்களைக் கொன்றார்கள். ஒரு பஸ்காவின் போது, 3000 யூதர்கள் ஆலய சமூகத்தில் கொல்லப்பட்டதாக வரலாற்றாசிரியர் ஜோசிஃபஸ் கூறுகிறார். இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் 2000 யூதர்கள் கொல்லப்பட்டனர். அந்த மனிதர் அதை வருத்தத்தோடு சொல்லவில்லை. மாறாக தன்னிச்சையாக தீர்ப்பு வழங்கிய தொனியில் சொன்னார்கள். அவர்கள் அவரிடம், ”பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்” என்ற தொனியில் சொன்னார்கள்.


நம்மில் பலர், ஆண்டவர் "நல்லவர்களுக்கு” நல்லது நடக்கும்படியும் "பாவிகளுக்கு" கெட்டது நடக்கும்படியும் செய்கிறார் என்று நம்புகிறோம், ஆம், அவர் பாவத்தை நியாயந்தீர்க்கிறார், மேலும் நன்மைக்கு வெகுமதி அளிக்கிறார். ஆனால் வாழ்க்கையின் பெரும்பாலான சூழ்நிலைகளை வெகுமதிகளாகவோ அல்லது தீர்ப்புகளாகவோ விளக்க முடியாது.


பெரும்பாலும், தீயவர்கள் செழிப்பாக இருக்கிறார்கள். நல்லவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையின் சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் பார்த்தால், என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறோம். தேவன் செயல்படும் முறை அதுவல்ல.


ஏசாயா 55 :8-9 இல் “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது”, என்று கர்த்தர் சொல்கிறார்.


அப்படியெனில் ஏன் சில சமயங்களில், துன்மார்க்கர் வளமாயிருக்கிறார்கள், நீதிமான்கள் துன்பப்படுகிறார்கள்? அதற்கான மிக சரியான விளக்கம் இறுதியில் அவரது இறையாண்மை, எந்த விளக்கமும் இல்லாமல் அவர் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கான உரிமை என்பதே. சங்கீதம் 103:19 "...அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது" என்று கூறுகிறது.


எனவே, நீங்கள் இப்போது சிறப்பான ஆசீர்வாதத்தோடு இருந்தால், அது நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுடைய அங்கீகாரத்தின் முத்திரை என்று கருத வேண்டாம். இதற்கு நேர்மாறாக, நீங்கள் பெரும் சோதனைகள் மற்றும் இன்னல்கள் நிறைந்த இடத்தில் இருந்தால், தேவன் கோபமாக இருக்கிறார், உங்களை நியாயந்தீர்க்கிறார் என்று நினைக்க வேண்டாம்.


மனம் திரும்புதல்

இயேசு லூக்கா 13:5 இல் “அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” என்று சொல்கிறார்.


மனந்திரும்புதல் என்பது பரலோக ராஜ்யத்தை அடைவதற்கான ஒரு செயலாகும். நாம் நமது பாவத்தை விட்டு விலகாத வரை பரலோக ராஜ்யத்திற்கு வர முடியாது. ஒருவன் பாவத்தின் பிடியில் இருக்கும் வரை மனந்திருந்துவதில்லை. பாவத்தின் சம்பளம் மரணம். அதைத் தான் கர்த்தர்“மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” என்று கூறுகிறார்.


மனந்திரும்புதலுக்கான அழைப்பு முக்கியமானது, புறக்கணிக்க முடியாதது. இது தான் நற்செய்தியின் முதல் வார்த்தை என்று சொல்வது சரியாக இருக்கும்.


  1. மனந்திரும்புதல் என்பது யோவான்ஸ்நானகனின் சுவிசேஷத்தின் முதல் வார்த்தை (மத்தேயு 3:1-2)

  2. மனந்திரும்புதல் என்பது இயேசுவின் சுவிசேஷத்தின் முதல் வார்த்தை (மத்தேயு 4:17 மற்றும் மாற்கு 1:14-15).

  3. பன்னிரண்டு சீடர்களின் பிரசங்க ஊழியத்தின் முதல் வார்த்தை மனந்திரும்புதல் (மாற்கு 6:12).

  4. தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்த பிரசங்க வழிமுறைகளில் மனந்திரும்புதல் என்பது முதல் வார்த்தை (லூக்கா 24:46-47).

  5. முதல் கிறிஸ்தவ பிரசங்கத்தில் மனந்திரும்புதல் என்பது உபதேசத்தில் முதல் வார்த்தை (அப்போஸ்தலர் 2:38).

  6. அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தில் அவருடைய வாயில் இருந்து வந்த முதல் வார்த்தை மனந்திரும்புதல் (அப்போஸ்தலர் 26:19-20).


மனந்திரும்புதல் என்பது நற்செய்தியின் அடித்தளம். நாம் பாவம் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் உண்மையில் பாவம் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ளும் வரை இயேசுவால் நம்மை நம் பாவங்களிலிருந்து காப்பாற்ற முடியாது, காப்பாற்றவும் மாட்டார்.

  • நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில், பாவம் செய்பவர்கள் துன்பப்பட வேண்டும் என்று நாம் விரும்புவதைப் போல, அவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதைக் காண்கிறோம். பேதுரு இதை விளக்குகிறார், "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்". 2 பேதுரு 3:9

  • குற்றவாளிகளைத் தண்டிப்பதில் தேவனின் செயலற்ற தன்மை, இந்த செயல்களை அவர் ஆதரிக்கிறார் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடாது. அவர் என்ன செய்கிறார் என்றால், நாம் மனந்திரும்பும்படிக்கு அவர் கிருபை செய்கிறார்.

  • மனந்திரும்புதல் என்றால், பாவத்தைப் பற்றிய உங்கள் எண்ணத்தை மாற்றி, வேறு வழியில் திரும்புவதாகும். இது பாவத்திற்கு ஒரு யு டர்ன்(U TURN) போடுவது. மனந்திரும்புதலும், பாவத்திலிருந்து திரும்புதலும் இரட்சிப்பின் நற்செய்திக்கு மிக அவசியம்.

  • மனந்திரும்பாத பாவம் உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தி, தேவனிடமிருந்து உங்களைத் தள்ளிவிடும்.

  • தேவனின் கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக மனந்திரும்பாதீர்கள் - இரட்சிப்பைப் பெற மனந்திரும்புங்கள்.

  • மனந்திரும்புதல் மற்றும் விசுவாசம் என்பவை இரட்சிப்பு என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். இயேசுவின் மீது விசுவாசம் நல்லது, உங்களுக்கு விசுவாசம் இருக்கும்போது மனந்திரும்புதல் பொருந்தாது (தேவையில்லை) என்று நினைக்காதீர்கள்.

  • மத வழக்கத்திற்காக மனந்திரும்புதல் - ரோமன் கத்தோலிக்கக் கொள்கைகளின்படி, பாதிரியாரிடம் பாவங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்ப வேண்டும். மனந்திரும்புதலை ஒரு மத வழக்கமாகச் செய்யாதீர்கள். உங்கள் இருதயங்களில் இருந்து மனந்திரும்புங்கள், அது நம்மை தேவனின் வழிகளுக்கு திரும்பச் செய்யும்.

  • மனந்திரும்புதல் அனைவருக்குமானது (கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்) - கிறிஸ்தவர்கள் தூய்மையானவர்கள், அவர்களுக்கு மனந்திரும்புதல் தேவையில்லை என்பது சாத்தான் அவர்களிடம் சொல்லும் ஒரு பொய். மனந்திரும்புதல் என்பது பாவிகள் அனைவருக்குமானது. நீங்கள் கிறிஸ்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

  • மனந்திரும்புதல் பெரிய பாவத்திற்கு மட்டுமா அல்லது சிறிய பாவத்திற்குமா?: சாத்தான் நம்மிடம் பொய் சொல்லி, நம் பாவங்களை சிறிய பாவம், பெரிய பாவம் என்று மற்றவர்களுடன் ஒப்பிட வைக்கிறான். தேவனின் பார்வையில் "பாவம் என்றால் பாவம்", பெரிய பாவம் சிறிய பாவம் என்றெல்லாம் இல்லை. "பரிசுத்தமானவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்" என்று கர்த்தர் சொல்வது போல் நாம் எல்லா பாவங்களுக்காகவும் மனந்திரும்ப வேண்டும்.

  • மேலோட்டமாக மனந்திரும்பாதீர்கள் - ஆண்டவர் உங்களுக்குக் காட்டிய அனைத்து பாவங்களின் பட்டியலோடு, விளக்கமாக அவரிடம் வந்து ஒப்புக் கொள்ளுங்கள். நான் பாவி, என்னை மன்னியுங்கள் பிதாவே என்று எல்லாவற்றையும் பொதுமைப்படுத்த வேண்டாம். மாறாக எந்த பாவத்தோடு பிணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உரக்கச் சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிட்டு சொல்லாவிட்டால், சில எஞ்சிய பாவங்கள் குணப்படுத்தப்படாத புற்றுநோய் செல்கள் போல் ஒட்டிக்கொண்டு மீண்டும் வந்து உங்களை கெட்டுப் போகச் செய்யும்.

  • பிறருடன் ஒப்பிடாதீர்கள் - நாம் மற்றவரை விட சிறந்தவர்கள், அவர்களை விட பரிசுத்தமானவர்கள் என்று சாத்தான் ஏமாற்றி நாம் மனந்திரும்ப வேண்டியதில்லை என்று கூறுவான். நீங்கள் யாரோடாவது ஒப்பிட விரும்பினால் இயேசுவுக்கு எதிராக ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் பாவத்திற்காக மனந்திரும்புங்கள்.

  • வாயைத் திறந்து பாவத்தை ஒப்புக்கொள்ளுங்கள்

    • பல சமயங்களில், நான் என் இருதயத்தில் பாவத்தை ஒப்புக்கொண்டேன் என்று சொல்கிறோம் (மௌனமாக, ஒரு வார்த்தையும் பேசாமல்). நீங்கள் உங்கள் வாயைத் திறந்து அவரிடம் ஒப்புக்கொள்ளும்போது, ​​அவர் செவிசாய்த்து, அவர் விரும்பும் யு டர்ன் நாம் செய்யும்படிக்கு நம் வாழ்க்கையில் இருந்து பாவத்தை எடுத்துப் போடுகிறார்.

    • நீங்கள் வாயைத் திறக்காமல் இருதயத்திலிருந்து ஒப்புக்கொள்ளும் போது சாத்தானால் நீங்கள் பாவத்தை ஒப்புக் கொண்டதைக் கேட்க முடியாது. அதனால் அவன் திரும்பி வந்து மீண்டும் மீண்டும் பாவத்தைச் செய்கிறான்.

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. 1 யோவான் 1:8-10

  • மனந்திரும்புதல் என்பது ஒரு முறை செய்யும் செயல் அல்ல - மனந்திரும்புதல் என்பது அன்றாடச் செயலாகும். உலகில் நாம் நடக்கும்போது தவறுகள் செய்யும்படிக் கட்டப்பட்டுள்ளோம். உங்களைச் சுத்திகரிக்க இயேசுவிடம் மனந்திரும்புங்கள், இதனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருப்பீர்கள்.

அழிவு

லூக்கா 13:6-9 இல் அழிவின் செயல்களை விளக்குவதற்கு இயேசு ஒரு உவமையைக் கூறுகிறார்.

அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்; கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.


  • இப்போது அவர்களுக்கு இந்த உவமையைச் சொல்லும் போது, இயேசு மனந்திரும்புதல் மற்றும் நியாயத்தீர்ப்பு விஷயத்தை விட்டுவிடவில்லை.

  • இங்கே அத்திமரம் தேவனுடைய வார்த்தையின் விதையை இதயத்தில் விதைத்த விசுவாசிக்கு எடுத்துக்காட்டு. விதையும், மண்ணும் தேவனின் வார்த்தையால் நீர் பாய்ச்சப்பட்டு, அது முளைத்து வளர்ந்து, செடியாக மாறியது. ஆனால் இந்த மரம் காய்க்கவில்லை.யோவான்ஸ்நானகன், மத்தேயு 3:8 இல், "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்" என்றார்.

  • அது கனி தராததால், விசுவாசி மனந்திரும்புதலுக்கேற்ற பலன் தராததால், "அது ஏன் பூமியைப் பயன்படுத்துகிறது? அதை வெட்டிப் போடுங்கள்!" என்று எஜமானர் சொல்கிறார். நாமும் கூட இலைகளாகவும் பச்சையாகவும் இருக்கலாம், எல்லாம் சரியாக உள்ளது போல் தோன்றலாம், ஆனால் நாம் மனந்திரும்பி நடக்கவில்லை என்றால், நம்மால் எந்தச் செயலையும் செய்யமுடியாது. நாம் எஜமானரின் களத்தில் வெறுமனே இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

  • நல்ல வேளையாக, நமக்கு ஒரு மத்தியஸ்தர், இயேசு கிறிஸ்து இருக்கிறார், அவர், "பிதாவே, இதை வெட்ட வேண்டாம். நான் அதை சரி செய்கிறேன், மனந்திரும்புதலுக்கு ஏற்ப இந்த மரம் பழங்களைத் தர என்னால் உதவ முடியும் என்று எனக்குத் தெரியும்" என்று கூறுகிறார். அவர் அதை எப்படி செய்யப் போகிறார்? அவர் பிரச்சினையின் மூலத்தைத் தோண்டி, மூடிமறைக்கப்பட்டதை வெளிப்படுத்தப்போகிறார். பின்னர் அவர் உரத்தைப் போடப் போகிறார், அதாவது "சாணம்" அல்லது "எரு" எனப்படும் உரங்களைப் போடப் போகிறார். அதினால் அந்த மரம் பழங்களைத் தரமுடியும்.

  • நம்முடைய பிரச்சனைகளுக்கு மூலகாரணமான பாவத்தால் நாம் மூடிமறைக்கப்படும்போது, அது நம்மை பலன் கொடுக்க முடியாமல் செய்கிறது. நமக்கு உதவ, இயேசு வேர்களை அம்பலப்படுத்தி சாணத்தில் மூடுகிறார். சாணம் என்றால் என்ன? சோதனைகள், இன்னல்கள், மோசமான சூழ்நிலைகள் போன்றவை. இவை அனைத்தும் துக்கத்தைத் தரும். இயேசு ஏன் நம்மை சாணத்தால் மூடி நம் வாழ்வில் துக்கத்தைக் கொண்டுவர விரும்புகிறார்? பலனை உருவாக்குவதற்காக அவ்வாறு செய்கிறார். "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது". 2 கொரிந்தியர் 7:10

  • தேவனுக்கேற்ற துக்கம் இருந்தால், நம்மை சூழ்ந்திருக்கும் சாணம் மனந்திரும்புதலுக்கு ஏற்ற பலனைத் தருகிறது.

  • ஆனால், உலகப் பிரகாரமான துக்கம் மட்டும் இருந்தால் பலன் எதுவும் இருக்காது. மேலும் ஒரு காலத்திற்குப் பிறகு, எந்தப் பலனையும் கொடுக்காததால், "அதை வெட்டுங்கள்!" என்று எஜமானரால் சொல்லப்படும்படி ஆகும். 1 கொரிந்தியர் 5:5 இவ்வாறு கூறுகிறது,“அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்".


எனவே என் நண்பரே, இயேசுவிடம் திரும்பி அவரிடம் உங்கள் வழிகளை ஆராய்ந்து, நீங்கள் ஒரு பாவி என்று அவரிடம் ஒப்புக்கொண்டு, உங்கள் உலகின் பாவங்களைக் கழுவ உங்கள் கண்களைத் திறக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page