top of page
Kirupakaran

சாந்தமுள்ள ஆவி


இந்த உலகத்தில் வாழும்போது, நாம் பாவத்தின் வலையில் விழுகிறோம். சாத்தானின் வஞ்சகம் நாம் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்கிறோம் என்று நம்மை நம்ப வைக்கிறது. மற்றவர்களை பாவக் கறைபடிந்தவர்கள் அல்லது பாவமுள்ளவர்கள் அல்லது தவறான செயல்களினால் இரத்தம் தோய்ந்த கைகளை உடையவர்கள் என்று ஒப்பிட்டு, நம்மில் பாவம் இல்லை, நாம் செய்வது எப்போதும் சரியானது என்று நம்ப வைக்கிறது. இதை நானே பல சந்தர்ப்பங்களில் அனுபவித்திருக்கிறேன். நாம் கிறிஸ்துவுடன் நடக்கும்போது தான் இந்த வஞ்சனை சுவர்கள் உடைக்கப்படுகின்றன.


கலாத்தியர் சபையில் பேசும்போது, பலர் பாவமான வழிகளுக்குச் செல்லத் தொடங்கியதால், இதை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று பவுல் கற்பிக்கிறார். மேலும் விழுந்துபோன மக்களை சக விசுவாசிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்று விசுவாசிகளுக்கு நிறைய ஆவிக்குரிய ஆலோசனைகளை வழங்குகிறார்.


“சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு”. கலாத்தியர் 6:1


சகோதர அன்பு

பவுல் சகோதரரே” என்ற வார்த்தையுடன் தொடங்குகிறார். இது சகோதர அன்பைக் குறிக்கிறது. சகோதர அன்பு என்றால் என்ன? அது "சக மனிதர்களிடம் வெளிப்படும் மனிதாபிமானம் மற்றும் கருணை உணர்வு". உங்கள் கணவரிடம், உங்கள் மனைவியிடம், உங்கள் சக குடும்ப உறுப்பினரிடம், உங்கள் நண்பர் அல்லது சக பணியாளர்களிடம் அவர்கள் பாவத்தின் வலையில் விழும்போது அவர்களுக்கு காட்டும் கனிவு. அது மத பாவமாகவோ அல்லது கலகத்தனமான பாவமாகவோ எந்த வகையான பாவமாகவும் இருக்கலாம்.


இந்த பத்தியில் கவனிக்க மூன்று விஷயங்கள் உள்ளன.


“சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு”. கலாத்தியர் 6:1

  • அகப்பட்டால் - இந்த வார்த்தை ஏற்கனவே நடந்த அல்லது ஒருவேளை நடக்கப் போவதைக் குறிக்கிறது. கலாத்தியர்கள் ஏற்கனவே பாவத்தில் விழுந்துவிட்டார்கள். இது அநேகமாக முதல் முறையாக இருக்காது. பவுல் இங்கே, அவர்கள் செய்யும் போதோ, நீங்கள் செய்யும் போதோ, பாவத்தில் வீழ்ந்த ஒருவரை நீங்கள் எவ்வாறு கையாள்வது? என்று சொல்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

  • ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் - நாம் விசுவாசிகளாக மாறுவதற்கு முன்பு நாம் நமக்காக வாழ்ந்தோம். நாம் "நம்" பின்னே ஓடி, "நம்மை" மகிழ்வித்தோம். பாவத்தின் பின்னே ஓடினோம். ஆனால் நீங்கள் ஒரு விசுவாசியாக (கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுபவர்) ஆகிவிட்டால், நீங்கள் இனி பாவத்தின் பின்னே ஓடுவதில்லை. நீங்கள் கிறிஸ்துவைப் பின்தொடர்கிறீர்கள். இருப்பினும், பாவம் உங்களைத் துரத்துகிறது. சில சமயங்களில் உங்களை கைப்பற்றவும் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவன் பாவத்தால் கைக்கொள்ளப்படுகிறான். பாவத்தால் மேற்கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், அவன் அதன் வலையில் விழுந்துவிடுகிறான். ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால், யாரோ ஒருவரால் அவன் தனது பாவத்தில் சிக்கியுள்ளான்.

  • ஆவிக்குரியவர்களாகிய நீங்கள்

    • இரண்டு விதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கிறோம் என்று நினைத்துக் கொள்ளும் நம்மில் பலர் உடனடியாக, "அவரால் அதை எப்படி செய்ய முடிந்தது?", "நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை”, "ஏன், நானே அதை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்று சொல்கிறோம். பாவத்தில் சிக்கியவனை நாம் இப்படித்தான் கேலி செய்கிறோம். நமது மாம்சம், மற்ற நபரைப் போலவே மோசமானது என்பதை மறந்துவிடுகிறோம்.

    • பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே பாவத்தில் சிக்கிய ஒருவரின் தேவைகளை உணரக்கூடிய அன்பை உருவாக்க முடியும். ஒருவன் பாவம் செய்தான் என்று தெரிந்தவுடன் அவனிடம் உணர்வு பூர்வமாக இருப்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயம். இது இயற்கையான தன்மை அல்ல. நம் வாழ்வில் வெளிப்படுகிற கிறிஸ்துவின் அன்பு இது. மாம்சம் கண்டித்து, தண்டனையை நிறைவேற்ற விரும்புகிறது, ஆனால் ஆவியோ மீட்க முயல்கிறது.

சாந்தமுள்ள ஆவி

“ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்;” கலாத்தியர் 6:1


  • பவுல் கலாத்தியர்களைப் பற்றி பேசுவது என்னவென்றால், அவர்கள் பாவம் செய்தார்கள், ஆனால் அவர்கள் அதை மறைப்பதில் போதுமானவர்களாக இல்லை. இப்போது அவர்கள் பிடிபட்டுள்ளனர். அது தான் பிரச்சனையே. அவர் பிரச்சனையை விளக்குகிறார். இப்போது நீங்கள் உங்கள் சகோதரனை ஒரு பாவத்தில் பிடித்துவிட்டீர்கள், இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்கே அவர் செய்யும் இரண்டாவது விஷயம், ஒரு சக விசுவாசி ஒரு பாவத்தில் சிக்கும்போது, மேற்கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல், பிடியும்பட்டால் நாம் பின்பற்றும் நடைமுறையைக் கூறுகிறார். தன் சகோதரனைப் பிடித்தவரின் பொறுப்பு என்ன? “சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்”, இதை தான் செய்ய வேண்டும்.

ஆவிக்குரிய மனிதர்

  • அவர், ”ஆவிக்குரியவர்களாகிய நீங்கள்” என்று கூறுகிறார். இப்போது அவர் அந்த மக்களில் ஒரு குறிப்பிட்ட குழுவுடன் பேசுகிறார். ஆவியில் நடக்காதவர்களுடன் அருகருகே நடக்கும் பலரை அவர் தனிமைப்படுத்துகிறார். பைபிளின் AMP பதிப்பு இவர்களை "ஆவிக்குரியவர்கள்" என்று குறிப்பிடுகிறது - இவர்கள் பரிசுத்த ஆவியின் தாக்கங்கள், கிருபைகள் மற்றும் வரங்களை அனுபவிக்கும் விசுவாசிகள். ஆவியானவர் அவர்களுக்குள் அவருடைய அன்பை உண்டாக்குகிறார். அவர் அவர்களிடம் தான் பேசுகிறார்.

சாந்தமான ஆவி

  • பவுல் இதை எபேசியரில் விளக்கியுள்ளார் - “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,” எபேசியர் 4:2

  • பின்வருபவை சாந்தத்தின் குணங்கள். இது கிறிஸ்து நம்மில் இருக்கும்போதும், நாம் தினமும் அவருடன் நடக்கும்போதும் மட்டுமே வருகிறது.

    • தாழ்மை - இது மாம்சத்தின் மூலம் மற்றவரின் பாவத்தை இழிவுபடுத்துவதற்குப் பதிலாக கிறிஸ்துவின் உதவியுடன் பிரச்சினையைச் சமாளித்து தாழ்மையாக இருக்கும்.

    • பொறுமை - இது பாவம் தொடர அனுமதிக்காமல் பொறுமையாக இருக்கும், அதே நேரத்தில் பாவத்திலிருந்து விலகிச் செல்லும் படி அவரை மாற்றும். கிறிஸ்து நம்மை வழிநடத்தினால் மட்டுமே இது நடக்கும். மனிதர்களாகிய நாம் நம் அன்புக்குரிய பாவத்தைப் பார்க்கும்போது, ​​அவற்றை உடனடியாக வெளியேற்ற விரும்புகிறோம். ஆனால் கிறிஸ்துவின் ஆவி, நம்முடைய சுயத்தை சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, அன்பானவரை மாற்றுவதற்கு கிறிஸ்துவிற்காக காத்திருக்கும்படி பொறுமையை உருவாக்குகிறது.

    • அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி - கிறிஸ்துவின் அன்பு ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் நற்பெயரை அழிக்க அனுமதிக்காது. அந்த அன்பு கிறிஸ்துவில் மன்னிக்கும் அன்பைக் கொண்டுவருகிறது. கிறிஸ்துவானவர் தமது அன்பிற்கு நம்மை மீட்டெடுப்பதைப் போல, மன்னிக்கும் அன்பானது, உறவை மீட்டெடுக்க முனைகிறது. அன்பு கண்டிக்காது - கண்டனத்தின் ஆவி சாத்தானிடமிருந்து வருகிறது, கிறிஸ்துவிடமிருந்து அல்ல.

  • அதே அதிகாரத்தில், சாந்தமான ஆவியைப் பற்றிய மற்றொரு பார்வையையும் பவுல் தருகிறார், “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்”. கலாத்தியர் 6:9.

  • தொடர்ந்து நன்மை செய்யுங்கள், தவறானது ஒன்றும் செய்யாதீர்கள்.

    • சோர்ந்துபோகாமல் - நீங்கள் நன்மை செய்யும் போது, ​​மற்றவர் தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருந்தால், நீங்கள் சோர்ந்து போவீர்கள். சோர்ந்து போகவேண்டாம், சரியான நேரத்தில் உங்கள் பொறுமையின் பலனை காண்பீர்கள் என்று அவர் கூறுகிறார்.

    • பல சமயங்களில் நாம் கொஞ்ச காலம் மட்டுமே நன்மை செய்கிறோம். இடைவிடாமல் தொடர்ந்து, நீண்ட காலத்திற்கு நன்மைசெய்யுமாறு பவுல் கூறுகிறார். இங்கே அவர் இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்.

      • ஏற்றகாலத்தில் அறுப்போம் - இயேசு சரியான நேரம் என்று நினைக்கும் நேரத்தில் நாம் அறுவடை செய்வோம். இது நாம் விரும்பும் நேரம் அல்ல, சரியான நேரம் என்று இயேசு உணரும் நேரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

      • தளர்ந்துபோகாதிருந்தால் - இது நீண்ட காலம் நன்மை செய்யும் விடாமுயற்சி.

மீட்பு

  • ஆனால் "மீட்பு" என்ற வார்த்தை முதலில் வலியை ஏற்படுத்தக்கூடியதைக் குறிக்கிறது. இது ஒரு செயல்முறை மட்டுமல்ல, ஆரம்பத்தில் அது வேதனையானது. சில நேரங்களில் அது சிறிது காலம் வலியைத் தரலாம். அதைப் பற்றி ஒரு நொடி தியானிப்போம். நீங்கள் உங்கள் கையை உடைத்து விட்டு, மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் என்ன செய்யப் போகிறார் என்று யூகியுங்கள். நீங்கள் குணமடைவதற்கு அவர் உங்களை காயப்படுத்த வேண்டும். அதனால் வலி என்பது தானாகவே குறிக்கப்படுகிறது. எனவே ஒரு சகோதரனை மீட்டெடுத்தல் எனும் போது, மீட்பு என்ற வார்த்தையே அதற்குள் வலி இருப்பதைக் குறிக்கிறது. அதில் சில வலிகள் இருக்கும். ஒருவரை மீட்டெடுக்கும் செயல் மிகவும் வேதனையானது."இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்." சங்கீதம்147:3

  • நாம் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படும்போது மற்றவர்களிடம் நமக்கு ஒரு மென்மையான உணர்வு வருகிறது. இதை யாராலும் விளக்க முடியாது, ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அன்பில்லாதவர்களாக இருக்கிறவர்கள், சகிப்புத்தன்மையற்றவர்கள், ஆரம்பிப்பதற்கு கடினமான மனிதர்கள். ஆனால், அவற்றை மீறி அவர்களை நேசிப்பதற்கான மென்மையான உணர்வை ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர்கள் சில வேதனையான காலங்களுக்கு செல்லப் போவதால், நாம் அவர்களுடன் சேர்ந்து வலியை சகித்துக்கொள்ளும் நெகிழ்வையும், பின்னர் ஒரு நாள் அவர்கள் மீண்டும் திரும்பி வந்து சுயமாக காலூன்றி நிற்பதைக் காணும் மகிழ்ச்சியையும் நம்மில் உள்ள கிறிஸ்து நமக்கு கொடுக்கிறார். ஆனால் இது யாவும் மீட்பைப் பற்றியது. நாங்கள் ஒருவரைத் திருத்தும்போது, நாங்கள் ஒருபோதும் பெயரைக் குறிப்பிடவில்லை. அவர்களின் பாவத்தை நாங்கள் ஒருபோதும் பொதுவில் குறிப்பிட்டதில்லை.

எச்சரிக்கை

நமக்கு ஒருவருக்கு ஒருவர் பொறுப்பு இருக்கிறது, ஆனால் நாம் தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டு வாழும்போது மட்டுமே அந்தப் பொறுப்பு நிறைவேற்றப்படுவதைக் காண முடியும். எனவே பவுல் பிரச்சனையை விளக்குகிறார். செயல்முறையை விவரிக்கிறார். சாத்தியமான நிலையைக் குறித்து எச்சரிக்கிறார்.

“நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு”. கலாத்தியர் 6:1

  • சோதனை - பிற சகோதரன் சிக்கியிருக்கும் பாவத்தின் வலையில் விழும்படி நாம் சோதிக்கப்படலாம். எனவே எச்சரிக்கையாய் இருங்கள்.

  • பெருமை - பிற நபர் திருத்தப்படுகிற அதே நேரத்தில் பெருமையானது நான் "மிஸ்டர் க்ளீன்" (சுத்தமானவன்/ சுத்தமானவள்) என்று வந்து சொல்லும். இது சாத்தானின் வஞ்சகத்தால் ஏற்படுகிறது. இதைத்தான் பவுல் விளக்குகிறார், “ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும்,தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்”. கலாத்தியர் 6:3

  • உங்களை எப்படி அளவிடுவது - மற்றவர்களுடன் ஒப்பிடாமல் நம்மை அளவிடுவதற்கு பவுல் ஒரு நல்ல ஆலோசனையை வழங்குகிறார்.“அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்”. கலாத்தியர் 6:4

  • உங்கள் சுயகிரியைகளை சோதித்துப் பாருங்கள் - இது உங்கள் சொந்த கிரியைகளை சோதித்துப் பார்க்கும்படி சொல்கிறது. பிறரை சோதிக்கச் சொல்லி எழுதப்படவில்லை. நீங்கள் அதே பாவத்தில் சிக்கினால் அல்லது அந்த பாவத்தோடு போராடினால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அந்த சகோதர சகோதரிகளின் காலணியில் உங்களை வைத்துப் பார்த்து உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். இது உங்களுக்கு தாழ்மையைக் கொடுக்கும். இதை நீங்கள் நன்கு புரிந்து கொண்டால், எபேசியர் 4:2 இல் கூறப்பட்டுள்ள சாந்தமான ஆவிக்கு உங்களை எடுத்துச் செல்லும்.

  • உங்கள் பாவத்தை ஒப்பிட்டுப் பார்க்காமல், (“மற்றவனைப் பார்க்கும்போதல்ல”) மேன்மை பாராட்டுங்கள்.

நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இப்போது என்ன சூழ்நிலையில் செல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

  • சக அன்பானவர்களிடம் நீங்கள் சகோதர அன்பைக் காட்ட இயேசுவிடம் ஜெபம் செய்யுங்கள்.

  • சாந்தமான ஆவியைக் காட்ட இயேசுவிடம் ஜெபியுங்கள்.

  • தேவனின் வழியில் உங்களை மீட்டெடுக்க இயேசுவிடம் ஜெபியுங்கள்.

  • உங்களை எச்சரிக்கவும், பெருமை மற்றும் சோதனையிலிருந்து விலகி இருக்கும்படி செய்யவும் இயேசுவிடம் ஜெபியுங்கள்.

18 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page