top of page
Kirupakaran

பொறுமையும் பாடுகளும்


இந்த உலகில் நாம் அனைவரும் பாடுகளை அனுபவிக்கிறோம், ஒவ்வொருவரும் பாடுகளை வெவ்வேறு வழிகளில் கையாள்கிறோம். நாம் துன்பப்படும்பொழுது, கோபம் / புலம்பல் / சாபம் / பொய் / குற்றம் சாட்டுதல் என பல வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். இவை எதுவுமே தேவனின் பார்வையில் சரியானவை அல்ல. நாம் தனியாக பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, தேவனிடமிருந்து விலகிச் செல்கிறோம். அதேசமயம் பாடுகளை எதிர்கொள்ளும் போது பொறுமையாக இருக்க வேண்டும் என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது.


என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே. யாக்கோபு 5:10-11


யோபுவின் வாழ்க்கையில் பாடுகளின் போது அவர் எப்படிப் பொறுமையாக இருந்தார் என்றும் அதை அவர் எப்படி நிறைவேற்றினார் என்றும் பார்க்கிறோம்.

 

பொறுமை பரிபூரணத்தின் அடையாளம் என்றால், பொறுமையின் வார்த்தைகள் ஒரு பரிபூரண வாழ்க்கையின் கிரீடமாக மாறும்.

 

யோபின் பண்புகள் 

ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். யோபு 1:1

  • உத்தமனாயிருந்தார் - "உத்தமன்" என்பது பொதுவாக பழி அல்லது குற்றங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதைக் குறிக்கிறது.

  • சன்மார்க்கனாயிருந்தார் - "சன்மார்க்கம்" என்பது பிழையின்மை, நேர்மை மற்றும் ஒழுங்கு ஆகியவற்றைக் குறிக்கிறது.

  • தேவனுக்குப் பயந்திருந்தார் - அவர் செய்த எல்லாவற்றிலும் தேவனுக்குப்  பயந்திருந்தார்.

  • நீதிமானாய் இருந்தார் - பொல்லாப்புக்கு விலகியிருந்தார்.

 

யோபின் பாடுகள்

யோபுவின் கதை நமக்குத் தெரியும். அவர் ஒன்றன்பின் ஒன்றாக சடுதியில் எல்லாவற்றையும் இழந்து துன்பத்திற்குள் சென்றார்.


பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது, ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில், சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது, வனாந்தரவழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்து போனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். யோபு 1:13-19


யோபின் இழப்புகள் சாதாரணமானவை அல்ல.

  • அவரது கால்நடைகள், அவற்றின் பராமரிப்பாளர்கள் மற்றும் அவரது பிள்ளைகள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக மரித்தனர்.

  • நிலைமை இன்னும் மோசமாகும்படி அவர் ஒரு அருவருக்கத்தக்க நோயால் பாதிக்கப்பட்டார்.

  • சூழ்நிலையிலிருந்து தப்பிக்க, அவரது மனைவி அவரிடம், "தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்ˮ என்று கூறினாள்.

  • அவர் பெரிய ஐசுவரியாவானாகவும், கர்த்தரின் பார்வையில் குற்றமற்றவராகவும் இருந்தார். ஐசுவரியவான் தேவனோடு பிணைக்கப்பட்டு, அவரது அதிகாரம் ஐசுவரியவானை ஆளும் வரை அவரால் உத்தமனாயிருக்க முடியாது என்று இயேசு கூறுகிறார்.

  • ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். லூக்கா 18:25-27

  • ஆகவே, மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்று வேதம்  கூறுவது போல் யோபு தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டார்.

  • தேவனுக்குப் பயப்படுதல் என்பது நேர்மையாகவும் குற்றமற்றும்  இருப்பதாகும். அதுதான் திறவுகோல்.

  • யோபின் தேவபயத்திற்காக தேவன் அவரை ஆசீர்வதித்தார்.

  • தேவனின் ஆசீர்வாதங்களைக் குறித்து சாத்தான் சாட்சி கொடுக்கிறான். அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. யோபு 1:9-10

  • சாத்தானின் மனப்போக்கைப் பாருங்கள், பூமிக்குரிய ஆசீர்வாதத்தால் தான் யோபு கர்த்தருக்குப் பயப்படுவதாகக் கூறுகிறான். ஆனால், "... அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்" என்று தேவன் அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார்.

  • இரண்டாவதாக, தேவன் யோபின் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தார் என்று கூறுகிறான். எல்லாவற்றையும் தேவன் எங்கிருந்தும் வரச் செய்யவில்லை, தேவ பயத்தோடு கூடிய கடின உழைப்பே யோபுக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தந்தது.

  • யோபு தேவனுக்குப் பயந்திருந்தார். மேலும் தன் குமாரரும் தேவனுக்கு  விரோதமாக பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்களோ என்றும் கவனித்தார். எனவே அவருக்கு  உண்டாயிருந்த (குடும்பம் மற்றும் செல்வம்) அனைத்தும் தேவனிடமிருந்து வந்தது.

  • அதனால்தான் இந்த வார்த்தையை அவரால் உச்சரிக்க முடிந்தது. தேவனே  அவருடைய நீதியின் ஆதாரமாகவும், அவருடைய எல்லா செல்வங்களுக்கும் ஆதாரமாகவும் இருந்தார்.

 

பாடுகளில் துதித்தல் : நமக்கான பாடங்கள்

நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். யோபு 1:21

  • ஆச்சரியப்படத்தக்க வகையில், அவரிடமிருந்து யாவும் எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் அவர் தேவனைத் துதித்தார்.

  • எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவன் என்று நாம் விசுவாசித்தால் மட்டுமே துன்பத்தின் மத்தியில் தேவனைத் துதிக்க முடியும். அவரே கிரியைகளை ஆரம்பிக்கிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிறார். அவர் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாக இருக்கிறார். நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் 22:13

  • நாம் யோபைப் போல் உணராததால், நம்மில் அநேகர் அவரைத் துதிப்பதில்லை. நம்மிடம் இருப்பதை தேவனால் உண்டானதாக நினைக்காமல் நம் சொந்த கிரியையினால் வந்ததாக நினைக்கிறோம். நாம் ஜெபித்துவிட்டு நம் ஜெபத்தின் விளைவாக எல்லா ஆசீர்வாதங்களும் கிடைத்தன என்று நினைக்கிறோம், எல்லா ஆசீர்வாதங்களுக்கும் தேவன் தான் ஆதாரமாக இருக்கிறார் என்பதை நாம் உணருவதில்லை.

  • அதனால், தோற்றுப் போனால் நாம் தோற்றுப்போய்விட்டோம் என்று சொல்வதற்கு வருத்தப்படுகிறோம்.

  • நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும், எப்போதும் ஸ்தோத்திரம் செய்யக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறோம். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:18

  • வலியினாலும் பிரச்சனைகளினாலும் நசுக்கப்படும்போது, ​​தேவனைத்  துதிப்பதற்கு மனமில்லாமல் இருக்கலாம். பரவாயில்லை, இருந்தாலும் தேவனைத் துதியுங்கள். உங்கள் சுயத்தை மேற்கொள்வதற்கு அவரைத் துதியுங்கள்.

  • அவரைத் துதிப்பதற்கு உணர்வில்லாத போதும் அவரைத் துதியுங்கள். உங்கள் இருதயத்திலிருந்து அவரைத் துதித்துக் கொண்டே இருப்பதற்கு இந்தத் துதி உங்களை வழிநடத்தும்.

  • நீங்கள் தொடர்ந்து துதிக்கும் போது, ​​​​உங்கள் சூழ்நிலையில் எதிரியின் பிடி தளர்ந்து போகிறது. அவனுடைய திட்டங்கள் பாழாக்கப்படுகின்றன. துன்பத்தின் நடுவே வந்து பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவி செய்ய தேவனுக்கு ஒரு பிடி கொடுக்கிறது.

  • நீங்கள் அவரைத் துதிக்கும்போது எந்தச் சூழலையும் மறைக்கும் ஆழ்ந்த அமைதி மேலோங்குகிறது. அது பலத்த மழையின் போது வீட்டிற்குள் இருப்பது போன்றது, வெளியில் மழை பெய்தாலும், தெளிவான அமைதி உங்களைச் சூழ்ந்து கொண்டு, உங்கள் வீட்டிற்கு அப்பாற்பட்ட குழப்பம் எதுவும் உங்களைப் பாதிக்காமல் காத்துக் கொள்கிறது. அதுதான் அந்த உணர்வின் சாராம்சம்.

  • உங்கள் சூழ்நிலைகள் நல்லதோ கெட்டதோ, எதுவாயிருந்தாலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். அவர் உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்.

1件のコメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
Philip
Philip
6月22日
5つ星のうち5と評価されています。

Amen

いいね!
bottom of page