top of page
Kirupakaran

பரிந்து பேசுபவர்


முன்பொரு காலத்தில், கிராமப்புற மலைகளில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தில், மரியா என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவளின் மென்மையான குணம், கனிவான இதயம் மற்றும் தேவன் மீது அவள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றிற்காக அந்த கிராமம் முழுவதும் அறியப்பட்டாள். ஒரு முறை அந்த கிராமம் கடுமையான வறட்சியை எதிர்கொண்டது. வறட்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மரியா அறிந்திருந்தாள். அவள் விஷயத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ள முடிவு செய்து, மழைக்காக தான் ஒரு ஜெப ஆராதனையை நடத்தலாமா என்று கிராம மக்களிடம் கேட்டாள். ஜனங்கள் தங்கள் தலைகளைத் தாழ்த்தி, கனத்த இதயத்துடன், வானம் திறக்கவும், நிலத்திற்கு வாழ்வு கொடுக்கும் மழை பொழிந்து ஆசீர்வதிக்கவும் வேண்டிக் கொண்டனர்.


ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சூரியன் இரக்கமில்லாமல் சுட்டெரித்துக்கொண்டே இருந்தது, மேலும் வயல்வெளிகள் இன்னும் தரிசாக மாறின. கிராமவாசிகள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினர், சிலர் தங்கள் ஜெபங்கள் கேட்கப்படவில்லை என்றும் கிசுகிசுத்தனர்.


அவள் ஒரு நாள் இரவில் பதுங்கி ஒரு மலையின் உச்சிக்கு சென்று ஜெபித்தாள், கிராமப் பெரியவர் ஒருவரும் அவளோடு சேர்ந்து கொண்டார். அவர்கள் கிராமத்தில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வறண்ட நிலத்தில் ஊற்றத் தொடங்கினர். அப்பொழுது, மற்ற கிராம மக்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் வேலை செய்த போது, பெருமழை வெள்ளமாகப் பெய்து, அவர்களுடைய பயிர்களைக் காப்பாற்றியது. மரியா ஒரு பரிந்து பேசும் பெண்ணாக அறியப்பட்டாள், அவள் ஜெபத்தை செயலுடன் இணைத்தாள்.


நம்முடைய தேவைகளின் பட்டியலை தேவனுக்கு முன்பாக முன்வைப்பதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மிகவும் கடினமான பகுதி பரிந்துரைப்பது தான். வேதம் நாம் மற்றவர்களுக்காக பரிந்துரை (வேண்டுதல்) செய்பவராக செயல்படுவதற்கும் ஜெபிப்பதற்கும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.


"நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்". 1 தீமோத்தேயு 2:1


நம்முடைய பயனுள்ள ஜெபத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றோடு செய்யும்படி பவுல் இங்கே எழுதுகிறார்.

  • விண்ணப்பங்கள் - "விண்ணப்பங்கள்" என்பது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை அல்லது மாற்றத்தைத் தூண்டும் நோக்கத்துடன், பலரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கொண்ட ஒரு ஆவணம் அல்லது விவரங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

  • ஜெபங்கள் - நீங்கள் தேவனிடம் பேசும்போது (பரிசுத்த ஆவியானவரால்) பயன்படுத்தும் வார்த்தைகள் / தேவனிடம் பேசும் செயல்.

  • வேண்டுதல்கள் - உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதிகாரத்தில் உள்ள ஒருவரைக் கொண்டு, மற்றொருவரை மன்னிக்க அல்லது தண்டனையிலிருந்து காப்பாற்ற வைக்கும் செயல்.

  • ஸ்தோத்திரங்கள் - தேவன் அளித்த விடுதலைக்காக அவருக்கு நன்றி செலுத்துதல்.


வேதத்தில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில உதாரணங்கள் உள்ளன.


சோதோம் மற்றும் கொமோரா - லோத்துக்காக ஆபிரகாம் செய்த ஜெபங்கள்


ஆபிரகாமும் லோத்தும் (ஆபிரகாமின் மருமகன்) ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்த பிறகு, லோத் சோதோம், கொமோராவில் வாழ்வதற்காகச் சென்றான். அவன் அங்கே சென்றபோது அது வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. தேவன் ஆபிரகாமிடம் சோதோம் கொமொரோவினுடைய கூக்குரலைக் குறித்து பேசும் வரைக்கும் லோத்து அங்கே எப்படி வாழ்ந்து கொண்டிருந்தான் என்று ஆபிரகாம் அறிந்திருந்ததாக எந்தப் பதிவும் இல்லை. இதை ஆதியாகமம் 18:20 இல் இருந்து இறுதி வரை வாசிக்கிறோம்.


"பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ,தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்". ஆதியாகமம் 18:20-32.


ஆபிரகாம் தேவனிடம் பரிந்து பேசியதில் இருந்து கற்றுக்கொள்ள சில விஷயங்கள் உள்ளன.


  • ஆபிரகாம் பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார் - "பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்". அந்தப் புருஷர் திரும்பி சோதோமை நோக்கிச் சென்றனர். ஆனால் ஆபிரகாம் இன்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார். வெளியில் என்ன சூழ்நிலை இருந்த போதிலும் அவர் நம்பிக்கையை கைவிடவில்லை, ஆபிரகாம் நம்பிக்கையை இழக்காமல், கர்த்தருக்கு முன்பாக நின்றார்.

  • அவருடைய உள்ளத்தில் இருந்து அன்போடு மற்றவர்களுக்காக ஜெபித்தார் - "அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?". ஆதியாகமம் 18:23-24. ஆண்டவர் கோபமாக இருந்தபோதும், ஆபிரகாம் சோதோம் கொமோராவில் உள்ள 50 நீதிமான்களுக்காக பரிந்து பேசினார். தேவன் ஆபிரகாமுக்குப் பதிலளித்தார். "அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்".

  • வைராக்கியம், பேரார்வம் மற்றும் அன்புடன் ஜெபித்தார் - "அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்" என்று அவர் தேவனிடம் மன்றாடத் தன்னைத் தாழ்த்திக் கொண்டார். 45 பேர் காணப்பட்டால் அவர்களைக் காப்பாற்றும்படி தேவனிடம் கேட்கிறார். பின்னர் அவர் மீண்டும் ஒருமுறை கேட்கிறார். பின் 30 பேர், 20 பேர், 10 பேர் என்று கேட்டுக் கொண்டே சென்றார். சோதோமையும் கொமோராவையும் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் மிக அதிகமாக இருந்ததால் அவர் தேவனிடம் 4 முறை மன்றாடினார்.


ஆபிரகாமின் பரிந்துரை ஜெபத்தின் விளைவு - லோத்தும் அவனுடைய குடும்பமும் (திரும்பிப் பார்த்த அவனது மனைவியைத் தவிர) காப்பாற்றப்பட்டார்கள். "தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்" என்று ஆதியாகமம் 19:29 இல் வாசிக்கிறோம்.


சோதோம் மற்றும் கொமோராவில் என்ன நடந்தது என்பதன் சுருக்கம் கீழே உள்ளது.


"அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். அவன் மனைவியோ பின்னிட்டுப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள். விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று. தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது,தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்". ஆதியாகமம் 19:24-29


தானியேலின் ஜெபம்


எருசலேம் பாழடைவதைக் குறித்து அதற்காக தானியேல் செய்த ஜெபம் பரிந்து பேசும் ஜெபத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.


"நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம். ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது. ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு". "ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தபர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம். இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும், என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்". தானியேல் 9:3-10,16-19


தானியேலின் பரிந்துரை ஜெபத்திலிருந்து கற்றுக்கொள்ள சில விஷயங்கள் உள்ளன.


  • தேவனுக்கு முன்பாக தன்னையும் பிறரையும் தாழ்த்தினார் - தானியேல் தன்னைத் தாழ்த்தி தேவனைத் துதிக்கிறார். பின்னர் மற்றவர்களுக்காகப் பரிந்து பேசுகிறார். மற்றவர்களும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள் என்று சொல்லித் தாழ்த்துகிறார். "ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்".

  • வைராக்கியத்துடன் மற்றவர்களுக்காக ஜெபிக்கிறார் - தானியேல் தன் சக மக்களின் பாவங்களுக்காக தேவனிடம் மன்றாடி அவரது இரக்கத்தைக் கோருகிறார். “அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தபர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்”.

  • பிறருக்காகச் செவிசாய்க்க மன்றாடும் ஜெபம் - தானியேல் அவர்கள் சார்பாக மன்றாடி, அவர்கள் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டி,இரக்கத்தை நாடுகிறார். “என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும்,ஆண்டவரே கவனியும், என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்".


பரிந்துரை ஜெபத்தைத் தொடங்குவதற்கான நடைமுறை குறிப்புகள்.


பயனுள்ள பரிந்துரை ஜெபத்திற்கான சில வேதாகமக் கோட்பாடுகள் இங்கே உள்ளன.


  1. ஆழமான உணர்வோடும் உண்மையோடும் இருதயத்திலிருந்து மற்றவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். தேவன் யாருக்காக ஜெபிக்க தூண்டுகிறாரோ அவர்களுக்காக உள்ளத்தில் பாரத்தை தர வேண்டி தேவனிடம் ஜெபியுங்கள்.

  2. மற்றவர்களுக்காக தவறாமல் ஜெபம் செய்யுங்கள். "ஆண்டவரின் ஜெபத்தில்" இயேசு இதைத் தான் கற்பித்தார். "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" என்று ஜெபிக்கும்படி இயேசு சொன்னார். நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய தேவைகளுக்காகவும் மற்றவர்களின் தேவைகளுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

  3. தேவனுக்கு எல்லா வல்லமையும் உண்டு, நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவர்களையும் நேசிக்கிறார் என்பதை அறிந்து, விசுவாசத்துடன் மற்றவர்களுக்காக ஜெபியுங்கள். நீங்கள் ஜெபிக்கும் நபரின் சூழ்நிலையை அவரால் மாற்ற முடியும் என்று விசுவாசத்துடன் ஜெபியுங்கள்.

  4. மற்றவர்களுக்காக அன்புடன் ஜெபம் செய்யுங்கள். வலுவானத் தேவைகள், போராட்டங்கள், உணர்ச்சிகள் கொண்ட மக்களை வைத்து ஒரு ஜெப பட்டியலைத் தயாரிக்கவும்.

  5. தீவிரத்தோடும், வைராக்கியத்தோடும் ஆர்வத்துடனும் மற்றவர்களுக்காக ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள். நாம் ஊக்கமாக ஜெபிக்கும்போது, யாக்கோபில் சொல்லப்பட்டுள்ளதைப் போல ஜெபங்கள் வல்லமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது". யாக்கோபு 5:16

  6. நம்மால் இயன்ற இடத்தில் உதவ வேண்டும் என்ற விருப்பத்துடன் மற்றவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். பல சமயங்களில் நம்மால் உடல் ரீதியாக உதவ முடியாமல் போகலாம், ஆனால் ஜெபத்தின் மூலம் அவர்களுக்குள்ள போராட்டங்களை முறியடிக்க உதவலாம்.

  7. மற்றவர்களுக்காக எப்போதாவது உபவாசமிருந்து ஜெபியுங்கள். ஒரு சூழ்நிலை மிகவும் தீவிரமாக இருக்கும் போது மற்றவர்களுக்காக உபவாசமிருந்து ஜெபியுங்கள்.





16 views0 comments

댓글

별점 5점 중 0점을 주었습니다.
등록된 평점 없음

평점 추가
bottom of page