top of page
Kirupakaran

நம்முடைய பரம தந்தை



நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் தந்தையைக் குறித்த சொந்தக் கதைகளும் நினைவுகளும் இருக்கின்றன. அநேக குடும்பங்களில், தாய்மார்கள் பெரும்பாலும் தந்தையை விட அதிகமாக பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். சில தந்தைமார்  ஆண்டவர் மீது கோப உணர்வு கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், தாம் பெண்களை விட சக்தி வாய்ந்தவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களது ஆண்  தன்மை சில சமயங்களில் ஆண்டவருக்கு அடிபணிவதற்கு எதிர்க்கிறது. இருந்தும், முழு பிரபஞ்சத்திலும் ஒரே ஒரு தேவன் மட்டுமே அவரை பிதா என்று கூப்பிடும்படி நம்மை அழைக்கிறார்; வேறு எந்த தெய்வமும் இந்த உரிமையை வழங்குவதில்லை.


தந்தையர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

 

நமது பரம தந்தை புரிந்து கொள்ளல்

 

1. தேவன் தந்தையரை படைத்தார்

உலகில் உள்ள அனைத்தையும் தேவன் படைத்தார். ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தைப் படிக்கும்போது, ​​அவர் தமது படைப்பு வரிசையை விவரிக்கிறதைக் காணலாம். அவர் எல்லாவற்றையும் படைத்த பிறகு ஏதோ ஒன்று குறைவாக இருப்பதைக் கண்டு, மனிதனை தமது சொந்த சாயலில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். எப்படி மனிதனை மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை ஊதினார் என்றும்,மனுஷன் எப்படி ஜீவாத்துமாவானான் என்பதையும் பாருங்கள்.

  • பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். ஆதியாகமம் 1:26

  • தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7

அவர் மனிதனை உருவாக்கிய பிறகு, அவனால் எல்லாவற்றையும் ஆள முடியும், ஆனால் இந்த மனிதனுக்கு கவனிப்பும் உதவியும் தேவை என்று உணர்ந்தார். பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் 2:18,21-22

நம் முற்பிதாக்களாகிய ஆதாம் மற்றும் ஏவாளின் மூலம், நாம் அனைவரும் தந்தையாகிவிட்டோம். ஒவ்வொரு படைப்பிலும் தேவனின் நற்குணம் வெளிப்படுகிறது. மனிதனுக்கு ஏற்ற துணை தேவை என்று அவர் உணராமல் இருந்திருந்தால், நமக்கு பெண் இல்லை, பெண் இல்லாமல் ஆண் ஆணாகவே இருந்திருப்பான். ஒரு போதும், அவன் தந்தையாக ஆகியிருக்க முடியாது.

 

தேவன் தாம் படைத்த ஒவ்வொன்றையும், பலுகிப் பெருகும்படி (நீங்கள் பலுகிப் பெருகி) ஆசீர்வதித்தார். இப்படித்தான், குழந்தைகள் என்னும் ஆசீர்வாதம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்தது.

 

சமுத்திரத்தையும் வானத்தையும் அதில் வாழும் அனைத்தையும் ஆளும் அதிகாரத்தை தேவன் மனிதனுக்கு மட்டுமே கொடுத்தார். எப்பேற்பட்ட நல்ல தேவன் அவர் நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.

 

2. தேவன் ஆபிரகாமை "ஜாதிகளுக்குத் தகப்பன்" ஆக்கினார்

 

ஆபிராம் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​​​அவரை 90 ஆண்டுகள் தம்மோடு நடக்க வைத்தார். அவர் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக இருப்பார் என்ற வாக்குத்தத்தத்தினால் ஆபிராம் என்ற பெயர் ஆபிரகாம் என்று மாறியதைக் காண்கிறோம்.


அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

ஆதியாகமம் 17:3-6

 

ஆபிரகாம் தேவனுடன் குற்றமில்லாமலும் உண்மையுடனும் நடந்ததால் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாகும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டார். ஒன்றும் இல்லாதபோது தேவனை நோக்கிப் பார்த்து, ஒவ்வொரு விஷயத்திற்கும் அவரையே சார்ந்து இருந்தார்.

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். ஆதியாகமம் 17:1-2

 

ஆபிரகாமுக்கு கிடைத்த இந்த ஆசீர்வாதம் நமக்கு என்ன கற்பிக்கிறது?

  • தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் யாவரும் ஆபிரகாமின் சந்ததியார். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். கலாத்தியர் 3:29

  • பாவத்திலிருந்து இவ்வுலகை இரட்சிக்கும் கிறிஸ்துவின் சந்ததியை தேவன் ஆபிரகாமின் சந்ததியினர் மூலம் கொடுத்தார். ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. கலாத்தியர் 3:16

  • தேவனிடமிருந்து நாம் பெறும் ஆசீர்வாதங்கள் யாவும் ஆபிரகாமை தேவன் ஆசீர்வதித்ததால் கிடைக்கிறது. அது அவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய சந்ததிக்கும் கிடைக்கிறது. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். கலாத்தியர் 3:29

  • வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. ரோமர் 4:3

  • கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசம் ஆபிரகாமிடமிருந்து சுதந்தரித்துக் கொண்டது. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம் 15:6

  • விசுவாசம், தேவனிடத்தில் நீதியாயிருப்பதற்கு நமக்கு அதன் வேரைக் கொடுத்தது. நீதிமானாயில்லாமல் தேவனைக் காண முடியாது.

  • அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. ரோமர் 3:22

  • நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2 கொரிந்தியர் 5:21

  • தேவனுடைய இந்த நீதி நம்மை நீதிமான்களாக்குகிறது. மேலும், நாம் நீதியின் பாதையில் நடக்கும்போது தேவனோடு நித்திய ஜீவனைப் பெறுகிறோம். ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. ரோமர் 5:21

 

3. தேவன் இயேசுவை தந்தருளியதால் நாம் அவருடைய சந்ததிகளாக மாறுகிறோம்

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து இரட்சிக்கப்படும் போது நாம் தேவனின்  குடும்பத்தில் ஒரு அங்கமாகி விடுகிறோம். மேலும், இந்த விசுவாசத்தின் மூலம் நாம் தேவனின் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். அவருடைய பிள்ளைகளாக, நாமும் கிறிஸ்துவுடன் சேர்ந்து தேவனுடைய சுதந்தரத்தில் பங்கெடுத்து, அவருடைய மகிமையில் பங்குகொள்ளும் இறுதி இலக்குடன், அவரைப் போலவே நாமும் கஷ்டங்களைச் சகித்துக்கொள்கிறோம். இரட்சிக்கப்படுகிறவர்கள் கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள்.

 

நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. கலாத்தியர் 3:26

அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். ரோமர் 8:15-16

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5:4.

 

நாம் அவருடைய சந்ததியினர் என்பதால், சாத்தானை மேற்கொள்ளும் பலத்தை நமக்குத் தருகிறார் (சர்ப்பங்கள் மற்றும் தேள்களை, சாத்தான் என்று படியுங்கள்).

இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. லூக்கா 10:19

 

நாம் அவருடைய சந்ததி என்பதால், நமக்குக் கட்டுகிற அதிகாரத்தை வழங்குகிறார். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:18

 

4. பிதாவாக தேவன் நம்மைப் பாதுகாக்கிறார்

  • நமக்கு உதவி தேவைப்படும் காலங்களில் அவர் பாதுகாவலராக இருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் மற்றும் அவரைச் சார்ந்திருக்கும் யாவருக்கும் அவர் இரட்சகராக இருக்கிறார். தாவீது இதை இவ்வாறு விளக்குகிறார், தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம் 46:1

  • அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணி அவர்களுக்கு கட்டளையிட அவைகள் விலகிப் போகின்றன. தாவீது, அவர் நமக்கு அடைக்கலமானவர் என்கிறார். ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். சங்கீதம் 46:6-7

  • தேவன் இஸ்ரவேலர்களை 40 ஆண்டுகள் வழிநடத்தினார். அவர் இரவிலே அவர்களுக்கு வெளிச்சமாகவும், பகலில் அவர்களுக்கு நிழலாகவும் இருந்தார். அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை. யாத்திராகமம் 13:21-22

  • இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் நடந்த போது, தேவன் அவர்களைத் தம் தோளில் சுமந்து கொண்டு வந்தார். நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். யாத்திராகமம் 19:4

  • தேவன், தாம் நேசிப்பவர்களைத் தமது உள்ளங்கைகளில் வரைந்து வைத்து, ஒரு தாய் தனது பிள்ளையை நேசிப்பதை விட அதிகமாக நேசிப்பதாகக் கூறுகிறார். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. ஏசாயா 49:15-16

  • புதிய உடன்படிக்கை வாழ்வில், அவர் நமக்கு ஒளியாக இருக்கிறார். அவருடைய இரத்தத்தால் நம்மை நீதியின் பாதையில் வழிநடத்த அவர் நம்மைச் சுத்திகரிக்கிறார் - அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1:7

 

5. பிதாவாக நம்மைத் திருத்துகிறார்

  • தேவன் நம்முடைய அநீதியான நடத்தைகளுக்காக நம்மை நெறிப்படுத்துகிறார். அவருடைய அன்பின் நிமித்தம் நம்மைத் திருத்துவதற்கும், அவருடைய பார்வையில் சரியான வாழ்க்கையை நடத்துவதற்கும் இவ்வாறு செய்கிறார். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எபிரெயர்12:7

  • பிதாவின் சிட்சை பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக தான், அது நீண்ட காலம் நீடிக்காது. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

    • கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். எபிரெயர் 12:6

    • எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். எபிரெயர் 12:11

  • அவரால் சிட்சிக்கப்பட்டவர்கள் மேல் அவருடைய இரக்கம் பெரிதாய் இருக்கிறது. நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. வெளிப்படுத்தின விசேஷம் 3:19

 

பூமிக்குரிய தகப்பன் குறித்த எதிர்பார்ப்புகள்


பிதாவாகிய தேவனைப் பற்றியும் அவருடைய நற்குணத்தைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டோம், அவர் பிதாக்களைப் படைத்தார். பூமிக்குரிய தகப்பனிடம் இருந்து அவர் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்.

 

1. குடும்பத்தின் தலைவர்

ஒவ்வொரு புருஷனும் குடும்பத்தின் தலையாயிருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். கிறிஸ்து குடும்பத்தின் தலையாயிருக்கிறார்.

ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 1 கொரிந்தியர் 11:3

  • இது பிதாக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான நெறிமுறையாகும். பல தகப்பன்மார் இந்த முதன்மைப் பொறுப்பை மறந்துவிட்டு அந்த பொறுப்பை மனைவியிடம் கொடுத்துவிட்டு, ஆணின் பொறுப்பு, வாழ்க்கையில் சம்பாதிப்பது மட்டுமே என்று நினைக்கிறார்கள்.

  • புருஷன் குடும்பத்திற்குத் தலையாக இருப்பது போல, ஒவ்வொரு புருஷனுக்கும் தலை கிறிஸ்துவே. அவன் கிறிஸ்துவையே சார்ந்திருக்க வேண்டும். குடும்பத்தின் ஒவ்வொரு சிறிய முடிவுகளிலும் கிறிஸ்துவின் சித்தத்தைச் செய்வதற்கு, கிறிஸ்துவுடன் கலந்தாலோசித்து அவரையே சார்ந்திருக்க வேண்டும்.

  • இந்தச் சார்ந்திருத்தல் பிள்ளைகளுக்கும் அவர்களின் அன்றாட தேவைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு கிறிஸ்துவைச் சார்ந்திருக்கவும், அவருடைய நீதியைத் தேடவும் கற்றுக்கொடுக்கும்.

  • நமது மூத்த தகப்பன் ஆபிரகாம், ஈசாக்கை பலியாக கொடுக்கும்படி தேவனால் சோதிக்கப்பட்டார். அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள். ஆதியாகமம் 22:2-6. இதில் ஆபிரகாமிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.

  • ஆபிரகாம் தேவனைத் தன் தலையாகக் கருதியதால் அவருக்குக் கீழ்ப்படிந்தார் - உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

  • அவர்கள் 3 நாட்கள் நடந்தார்கள் என்று படிக்கிறோம். ஈசாக்கு சிறிய பையனாக இருந்திருக்க முடியாது, 10 முதல் 15 வயதிற்குள் இருந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவரும் ஆபிரகாம் கட்டளையிட்டதற்கு கீழ்ப்படிந்தார். ஈசாக்கின் கீழ்ப்படிதல், அவரது தகப்பன் (ஆபிரகாம்) தேவன் மீது கொண்டிருந்த தேவபயத்தின் விளைவினால் உண்டானதாகும். பல வீடுகளில், அப்பாக்களுக்கு அந்த குணம் இருக்காது, அதேசமயம் பிள்ளைகளிடம் அந்த குணம் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • சர்வாங்க தகனபலியின் அனைத்து செயல்முறைகளையும் ஆபிரகாம் ஈசாக்கிற்குக் கற்றுக் கொடுத்தார் - வீட்டுத் தலைவனாக அவருக்குக் கற்பித்துக் கொடுத்தார், அவர் தனது வேலையை சாராவிடம் கொடுத்து செய்ய சொல்லவில்லை. அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். ஆதியாகமம் 22:7

  • கணவன் வீட்டின் தலைவனாக இருப்பதால், மனைவியினிடத்தில் அன்பு கூறும்படிக்கு கிறிஸ்துவின் அன்பின் குணங்கள் குடும்பத்தில் இருக்க வேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, எபேசியர் 5:25

  • நீங்கள் வீட்டின் தலைவர் என்பதால், அவர்களிடம் உங்கள் அதிகாரத்தையும் ஆண்மையையும் காட்டாதீர்கள். அவர்களிடம் மென்மையாகவும் அக்கறையுடனும் நடந்து கொள்ளுங்கள். தேவன் உங்களுக்கு காண்பித்த அதே இரக்கத்தையும் கருணையையும் அவர்களிடம் காண்பியுங்கள். நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது குடும்பத்தில் தேவனின் பண்பை வெளிப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் மனைவியை மரியாதையாக நடத்தினால், உங்கள் மகன் தனது மனைவியை மரியாதையுடன் நடத்துவார். நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் கண்ணியமாக பேசினால் அவர்களும் அதையே மற்றவர்களிடம் காட்டுவார்கள். அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். 1 பேதுரு 3:7

 

2. பெற்றோரின் பொறுப்பு

  • தேவன் தமது சந்ததிகளை உங்கள் மூலம் உலகிற்கு கொண்டு வர சரீர  ஆசைகளை வழங்கினார், குழந்தைகள் தேவனுக்காக மட்டுமே. இந்த சரீரம் அவரது நோக்கத்திற்காக படைக்கப்பட்டது. சரீர இன்பங்களை உலகம் கூறுவது போல் பயன்படுத்தக்கூடாது, திருமணமில்லாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது, திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, குறுகிய காலம் ஒன்றாக வாழ்ந்து பின் விவாகரத்து செய்வது போன்ற செயல்கள் அனைத்தும் வேசித்தனங்கள். வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்;ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். 1 கொரிந்தியர் 6:13

  • வேசித்தன பாவங்கள் தற்போதைய காலங்களில் மிகவும் கொடிதாயிருக்கின்றன. நாம் வாழும் தற்போதைய காலம் இளம் மற்றும் வயதான ஆண்கள் அனைவரையும் இந்த வலையில் விழ வைக்கிறது. வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். 1கொரிந்தியர் 6:18

  • யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். போத்திபாரின் மனைவியிடமிருந்து வந்த உயரிய பரிசுகளால் அவர் கவரப்பட்டிருக்கலாம், ஆனால், அவர் தேவனின் முன்பாக நீதிமானாக இருப்பதற்காக சரீர இன்பங்களிலிருந்து விலகி இருந்தார். அவர் தனது நீதியான செயலுக்காக துன்பப்பட்டார். ஆனால் தேவன் உரிய நேரத்தில் அவரை தேசத்தின் ஆட்சியாளராக உயர்த்தினார்.ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. ஆதியாகமம் 39:6-10

  • பெற்றோரின் பொறுப்பு என்பது நல்ல குணாதிசயங்களைக் காட்டுவது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறையை வடிவமைப்பதுமாகும். தாவீது காரியங்களை சாலொமோனிடம் ஒப்படைத்தபோது தனது பொறுப்பை எவ்வாறு காட்டினார் என்பதிலிருந்து நாம் இதைக் கற்றுக்கொள்கிறோம். நான் பூலோகத்தார் யாவரும் போகிறவழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு. நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும், மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. 1 இராஜாக்கள் 2:2-4

  • உங்கள் பிள்ளைகளை கோபத்திற்கு ஆளாக்காதீர்கள், தேவன் தமக்குப்  பிரியமானவர்களை சிட்சிப்பது போல அவர்களை சிட்சியுங்கள். பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. எபேசியர் 6:4

  • தாவீது கற்பித்தது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டது, இதைப் பற்றி, எசேக்கியா ராஜாவின் வாழ்க்கையில் அவர் விக்கிரகங்களை எப்படி அழித்தார் என்பதில் படிக்கிறோம். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான். அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். 2 இராஜாக்கள் 18:1,3-4

  • நீங்கள் உங்கள் பிள்ளைகளை ஆவிக்குரிய வழியில் வளர்க்கும்போது, அவர்கள் ​​சந்ததி தேவனைப் பின்பற்றவில்லை என்றால், தேவன் தமது கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக பிற்கால தலைமுறையினருக்குத் தம் இரக்கத்தைக் காட்டுவார். இதை யோராமுடைய வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில், யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான். அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான். அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை. 2 இராஜாக்கள் 8:16-19

  • நியாயத்தீர்ப்பு நாளில், தேவன் ஒவ்வொரு தகப்பனிடமும் அவர் கொடுத்த சந்ததிகளை எப்படி வளர்த்தோம் என்று கேட்பார். மேலும், அவர்களை தேவபக்தியோடு வளர்த்தோமா இல்லையா என்பதின்படி நியாயந்தீர்க்கப்படுவோம். எனவே, உங்கள் பிள்ளைகளுக்கு நடக்கும் அனைத்தும் நாம் வாழும் ஆயிரமாண்டு தலைமுறையால் என்று நினைக்க வேண்டாம். அவர்களை தெய்வீக முறையில் வளர்க்கும் பொறுப்பு பெற்றோராகிய நமக்கு இருக்கிறது. ஏனெனில், அவர்கள் எதிர்கால தலைமுறையையும் உலகில் தேவனின் திட்டத்தையும் வடிவமைக்கிறார்கள்.

 

3. தேவனை சார்ந்திருத்தல் மற்றும் கடின உழைப்பு

இந்த உலகில் நாம் இருக்கும் காலம், தேவனுடைய சித்தத்தைச் செய்வதும், அவருடைய திட்டங்களை நிறைவேற்றுவதும் ஆகும். இதில், அவர் நம்மிடம் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறாரோ அதை கற்றுக் கொள்ளவும், அவருடைய நிமித்தம் பல விஷயங்களை விட்டுவிடவும் வேண்டும்.

  • தேவனில் பலப்படுதல் - தாவீதின் பட்டணம் எப்படி அமலேக்கியர்களால் சூழப்பட்டது என்பதையும், அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்துச் சென்றதையும், மேலும் தாவீது யுத்தம் செய்வதற்கு எப்படி தேவனை நம்பியிருந்தார் என்றும் நாம் வாசிக்கிறோம். தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள். தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 1 சாமுவேல் 30:1-6

  • சோம்பலாய் இருக்க வேண்டாம் – வாலிபனாகிய தீமோத்தேயு, நாம் சோம்பலுள்ளவர்களாய் இருக்க வேண்டாம் என்றும் உலகில் சுறுசுறுப்பாக  இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். தேவனின் கிருபையைப் பெற கடினமாக உழையுங்கள். அவர் உங்களுக்குக் கொடுத்த இலக்கை அடைய குறுக்கு வழிகளை நாடாதீர்கள். நாம் சோம்பலுள்ளவர்களாய் இருக்கும் போது, ​​தேவனின் திட்டத்தை அழிக்க சாத்தானை அழைக்கிறோம். அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள். ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன். 1 தீமோத்தேயு 5:13-14

  • ஜெயம் கர்த்தராலே வருகிறது - உங்கள் முழு முயற்சியையும் கடின உழைப்பையும் நீங்கள் கொடுத்தாலும், கிரியையின் ஜெயம் தேவனின் கிருபையால் வருகிறது. அதை மறக்க வேண்டாம். குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். நீதிமொழிகள் 21:31

  • தேவனுக்கான சாட்சி - நீங்கள் ஒரு நோக்கத்திற்காக இந்த உலகில் இருக்கிறீர்கள். தேவன் நீங்கள் அவருக்கு ஜீவனுள்ள சாட்சியாக இருக்கும்படி உங்களுக்கு ஜீவனைக் கொடுத்துள்ளார். எனவே, உங்கள் வாழ்க்கை உலகிற்கு வெளிச்சமாக இருக்க தேவனை சார்ந்து இருங்கள். உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய். 1 தீமோத்தேயு 4:12,15-16

 

4. முதல் பலன்களினால் அவரைக் கனம் பண்ணுங்கள்

  • தாராளமாகக் கொடுத்தல் - நாம் வாழும் உலகில், மற்றவர்களுக்குச் சொற்பமாகக் கொடுக்கிறோம், ஆனால் தேவனிடம் ஆசீர்வாதங்களைத் தாராளமாகத் தேடுகிறோம். ஆனால், பெருக அறுவடை செய்வதற்கு பெருக விதைக்க வேண்டும் என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். 2 கொரிந்தியர் 9:6

  • உற்சாகமாய்க் கொடுத்தல் - கட்டாயத்தால் கொடுக்காமல் உங்கள் இருதயத்தில் இருந்து பிறருக்கு மகிழ்ச்சியாகக் கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், கொடுப்பதின் நிமித்தம் கடனில் இருக்க ஒருபோதும் விடமாட்டார். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். 2 கொரிந்தியர் 9:7

  • செய்யவேண்டியதை செய்யாத பாவங்கள் - ஏழைகள் மற்றும் தேவையில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதில் இருந்து விலகி இருக்காதீர்கள். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. யாக்கோபு 4:17. செய்ய வேண்டியதை செய்யாமல் போவதால் உண்டாகும் பாவங்களால், நாம் எவ்வாறு நடத்தப்படுவோம் என்பதற்கு ஐசுவரியவான் மற்றும் லாசரு என்னும் தரித்திரனின் உதாரணத்தை இயேசு கற்பித்தார். ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜீவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். லூக்கா 16:19-24

  • பணத்தைக் கையாள்வதில் கவனமாக இருங்கள் - இருப்பதில்  போதுமென்று இருங்கள். நீங்கள் தேவனை சார்ந்திருந்தால்,பணத்தின் மீதான பற்றுதல் இரண்டாம் பட்சமாகிவிடும். உலகில் பணம் தேவை தான், ஆனால் உலகமும் அதில் உள்ள அனைத்தும் அவரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே தேவனை விட்டுவிட்டு பணத்தின் பின்னால் செல்ல வேண்டாம். நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரேயர் 13:5

 

5. நாம் நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்

  • நாம் அவருடைய நீதியைத் தேட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம், அப்பொழுது, மற்ற யாவும் நமக்குக் கொடுக்கப்படும். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33

  • நாம் தேவனுடைய பரிசுத்தத்தை நாடினால் மட்டுமே தேவனுடைய நீதியைத் தேடுவோம்.

  • வேதத்தின்படி பரிசுத்தம் என்பது தேவனின் இறையாண்மைக்கும் மனிதனின் பொறுப்புக்கும் இடையிலான சமநிலை.

  • தேவனின் இறையாண்மை - தேவன் வல்லமையிலும் அதிகாரத்திலும் முதன்மையானவர். அவரது இறையாண்மை என்பது அவரது பேரரறிவு, சர்வ வல்லமை மற்றும் எங்கும் நிறைந்திருப்பதன் இயற்கையான விளைவு ஆகும்.

  • மனிதனின் பொறுப்பு - செயல்களைச் செய்வது அவனது உண்மையான பொறுப்பு.

  • ஒன்றை விட்டு மற்றொன்றிற்காக செல்வது நம்மைப் பாதையிலிருந்து விலகச் செய்கிறது.

  • தேவனின் அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து நாம் பரிசுத்தமாக மாறாதவரை, வேத வசனத்தைப் படிப்பதாலோ அல்லது ஜெபிப்பதாலோ தேவன் நம்மைப் பரிசுத்தமாக்க மாட்டார். கேட்பதின்படி நாம் செய்யும் செயல்கள் தான் நம்மை பரிசுத்தமாகவும் நீதிமானாகவும் ஆக்குகின்றன.

  • தேவனின் இறையாண்மை மற்றும் மனிதனின் பொறுப்பு ஆகிய  நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்ற இவைகளைப் பற்றி வேதத்தில் ஏராளமான பத்திகள் உள்ளன.

  • லேவியராகமத்தில் உள்ள வார்த்தையிலிருந்து தொடங்குகிறது - ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். லேவியராகமம் 20:7-8

  • மனிதனின் பொறுப்பு - "என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்"

  • தேவனின் இறையாண்மை - "நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்".

  • அவர் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார்; ஆனால் அவரே, “நான் பரிசுத்தமாயிருப்பதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்று கூறுகிறார்.

  • நாள்தோறும் கிறிஸ்து உங்களில் வாழ்ந்தால், கிறிஸ்துவின் ஆவி தேவனுக்கு முன்பாக நீதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கு ஜீவனைக் கொடுக்கிறது. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். ரோமர் 8:10

  • சாத்தானுக்கு முன்பாக தேவனின் பாராட்டைப் பெற யோபு போல ஒரு வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள். அது உங்களால் செய்ய இயலாது, ஆனால் கிறிஸ்துவின் மூலம் எல்லாமே சாத்தியம். ஏனெனில்,  கிறிஸ்துவின் மூலம் எல்லா காரியங்களும் சாத்தியமே. கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து,பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். யோபு 1:8

  • நீதியான வாழ்க்கை வாழ்வதால், உலகம் உங்களை தோற்றுப் போனவர் என்று அழைக்கும். அது உங்களை கேலி செய்யலாம், பல பெயர்களால் உங்களை அழைக்கலாம், ஆனால் தேவனின் வாக்குத்தத்தம் உண்மையானது, யோபுவின் பாடுகளுக்குப் பிறகு அவர் யோபுவைப் பன்மடங்கு ஆசீர்வதித்ததைப் போல அவர் உங்களையும் உயர்த்துவார்.  ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1 பேதுரு 4:15-16,19

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip
Philip
Jun 30
Rated 5 out of 5 stars.

Amen

Like
bottom of page