top of page

நல்ல மரம்

Kirupakaran

உங்களில் சிலர் தோட்டம் வைத்திருக்கலாம். அங்கே, நல்ல செடிகள் நல்ல பழங்களை விளைவிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தசெடியின் வேர்கள் நல்ல ஊட்டச்சத்துக்களால் ஊட்டம் பெற்று, பூச்சிகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே இது நடக்கும். அதேபோல, உங்களுக்கு முகப்பரு அல்லது குறைகள்/ சிதைவுகள் எதுவும் இல்லாத சருமம் இருந்தால் அது உங்கள் உள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான நல்ல அறிகுறியாகும். உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் முதல் அறிகுறி உங்கள் சருமம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


அதேபோல் ஆவிக்குரிய வளர்ச்சியில், நீங்கள் கிறிஸ்துவுடன் ஆவியில் வளர்ந்து, அவர் நம்மில் விரும்பும் கனிகளை விளைவிக்க விரும்பினால், நாம் தேவனுக்கு முன்பாக நம் சொந்த இருதயங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும், ஏனென்றால் நம் வாயிலிருந்து வெளிப்படும் அனைத்தும் நம் இருதயத்தில் உள்ளவைகளிலிருந்து வருகின்றன. இதை இயேசு மத்தேயு 12:33-37ல் விளக்குகிறார்.

'மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். 'மத்தேயு 12:33


“நல்ல மரம்” பற்றிய இந்த வார்த்தைகளை இயேசு எப்போது பேசினார் என்ற சூழலை அறிவது முக்கியம். அது இந்த பதிவை நமக்கு ஆழமாககற்று புரிந்து கொள்ள உதவும். மத்தேயு 12ஐ வாசித்தால் கீழ்வரும் காரியத்தை அறிந்து கொள்ளலாம். அவர் தம்முடைய இரக்கத்தின் நிமித்தம்குருடும், ஊமையுமான ஒருவனுக்கு பிடித்திருந்த பிசாசை வெளியேற்றினார். இதன் விளைவாக அந்த மனிதன் குணமடைந்து, பார்க்கவும், பேசவும் செய்தான். அந்த மனிதன் குணமடைந்ததை பார்த்து அநேகரும் வியந்து போய், "தாவீதின் குமாரன் இவர்தானோ?" என்று கேட்டனர். ஆனால் பரிசேயர்களோ, “இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்லஎன்றார்கள்.” என்றார்கள்.


'ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகியபெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். ' மத்தேயு 12:23-24

அவர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டதால், அவருடைய அற்புதங்களை பிசாசின் வல்லமை என்று விடாப்பிடியாகக் கூறினர். அவர்கள் அவரை வெறுத்ததாலும், அவரைப் பற்றிய பரிசுத்த ஆவியின் சாட்சியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாததாலும்தான் அவ்வாறு கூறினர்.

இயேசுவின் “நல்ல மரம்" பற்றிய உவமையில் இருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன.


a) வாய் மற்றும் இருதய தொடர்பு

b) பொக்கிஷசாலை

c) வீணான வார்த்தைகள்


வாய் மற்றும் இருதய தொடர்பு


'விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய்பேசும். 'மத்தேயு 12:34


  • அவர் அவர்களை “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று அழைக்கிறார். இது ஆங்கில "கிங் ஜேம்ஸ்” பதிப்பில் “ஓ விரியன் பாம்பு தலைமுறைகளே…”. என்று உள்ளது. “குட்டி” அல்லது "தலைமுறை" என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்த வார்த்தைகள் அடிப்படையில்"சந்ததி" என்று பொருள்படும். இது அவர்களின் தீய குணம் மற்றும் அவர்களின் தீய மூலத்தைப் பற்றி பேசுகிறது. ஆனால் அதுஅவர்களின் உண்மையான தன்மையை வெளிப்படுத்த கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் என்று எண்ணலாம்.

  • இவை அனைத்தும் இந்த பரிசேயர்களின் இருதயத்தில் உள்ள “பாவக் கிணற்றில்" இருந்து வாய் மூலம் வெளிவந்தது. இதை தான் இயேசு கூறுகிறார், “நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்?". அவர்களால் தீயதைத் தவிர வேறு எதையும் பேச முடியவில்லை. அவர்களால் வேறுவிதமாகச் செய்ய இயலாது; "ஏனெனில், இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்."

  • வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நல்லவையாக இருக்க சுத்தமான இருதயம் இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் வலியுறுத்தல்.இதைத் தான் மத்தேயு 12:33ல் "ஒரு மரத்தை நல்லதாக்குங்கள், அதன் பழம் நன்றாக இருக்கும்" என்று அவர் சொல்கிறார்.


பொக்கிஷசாலை


'நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாதபொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். ' மத்தேயு 12:35


  • இயேசு இந்தக் கொள்கையை எவ்வாறு விளக்கினார் என்பதைப் பாருங்கள். “'நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்துநல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான். . .” என்று அவர் கூறுகிறார்.

  • ஒரு மனிதனின் உள்ளே ஆழத்தில் ஒரு "பொக்கிஷசாலை" - ஒரு உள் "சேமிப்பு" உண்டு. அவன் நினைக்கும் விஷயங்கள், பொக்கிஷமாக கருதும் மற்றும் மதிப்புமிக்க விஷயங்கள், அவன் அடிப்படையில் நம்பும், எதிர்பார்க்கும் மற்றும் நேசிக்கும் விஷயங்கள் ஆகியவற்றால் அது நிரம்பியுள்ளது.

  • ஒருவர் தேவனுக்கு முன்பாக சரியானவராகவும், அவருக்குச் சாதகமாக இருப்பவராகவும், தனது பாவங்களை ஒப்புக்கொண்டு, இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய இரக்கத்தை நாடியவராகவும், பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தப்பட்டு, தேவனுடைய போதனையைப் பெற்றவராகவும் இருந்தால் அவர் உள்ளத்தில் நல்ல பொக்கிஷத்தைக் கொண்ட நல்ல மனிதர்.

  • நம் இருதயத்தில் உள்ள பொக்கிஷம் உள்ளே என்ன இருக்கிறதோ அதையே பேசுகிறது. உங்கள் இருதயத்தில் நல்லவை இருந்தால், நீங்கள் மக்களுக்கு நல்லதைச் சொல்லுவீர்கள். அது அழுக்கு மற்றும் கெட்டவைகளால் நிரம்பி இருந்தால், உங்கள் வாயிலிருந்து வெளியேறும் அனைத்தும் கெட்டதாக இருக்கும்.


வீணான வார்த்தைகள்

'மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச்சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்றுதீர்க்கப்படுவாய் என்றார். 'மத்தேயு 12:36-37


  • நாம் பேசிய வீண் வார்த்தைகளுக்கு நாம் பெறப்போகும் நியாயத்தீர்ப்பைப் பற்றி இயேசு இங்கே பேசுகிறார் "'மனுஷர் பேசும் வீணானவார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் "

  • இந்த "வீணான வார்த்தை" என்றால் என்ன? இதை "ஒவ்வொரு கவனக்குறைவான வார்த்தை" என்று மொழிபெயர்க்கலாம். நாம் பேசும் கவனக்குறைவான வார்த்தைகளில் சிலர், “ஓ; நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நான் விளையாட்டுக்காகச் சொன்னேன். விஷயங்களை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று கூறுவர்.

  • நாம் பேசும் வார்த்தைகள் எதையும் குறிக்காது, ஆனால் வார்த்தையின் செயல் நாம் பேசுவதற்கு நேர்மாறானதாக இருக்கும். ஏனெனில் இதில் பெரும்பாலானவை இருதயத்திலிருந்து வருகின்றன.

  • ஆனால் நாம் என்ன சாக்குப்போக்கு சொன்னாலும், "உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்" என்று இயேசு சொன்னது போல அது நியாயத்தீர்ப்பு நாளில் பயன்படுத்தப்படும். ஏன் என்றால் நம் வார்த்தை நம் இருதயத்தில் இருந்து வந்தது என்று அவருக்குத் தெரியும்.


செயலுக்கான அழைப்பு


அடிப்படையில் இயேசு போதித்த மூன்று கொள்கைகளும் நாம் எப்படி இருக்கிறோம் மற்றும் நம் இருதயத்தில் உள்ளதே நம் வாயில் இருந்து வெளிவருகிறது என்பதையே போதிக்கிறது. அப்படியானால், நாம் செய்யும் செயல்கள் நல்ல பலன்களைத் தரும் வகையில் அதை எவ்வாறு சுத்தம் செய்வது.


  1. நாம் வைத்திருக்க வேண்டிய முதல் முக்கியமான விஷயம் என்னவென்றால் - இயேசு நம்முடைய இரட்சகர் மற்றும் அவர் ஒருவரே நம்முடைய பாவங்களைக் கழுவ முடியும் (அது எவ்வளவு கொடியதாக இருந்தாலும் பரவாயில்லை), இயேசுவைத் தவிர நமக்கு இரட்சிப்பு இல்லை.

  2. நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசத்துடன் நடக்கும்போது, உங்கள் இருதயங்களை ஆராயவும், நமது பழைய வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் அனைத்தையும், நம்முடைய கெட்ட சகவாசத்தால் உருவான பழைய தீய விஷயங்கள் / பழகியவர்களிடம் இருந்து அதே போல் செய்ய ஆரம்பித்த சில காரியங்கள் (அது நீங்கள் பேசிய கெட்ட வார்த்தையாக, கிசுகிசுவாக , பொய்களாக இருக்கலாம் அல்லது நீங்கள் கொடுத்த சாபங்கள் அல்லது நீங்கள் கொண்டிருந்த மோசமான எண்ணங்களாக இருக்கலாம்) போன்றவற்றை அகற்றவும் தேவனை அனுமதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

  3. உங்கள் தினசரி தனிப்பட்ட ஜெபங்களின் மூலம் நீங்கள் இயேசுவுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளும்போது, ​​நீங்கள் எங்கு பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதையும், நமக்கு உதவ கடவுளின் கிருபை மற்றும் பலத்திற்காக உங்களுக்கு எந்தெந்த பகுதிகளில் உதவி தேவை என்பதை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் அந்த பகுதியில் உங்கள் பலவீனத்தை ஒப்புக்கொள்ளுங்கள்.

  4. நீங்கள் ஜெபிக்கும்போது, இயேசுவிடமும், நீங்கள் புண்படுத்திய அல்லது பேசிய மற்ற நபரிடமும் மன்னிப்பு கேளுங்கள், முடிந்தால், அவர்களுடன் சமரசம் செய்யுங்கள். அது உங்கள் இருதயத்தில் ஆழமாக இருக்கும் பகையை அகற்ற உதவுகிறது, அதனால் அது பின்னர் திரும்பி வராது.

  5. நாம் நம் இருதயத்தில் எதை வைப்போமோ, அதுவே நம் வாயிலிருந்து வெளிவர வேண்டும் என்பதை உறுதி செய்வோம். பவுல் கூறினார், 'கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையேகேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். 'எபேசியர் 4:29

    1. எப்பொழுதும் தேவனுக்குப் பிரியமான விஷயங்களை நிரப்புங்கள், ஒருவருடன் பேசுவது வதந்திகளால் கோபத்தை உண்டாக்கினால், அந்த நபருடன் பேசுவதை நிறுத்துங்கள்.

    2. ஒரு ஏமாற்றுக்காரருடன் சேர்ந்து வேலை செய்து வந்தால், அவருடன் வேலை செய்வதை விட்டுவிட்டு, தேவனிடம் சரணடைந்தால்,தேவன் உங்களுக்கு புதிய கதவுகளைத் திறப்பார்.

    3. முக்கிய விஷயம் என்னவென்றால், பாவத்தை அடையாளம் காண்பதுதான், நாம் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்.

நாம் ஒரு நல்ல மரமாக இருக்க, நம் வேர்கள் கிறிஸ்துவுடன் இருக்க வேண்டும், நல்ல வேர் இருக்க வேண்டும், நாம் ஒவ்வொரு நாளும் இயேசுவோடு நடக்க வேண்டும். எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இயேசுவுடன் நடப்பதில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவேளை கொடுத்தால் பிசாசு கூடாரம் போடவும் உங்கள் இருதயத்தை கறைபடுத்தவும் இடம் கொடுத்து விடும். ஒரு நிமிடம் கூட சாத்தானுக்கு இடம் கொடுக்க வேண்டாம். அவன் ஒரு கொடிய விஷம் என்பதால், ஒரு துளி நமது ஆவிக்குரிய முதிர்ச்சியைக் கொல்லும்.



132 views0 comments

Recent Posts

See All

Good Tree

تعليقات

تم التقييم بـ ٠ من أصل 5 نجوم.
لا توجد تقييمات حتى الآن

إضافة تقييم

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page