top of page
Kirupakaran

தேவனின் சிட்சிப்பு


நான் என் அப்பாவைப் பற்றி நினைக்கும் போது, அவர் எவ்வளவு கண்டிப்பானவர், எவ்வளவு ஒழுக்கத்துடன், சரியான மதிப்புகளுடன் என்னை வளர்த்தார் என்பது ஞாபகம் வருகிறது. அதற்காக நான் என்னுடைய பெற்றோருக்குக் கோடி நன்றிகளை எடுக்க வேண்டும்.


நான் சிறுவனாக இருந்தபோது, என் அப்பா என்னைக் கையாண்ட சில வழிகள் எனக்குக் கோபத்தைத் தரும். இப்போது வளர்ந்தவனாக அதைப் பார்க்கும்போது, அவர் என்னை வாழ்க்கையில் வளர்த்த விதத்திற்கு நன்றி செலுத்துகிறேன். என்னை ஒழுங்குபடுத்திய ஒரு நல்ல பெற்றோரை எனக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். சரியான நேரத்தில் என்னைக் கண்டித்து வளர்த்ததினால் தான் நான் தவறான வழியில் செல்லவில்லை.


இவ்வாறு நம்முடைய உலகத் தந்தை நம்முடைய நல்வாழ்வைக் கவனித்துக் கொள்ளும் போது, நம்முடைய நித்திய தந்தையாகிய இயேசு தம் பிள்ளைகளின் மேல் மிகுந்த அக்கறை உள்ளவராக இன்னும் அதிகமாய் கவனித்து வழிநடத்துவார்.


' கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும்தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். ' எபிரெயர் 12:6


தேவன் தம்மை நேசிப்பவரை மட்டுமே சிட்சிப்பார். எனவே, நீங்கள் கடவுளின் குழந்தையாக இருந்தால், கடவுள் உங்களை சிட்சிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


நாம் பாவத்திற்கு எதிராகப் போராடும் போது தேவனால் சிட்சிக்கப்படுகிறோம். அவருடைய பிள்ளைகள் நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர் எப்படி இருக்கிறாரோ அதைப் போல பரிசுத்தத்தின் பாதையில் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் பாவத்துடன் போராடும்போது இது பரிசுத்தத்தின் பாதைக்கு எதிராக வருகிறது போராட்டம், இதனை தேவன் விரும்புவதில்லை. நம்மை தேவனின் சிட்சிப்பின் மூலம் தேவன் இந்த பாவத்தில் இருந்த நம்மை மாற்ற ஓரு வழி செய்கிறார்


'பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே. ' எபிரெயர் 12:4


நம்முடைய அப்பா நம்மை அடித்து, சத்தம் போட்டு மற்றும் அவர்களின் தன்மைக்கேற்றவாறு பல வழிகளில் நம்மை சிட்சிப்பார்.


ஆனால் தேவன் நம்மை எவ்வாறு சிட்சிப்பார்?

'நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாதபுத்திரனுண்டோ? 'எபிரெயர் 12:7


'நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால், அப்படி என்றால் என்ன ?


சகிக்கிறவர்களாக என்பது நமக்கு வரும் சோதனைகள் / பாடுகளைக் குறிக்கும்.


நம் வாழ்க்கையில் சோதனைகள் / கஷ்டங்கள் வரும் போது, நாம் பல அடிப்படைகளை மறந்துவிடுகிறோம். அப்போது நாம் கேட்கும் காரியங்கள்

  • ஆண்டவர் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார் ? நான் தேவனின் பிள்ளையாக இருந்தாலும் ஏன் எனக்கு மட்டும் இத்தனை சோதனைகளை அனுமதித்தார்?. இவ்வாறு, நம்மில் பலர், நம்மை நாமே பல கேள்விகளால் கேட்டுக் கொள்கிறோம். பல நேரங்களில், நம்முடைய நிலைமையைப் பற்றி மற்றவர்களிடமும் சொல்லுவோம்.

  • தேவன் எந்தவொரு சோதனையையும் அல்லது மன அழுத்த சூழ்நிலையையும் உருவாக்குபவர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது போன்ற விஷயங்களை செய்வது சாத்தான். ஆண்டவருடைய நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, நாம் செய்யும் தவறுகளை அவர் கண்டித்து, நம்மை நேர்த்தியான பாதையில் அவர் கொண்டு செல்வார்.

கஷ்டங்கள் சாத்தானிடமிருந்து வரும் என்பதை நாம் எப்போதும் அறிந்திருக்கிறோம். ஆனால், கஷ்டங்கள் கடவுளின் ஒழுங்குபடுத்துதலால் வருகிறது என்று இங்கே படிக்கிறோம். இரண்டிற்குமான வேறுபாட்டை எவ்வாறு அறிந்து கொள்வது?


குழந்தைகள் அழுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்; அது எல்லாவற்றிற்கும் அழுகிறது. அதற்கு பால் தேவைப்படும்போது அழுகிறது, வலியில் இருக்கும்போது அழுகிறது, பால் மற்றும் வலி அழுகையின் வேறுபாடு அம்மாவுக்கு மட்டுமே தெரியும்.


அதேபோல் தான், கடவுளின் சிட்சிப்பு மற்றும் சாத்தான் கொடுக்கின்ற கஷ்டம் ஆகியவற்றின் வேறுபாட்டை அறிந்து கொள்ளும் ஞானத்தை தேவனின் பிள்ளைகளாகிய நமக்குத் தேவன் தருகிறார். உங்களுக்கு அந்த ஞானம் இல்லாவிட்டால், அதைத் தேவனிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். அவருடைய பரிசுத்த ஆவி நமக்கு இத்தகைய ஞானத்தைத் தரும்.


'உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும்கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 'யாக்கோபு 1:5


தேவ சிட்சிப்பின் - கஷ்டங்கள்


ஏசுகிறிஸ்து தம்முடையப் பிள்ளைகளை ஏன் சிட்சிக்கிறார் என்று புரிந்து கொள்வோம். எந்த தந்தையும் தன்னுடைய குழந்தைகள் தவறு செய்தாலன்றி அவர்களைக் கண்டிக்க மாட்டார்கள். அதைப் போலத்தான், நாம் பாவ வாழ்க்கையை நடத்தும் போதும், இரட்டை வேடம் உள்ள வாழ்க்கை வாழும் போதும் தேவன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தம்முடையப் பிள்ளைகளை சிட்சிக்கிறார்.


'நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடையபோஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. '1 கொரிந்தியர் 10:21


  • · நாம் தேவனின் பிள்ளைகளாக இருக்கும்போது, உலகத்தின் இன்பங்களுடன் தொடர்ந்து சவால்களை சந்திக்கிறோம் என்று வேதம் கூறுகிறது.

'விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால்உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். ' யாக்கோபு 4:4

  • தேவனின் வார்த்தை கூறுகிறது “நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே, நாம் தேவனோடு இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம். உலகத்தின் இன்பங்களையும் விரும்புகிறோம், ஆண்டவரையும் வழிபடவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் வேதம் கூறுவதாவது “ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

  • உலக விஷயங்களுடனான தொடர்பின் விளைவாக நாம் பாவத்தில் சிக்கிக்கொள்கிறோம். பாவத்திற்கான முதல் படியாக நாம் பாவத்தின் இச்சையில் விழுகிறோம், பிறகு பாவத்திற்கு அடிமைகளாக மாறிவிடுகிறோம்.

'சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். யாக்கோபு 1:13-15

  • நம்முடைய பாவ இச்சைகள், தேவனிடத்தில் இருந்து வருவதில்லை, நம்முடைய சுய இச்சையின் நிமித்தமே வருகின்றது “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்

  • நம்மில் பலர் சொல்லுவோம், "எனக்கு மட்டும் ஏன் ஆண்டவர் இவ்வளவு சோதனை தாராரோ ?" என்று. இதற்கு பதில் யாக்கோபு 1:14 இல் உள்ளது.

  • ஒரு ஆடு, தன்னுடைய மேய்ப்பர் எங்கிருந்து கூப்பிட்டாலும் அந்த குரலுக்கு அது செவிகொடுக்கும். அதேபோல் நீங்கள் தேவனின் மெய்யான குழந்தையாக, இயேசுவோடு நடக்கும்போது , நீங்கள் பாவம் செய்தாலோ அல்லது கடவுளால் அங்கீகரிக்கப்படாத விஷயங்களைச் செய்தாலோ அவருடைய ஆவி உங்களை நியாயம் தீர்க்கும்.

  • தேவனுடைய சிட்சிப்பு கொஞ்ச நேரம் தான் இருக்கும். நாம் செய்வது பாவம் என்று உணர்ந்த உடன் அந்தப் பாடுகள் நம்மை விட்டு நீங்கலாகி விடும். இத்தகைய பாடுகளுக்கு நாம் சகித்திருந்து கடந்து செல்வது முக்கியம். 'அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; ' எபிரெயர் 12:10

  • உங்களுக்கான தேவனுடைய அன்பு என்றும் மாறாதது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்த பாவம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதைக் குறித்து இதயத்திலிருந்து மனந்திரும்பினால், அவர் உங்களைக் கழுவிப் புதிய நபராக ஆக்குவார்.

  • தேவனின் சிட்சிப்பை சகித்துக்கொள்ள, யாக்கோபு கூறும் அறிவுரையைப் பின்பற்றுங்கள்.

    • பிசாசை எதிர்த்து நில்லுங்கள், அவன் உங்களிடம் இருந்து தப்பி ஓடி விடுவான்.

    • உங்கள் பாவத்திற்காக தேவனிடத்தில் மனந்திரும்புங்கள்

    • தேவனின் அருகில் வாருங்கள், அவர் உங்கள் அருகில் வருவார்

    • தேவனிடத்தில் உங்களைத் தாழ்த்துங்கள், அவர் உங்கள் சூழ்நிலையிலிருந்து உங்களை உயர்த்துவார்.

'ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டுஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள்கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். கர்த்தருக்குமுன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். யாக்கோபு 4:7-8,10


சாத்தானின் - கஷ்டங்கள்


தேவன் தம்முடையப் பிள்ளைகளை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள நாம் அவருடன் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால், நாம் அவருடன் நடந்து தேவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதை சாத்தான் விரும்புவதில்லை. இந்தப் பயணத்தில் நம் வழியில் கஷ்டங்கள் வருவதைக் காண்கிறோம்.


  • நீங்கள் சாத்தானிடமிருந்து கஷ்டங்களைப் பெறும் போது கடவுள் உங்களைக் கைவிடமாட்டார்.

'ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும்தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. ' எபிரெயர் 6:10

  • தேவன் திட்டமிட்டுள்ள ஆசீர்வாதங்களைத் தடுப்பதற்காக சாத்தான் கொண்டு வரும் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள கடவுள் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் மூலம் ஞானத்தை அளிக்கிறார். இந்த ஆவி நமக்கு சாத்தானின் தந்திரங்களைப்புரியவைக்கும்.

'எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமதுஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும்ஆராய்ந்திருக்கிறார். '1 கொரிந்தியர் 2:9-10

  • நீங்கள் கடினமானப் பாதையில் செல்லும்போது கஷ்டங்களைத் தாங்குவதற்கு தேவன் உங்களுக்கு ஊக்கத்தையும் வழிகாட்டலையும் தருகிறார், பல சமயங்களில் அவர் கடவுளுடைய வார்த்தையை உங்களுக்கு நினைவூட்டுவார்.

'சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; 'எபேசியர் 6:14-15

  • இந்த சூழ்நிலையில் தேவனின் சமாதானம் உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் கஷ்டங்களைத் தாண்டிச் செல்லும்போது கவலை /மன அழுத்தத்தால் நிரப்பப்பட மாட்டீர்கள். அவருடைய நித்திய சமாதானம் உங்களைக் காத்து வழிநடத்தும். “'சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; 'எபேசியர் 6:15

  • “தேவனே, ஏன் எனக்கு மட்டும் நடக்கிறது?" என்று நீங்கள் ஒருபோதும் கேட்க மாட்டீர்கள். தேவனிடத்தில் இருந்து வரும் சமாதானம் இந்தக் கேள்விகளைக் கேட்பதை அடக்கிவிடும், மேலும் இந்த சிரமத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இது உங்களுக்கு தேவன் மீது இருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்தும்.

  • தேவனுடைய கிருபை சாத்தானின் கஷ்டங்களைத் தாங்குவதற்கு நமக்குப் பெலனளிக்கின்றது. உங்கள் வாழ்க்கையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களைக் காண, பாதைகளை உணர அவர் உங்களுக்கு வலிமை தருவார்.

'சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில்அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். ' யாக்கோபு 1:12


தேவ சிட்சிப்பின் நன்மைகள்


  • தேவன் நம்மை சிட்சிக்கும் போது, நாம் அவரை வெறுக்கிறோம். (நீங்கள் குழந்தையாக இருந்தாலும் சரி, வளர்ந்தவர்களாக இருந்தாலும் சரி) ஏனென்றால் நாம் செய்ய விரும்பியதைச் செய்வதிலிருந்து அது தடுக்கிறது.

  • அவர் ஏன் நம்மை சிட்சிக்கிறார் ? அவர் நம்முடைய பாவ செயல்களை ஏற்றுக்கொள்வதில்லை, அதன் நிமித்தமே நம்மை சிட்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் இதை நம் நன்மைக்காகவும், அவர் மிகவும் நேசிப்பவருக்காகவும் மட்டுமே செய்கிறார்

'என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச்சிட்சிக்கிறார். ' நீதிமொழிகள் 3:11-12

  • · தேவனுடைய சிட்சிப்பு சிறிது காலம் மட்டுமே. இதில் இருந்து நம்முடைய நல்ல குணங்களைக் கொண்டு வருவதற்காக மட்டும் தான் இதை செய்கிறார்.

'அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடையபரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். ' எபிரெயர் 12:10

  • தேவனின் சிட்சிப்பு நித்தியத்தின் பாதையில் நம்மை நடத்தும், தேவனுடைய பாவமற்ற வாழ்விற்கு நம்மை வழிநடத்தும். இது தேவனின் சமாதானத்தை நமக்குத் தரும்.

'எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில்பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். 'எபிரெயர் 12:11

  • உங்கள் கைகளையும் கால்களையும் வலுப்படுத்த நீங்கள் ஜிம்மிற்குச் செல்லும்போது, முதல் சில நாட்களுக்கு அதைக் கடினமாக உணர்வீர்கள். ஆனால், அதனைத் தொடர்ந்து செய்து வரும் போது எவ்வாறு பெலப்படுவீர்களோ, அதைப் போலத்தான், கடவுளின் ஒழுங்குபடுத்துதல், நம் வழியில் வரக்கூடிய தவறான, பாவமான பாதைகளைத் தவிர்க்கச்செய்து, அதன் மூலம் நம் ஒவ்வொருவர்க்காகவும் அவர் திட்டமிட்டுள்ள ஒரு நித்திய வாழ்க்கையை நடத்துவதற்கு நம்மைப் பலப்படுத்துகிறது.


264 views0 comments

Recent Posts

See All

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page