இது புதிய வருடம். நாம் எதையாவது ஆரம்பித்திருந்து அதில் ஏற்கனவே தோல்வியடைந்திருக்கலாம் அல்லது கடந்த கால அனுபவத்திலிருந்து தோல்வியடைந்திருக்கலாம். இந்த தோல்விகளில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? "எனது வெற்றிகளைக் கொண்டு என்னை மதிப்பிடாதீர்கள்; நான் எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் அடிப்படையில் என்னை மதிப்பிடுங்கள்" - இது நெல்சன் மண்டேலாவின் புகழ்பெற்ற மேற்கோள். இவை பொதுவாக உலகம் அறிந்த / உலகம் கற்றுத்தந்த நமது தனிப்பட்ட வெற்றிக்கான உந்துதலாகும்.
ஆனால் தேவனின் பிள்ளைகளாக, நாம் அவரோடு நெருக்கமாக நடக்கும்போது, அவர் தோல்வி குறித்தும் மேலும் அவற்றை நாம் எவ்வாறு சமாளிப்பது என்பதைக் குறித்தும் பல பாடங்களைக் கற்பிக்கிறார்.
திறந்த வாசல்கள் vs மூடப்பட்ட கதவுகள்
திறந்த வாசல்கள்
பல நேரங்களில் நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஜெபிக்கும்போது அல்லது ஒருவரின் இரட்சிப்புக்காக ஜெபிக்கும்போது, நம் ஜெபங்கள் தேவனால் பதிலளிக்கப்பட்டு, புதிய கதவுகள் திறக்கப்பட்டு, ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். அதற்காக தேவனைத் துதிக்கிறோம்.
திறந்த வாசல்கள் என்பதனால் பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்று நினைக்காதீர்கள். 1 கொரிந்தியர் 16:9 "ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்".
பல நேரங்களில் திறந்த கதவுகள் நாம் தேவனை மகிமைப்படுத்துகிறோமா அல்லது திறந்த கதவிற்கான பெருமையை நாம் எடுத்துக் கொள்கிறோமா என்பதைப் பார்ப்பதற்காக தேவன் செய்யும் சோதனையின் நடவடிக்கைகளாகும்.
மூடப்பட்ட கதவுகள்
திறந்த வாசல்களை தேவன் அனுமதிக்கிறார் என்றும் மூடப்பட்ட கதவுகள் சாத்தானின் செயலால் ஏற்படுகின்றன என்றும் பல நேரங்களில் நாம் தவறான புரிதலில் இருக்கிறோம். வெளிப்படுத்துதல் 3:7 இதன் வேதகாமப் புரிதலை அளிக்கிறது. வெளிப்படுத்துதல் 3:7 "பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;".
தேவன் கதவுகளைத் திறப்பதன் மூலம் நம்மை திறந்த வாசல்களின் உள்ளே செல்ல அனுமதிக்கிறார். மூடிய கதவில், அவர் சாவியை தன்னிடம் வைத்திருந்தும் அவற்றை மூடி வைக்கிறார். திறந்த வாசல்களோ அல்லது மூடிய கதவுகளோ கதவின் திறவுகோல் நமது இரட்சகரிடமே உள்ளது. அதுவே கற்றுக்கொள்வதற்கான திறவுகோல்.
வழிகாட்டுதலுக்காக "திறந்த" கதவுகளுக்கும் "மூடிய" கதவுகளுக்கும் இடையில் தேவன் எவ்வாறு மாற்றியமைக்கிறார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அப்போஸ்தலர் நடபடிகளில் உள்ளது. அப்போஸ்தலர் 16: 6-10 "அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு, மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள். அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,".
ஆசியா (மூடப்பட்டது) --> பித்தினியா (மூடப்பட்டது) --> துரோவா --> ... துரோவாவில் திறந்த வாசல் --> மக்கெதோனியா.
விளைவை நாம் படிக்கிறோம்: லீதியாளின் மனமாற்றம் (அப்போஸ்தலர் 16:14) சிறைக் காவலரின் மனமாற்றம் (அப்போஸ்தலர் 16:33,34)
மூடப்பட்ட கதவுகளுக்காக தேவனைத் துதியுங்கள். அவர் சில கதவுகளை மூடவில்லை என்றால், ஒவ்வொரு திறந்த கதவுகளிலும் நாம் விழுந்து விடுவோம். பல திறந்த கதவுகள் நமக்கு பொறிகளாக இருக்கலாம்!
பல சமயங்களில், "அடைக்கப்பட்ட கதவுகள் போன்ற சூழ்நிலைகளில்" தான் தேவன் தமது வல்லமையை அதிக அளவில் வெளிப்படுத்துகிறார். ஏசாயா 45: 1-2 "கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்".
நிலைமை மிகவும் தெளிவற்றதாக இருக்கும்போது, தேவனின் சித்தத்திற்கு அப்பாற்பட்ட கதவுகளை மூடும்படி கேட்பதில் தவறில்லை.
தேவபிள்ளைகளின் தோல்விகள்
தேவ நம்பிக்கையும், நமக்குக் கொடுக்கப்பட்ட அன்பும் நமக்கு இருக்கும்போது, நாம் தேவனின் பிள்ளைகள் என்ற உறுதி நமக்கு இருக்கும். 1 யோவான் 3:1 "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது".
ஆனால் தேவபிள்ளைகளாகிய நாம் வெற்றியை மட்டுமே விரும்புகிறோம், தோல்விகளை அல்ல. தேவனின் பிள்ளைகளாக நாம் ஏன் தோல்வியடைகிறோம் என்பதை பல நேரங்களில் விவரிக்கத் தவறுகிறோம். 1 யோவான் 3:9-10 "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல".
உங்கள் பாவங்களில் எது தேவனுடைய அடுத்த படிகளைச் செய்யத் தடுக்கிறது என்பதைப் பார்க்கவும். நீங்கள் அவருடைய சித்தத்திற்கு இணங்கினால் மட்டுமே அவர் "அவருடைய சித்தத்தை" செய்வார். நீங்கள் அவருடைய பிள்ளையாக இருக்க வேண்டும் என்றால், அவருடைய விதை உங்களிடம் இருக்க வேண்டும், மேலும் நீங்கள் பாவம் செய்து கொண்டே இருக்க முடியாது.
பாவம் தேவனுடைய பரிபூரண சித்தத்தை அவர்களுடைய வாழ்க்கையில் செய்வதிலிருந்து தடுக்கிறது.
தேவ பிள்ளைகள் செய்யும் பொதுவான தவறுகள்
ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நாம் ஜெபிக்கிறோம். ஒரு பாவத்தின் காரணமாக, நம்முடைய இரட்சகர் நம் ஜெபத்திற்கு பதிலளிப்பதில்லை.
நாம் ஏமாற்றமடைந்து நம் ஜெப வாழ்க்கையில் சோர்ந்து போகிறோம். இது சாத்தான், நம் சுயத்தை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு வழிவகுக்கிறது.
நாம் வேதத்தை தியானிப்பதை விட்டுவிடுகிறோம், ஏனென்றால் தேவனைப் பற்றிய நமது அறிவில் நாம் பலவீனமாகிவிட்டோம் (கிறிஸ்தவ வாழ்க்கைக்கான பட்டயம்). அது ஏமாற்றத்திற்கு இடமளிக்கிறது. மேலும், நீங்கள் செய்வது தவறில்லை, நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் பாவங்களே அல்ல என்றெல்லாம் இன்னும் பல வஞ்சனைகளைக் கூறி நம்மை மெதுவாகக் கைப்பற்றுகிறான்.
கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு மாரத்தான் பந்தயம் போன்றது - தேவன் நம்மை நடக்கச் சொல்கிறார் - நீங்கள் அவருடன் இணைந்திருக்கிறீர்களா என்று ஒவ்வொரு நாளும் சரிபார்த்து மேலும் நடத்துகிறார். இது விரைவு ஓட்டப்பந்தயம் அல்ல.
தேவன் எப்பொழுதும் நமக்கு நல்லதை அல்ல சிறப்பானதைத் தருவதற்கு தான் திட்டமிடுகிறார். அவருடைய "விருப்பத்துடன்" நாம் இணங்கி இருப்பதன் மூலம் அவருடைய சிறந்த ஆசீர்வாதம் கிடைக்கும். மத்தேயு 6:9-13 இல் கொடுக்கப்பட்டுள்ள கர்த்தருடைய ஜெபத்தைப் பார்த்தால் "உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்று உள்ளது.
"நல்லது அல்லாதது - கெட்டது" என்பதைத் தான் சாத்தான் நாம் எடுத்துக் கொள்ள விரும்புகிறான். ஒவ்வொரு முறையும் தோல்வியினால் நாம் ஏமாற்றப்படுகிறோம்.
நாம் நமது உடைமைகளை அல்லது பலத்தை சார்ந்து இருந்தால் தேவனுடைய சித்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
நம் தோல்விகளில் நினைவில் கொள்ள வேண்டியவை
1. நீங்கள் ஏன் தோல்வியடைந்தீர்கள் என்பதைக் காட்டும்படி கேட்டால் ஆண்டவர் கோபப்பட மாட்டார். அவர் உலகின் தலை சிறந்த ஆசிரியர்.
நாமும் அவரைப் போல் சுத்தமாக மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 1 யோவான் 3:3 - "அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்". எனவே அந்தச் செயல்பாட்டில், நம்மைத் தூய்மையாக்க விடாமல் தடுக்கும் நாம் பின்தங்கிய இடங்களைக் காட்டுவார். நம் பழைய பழக்கங்களிலிருந்து நம்மைச் சுத்தப்படுத்துவதில் இருந்தும், நம் பழைய வழியைச் செய்வதைத் தடுக்கும் புதிய விதைகளைப் பெற்றுக் கொள்வதில் இருந்தும் நமக்குள் தூய்மை வருகிறது.
நாம் பழைய வழியில் இருந்து மனந்திரும்பும்போது, 2 கொரிந்தியர் 5:17 "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின".
2. உங்களிடம் காணப்படுகின்ற பாவங்கள் அல்லது உங்களின் அடிமைத்தனங்கள் போன்றவற்றை நீங்கள் சரிசெய்யும் வரை தேவன் காத்திருப்பார்.
அதனால்தான் பல ஜெபங்கள் தாமதமான ஜெபங்களாகவும், சில ஜெபங்கள் பதிலளிக்கப்படாமலும் போகின்றன. ஏனெனில் நாம் நமது நிலைப்பாட்டையும் பாவத்தையும் சரிசெய்வதில்லை. தேவனை மீறுவதற்கு நம்மை நாமே அனுமதித்துள்ளோம்.
தேவன் தமது விருப்பத்தை வற்புறுத்தவும், உங்கள் சுய முடிவுகளை மீறவும் மாட்டார். அவர் வந்து அவருடைய சித்தத்தைச் செய்ய நாம் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
3. அவருடைய அடிச்சுவடுகள் சில சமயங்களில் அறியப்படாமல் இருக்கலாம். இருந்தும் அவர் நம்மை வழிநடத்துகிறார். இது ஏசாயா புத்தகத்தில், நாம் அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வாக்குறுதியாகும். ஏசாயா 42:16 - "குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்".
4. நமது காலங்கள் அவர் கரத்தில் உள்ளது. எனவே நாமும் தாவீதைப் போல "நீரே என் தேவன்" என்று சொல்லலாம். சங்கீதம் 31:14,15 - "நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்".
5. அந்தத்தில் உள்ளவைகளை தேவன் மட்டுமே ஆதியில் இருந்து அறிவார். ஆதியில் இருந்து அந்தம் வரை என்று நடக்கும் நமது மனித அணுகுமுறைக்கு இது மிகவும் முரணானது. ஏசாயா 46:10 "அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,".
6. தேவன் தமது சித்தத்தை படிப்படியான நிலைகளில் வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் அவர் நமக்குக் கொடுப்பதை நம்மால் ஜீரணிக்க முடியாது, அவர் நம் வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். அவை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்தவை. ஏசாயா 55:8-9 "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது".
7. தேவ ஆவி நம்மை "கட்டுப்படுத்தாது" மாறாக "வழிநடத்துகிறது". அவர் சாந்தமானவர் மேலும் அவர் நம்மை வெற்றி கொள்வார். கலாத்தியர் 5:22-23 "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை".
8. நாம் உடனடி பதில்களை எதிர்பார்க்கிறோம், நமது வேகமும் ஆண்டவருடைய வேகமும் வேறுபட்டவை - நமக்கு உடனே பதில்கள் வேண்டும்,தேவன் அவருடைய நேரத்தில் செயல்படுகிறார்.
தேவனின் வாக்குறுதி ஆபிரகாமுக்கு அவரது தலைமுறைக்கான ஆசீர்வாதம். இந்த வாக்குறுதி அவருக்கு பிள்ளைகள் எதுவும் இல்லாதபோது அவருக்கு வழங்கப்பட்டது. ஆதியாகமம் 13: 14-17 - "லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்".
தேவன் ஆபிரகாம் 86 வயதாயிருந்த போது ஆகார் (சாராளின் அடிமைப் பெண்) மூலம் "இஸ்மவேல்" என்ற மகனைக் கொடுத்தார்.ஆதியாகமம் 16:16 "ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்".
ஆபிரகாம் 99 வயதாயிருந்தபோது தேவன் தமது வாக்குத்தத்தத்தை அவருக்கு நினைவூட்டினார். ஆதியாகமம் 17:1-2 "ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்".
ஆபிரகாம் 100 வயதும் சாராள் 90 வயதாயும் இருந்த போது தேவனுடைய வார்த்தை நிறைவேறியது. ஆதியாகமம் 21: 5 - "தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்
Comments