top of page
Kirupakaran

தேவனின் டுனாமிஸ் வல்லமை (Dunamis power)


வரலாறு முழுவதும், மனிதர்கள் எல்லாவற்றையும் கையால் கட்டமைத்துள்ளனர். படிப்படியாக இயந்திரங்களை அறிமுகப்படுத்தி, மனித சக்தியை அதிகரிக்கும் ஒரு தொழில்துறை புரட்சியை நோக்கி முன்னேறினர். கணினிகளின் வளர்ச்சியானது நமது அறிவாற்றல் திறனையும், தகவலை வழிப்படுத்தும் திறனையும் மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், வளர்ந்து வரும் நவீன கால தொழில் நுட்பங்கள் மற்றும் சமூகப் போக்குகள், இறுதியில் மனிதர்களை வழக்கற்றுப் போகச் செய்துவிடுமோ என்ற கவலை அதிகரித்து வருகிறது.


தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு, நமக்கு உதவுவதற்காக "டுனாமிஸ்" சக்தியை மனிதர்களுக்கு வழங்க விரும்புகிறார்.


“டுனாமிஸ்” சக்தி என்பது தேவனின் அற்புத வல்லமையைக் குறிக்க வேதத்தில் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தையாகும். "டுனாமிஸ்" என்ற சொல்லுக்கு "திறன்", "வலிமை" அல்லது "சக்தி" என்று பொருள். இது பரிசுத்த ஆவியின் மூலம் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கும் வியக்கத்தக்க வல்லமையை விவரிக்கிறது. பரிசுத்த ஆவியின் உதவியுடன் விசுவாசிகள், நோயுற்றவர்களைக் குணப்படுத்துவது, பிசாசுகளை விரட்டுவது இன்னும் பிற அற்புதங்களைச் செய்வது போன்ற அசாதாரணமான காரியங்களைச் செய்ய முடியும். டுனாமிஸ் சக்தி என்பது மனித முயற்சியால் சம்பாதிக்கக் கூடியதோ அல்லது பெறக்கூடிய ஒன்றோ அல்ல, அது தேவன் தம்மை விசுவாசிப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் பரிசு.


தேவனின் வல்லமை மற்றும் அதிசயங்களைப் பற்றி யோபு எழுதியதன் மூலம் டுனாமிஸ் சக்தியை விவரிக்க முடியும்.


"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்". யோபு 5:9


டுனாமிஸ் சக்தியின் எடுத்துக்காட்டுகள்


எலியாவும் ஆகாபும்

ஆகாபும், யேசபேலும் தான் இஸ்ரவேல் தேசம் இதுவரை அறிந்திராத பொல்லாத, தீமையான ஆட்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் பாகால் மற்றும் தோப்பு விக்கிரகத்தின் 850 தீர்க்கதரிசிகளை பணியமர்த்தி, யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொன்று விட்டனர். இந்த வருஷங்களில் இனி நான் சொல்லும் வரை மழை இருக்காது என்று எலியா (தேவனின் முக்கிய தீர்க்கதரிசி) ஆகாபிடம் சொன்ன பிறகு, அவர்கள் எலியாவையும் கொல்லத் தீர்மானித்தனர். ஆகாப் ராஜாவிடம் இருந்து தப்பி ஓடிய எலியா தீர்க்கதரிசியின் கதை இது.


"கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்கு முன் ஓடினான்". 1 இராஜாக்கள் 18:46


“கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான். அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று". 1 இராஜாக்கள் 19:7-13


எலியாவுக்கு முன்பாக தேவனின் டுனாமிஸ் சக்தி வெளிப்படுவதைக் காணலாம்.

  • கர்த்தருடைய பிரசன்னம் கடந்து போக, பர்வதத்தில் நிற்கும்படி எலியாவுக்கு தேவன் அறிவுறுத்துகிறார் – “அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்;".

  • பெருங்காற்றின் சக்தி பர்வதங்களைப் பிளந்து கன்மலைகளை உடைத்தது – “கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று”.

  • காற்று கடந்து சென்ற பிறகு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது – “காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று;”.

  • பூமி அதிர்ச்சிக்குப் பிறகு அக்கினி உண்டாயிற்று – “பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று;”.

  • சற்று யோசித்துப் பாருங்கள் - ஒரு சாதாரண மனிதனாக இருந்திருந்தால் பெருங்காற்று வந்தவுடனேயே தூக்கி எறியப்பட்டிருப்பான். எலியாவை இது பாதிக்காமல், தேவனுக்கு முன்பாக நிற்க வைக்க தேவனிடமிருந்து வந்த டுனாமிஸ் சக்தி தான் இது.

  • பெருங்காற்று, பூமியதிர்ச்சி மற்றும் அக்கினி ஆகியவற்றால் எலியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வார்த்தை கூறுகிறது,“அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான்”.

  • “அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்….”, என்று தன்னிடம் பேசும் தேவனின் மெல்லிய சத்தத்தைக் கேட்டான்.


மோசேயும் கோராகு, தாத்தான் மற்றும் அபிராமும்


கோராகு, தாத்தான் மற்றும் அபிராம் என்பவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக எழும்பினார்கள் என்றும் ஒரு குழுவாக அவர்களை எதிர்த்தார்கள் என்றும் எண்ணாகமத்தில் வாசிக்கிறோம். தேவனின் டுனாமிஸ் சக்தி அவர்களுக்கு எதிராக செயல்பட்டதை நாம் பார்க்கிறோம். உங்களுக்குப் புரியும் வகையில் வசனங்களின் சில பகுதிகளை இங்கே கொடுத்துள்ளேன்.


“லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்”. எண்ணாகமம் 16:1-3


“அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார். உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள். அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்”. எண்ணாகமம் 16:22-26


“அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது. அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள். அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது". எண்ணாகமம் 16:31-35


  • இத்சேயாரின் குமாரனாகிய கோராகு, எலியாபின் குமாரனாகிய தாத்தான் மற்றும் அபிராம் ஆகியோர் 250 இஸ்ரவேலர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று மோசேயையும் ஆரோனையும் எதிர்த்தார்கள். “மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்”. எண்ணாகமம் 16:3

  • மோசேயும் ஆரோனும் என்ன செய்தார்கள்? - அவர்கள் தங்கள் குற்றச்சாட்டைக் கேட்கும்படி தேவனிடம் மன்றாடினார்கள். அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள். எண்ணாகமம் 16:22

  • தேவனின் கோபம் அவர்களைத் தண்டிப்பதற்கு இறங்கியது. “அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்”. எண்ணாகமம் 16:26

  • “அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது. அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்”. எண்ணாகமம் 16:31-33

  • தேவனின் கோபம் கோராகு, தாத்தான் மற்றும் அபிராம் ஆகியோரையும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான அனைத்தையும் அழித்தது. மேலும் அவர்களுக்கு ஆதரவாயிருந்த 250 பேரையும் அக்கினி பட்சித்தது. “அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது".

  • அந்த நாள் எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் முடிந்தால், கற்பனை செய்து பாருங்கள். இது தான் தேவனின் டுனாமிஸ் சக்தி.


தேவனின் உத்தரவாதம்

தேவனின் டுனாமிஸ் சக்தியைக் காட்ட வேதத்தில், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவருடைய அற்புதமான சக்தியைப் புரிந்துகொள்ள பழைய ஏற்பாட்டில் இருந்து சில உதாரணங்களைக் காட்டினேன். அதே சக்தி நமக்கும் கிடைக்கிறது.

"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்". அப்போஸ்தலர் 1:8

  • நமக்கு அது குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று இயேசு சொல்லவில்லை, அது ”பூமியின் கடைசிபரியந்தமும்” இருக்கும்.

  • நாம் இரட்சிப்புக்குள் வரும்போது, விசுவாசத்தைப் பெறுகிறோம், ஞானஸ்நானம் பெறும்போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறோம்.

  • குணமாக்குதல், பிசாசுகளை விரட்டுதல், மற்ற அற்புதங்களைச் செய்தல் போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதற்கு, நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு டுனாமிஸ் சக்தி உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை.

  • நாம் பலமற்றவர்கள் என்று சாத்தானால் நம்ப வைக்கப்படுகிறோம், அப்பொழுது தான் அவனால் நம்மிடம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தவும் தேவனுடைய ராஜ்யத்திலிருந்து நம்மைப் பிரிக்கவும் முடியும்.


டுனாமிஸ் சக்தியை எவ்வாறு பெறுவது?

நான் முன்பே குறிப்பிட்டது போல, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இந்த டுனாமிஸ் சக்தி நம்மில் வெளிப்படுவதற்கு, நமக்கு பின்வருபவை தேவை.


1. தேவ பிரசன்னம் நம்முடன் இருக்க வேண்டும்


மோசேயின் மரணத்திற்குப் பிறகு யோசுவா இஸ்ரவேலர்களை வழிநடத்துவதில் எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். தேவன் யோசுவாவை ஆசீர்வதித்ததாலும், அவருடன் இருந்ததாலும் இவை எல்லாம் நடந்தது.


“கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்”. யோசுவா 1:1-2

“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக”. யோசுவா 1:5-7

“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்”. யோசுவா 1:9


  • யோசுவாவிடம் தேவனுடைய வாக்குத்தத்தம் இருந்தது - “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை”.

  • தேவ பலம் அவருடன் இருந்தது – “பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்”.

  • தேவனின் வழிகாட்டுதல் அவருடன் இருந்தது – “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக”.

  • தேவனின் ஊக்கம் அவருடன் இருந்தது – “பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்”.


2. தேவனுக்குக் கீழ்ப்படிதல்


நாம் தேவனோடு நடக்கும்போதும், அவரால் வழிநடத்தப்படும் போதும் பெருமை வருகிறது. அது, நம்மை அவருடைய சித்தத்திலிருந்து வீழ்த்தவும், அவருடையத் திட்டங்களுக்கு எதிராக நடக்கவும் வைக்கிறது. டுனாமிஸ் சக்தியைப் பெறுவதற்கு “தேவனுக்குக் கீழ்ப்படிதல்” என்பது கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு அடிப்படையான பண்பாகும்.


இஸ்ரவேலர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.


இஸ்ரவேலர்கள் பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து, எகிப்திலிருந்து தேவனால் மீட்கப்பட்டனர். மேலும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை பெற்றுக் கொள்வார்கள் என்று உறுதியளிக்கப்பட்டனர். அங்கே லேவியர்களைத் தவிர 600 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர். ஆனால் யோசுவாவும் காலேபும் மட்டுமே தேவன் காட்டிய வாக்களிக்கப்பட்ட தேசத்தைப் பார்த்தார்கள்.


"எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும், ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்". எண்ணாகமம் 1:44-46


தேவன் சொன்னதற்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாததாலும், தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கும் ஆவி அவர்களிடம் இருந்ததாலும் தேவன் அவர்களுக்குக் காண்பிக்கவில்லை.


"கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்". யோசுவா 5:6


3. தேவனைத் தொழுதுகொள்ளுதல்


தேவனின் பிள்ளைகளாக இருக்கும் நாம் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளோம்.

"தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்". யோவான் 4:24


  • அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்” என்பது தான் வசனம். ஆனால் நாம் ஏதாவது பிரச்சனை அல்லது சவால்கள் இருக்கும்போது மட்டும் தான் தொழுதுகொள்கிறோம்.

  • நம் ஒவ்வொருவரிடமும் வெளிப்படும் தேவனின் வல்லமையை அனுபவிக்க, நாம் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்.

  • பிசாசு பிடித்தவர்களைச் சுற்றி நின்று தேவனை ஆராதியுங்கள். அவருடைய வல்லமையால் நாம் பிசாசுகளை விரட்டலாம்.

  • நாம் அவரை ஆராதிக்கும்போது, ​​நம் மனதைக் கெடுக்கும் தீய சக்திகளை வெளியேற்ற அவர் ஒரு தூதர் சேனையை அனுப்பத் தொடங்குகிறார்.


4. பொறுமையோடு சகித்துக் கொள்ளுதல்


தேவனைப் பின்பற்றுவதற்கு நாம் அழைக்கப்பட்டால், நமக்கு சவால்கள் இருக்கும். தேவன் சொன்னது போல, அவரோடு நடக்கும் போது நமக்கு சோதனைகளும் பாடுகளும் இருக்கும். ஆனால் வாக்குத்தத்தம் சொல்வது என்னவென்றால், நாம் பொறுமையோடு இருக்க வேண்டும், அப்பொழுது அவர் ஒரு புதிய ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்குள் நம்மை வழிநடத்துவார்.

"தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்". வெளிப்படுத்தின விசேஷம் 14:12


எல்லாத் துன்பங்களில் இருந்தும் தேவன் நம்மை விடுவிப்பார், எதுவும் நமக்குத் தீங்கு செய்ய முடியாது என்பதால் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று தாவீது சொல்லுகிறார்.

"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை". சங்கீதம் 34:19-20


இயேசு வனாந்தரத்தில் இருந்த போது, 3 முறை சோதிக்கப்பட்டார். அவர் அந்த சோதனைகளை சகித்துக் கொண்டார். அவர் தமது உபவாசத்தை முடித்த பிறகு, பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டதை லூக்காவில் வாசிக்கிறோம்.

"பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்". லூக்கா 4:14,22


5. மனந்திரும்புதல் / மீண்டும் கட்டியெழுப்பப்படுதல் / மீட்டெடுத்தல்


நாம் பல பாவங்களால் சூழப்பட்ட உலகில் வாழ்கிறோம். நாம் நடக்கும்போது தேவனின் பார்வையில் அருவருப்பான பல பாவங்களில் சிக்கிக் கொள்கிறோம்.

"பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்". 1 யோவான் 3:4


மனந்திரும்புதல் தான் பாவத்தை உடைப்பதற்கான அஸ்திபாரம்

"ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூலவிசுவாசம் உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக". எபிரேயர் 6:1-2


  • கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை விட்டு அப்பால் முதிர்ச்சிக்கு நீங்கள் செல்ல விரும்பினால், மனந்திரும்புங்கள்.

  • மனந்திரும்புதல் பாவங்களிலிருந்து நம்மை விடுவிப்பது மட்டுமல்ல ~ செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்

  • மனந்திரும்புதல் கீழ்க்கண்டவற்றில் நம்மை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்கவும் உதவுகிறது :

  • தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்.

  • இது “ஸ்நானங்களுக்கடுத்த உபதேசத்தில்” நமக்கு உதவுகிறது.

    • மற்றவர்களிடமிருந்து கெட்ட / தீய ஆவிகளைத் துரத்துவதற்கு “கைகளை வைப்பதற்கு” நம்மை பலப்படுத்துகிறது. ஏனெனில், நம்மிடம் பாவம் இருப்பதால் வல்லமை கிரியை செய்ய முடியாது என்று சாத்தான் நம்மைக் குற்றம் சாட்ட முடியாது.

    • இது "மரித்தோரின் உயிர்த்தெழுதல்" மற்றும் இயேசுவில் வாழும் வாழ்க்கைக்கான புதிய பாதைக்கு நம்மை வழிநடத்துகிறது.

    • இது நம்மை "நித்திய நியாயத்தீர்ப்பிலிருந்து" பாதுகாக்கிறது. கர்த்தருடைய நாளில் அதை நாம் பெறுகிறோம்.


எனவே, ஊக்கமாக ஜெபித்து, அவருடைய டுனாமிஸ் சக்தியைக் கேளுங்கள். அதே சக்தியைக் கொடுக்க அவர் கிருபை உள்ளவராய் இருக்கிறார். அப்பொழுது நாம் தேவனுக்கு யோசுவா / எலியாவைப் போல இருக்க முடியும்.






31 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page