இராணுவம் / கடற்படை / விமானப்படையில் இருக்கும்போது, வீரர்களிடமிருந்து ஒரு கட்டுப்பாடு(ஒழுங்கு) எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாம் கிறிஸ்தவர்களாக மாறி ஆண்டவரோடு நடக்கும்போது நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலிருந்தும் ஒரு ஒழுங்கு எதிர்பார்க்கப்படுகிறது.
நம்மை நீதிமான்களாகவும் தூய்மையாகவும் ஆக்கும் செயல்பாட்டில், அவருடைய தூய்மையான பாதையில் வளரவும், அவருடைய ராஜ்யத்திற்கு நம்மைப் பரிசுத்தப்படுத்தவும் தேவன் எதிர்பார்க்கும் ஒன்று இருக்கிறது. நாம் பின்பற்ற வேண்டிய மூன்று அடிப்படை காரியங்களைக் குறித்துப் பார்ப்போம்.
ஒழுங்கான வேத தியானிப்பு
தினமும் தேவனுடைய வார்த்தையை தியானிப்பது தான் நாம் பரிசுத்தமாக்கப்படுவதற்கான முதல் படி. வேதத்தை நாம் ஏன் தியானிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை வேதம் நமக்குத் தருகிறது. பரிசுத்தமாக்கப்படவும், அவருடைய பரிசுத்த பாதையில் நம்மைச் சுத்தப்படுத்துவதற்காகவும் தான்.
1. வார்த்தை நம்மைச் சுத்தப்படுத்துகிறது - யோவான் 15:3 - “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்”. யோவான் 17:17 - "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்".பைபிளைப் படிப்பது நம்மைத் தூய்மைப்படுத்துவதற்கான அடிப்படைப் படியாகும். நீங்கள் வார்த்தையைப் படிக்கும் போது அது சத்தியத்தால் நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.
2. நீதிக்கு வழிவகுக்கும் நான்கு மடங்கு நன்மை - 2 தீமோத்தேயு 3 :16 – 17 "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது”. தேவனுடைய வார்த்தை நமக்குக் கற்பிக்கிறது + நாம் தியானிக்கும் போது நம்மைக் கடிந்துகொள்கிறது + நம் நடத்தையைச் சரிசெய்கிறது + நம்மை நீதிமான்களாக்குவதற்கு வேதத்தில் உள்ள பல எடுத்துக்காட்டுகள் / சம்பவங்களுடன் நமக்குப் பயிற்சி அளிக்கிறது. இது உலகில் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளிலிருந்து விலகி இருக்க உதவுகிறது.
3. தேவனைப் பற்றிய நமது அறிவைப் பலப்படுத்த வேண்டும் - இது யாருக்கும் கொடுக்கப்படாத ஒரு இரகசியம். வார்த்தையை மேலும் மேலும் படிக்கும் போது நாம் வளர்கிறோம். தொடர்ந்து வார்த்தையைப் படிக்கும்போது, அவரைப் பற்றிய அறிவில் வளர்கிறோம், அது எல்லாக் கிரியைகளிலும் கனிகளைத் தந்து அவரைப் பிரியப்படுத்தும் பாதையில் நம்மை வழிநடத்துகிறது. "சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்" கொலோசெயர் 1:10.
4. தாவீதின் பரிசுத்தத்தின் இரகசியம் - சங்கீதம் 119:9-11,15 - "வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்".
தாவீது வாலிபனாக இருந்தபோது தேவனுடைய வார்த்தையின்படி வாழ்வதன் மூலம் தூய்மையின் பாதையில் இருக்க உறுதி கொண்டார்.
அவர் தம்முடைய முழு இருதயத்தோடும் வார்த்தையைத் தேடி, அவற்றைத் தன் இருதயத்தில் காத்து வைத்தார். சங்கீதத்தைப் படிக்கும்போது அது அவரது இதயத்தை பிரதிபலிக்கிறது.
அவரை மேலும் பரிசுத்தமாக்க வார்த்தை அவரை பாவங்களிலிருந்து பாதுகாத்தது.
விழிப்புள்ள ஜெபம்
நாம் பரிசுத்தமாவதற்கான இரண்டாவது படி, தேவனுடன் நாம் செய்யும் ஜெபங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். தொழில் முறை வழக்கறிஞரான E.M. Bounds என்பவர் ஒரு ஜெபமனிதர். ஜெபம் குறித்த அவரது புத்தகங்கள் உன்னதமானவை.
"பரிசுத்தத்திற்கும் ஜெபத்திற்கும் இடையே, ஒன்று இல்லையென்றால் மற்றொன்று இருக்காது!"
1. ஆவி உற்சாகமுள்ளது / மாம்சம் பலவீனமானது - நாம் ஜெபிக்கும்போது, நமது மாம்சம் பலவீனமாக இருப்பதால் நம் ஜெபத்தின் நோக்கம் போதுமானதாக இல்லை. நம்மை பரிசுத்தப்படுத்துவதற்கும் தூய்மையாக்குவதற்குமான போராட்டங்களைப் போராட பிதாவின் உதவி தேவை. எனவேதான் இயேசு ஜெபத்தையும் சோதனையையும் இணைத்தார். “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்” மத்தேயு 26:41 NIV. சீடர்களின் நல்ல நோக்கங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் உற்சாகமான ஆவிக்கும், பலவீனமான மாம்சத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருந்தனர். அதே வழியில், தேவனுடைய பார்வையில் நம்மைப் பரிசுத்தமாக்குவதைத் தடுக்கிற நமது மாம்சத்தின் பலவீனமான பகுதிகளை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். (எ.கா., உங்கள் வேலை அட்டவணை / வாழ்க்கை முன்னுரிமைகள் / குடும்ப பிரச்சினைகள் போன்றவை). உங்கள் மாம்சத்தின் பலவீனமான பகுதிகளுக்கு உதவ அவரிடம் ஒப்புக் கொடுங்கள்.
2. தேவனின் ஆயுதம் - முழு ஆயுதவர்க்கத்தையும் அணிந்து கொள்ளுங்கள். (எபேசியர் 6:11 - "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்"). நீங்கள் ஜெபிக்கும்போது, வலது,இடது கைகளில் நீதியின் ஆயுதங்களைப் பெறுவீர்கள் - "சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்", 2 கொரிந்தியர் 6:7. நம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்கு, அவரது வல்லமையால் உலகத்தோடு போராட வேண்டும்.
3. ஜெபம் எல்லா ஆயுதங்களையும் கூர்மைப்படுத்துகிறது — எபேசியர் 6 : 18 - “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்”. நாம் ஜெபிக்கும்போது அது உலகத்தின் அசுத்தங்களைப் பற்றிய விழிப்புடன் நம் மனதை வைத்திருக்கும் மற்றும் தனிப்பட்ட பரிசுத்தத்தின் பாதையில் நம்மை வைத்திருக்கும்.
4. ஜெபத்தின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதல் - இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் கூறுகிறார். ஒரு காரணத்திற்காக நாம் திரும்பத் திரும்ப ஜெபிக்கும்போது, ஜெபம் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது. மேலும் பரிசுத்தப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக" 1 தெசலோனிக்கேயர் 5 : 23.
அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்ளுதல்
அவருடைய தூய்மையின் பாதைக்கு இட்டுச் செல்வதற்காக அவ்வப்போது நம்மை சுய பரிசோதனை செய்து கொள்வது தான் பரிசுத்தமாக்கப்படுவதற்கான மூன்றாவது படி.
1. தினசரி அறிக்கையிடுதல் - எபிரேயர் 3:13 - "உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு,இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்". அனுதினமும் ஊக்கப்படுத்துங்கள். அப்பொழுது தான் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகமாட்டோம். நீங்கள் கிறிஸ்துவுக்குள் பிறந்தவராக இருந்தால் உடலில் கறை சேருவதற்கு மூலகாரணமாக இருக்கும் உங்கள் மனதை தினமும் கழுவ வேண்டும். யோவான் 13:8 - "... இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்".
2. ஆராய்ந்து / சோதித்து / அறிந்து - சங்கீதம் 139 : 23 - 24 இல் தாவீது எழுதிய ஒரு உன்னதமான ஜெபம் - "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்”.
நீங்கள் எங்கு தவறு செய்கிறீர்கள் என்பதைப் பார்க்க, இந்தப் பாவங்களின் பட்டியலைப் பயன்படுத்தி தேடவும்.
கர்த்தரின் பார்வையில் அருவருப்பான 7 பாவங்கள் - நீதிமொழிகள் 6:16-19 - “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே".
தேவனின் பரிசுத்தப் பாதையைப் பெற உங்கள் அன்றாட வாழ்வில் அல்லது கடந்த காலத்தில் இதைச் செய்திருக்கிறீர்களா என்று தேடுங்கள்.
இருதயத்திலிருந்து வரும் 13 பாவங்கள் (ஒருவனின் இருதயத்தின் உள்ளே) - மாற்கு 7 : 21 - 23 - “எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்”.
இவற்றில் ஏதேனும் உங்கள் இருதயத்திலிருந்து தோன்றுகிறதா என்று தேடிப் பாருங்கள். சாக்குப்போக்குகளால் உங்களை நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள்.
மனதில் இருந்து வரும் 21 பாவங்கள் - ரோமர் 1 : 29 - 31 - “அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்".
நீங்கள் உலகத்துடன் இணைந்திருக்கும் போது உங்கள் மனதில் இந்த வகையான எண்ணங்கள் வருகிறதா என்று தேடிப் பாருங்கள்.
மாம்சத்தின் 15 பாவங்கள் - சாத்தானின் சோதனைகளுக்கு நாம் இடமளிக்கும் போது உண்டாகும் நமது மாம்சத்தின் பாவங்கள்.கலாத்தியர் 5 : 19 - 21 - "மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்”.
உங்களைத் தூய்மையாக்க தேவன் எவ்வாறு தம்முடைய பரிசுத்தத்தைக் கொண்டு வர முடியும் என்பதைப் பார்க்க, இந்தப் பட்டியலில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்கள் அன்றாட வாழ்க்கையை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடைசி நாட்களில் காணப்படும் 18 பாவங்கள் - நாம் கடைசி நாட்களில் இருப்பதால், உலகத்திற்கேற்ற ஒரு வாழ்க்கை வாழ்பவர்கள் பாவங்களால் நிரப்பப்பட்டிருப்பார்கள் - 2 தீமோத்தேயு 3: 2 - 5 NIV “எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு".
இந்தப் பாவங்களுடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். “இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என்று வார்த்தை கூறுகிறது, இந்த நபர்களிடமிருந்து விலகிச் செல்ல உங்களுக்கு உதவும்படி தேவனிடம் ஜெபியுங்கள்.
திட்டவட்டமாகக் கூறுங்கள்! ஆண்டவரிடம் பாவ அறிக்கையிடும் போது உங்கள் பாவங்களைப் பொதுமைப்படுத்தாதீர்கள். நாம் ஒரு குறிப்பிட்ட பாவத்தைச் செய்கிறோம், ஆனால் அறிக்கையிடும் போது, குறிப்பிட்டு சொல்லாமல் பாவங்களைப் பொதுமைப்படுத்துகிறோம். தேவன் உங்களிடம் கூறும் தினசரி பரிசுத்தத்தைப் பெற பாவங்களைக் குறிப்பிட்டு மேற்கோள் காட்டுங்கள்.
சுய பரிசோதனைக்கான கேள்விகள் - தோல்விகளை முழுமையாக கையாளுங்கள். நமது தோல்விகளில் இருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்கிறோம். வெற்றிகளை விட தோல்விகளில் இருந்து அதிகம் கற்றுக்கொள்கிறோம்!
உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்,
ஏன் தோல்வியடைந்தேன்?
எங்கே தோல்வியடைந்தேன்?
எப்போது தோல்வியடைந்தேன்?
எப்படி தோல்வியடைந்தேன்?
நம்மைப் பரிசுத்தப்படுத்தவும், மேலும் தூய்மையாக்கவும் தேவன் இவற்றுக்கான பதில்களை உங்களுக்குத் தருவார்.
コメント