top of page
Kirupakaran

பெரும் துன்புறுத்தல்



இந்த வலைப்பதிவை நன்கு புரிந்து கொள்ள, எனது முந்தையப் பதிவான “அலங்கார வாசல்” ஐப் படிக்கவும். அதன் தொடர்ச்சியாக கீழே எழுதப்பட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம். மனிதர்களுக்கு எதிராக வரும் பல பேரழிவுகள் மற்றும் வாதைகள் நிறைந்த பூமியின் இறுதிக் காலத்தில் நாம் வாழ்கிறோம். நமக்கு முன்னே நிச்சயமற்ற காலங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பைபிளில் எழுதப்பட்டுள்ளன.


'அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும்மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரைமணலத்தனையாயிருக்கும்.' வெளிப்படுத்தின விசேஷம் 20:7-8


எனவே, இதை நம்மை சுற்றி நடக்கிறதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நமக்கு எதிராக வரும் போர்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு நாம் எவ்வாறு தயாராக வேண்டும். துன்புறுத்தல் என்றால் என்ன? இதன் பொருள் “விரோதம் மற்றும் தவறாக நடத்துவது குறிப்பாக இனம் , அரசியல் அல்லது மத நம்பிக்கைகள் காரணமாக தவறாக நடத்துவது , அடக்குமுறை" என்பதாகும். நம்மைச் சுற்றிலும் பார்க்கும் போது, இதை தேவாலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் காணலாம்.


ஆரம்பகால அப்போஸ்தலர்களின் சபைகளில் இருந்தும், அங்கே இருந்த, இரத்த சாட்சியாக மரித்த "ஸ்தோவான்" என்ற மனிதரிடமிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் கடந்து சென்ற பல விஷயங்கள் இன்றைய காலத்தில் கூட பொருத்தமாயிருக்கிறது.


அப்போஸ்தலர் 1-5 அதிகாரங்களில், ஆரம்பகால திருச்சபை அநுதினமும் எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டே வந்தது என்று காண்கிறோம். அவர்கள் தொடர்ந்து கர்த்தரைத் துதித்து, தொழுது கொண்டார்கள். குணமாக்குகின்ற காரியங்கள் நடந்தன. ஜனங்கள் ஆலய மண்டபங்களில் நிரம்பி இந்த அற்புதங்களுக்காகத் தேவனைத் துதித்தனர். அவர்கள் ஒன்றிலும் குறைவுபடவில்லை. அவர்களில் தேவையுள்ளவன் என்று ஒருவருமில்லை. அப்போஸ்தலர் 4:34


பிரித்து ஆள வேண்டும்


பரிசுத்த ஆவியின் கிரியைகளால் அப்போஸ்தலர்கள் நாளுக்கு நாள் வளர்ந்தபோது, ஆரம்பகால ஊழியத்தின் வளர்ச்சியைத் தடுக்க எதிரியாகியசாத்தான் புதிய வழிகளைக் கண்டுபிடித்தான், அந்த நாட்களில், எந்தவிதமான ஆதரவும் இல்லாததால், விதவைகள் நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டார்கள்.

சாத்தான் அதைக் காரணம் காட்டி, தேவாலயத்தில் "ஹெலனிஸ்டிக் யூதர்கள்" மற்றும் "ஹெப்ரிக் யூதர்கள்" இடையே ஒரு பிளவைக் கொண்டு வந்தான். இதை அப்போஸ்தலர் 6:1-4 இல் வாசிக்கிறோம்.

  • சுருங்கச் சொன்னால், எபிரேயர்கள் ஹெலனிஸ்டுகளை கிரேக்க கலாச்சாரத்துடன் சமரசம் செய்பவர்களாக, ஆன்மீகமற்றவர்களாக கருதினர். மேலும் ஹெலனிஸ்டுகள் எபிரேயர்களை “பிறரை விட பரிசுத்தமானவர்களாக தங்களை நினைக்கும் பாரம்பரியவாதிகளாக” கருதினர். இரண்டு பிரிவுகளுக்கு இடையிலும் ஏற்கனவே ஒரு இயல்பான சந்தேகம் இருந்தது. சாத்தான் அந்த சந்தேகத்தை சாதகமாகப் பயன்படுத்த முயன்றான்.

  • எபிரேயர்கள் மற்றும் ஹெலனிஸ்டுகள் என்ற பட்டங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இவர்கள் யாவரும் கிறிஸ்தவர்கள், இயேசுவைப் பின்பற்றுபவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் யூத பின்னணியைச் சேர்ந்தவர்கள், ஆனால் அனைவரும் இயேசுவைத் தங்கள் மேசியாவாக ஏற்றுக்கொண்டனர்.

  • ஆரம்பகால தேவாலயத்தில் விதவைகளை ஆதரிக்கும் பொறுப்பை தீவிரமாக எடுத்துக் கொண்டனர். ஏனெனில் அவர்களுக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை; ஆனால் இந்த விதவைகள் தேவாலயத்திற்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்த்தனர்.

  • இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, அப்போஸ்தலர்கள் "உங்களில் இருந்து பரிசுத்த ஆவியும், ஞானமும் நிறைந்த ஏழு பேரைத் தேர்ந்தெடுங்கள்" என்று ஒரு தகுதியை முன்வைத்தனர். இன்றைய காலத்தில் அவர்கள் மணியக்காரர் என்று அழைக்கப்படலாம்.

'ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும்இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும்பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, ' அப்போஸ்தலர் 6:3-5

  • அவர்கள் 7 பேரைத் தெரிந்து கொண்டனர். ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு.”

  • தேவாலயத்தில் பிரிவினை இருந்த அந்த சமயத்தில் இது எல்லா சபையாருக்கும் பிரியமாய் இருந்தது. ஜனங்களிடையே உண்டாகிய உடன்படிக்கை மூலம் கர்த்தர் அப்போஸ்தலர்களின் ஞானத்தை உறுதிப்படுத்தினார். அப்போஸ்தலர்கள் தங்களின் சுய விருப்பத்தின்படியோ, ஜனங்களுடைய கருத்துக்களின்படியோ அல்லாமல் தேவனால் வழிநடத்தப்பட்டனர்.

  • இந்த செயலுக்குப் பிறகு, தேவனுடைய வசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய எண்ணிக்கை பெருகியது. யாவரும் விசுவாசத்தில் இருந்தனர். 'தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். அப்போஸ்தலர் 6:7



தனிப்பட்ட தாக்குதல்கள் / அவதூறு


"பிரித்து ஆள வேண்டும்" என்ற உத்தி செயல்படாத பிறகு, அவன் ஸ்தேவான் மீது தனிப்பட்ட தாக்குதல்களையும், அவதூறுகளையும் முயற்சித்தான். மொத்த ஊழியகாரர்களுக்கும் பெரிய நடுக்கத்தை உண்டாக்கும்படி அவன் அந்த ஏழு பேரில் இருந்து வலிமையான நபரைத் தனிமைப்படுத்தி தனிப்பட்ட தாக்குதலைச் செய்ய விரும்பினான்.


'ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள். அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று. 'அப்போஸ்தலர் 6:8-10


ஸ்தேவானின் குணாதிசயங்கள்

ஸ்தேவானிடம் பல நீதியான குணங்கள் காணப்பட்டதே சாத்தான் ஸ்தேவானைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம்.

  1. தேவனுடைய கிருபையும், வல்லமையும் நிறைந்த மனிதன் – “'ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும்”

  2. அற்புதங்களை நிகழ்த்தினார் – “ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்”

  3. அவருக்கு ஞான ஆவி இருந்தது - “பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று”

  4. எல்லா நீதியான குணங்களுடனும் தேவாலயத்தை வழிநடத்தும் முக்கிய வீரரான ஸ்தேவானை தோற்கடிக்க விரும்பி, சாத்தான் பல யுக்திகளைக் கையாண்டான்.


'அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாகமனுஷரை ஏற்படுத்தி; ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச்சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்தஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்; எப்படியென்றால், நசரேயனாகிய அந்தஇயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம்என்றார்கள். ' அப்போஸ்தலர் 6:11-14


  1. வெவ்வேறு காரணங்களுக்காக அப்போஸ்தலர்களை முன்பு தண்டிக்க முயற்சித்த எதிர்ப்பாளர்களை எல்லாம் சாத்தான் பொறாமையால் நிரப்பி அப்போஸ்தலர்களின் செயல்களை இழிவுபடுத்துப்படி செய்தான். ஆனால் அவர்களை வழிநடத்தும்படிக்கு கர்த்தருடைய கரம் அவர்களுடனே இருந்தது.

  2. அடுத்தது ரகசியமாக மக்களை திரட்டி தனது தனிப்பட்ட தாக்குதலை பயன்படுத்துகிறான் “ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாகஇழுத்துக்கொண்டுபோய்; “

  3. பொய் சாட்சி பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள்””

  4. அவர் "தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்" என்று முத்திரை குத்தப்பட்டார் இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும்வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்”,

  5. இந்த தனிப்பட்ட தாக்குதல்களினால் அவர்கள் அவரை ஆலோசனை சங்கத்துக்கு அழைத்துச் சென்றனர் “அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்”. ஆலோசனை சங்கம் ~ இது தேவதூஷணம் பண்ணியவர்களை விசாரிப்பதற்கான ஒரு நீதிமன்றத்தைப் போல இருக்கும்.

பரிசுத்த ஆவியானவர் ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக பாதுகாக்க அவருக்கு உதவினார்

  • அவர் ஆலோசனை சங்கத்தில் அமர்ந்திருந்தபோது, ஜனங்கள் அவருடைய முகம் ஒரு தேவதூதன் முகம் போல் இருக்கக் கண்டார்கள். அவர் இந்த எதிர்ப்பை எதிர்கொண்ட போது கர்த்தர் ஸ்தேவானுடன் இருந்தார்.

'ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக்கண்டார்கள்.'அப்போஸ்தலர் 6:15

  • அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு எல்லா வேத பாரகர்களுக்கும் அவர்களின் விதிமுறைகளின்படி பதில் கொடுத்து தன்னைக் காத்துக் கொண்டார். (அப்போஸ்தலர் 7 ஆம் அதிகாரத்தில், பழைய ஏற்பாடு முழுவதும் சுருக்கமாக ஒரே அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும்.)

  • தேவன் ஆபிரகாமுக்கு எவ்வாறு தோன்றினார், அவருக்கு அவர் அளித்த வாக்குறுதி, இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து தேவன் எவ்வாறு வழிநடத்தினார் மற்றும் தேவன் எவ்வாறு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதிலிருந்து அவர் தொடங்கினார். இருந்தபோதிலும், மக்கள் ஆண்டவருடைய செயல்களை அங்கீகரிக்கத் தவறி, அவருக்கு விரோதமாகத் திரும்பியதை விளக்கினார்.

  • தேவன் யாக்கோபுடன் இருந்தார் என்றும், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவருக்கு ஞானத்தை வழங்குவதற்காக யோசேப்புடன் இருந்தார் என்பதையும், பார்வோன் அவரை எகிப்து முழுவதையும் எவ்வாறு ஆளச் செய்தார் என்பதையும் அவர் விளக்கினார்.

  • தேவன் எப்படி இஸ்ரவேலை மீண்டும் வழிநடத்தினார் என்பதையும், தங்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்த தேவனை ஜனங்கள் மறந்து மீண்டும் அவரிடம் இருந்து விலகி தாங்கள் வழிபடுவதற்கு விக்கிரகங்களை உருவாக்கியதையும் விளக்கினார்.

  • தேவன் தம்மைப் பின்பற்றுவதற்கு அநேக வாய்ப்புகளைக் கொடுத்தும், நமது பிதாக்கள் எவ்வாறு தேவனை விட்டு விலகிச் சென்றார்கள் என்று அவர்களுடைய வழிகளைக் குறித்து விளக்கினார். அதை .அங்கிருந்த ஜனங்களோடு தொடர்புபடுத்தினார். ஆலோசனை சங்கத்தாரை "வணங்காக் கழுத்துள்ளவர்கள்" என்று கடிந்து கொண்டார் (அப் 7:51) மற்றும் அவர்களின் பிதாக்கள் செய்ததை போலவே இவர்களும் இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக அவர்களைக் கண்டித்தார்.

'வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும்பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள் ' அப்போஸ்தலர் 7:51

  • அவர் தம்முடைய நிலைப்பாட்டை ஆதரித்தது மட்டுமல்லாமல், பரிசுத்த ஆவிக்கு எதிராக அவர்கள் செய்த செயல்களுக்காக அவர்களைக் கண்டனம் செய்தார்.


ஸ்தேவானின் துன்புறுத்தல்


அவர் பேசுவதைக் கேட்டு, அவர்கள் கோபமடைந்து, பற்களைக் கடித்துக் கொண்டு, அவரைக் கல்லெறியும்படி இழுத்துச் சென்றனர்.


'இவைகளை அவர்கள் கேட்டபொழுது. மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். ' அப்போஸ்தலர் 7:54


நாம் நின்று இந்தக் காரியத்தைக் குறித்து ​​தியானிக்கும் போது, இந்த ஜனங்களிடம் இருந்து அவரை காத்துக் கொள்ள உதவிய பரிசுத்த ஆவியானவர், ஏன் ஸ்தேவானை கல்லெறிந்து கொல்வதற்கு அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது.


அவரது மரணத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

  1. எதிரி அம்பலப்படுத்தப்பட்டால் உண்மையைத் தாங்க முடியாது, அதுதான் காரணம், ஸ்தேவான் தங்கள் பாசாங்குத்தனத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியதால் அவர்கள் பற்களைக் கடித்துக் கொண்டு ஆத்திரமடைந்தனர்.

  2. கல்லெறியப்பட்டபோது, அந்த கஷ்டமான நேரத்தில் அவர் இயேசுவைத் துதித்தார். இது நடக்க அனுமதித்ததற்காக இயேசுவை சபிக்கவில்லை, இது கடினமான காலங்களில் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தியதன் உண்மையான பிரதிபலிப்பாகும்.

    1. 'அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக்கல்லெறிந்தார்கள். ' அப்போஸ்தலர் 7:59

  3. எல்லா அப்போஸ்தலர்களும் நாளுக்கு நாள் எருசலேமில் மட்டுமே வளர்ந்து கொண்டிருந்தனர். அதேசமயம் இயேசு "சகல ஜாதிகளையும் சீஷராக்கும்" பெரிய கட்டளையை கொடுத்திருந்தார். அவர்கள் எருசலேமை விட்டு வெளியேப் புறப்பட்டு போவதற்கு இதுவே சரியான நேரம் என்று இயேசு உணர்ந்தார்.

    1. 'ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்குஞானஸ்நானங்கொடுத்து, 'மத்தேயு 28:19

  4. இந்த சம்பவத்திற்குப் பிறகு, எல்லா கிறிஸ்தவர்களும் தாள அடிக்கப்பட்டதால் அவர்கள் சுவிசேஷத்தைப் பரப்புவதற்காக எருசலேமிலிருந்து பிற இடங்களுக்குத் தப்பிச் சென்றனர்.

    1. 'அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம்உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். அப்போஸ்தலர் 8:1

  5. இந்த துன்புறுத்தலுக்கு "சவுலை" ஒரு சாட்சியாக தேவன் அடையாளம் காட்டினார். 'அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும்சம்மதித்திருந்தான்.’

  6. பின்னர் தேவன் "சவுலை" அப்போஸ்தலன் "பவுல்" ஆக மாற்றினார். அவர் துன்புறுத்தலின் சாட்சியைப் பயன்படுத்தி, இன்று நாம் வாசிக்கிற புதிய ஏற்பாட்டில் 13 கடிதங்களை எழுதும்படி செய்தார். அது தான் அன்று ஸ்தேவானை கல்லெறிவதற்கு அனுமதித்த தேவனின் திட்டம்.

சுருக்கம்

  • நாம் சமூக ஊடகங்கள் மற்றும் ஹைடெக் உலகின் புதிய யுகத்தில் வாழ்கிறோம். பிரித்தல் / ஆளுதல் / தனிப்பட்ட தாக்குதல்களைப் பயன்படுத்துதல் / தேவ செயல்களை இழிவுபடுத்துதல் மற்றும் நீதியுள்ள, ஆவிக்குரிய நபரை அவதூறு செய்வது என்று சாத்தானும் அதே உத்தியைத் தான் பயன்படுத்துகிறான். அப்பொழுது தான் அவர் பெலவீனமாய் ஆக்கப்படுவார். அவன் துன்புறுத்தலுக்கு உதவ சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவான்.

  • ஸ்தேவானிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது போல், வழிநடத்த பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலுடன் நடப்போம். அவர் ஒவ்வொரு நிலையிலும் உங்களை வழிநடத்துவார். உங்கள் எதிர்ப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவற்றை துண்டு துண்டாக உடைப்பார்.

  • தேவனுடைய விருப்பத்திற்கு ஒப்புக் கொடுங்கள். பல சமயங்களில் காரியங்கள் நாம் விரும்புகிற வழியில் நடக்காமல் இருக்கலாம்.ஆனால் நாம் கற்பனை செய்வதை விட சிறந்த திட்டங்களை அவர் வைத்திருப்பார். நீங்கள் துன்புறுத்தப்படுவதற்கு அவர் அனுமதித்தால், நீங்கள் அவருடைய பணிக்காக வளர ஒரு விதையாக இருப்பீர்கள்.

  • சாத்தானின் செயலைக் கண்டு பயப்படாதீர்கள், தேவன் உங்களை என்ன செய்ய அழைக்கிறாரோ அதைத் தொடர்ந்து செய்யுங்கள். வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்த தேவனுடைய உதவியை நாடுங்கள்.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page