top of page

நம்பமுடியாத விசுவாசம்: ராகாபின் மீட்பு கதை

Kirupakaran

பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது, பார்வோனின் கீழான  அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்து, பாலும் தேனும் ஓடுகிற வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி வழிநடத்த தேவன் மோசேயைத் தேர்ந்தெடுத்தார் என்பதைக் காண்கிறோம். எனினும், அவர்களுடைய அவிசுவாசம் மற்றும் கலக மனப்பான்மையின் காரணமாக, யோசுவாவையும் காலேபையும் தவிர அந்தச் சந்ததியில் ஒருவரும் அந்த தேசத்திற்குள் பிரவேசிக்கவில்லை. மோசேயின் மரணத்திற்குப் பிறகு, ஜனங்களை அந்த தேசத்திற்குள் வழிநடத்த  தேவன் யோசுவாவை நியமித்தார்.


எரிகோவுக்கு எதிரான இஸ்ரவேலரின் யுத்தத்திற்கு முன்பாக, யோசுவா பட்டணத்தை வேவு பார்க்க இரண்டு வேவுகாரரை அனுப்பினார் (யோசுவா 2). அவர்களுடைய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டபோது, பிடிபடுவதைத் தவிர்க்க அவர்கள் ராகாப் என்ற வேசியின் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

ஞாயிறு பள்ளி குழந்தைகளுக்கான இந்த சிறு காணொளியின் மூலம் முழு கதையையும் அறிந்து கொள்ளலாம்.


எரிகோ பட்டணத்தைப் பற்றிய உண்மைகள் விரைவாக,

  • பட்டணம் சுமார் எட்டு ஏக்கர் பரப்பளவில் இருந்தது.

  • பட்டணத்தைச் சுற்றிலும் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்கள் இருந்தன.

  • உட்புற சுவர் 12 அடி தடிமனாகவும், வெளிப்புற சுவர் 6 அடி தடிமனாகவும் இருந்தது.

  • சுவர் மட்டுமே 30 அடி உயரம் இருந்தது.

 

யார் இந்த ராகாப்?

எரிகோவில் இருந்த கானானியப் பெண்ணான ராகாப் என்ற வேசி, இஸ்ரவேலர்கள் பட்டணத்தைக் கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தாள் (யோசுவா 2). - நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். யோசுவா 2:1

 

ராகாபின் விசுவாச செயலால், புதிய ஏற்பாட்டில் "வேசி" என்ற பட்டத்தோடே இடம்பெற்றுள்ளாள்.

  • இயேசுவின் வம்சாவளி பட்டியலில் இவளது பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. - சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; மத்தேயு 1:5

  • விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். எபிரெயர் 11:31

  • ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? யாக்கோபு 2:24-25

 

ராகாப் என்பவள், தேவனால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட எரிகோ பட்டணத்தில் வாழ்ந்து வந்த ஒரு பாவியாவாள். தேவன் வெறுக்கின்ற வேசித்தனத்தை அவள் செய்து கொண்டிருந்தாள்.

  • அவளது வேசித்தனத்தினால் அறியப்பட்டிருந்தாள்.

  • பாவம் எல்லாமே பாவம் தான். அநேக பாவங்கள் மறைவாயிருக்கையில், ராகாப் ஒரு வேசி என்பதால் வெளிப்படையாக அறியப்பட்டாள். அதுதான் அவளுக்கும் நமக்கும் உள்ள ஒரே வித்தியாசம்.

  • நம்மைப் போலவே, அவளும் ஒரு பாவியாக இருந்தாள். ஏனெனில், "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி," என்று ரோமர் 3:23 கூறுகிறது.

  • எரிகோ ஏற்கெனவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கீழ் இருந்தது, அது அழிக்கப்படுவதற்கு இன்னும் சிறிது காலம் மட்டுமே இருந்தது.

 

நான் வார்த்தையைத் தியானித்துக் கொண்டிருந்தபோது, ​​என் மனதில் எழுந்த ஒரு கேள்வி என்னவென்றால் ஒரு வேசி எப்படி நீதிமானாகி வேதத்தில் மூன்று முறை இடம் பெற்றாள்? என்பதே.

 

1. ராகாபுக்கு கிருபையின் காலம் கொடுக்கப்பட்டது
  • எரிகோ பட்டணம் பல ஆண்டுகளாக நியாயத்தீர்ப்புக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது, இதைப் பற்றி உபாகமத்தில் வாசிக்கிறோம். (உபாகமம் 7:1-5, 23:24; 12-2-3). நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி,உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம்பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கை பண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம். அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும். நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம் 7:1-6

  • எரிகோ தேசத்திற்கு நியாயத்தீர்ப்பு வர தேவன் அனுமதித்தார், அவள் தேவனுடைய செங்கடல் அற்புதத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாள். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். யோசுவா 2:10

  • கிருபையின் காலம் குறித்து அவளுக்குத் தெரியாது, ஆனால் அவள் கிருபையின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

2. ராகாப் தேவனுடைய வார்த்தையைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தாள் 

  • தூதர்கள் சந்திக்க வந்தபோது, அவள் தேவனை அறியாதிருந்தும், அவளுடைய செய்தியில் செங்கடலின் அற்புதங்களிலிருந்து தேவனை "கர்த்தர்" என்று அழைக்கிறாள்.

  • கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன். யோசுவா 2:9

3. ராகாப் தேவனுக்குப் பயந்தாள் / தேவனை மெய்யான தேவனாக ஒப்புக்கொண்டாள்

  • அவள் தேவனுக்குப் பயந்து, தேவனுடைய கிரியைகளை ஒப்புக்கொண்டாள். - கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். யோசுவா 2:11

4. ராகாப் வசனத்தை விசுவாசித்தாள்

  • ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் 10:17. விசுவாசமே மிகவும் தேவபக்தியற்ற பாவிகளை இரட்சிக்கிறது (இங்கே ராகாப் ஒரு வேசி).

  • எபிரெயர் 11:31 இல் அவள் விசுவாசத்தினிமித்தம் இரட்சிக்கப்பட்டாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். எபிரெயர் 11:31

  • யோசுவா 2:9 இல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, "கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தார்" என்பதே ராகாப் கொண்டிருந்த விசுவாசம். "கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், ... அறிவேன்".

5. ராகாப் தன் விசுவாசத்தை (நம்பிக்கையை) செயல்களால் நிரூபித்தாள்

  • வேவுகாரர்களை ஏற்றுக்கொண்டு, மறைக்கவும், பாதுகாக்கவும் அவள் தன் உயிரைப் பணயம் வைத்தாள் என்ற உண்மை, ராகாப் தேவனை விசுவாசித்தாள் என்பதற்கு ஒரு சான்று.

  • அவள் தேவனுடைய ஜனங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாள்: ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? யாக்கோபு 2:24-25

6. ராகாப் மற்றவர்களை கைக்கொள்ள முயன்றாள்

  • அவள் தன்னை மட்டுமல்லாமல், தன் குடும்பத்தையும் காப்பாற்ற விரும்பினாள்.

  • மரணத்தினின்று இரட்சிக்கப்படுவாள் என்ற விசுவாசம் அவளுக்கு இருந்தது, அவள் தனக்கென மட்டும் விசுவாசம் கொண்டிருக்கவில்லை, முழு குடும்பத்தின் இரட்சிப்பின் மேலும் விசுவாசம் கொண்டிருந்தாள் - நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள். யோசுவா 2:13

7. ராகாப் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாள்

  • எரிகோவின் மதில்கள் அழிக்கப்பட்டபோது, ராகாபின் வீட்டிற்குள் இருந்த அனைத்தையும் நெருப்பு அழித்ததினால், அவள் ஒரு கயிற்றின் மூலம் தப்பிக்க வேண்டியிருந்தது. அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள். யோசுவா 2:15 

  • ராகாபின் வீட்டை இடிக்க வேண்டாம் என்று யோசுவா கட்டளையிட்டதை,  அவர்கள் கைக்கொண்டதன் தாக்கங்கள் :

  • ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவரும் மாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள். சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள். யோசுவா 6:17-18

  • யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய், ராகாபையும் அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதரர்களையும், அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள்.  யோசுவா 6:22-23

  • பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களையும் மாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள். யோசுவா 6:24-25

  • கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு, இயேசுவின் இரண்டாம் வருகையில் காரியங்கள் மாறும் போது நாமும் தேவனுடைய கோபத்திலிருந்து பாதுகாக்கப்படுவோம் என்ற மகத்தான விசுவாச பலத்தை இது நமக்குத் தருகிறது. இன்று நம்மில் பலர் உலகம் அவர்களைப் பற்றி உலுக்குவதைப் பார்க்கிறோம், ஆனால், அவர் உலகத்தின் மீது தமது கோபமான நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பு அவர்களைக் காப்பாற்றுவார் என்று அவர்கள் உறுதியாக இருக்கலாம்.

  • அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. 1 தெசலோனிக்கேயர் 1:10

  • தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். 1 தெசலோனிக்கேயர் 5:9

 

ராகாப் என்ற வேசியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  1. ராகாபைப் போலவே நாமும் பாவிகள்தான். ஒப்பிடுவதால் கோபப்பட வேண்டாம் - அவளுடைய பாவம் வெளிப்படையாகத் தெரிந்தது, நம்முடையது மறைவாயிருக்கிறது. ஆனால் தேவனின் பார்வையில், பாவம் பாவமே. நாம் வெளியில் பரிசுத்தமாகத் தோன்றியபடி உள்ளே ஆழமான பாவத்தை சுமக்கலாம். தேவனுடைய நியாயத்தீர்ப்பில் பெரிய பாவம் சிறிய பாவம் என்று கிடையாது; தேவன் நம்முடைய பாவங்களை அளக்கும்போது நாம் ராகாபை விட சிறந்தவர்கள் அல்ல.

  2. தேவன் தாம் எண்ணியதை செய்ய எல்லா வல்லமையும் கொண்டவர், வேவுக்காரர்களை மறைக்க அவர் வேறொரு வீட்டைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர் நமக்கு ஒரு செய்தியைக் கொடுக்கவே ராகாப் என்ற வேசியின் வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். நாம் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் நல்லவர்களை விட கெட்டவர்களை இரட்சிக்கவே அவர் தேடுகிறார். பாவிகளை இரட்சிப்பதற்கே இயேசு உலகிற்கு வந்தார். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 1 தீமோத்தேயு 1:15

  3. ராகாபின் விசுவாசம் அவளையும் அவளுடைய குடும்பத்தையும் காப்பாற்றியது, ஏனென்றால் அவள் தேவனுக்குப் பயந்து, அவர் கர்த்தர் என்று நம்பினாள். அதேபோல், இயேசுவை கர்த்தராகவும் இரட்சகராகவும் விசுவாசிப்பது - அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்று விசுவாசிப்பது - தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 1:10). விசுவாசத்தினால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுகிறோம். விசுவாசம் ஒரு பாவியை இரட்சித்து அவர்களை அவருடைய வாக்குத்தத்தத்திற்குள் கொண்டு வர முடியும் என்பதைக் காட்ட தேவன் ராகாபை ஒரு முன்மாதிரியாக பயன்படுத்தினார். இன்று நமக்கும் இதுவே பொருந்தும்.

  4. ராகாப் அவளுடைய விசுவாசத்திற்காகவும் செயல்களுக்காகவும் சுமார் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டாள். இது விசுவாசம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது என்பதைக் காட்டுகிறது. ராகாபைப்போல், விசுவாசத்தின் மூலமாக நாமும் நித்திய ஜீவனை அடைய முடியும்.

  5. ராகாபுக்கு விசுவாசம் இருந்தது. வேவுகாரர்களை ஒளித்து வைப்பதன் மூலம் அதை நிரூபித்தாள். அதேபோல், கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது - நாம் அதை வாழ்ந்து காட்ட வேண்டும். பாவத்திலிருந்தும், சாத்தானின் கட்டுகளிலிருந்தும் விடுபட சிலுவையின் வல்லமையைப் பயன்படுத்துங்கள். இரட்சிப்பைக் கொண்டுவர விசுவாசத்திற்கு கிரியைகள்  தேவை. இயேசுவைப் பற்றி வெறுமனே தெரிந்துகொள்வது மட்டும் போதாது; ராகாபைப் போலவே, முதல் அடியை எடுத்து வையுங்கள் - உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள் அல்லது ஒருவரின் விடுதலைக்காக ஜெபியுங்கள்.

  6. ராகாபுக்கு கிருபை வழங்கப்பட்டது போலவே, வரவிருக்கும் கோபாக்கினைக்கு முன்பாகவே நமக்கும் கிருபை வழங்கப்படுகிறது, இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அது வருகிறது. உலகம் மிகவும் சாதாரணமாகப் பார்க்கலாம் அல்லது அவருடைய வருகை பலருக்கு சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது போன்று தோன்றலாம். நாம் வாழும் காலம் மனந்திரும்பி அவரிடம் வருவதற்கான கிருபையின் காலம். அவரிடம் திரும்பவும், செயலில் நமது விசுவாசத்தைக் காட்டவும் இந்த நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே நமக்கான அழைப்பு.

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page