top of page
Kirupakaran

புலம்பலும் களிப்பும்


பலர் தங்கள் புலம்பலை தேவனிடம் தெரிவிக்கிறார்கள். புலம்பல் என்பதன் அர்த்தம் தெரியாதவர்களுக்கு : இது தேவனிடம் வெளிப்படுத்துகிற உணர்ச்சிமிக்க துக்கம் அல்லது கவலை. நம்முடைய புலம்பலில் தேவனுடைய வல்லமை வெளிப்படுகிறது, மேலும் நாம் அவரை மகிழ்ச்சியுடன் துதிக்கும்போதும் வெளிப்படுகிறது. இந்த வலைப்பதிவில் பைபிளில் உள்ள அன்னாள் மற்றும் மரியாள் ஆகிய இரண்டு பேரைக் குறித்தும், புலம்பல் மற்றும் மகிழ்ச்சி என்ன செய்ய முடியும் அதை எப்படி நம் வாழ்வில் பயன்படுத்தலாம் என்றும் பார்ப்போம்.


அன்னாளின் ஜெபம்

அன்னாள் சாமுவேலின் தாய். இஸ்ரவேலில் எல்க்கானா என்ற ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒருவர் அன்னாள், மற்றொருவர் பெனின்னாள். பெனின்னாளுக்கு குழந்தைகள் இருந்தனர். ஆனால் அன்னாள் மலடியாக இருந்ததால் அவளால் குழந்தை பெற முடியவில்லை. அவள் பல ஆண்டுகளாக மலடியாக இருந்தாள். இந்த காலத்தில் அவள் பெனின்னாளால் தவறாக நடத்தப்பட்டு வெட்கப்படுத்தப்பட்டாள். அவள் வருடா வருடம் கதறி அழுது தேவனிடம் ஜெபிப்பாள் என்று வேதம் சொல்கிறது. அவளுடைய ஜெபங்கள் தேவனிடம் அவளது உள் உணர்வுகளின் புலம்பலாக இருந்தன. அவள் தன் வாழ்வின் அவமானங்கள், வருத்தங்கள், ஏமாற்றங்களை ஆண்டவரிடம் வைத்தாள்.


1 சாமுவேல் 1 :9-17,20

சீலோவிலே அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள். அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம் பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக் கொண்டிருந்தான். அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள். அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.


அன்னாளின் புலம்பல் ஜெபத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள சில விஷயங்கள் உள்ளன.

  1. அவள் ஆழ்ந்த வேதனையில் / வாழ்க்கையின் மிக தாழ்ந்த கட்டத்தில் இருந்தபோது ஆண்டவரிடம் ஜெபித்தாள். “அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி”. நம்முடைய தாழ்வான நிலையில் நாம் ஜெபிக்கிறோமா அல்லது நமது நிலையைப் பற்றி மற்றவர்களிடம் புகார் செய்கிறோமா?

  2. “அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி” என்று வாசிக்கிறோம். இதன் பொருள் உங்கள் வருத்தத்தை புலம்பல்களுடன் வெளிப்படுத்தும் வடிவத்தில் ஜெபிப்பதாகும். கசப்பு என்பது அவளுடைய தற்போதைய நிலையை உணர்ந்து தேவனிடம் அவள் மீது பரிதாபம் வேண்டி ஜெபிப்பது. இந்த ஜெபங்கள் அவள் ஒரு முறை செய்தவை அல்ல, பல வருடங்கள் இப்படி ஜெபித்துக் கொண்டிருந்தாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  3. அவள் ஆழ்ந்த வேதனையில், மனக்கசப்பில் இருந்தும் தேவனைக் கனம்பண்ணும்படி அவரிடம் பொருத்தனை செய்தாள். சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்;

  4. அவள் இருக்கும் இடத்தைப் பொருட்படுத்தவில்லை. ஜெப நேரத்தில் அவள் தேவனோடு இருந்தாள். யாரையும் பொருட்படுத்தவில்லை. ஆசாரியனாகிய ஏலி அவள் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தார். அது அசைந்தது, ஆனால் வாயிலிருந்து சத்தம் வரவில்லை. எனவே அவள் குடித்திருக்கிறாள் என்று அவர் தவறாகப் புரிந்து கொண்டார். அவள் அவரது தவறான புரிதலை திருத்தினாள். உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள்.

  5. கர்த்தர் ஜெபத்திற்குப் பதிலளித்தார். அவர் அவளுடைய கர்ப்பத்தை ஆசீர்வதித்து, மலட்டுத்தன்மையை நீக்கி, சாமுவேல் என்ற மகனைக் கொடுத்தார். அவரே இஸ்ரவேலின் முதல் தீர்க்கதரிசியாகி, தாவீதை ஆசீர்வதித்து அபிஷேகம் செய்தார்.

தேவன் அவளை விடுதலையாக்கிய பிறகு, அன்னாள் ஒரு பாடல் இசையமைத்து ஜெபித்தாள்.


1 சாமுவேல் 2:1-10

அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்;அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள். திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப்பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள். கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர். கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப் பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.


அன்னாள், “என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது” என்பதைக் கவனிப்பதன் மூலம் தொடங்குகிறாள். ஒரு விலங்கின் உயர்த்தப்பட்ட கொம்பு வலிமையின் அடையாளமாக இருப்பதைப் போல, தேவன் தன்னை பலப்படுத்தினார் என்று கூறுகிறாள். “தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை” உயர்த்தி, அவருடைய ராஜாவுக்கு பலம் தரும்படி கர்த்தரிடம் கேட்டு அவள் முடிக்கிறாள். (கடைசி இரண்டு வரிகளை, "அவர் தனது ராஜாவுக்கு பலம் கொடுக்கட்டும் / மற்றும் அவர் அபிஷேகம் செய்யப்பட்டவரின் கொம்பை உயர்த்தட்டும்." என்று மொழிபெயர்ப்பது சிறப்பாக இருக்கும்.)


அவளுடைய மகன் சாமுவேல் இஸ்ரவேலின் முதல் தீர்க்கதரிசியானார். ஒரு தீர்க்கதரிசியாக, அவர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்தார். அவருக்கு எதை வைத்து அபிஷேகம் செய்தார்? கொம்பிலிருந்து எண்ணெய் எடுத்து பண்ணினார். உண்மையில், கர்த்தர் அன்னாளின் ஜெபத்திற்கு பதிலளித்தார்: அவர் தமது ராஜாவாகிய தாவீதின் கொம்பை உயர்த்தினார். கர்த்தருடைய வல்லமையை தாவீது எவ்வாறு கற்றுக் கொண்டார்? அன்னாள் செய்த அதே வழியில் தான். அன்னாளைப் போலவே, தாவீது தனது பயனற்றத் தன்மையைப் பற்றி புலம்பினார் (அவர் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு அரியணையில் அமர்த்தப்படுவதற்கு இருபது வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது). அன்னாள் தன் வயிற்றின் மலட்டுத்தன்மையில் தேவனுடைய வல்லமையைப் பற்றி அறிந்துகொண்டாள். எதிரிகளால் வேட்டையாடப்பட்ட தாவீது, வனாந்தரத்தின் தரிசு நிலத்தில் கர்த்தருடைய வல்லமையைக் கற்றுக்கொண்டார்.


நமக்கான பாடங்கள்

  • தேவனின் வல்லமையை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது? அன்னாள் செய்தது போல நம் பயனற்ற தன்மையைப் புலம்புவதன் மூலமும், நம் ஆத்துமாக்களை அவரிடம் ஊற்றுவதன் மூலமும் தான்.

  • தேவ வல்லமையை நாம் எங்கே கற்றுக்கொள்கிறோம்? அன்னாள் கற்றுக்கொண்ட அதே இடத்தில் தான் : நம் பயனற்ற நிலையில். எவ்வாறாயினும், தேவன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார். உங்களைப் பலப்படுத்துவார், உங்கள் ஜெபங்களின் மூலம் உங்கள் கொம்பை உயர்த்துவார்.

  • நீங்கள் இருக்கும் சூழ்நிலையிலிருந்து உங்களை வெளியே கொண்டுவர உதவும்படிக்கு, உங்கள் உள் உணர்வை அவரிடம் சொல்லி உங்கள் நிலைமையை அவருக்குத் தெரியப்படுத்த உங்கள் புலம்பலை வெளிப்படுத்துங்கள். நம் தேவன் ஒவ்வொரு சிறிய ஜெபத்தையும் சிறிய குறிப்புகளையும் மதிப்பவர். உங்கள் அவமானம் மற்றும் துக்கத்திலிருந்து உங்களை விடுவிப்பதற்காக அவரிடம் நீங்கள் செய்யும் நெருக்கமான ஜெபங்களை அவர் மதிக்கிறார்.

  • நீங்கள் புலம்பலில் இருந்து எப்படி துதிக்கு எழுவீர்கள்? உங்கள் புலம்பலில் இருந்து தேவன் உங்களை விடுவிக்கும்போது, அதற்காக அவரைத் துதியுங்கள். அவருடைய நாமம் உயர்ந்திருக்கும்படி உற்சாகமாய் துதியுங்கள்.

மரியாளைப் பற்றி அறியவும், அன்னாளின் ஜெபம் மரியாளை எவ்வாறு பாதித்தது என்பதைப் புரிந்துகொள்ளவும் முன்னேறிச் செல்வோம்.


மரியாளின் ஜெபம்

இஸ்ரவேலில், முதல் நூற்றாண்டில், அன்னாள் வாழ்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மரியாள் என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவள், தெற்கே அண்டை நாடான யூதாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் தரமாக கருதப்பட்ட கலிலேயா பகுதியைச் சேர்ந்தவள். மேலும், அவள் நாசரேத் நகரத்தில் வாழ்ந்தாள். அந்த இடத்தில் வாழ்ந்தவர்களை சக கலிலேயர்கள் கூட கேலி செய்யும் அளவுக்கு அது ஒரு முக்கியத்துவமற்ற இடம் (யோவான் 1:46). கன்னியாகிய மரியாளுக்கு யோசேப்பு என்ற மனிதனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவளுடைய இளமை, பாலினம் மற்றும் மணமாகாமல் இருந்தது இவற்றின் காரணமாக, அவளது உலகில் சமூக அடுக்கின் அடிப்பகுதியில் இருந்தாள். தேவன் மரியாளை தேர்ந்தெடுத்தது போல, விசேஷமான எதற்கும் யாரும் அவளைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.


ஆயினும்கூட, தானியேல் தீர்க்கதரிசிக்கு எதிர்காலத்தைப் பற்றிய தரிசனங்களைப் புரிந்துகொள்ள உதவியதன் மூலம், யூதர்களுக்குப் பரிச்சயமான காபிரியேல் என்ற தூதன் மரியாளுக்குத் தோன்றி, அவள் பரிசுத்த ஆவியின் மூலம் கர்ப்பமாகி, தேவ குமாரனாகிய மேசியாவை இந்த உலகத்திற்கு வரும்படிக்குப் பெற்றெடுப்பாள் என்று கூறினார்.


அதனுடன், மரியாள், அந்த அந்நிய வருகையாளரை நம்புவதா, அவரது செய்திக்குக் கீழ்ப்படிவதா என்ற இரண்டு கடினமான தேர்வுகளை எதிர்கொண்டாள். இதன் மூலம், திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்ற அவமானத்தைத் தழுவி அவளிடம் இருந்த சிறிய அந்தஸ்தையும் இழக்க நேரிடும். இது யோசேப்பின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டது. இருப்பினும், இவ்வாறு கூறினாள், "அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்." லூக்கா 1:38. முன்பு மலடியாயிருந்த தனது இனத்தாளான எலிசபெத், அதிசயமாய் யோவான்ஸ்நானகன் என்னும் புத்திரனை கர்ப்பந்தரித்திருக்கிறாள் என்று அறிந்து அவளை சந்தித்த பிறகு மரியாள் இந்த பாடலை இயற்றி ஜெபித்தாள்.


லூக்கா 1 :46-55

அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.


  • பூமியின் எல்லைகளை நியாயந்தீர்க்கும்படி அன்னாள் செய்த ஜெபம் கர்த்தரால் மட்டுமல்ல, மரியாளாலும் கேட்கப்பட்டது. மரியாளின் பாடல் அசல் இல்லை. அதன் அசல் தன்மை மற்ற ஆதாரங்களை, முக்கியமாக அன்னாளின் பாடலை அவள் எடுத்த விதத்தில் உள்ளது.

  • அன்னாளைப் போலவே, மரியாளும் தனது சொந்தக் கதையுடன் தொடங்கினாள். ஆனால் தேவனின் ராஜ்யத்தின் பெரிய கதையில் தன்னை இழக்கிறாள்.

  • எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று அன்னாளுக்குத் தெரியும்; மரியாளுக்கு எதற்காக ஜெபிப்பது என்று தெரியவில்லை. ஆனால் தேவதூதன் அவளிடம், "தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை" என்று கூறினார். அவள் கனவிலும் நினைத்திருக்க முடியாத ஒன்றை தேவன் அவளுக்காக செய்திருந்தார். அவள் அன்னாளின் ஜெபத்தையும் சங்கீதக்காரர்களின் ஜெபங்களையும் அறிந்திருந்ததால், தாழ்மையானவர்களை தேவன் ஆதரிக்கிறார் என்பதை அறிவாள்; எனவே, தேவன் அவள் மேல் கவனமாய் இருப்பதை அறிந்தாள். ஏனென்றால் அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்;.

  • எனினும், அவளுடைய துதியானது, தேவன் அவளுக்கு செய்ததற்காக மட்டும் எந்த வகையிலும் ஒதுக்கப்படவில்லை. கர்த்தர் மரியாளுக்கு பெரிய காரியங்களைச் செய்தது போல், (“தலைமுறை தலைமுறைக்குமுள்ளது”) எல்லோருக்கும் பெரிய காரியங்களைச் செய்கிறார்.

  • அன்னாளைப் போலவே, மரியாளும் தேவனின் வல்லமை, அவர் தமது வல்லமையால் என்ன செய்கிறார், எப்படி பலவான்களை தள்ளி தாழ்மையானவர்களை உயர்த்துகிறார் என்பதால் நிரப்பப்பட்டிருந்தாள். அத்தகைய விஷயங்களை அவள் எங்கே கற்றுக்கொண்டாள்? அன்னாளைப் போலவே, அவளும் தன் கர்ப்பத்தில் அவற்றைக் கற்றுக்கொண்டாள். தன் கர்ப்பத்தில், தன் "தாழ்மையான" நிலையைக் குறித்து தேவன் நினைத்திருப்பதை அவள் கண்டாள்.

  • அன்னாளின் குமாரன் இஸ்ரவேலின் ராஜாவை அதன் தேவையான காலத்தில் அபிஷேகம் செய்தார். மரியாளின் குமாரன் "இயேசு" இஸ்ரவேலின் ராஜாவாக மட்டுமல்ல, உலகத்தின் ராஜாவாகவும் ஒரு காலத்திற்கு மட்டுமல்ல, எல்லா காலங்களுக்கும் இருக்கிறார்.

மரியாளிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • ஒருவேளை நாம் நம்மை இரண்டாம் தரமான, முக்கியமற்ற, அந்தஸ்து இல்லாத, விசேஷமான எதற்கும் சாத்தியமற்ற நபர் என்று கருதலாம். ஆனால் அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மீது தேவனின் தயவு இருக்கிறது.

  • தேவ வல்லமையை நாம் எங்கே கற்றுக்கொள்கிறோம்? மரியாள் கற்றுக்கொண்ட அதே இடம்: மரியாள் அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு, அதை தன்னுடைய சொந்த ஜெபத்தைத் தொகுக்கப் பயன்படுத்தினாள். அதை அவள் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேவனிடம் அனுப்பினாள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, மலடியான பெண் மற்றும் கன்னிப் பெண்ணின் ஜெபங்களைக் கேட்கிறோம். அவை நம் ஆன்மீக வெறுமையிலும், நமது எதிர்பார்ப்பு இல்லாத நிலையிலும் நம்மை சந்திக்கின்றன.

  • நீங்கள் எப்போது புலம்புகிறீர்கள், எப்போது களிப்படைகிறீர்கள்?

    • நீங்கள் ஆராதிக்கும் போது - தேவனை ஆராதிக்க உங்கள் ஆத்துமாவுடன் மிக ஆழமாக இணைகிறீர்கள். புலம்புவதன் மூலம் உங்கள் வெறுமையை / விரக்தியை / நம்பிக்கையற்ற உணர்வை வல்லமையான தேவனிடம் வெளிப்படுத்துகிறீர்கள். மேலும் தேவனை ஆராதிப்பதில் களி கூறுகிறீர்கள்.

    • நீங்கள் புலம்பும்போதும் மகிழ்ச்சியடையும்போதும், உங்கள் ஆழ்ந்த சுயத்துடன் இணைக்கப்படுவதால், உங்கள் இதயத்தில் தேவனின் வல்லமையை உணருங்கள்.

    • புலம்பல் மற்றும் களிப்பு - இவை எதிரெதிர் போல் தெரிந்தாலும், வேதாகமத்தின்படி, இவை இரண்டும் ஆராதனை என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தொலைதூர உறவினர்களைப் போன்றவை.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page