top of page
Kirupakaran

சுக்கான்




அதிக அளவு டன் எடை கொண்ட ஒரு பெரிய கப்பல் அல்லது ஜம்போ ஏரோ விமானம் எப்படித் திரும்புகிறது என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா ? இந்தப் பெரிய கப்பலைத் திருப்புவது "சுக்கான்" என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பொருள். இது கப்பலின் பின்புறம் உள்ள என்ஜினுக்குப் பக்கத்தில் இருக்கும். விமானத்தில் இது மூன்று இடங்களில் இருக்கும். ஒன்று அதன் பின்புறத்திலும் மற்றவை அதன் இரு பக்கங்களிலும் காணப்படுகிறது. அதேபோல் தான் காளை வண்டியில் கட்டப்பட்ட ஒரு குதிரையையோ அல்லது மாட்டையோ பார்த்தால், அதன் வாயில் இருக்கும் கடிவாளம் தான் மூலம் எஜமானருக்குக் கீழ்ப்படிய வேண்டிய வழியைக் கட்டுப்படுத்துகிறது.


இதேபோல், மனிதர்களாகிய நம் உடலிலும் ஒரு சுக்கான் இருக்கிறது. அது தான் “நாக்கு”. வேதம் இதைப் பற்றி இவ்வாறு கூறுகிறது,


'கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளைநடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரியகாட்டைக் கொளுத்திவிடுகிறது! 'யாக்கோபு 3:4-5


தேவன் அவருடைய அளவுகோலின் படி நாம் பரிசுத்தமாகவும், பரிபூரணமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இவை அனைத்தும் நம் வாயில் இருந்து வரும் வார்த்தையில் இருந்து தொடங்குகின்றன. இவை நம் உடலின் சுக்கான் ஆகிய “நாக்கில்” இருந்து வருகின்றன.


'நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும்கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான். நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடையஅவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால்கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும்சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. 'யாக்கோபு 3:2,6,8


அப்படியென்றால், நாம் பேசுவதின் மூலம் நம்முடைய புனிதத்தில் இருந்து எப்படி தடுமாறுகிறோம்? நாக்கால் நாம் எப்படி பாவத்திற்கு வழிவகுக்கிறோம் ?


  • ஒரு நாக்கு தானாக எதுவும் செய்ய முடியாது. நாக்கு - வாய், மூளை, வயிறு மற்றும் உடலின் பிற பகுதிகளுடன் பல நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு உணவை உண்ணும்போது, நாக்கில் உள்ள நரம்பு நாம் எந்த வகையான சுவை சாப்பிடுகிறோம் என்பதைக் கூறுகிறது. மேலும் மூளை மற்றும் வயிற்றுக்கு, வாய் உதவியுடன் எவ்வளவு மெல்ல வேண்டும் என்பதைப் பற்றி ஒரு பின்னூட்டப் பொறிமுறையை அளிக்கிறது. நாக்கு இல்லாமல் நம் உடம்பிற்கு எந்த ஒரு சத்துக்களும் சென்று சேர முடியாது.

  • இந்த நாவைக் குறித்துப் பல விஷயங்களை வேதம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

    • இது நம் உடலுக்கு நெருப்புப் போன்றது - “நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்”

    • முழு உடலையும் கறைப்படுத்துகின்றது – “நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும்

    • இதை யாரும் அடக்க முடியாது – “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது”

    • இது உடலுக்குக் கொடிய விஷம் – “அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.”

எனவே, இதைப் படித்தப்பிறகு நான் ஆண்டவரிடம் , “இந்த நாக்கை ஏன் ஒரு கொடிய விஷமாக உருவாக்கினீர்கள் அப்பா ? நீங்கள் எதைச் செய்தாலும் ஒரு நோக்கத்துடன் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்”, என்று கேட்டேன். அப்போது இந்த வசனத்தைத் தேவன் எனக்குக் காண்பித்தார்.


'சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். ' 1 பேதுரு 2:16


தேவன் நம்மை “சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும்” என்று விரும்பினார். அதனால்தான், அவர் இந்தக் கொடிய உடல் பகுதியை (நாவை) நம்மில் உருவாக்கினார். தேவனிடத்தில் இருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை வைத்து நாம் இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம். அதற்காக நாம் நாக்கைப் பயன்படுத்துகிறோம் என்று வார்த்தை கூறுகிறது.


'ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? ' யாக்கோபு 3:11


  • நன்னீர்” இங்கே குறிப்பிடப்படுவது கடவுளுக்காக நாக்கால் நாம் செய்யும் நல்ல விஷயங்கள்.

    • நாம் தேவனைப் புகழ்கிறோம்

    • நாம் தேவனை வணங்குகிறோம்

    • நாம் தேவனைக் குறித்து மற்றவருக்கு உபதேசிக்கிறோம்

    • நாம் தேவனின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறோம்

    • நாம் தேவனின் நாமத்தில் வாயை மூடி அமைதியாக இருக்கிறோம்

  • கசப்பான நீர்” இது நாக்கால் நாம் செய்யும் கெட்ட காரியங்களைக் குறிக்கிறது. இது நம்முடைய சுய ஆசைகளினால் வருகிறது. மற்றவரை சபிப்பது, மற்றவரிடம் கூச்சலிடுவது , கோபம் கொள்வது , வதந்திகள் பேசுவது , பெருமை கொள்வது , மிகைப்படுத்தி பேசுவது போன்றவை இதில் அடங்கும்.''இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். 'கொலோசெயர் 3:8

  • நாம் ஒவ்வொரு நாளும் தண்ணீரைக் குடிக்கிறோம் - ஒரே குழாயில் நல்ல சுவையான நீரும் சிறிது நேரம் கழித்து உப்புநீரும் பருகினால் எப்படி இருக்கும்? நாம் ஒரே நாவால் இரண்டு விஷயங்களைச் செய்யும்போது இயேசு நம்மை இப்படித்தான் பார்க்கிறார். ஒரு நிமிடம் நன்றாகப் பேசுகிறோம், அடுத்த நிமிடம் மோசமாகப் பேசுகிறோம். இவ்வாறு செய்யும் போது நாம் இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம். நாம் இந்த இரட்டை வாழ்வைக் கைவிட்டு பரிசுத்தத்திற்கு நேராகச் செல்லும்படி தேவன் விரும்புகிறார்.

  • இத்தகைய இரட்டை வாழ்க்கை (நாவின் மூலம்) முழு உடலையும் சிதைக்கிறது. கெட்ட காரியங்கள் வெளிவந்தவுடன், அது மனதைச் சிதைத்து, மெதுவாக நம் வாழ்க்கையில் பாவத்திற்கு இடமளிக்கிறது. மேலும் தேவனின் பரிசுத்தத்தைப் பறிக்கிறது.


நாக்கை நாம் எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?


நாக்கு ஒரு சுக்கான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவரால் மட்டுமே அது செயல்பட முடியும்.வேதம் கூறுகின்றது,


'நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. 'யாக்கோபு 3:8


  • நாக்கை அடக்க முடியாது. இதன் அர்த்தம் என்னவென்றால், நமக்கு வலுவான கைகள் வேண்டும் என்று விரும்பினால் பளு தூக்குதல் மற்றும் பல வகையான உடற்பயிற்சிகளைச் செய்து, நாம் எதிர்பார்த்த மாதிரி வலுவானக் கைகளைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனால் நாக்குடன் நாம் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது.

  • ஒரு காரில் ஸ்டீயரிங் வீல், திருப்புவதற்காக எப்படி சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அது போல நம்முடைய நாக்கு பல நரம்புகள் மூலம் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூளை மட்டுமே நாக்கைக் கட்டுப்படுத்த முடியும். மூளை நம் நாக்கைக் கட்டுப்படுத்துகிற ஒரு முக்கியமான உறுப்பாக செயல்படுகிறது.

  • மூளை கடவுளின் ஞானத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. நாம் வேதத்தை வாசித்து அதற்கு உண்மையாய் இருக்கும் போது இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்கிறோம். நல்ல விஷயங்கள் நம் இதயத்திற்கும், மூளைக்கும் செல்லும் போது நம் வாயிலிருந்து வருகிற செயல்கள் யாவும் கடவுளைப் பிரியப்படுத்துகிற நன்னீராய் இருக்கும். 'நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். 'லூக்கா 6:45

  • மனிதனிடமிருந்து வரும் ஞானம் தீயவற்றை உருவாக்குகிறது - 'உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. ' யாக்கோபு 3:14-15

  • தேவனிடத்தில் இருந்து வரும் ஞானம் நல்ல விஷயங்களை உருவாக்குகிறது, இதை நாம் சுதந்தரிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். 'பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. ' யாக்கோபு 3:17


ஆகவே, இந்த ஞானம் நம்மை எவ்வாறு பரிசுத்தமாக்கி, கிறிஸ்து நமக்காக விரும்பிய பாதைகளுக்கு நம்மை சிறந்ததாக்க முடியும்?


  • பணிவு - கிறிஸ்து இயேசுவிற்குக் கீழ்ப்படியுங்கள். கடவுளின் ஞானத்தைக் கேட்கும்படி தேவனிடம் உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தையின் படியே அவர் உங்களுக்கு ஞானத்தைத் தருவார்.

'உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். 'யாக்கோபு 3:13

' கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். 'நீதிமொழிகள் 2:6

  • தேவனிடத்தில் உங்களைப் பணிவுடன் தாழ்த்தினால், நீங்கள் ஒருவரைச் சந்திக்கும் போது தேவையற்றப் புறம்பேசும் பேச்சைப் பேச வேண்டாம் என்ற கட்டுப்பாடை அவர் உங்களுக்குக் கொடுப்பார். தேவனின் ஆவி உங்கள் சுழ்நிலையினைக் கட்டுப்படுத்தும். ஒரு வேளை நீங்கள் சந்திக்கும் ஒரு நபருடன் அதிகம் புறம்பேசும் எண்ணங்கள் வருமானால் அந்த நபரைச் சந்திப்பதைத் தவிர்க்க கடவுள் உங்கள் சூழ்நிலையை மாற்றுவார். அந்த நட்பில் இருந்து உங்களை விலக்கி வேறு வழிக்கு அழைத்துச் செல்வார்.

  • தேவனின் ஆவி மற்றவர்களை நியாயம் தீர்ப்பதில் இருந்து உங்களை விலக்கிப் பாதுகாக்கும். அவர்கள் தவறு செய்தாலும், அந்தத் தவறைப் பார்த்து உங்கள் வாழ்வில் எவ்வாறு திருத்திக்கொள்வது என்று காண்பிப்பார்.

  • யாராவது உங்களைப் பற்றி மோசமாகப் பேசும்போது நீங்கள் அவர்கள் மீது கோபப்படுவதிலிருந்து தேவனின் ஆவி உங்களைக் கட்டுப்படுத்தும். தேவனுடைய நல்ல குணங்கள், நம்மை மிகவும் சாந்தமாக மாற்றி கோபமான சூழ்நிலையிலிருந்து விலக்கிவிடும்.

  • இதன் பொருட்டு நாம் மிகவும் உணர்ச்சிவசப்படாதவர்களாகி, மக்கள் நம்மை எப்படி வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாழ விடமாட்டார். இயேசுவின் வாழ்க்கையைப் பாருங்கள், மற்றவர்கள் அவரைக் குறித்து என்ன சொன்னாலும் அவர் கோபப்படவில்லை. அவரை சிலுவையில் அறைந்த போர்சேவகர்களைக் கண்டு அவர் கோபப்படவில்லை, உண்மையில் அவர் சிலுவையிலிருந்து அவர்களை மன்னித்தார். ஆனால் அவரது வீடு வியாபாரத்திற்காகப்பயன்படுத்தப்பட்டபோது அவர் கோபமடைந்தார். நம் வாழ்க்கையை கடவுளுக்காக வைராக்கியமாக வாழவும், கடவுளின் வைராக்கியத்தை நம்மிடம் கொண்டு வரவும் கடவுள் உங்களிடம் உள்ள கோபத்தை உங்களுக்குத் தருவார்.

'புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். ' யோவான் 2:16-17


உங்கள் வழிகளைப் பாவத்தில் இருந்து காக்க வேண்டும் என்றால் உங்கள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் . அதற்கு நீங்கள் அவருடைய வார்த்தையில் வேரூன்றி இருக்க வேண்டும். அவரைச் சார்ந்து இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகள் என்னவாக இருந்தாலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவருடன் பேசுங்கள். ஒவ்வொரு நாளும் அவர் நமக்கு அவருடைய வார்த்தை மூலம் "நன்னீர்" தந்து நம்மை நீதியின் பாதையில் நடத்துவார். சாத்தானின் "கசப்பான நீர்" எண்ணங்கள், மற்றும் பேச்சில் இருந்து காத்து உங்களை மாற்றுவார்.


'ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, '1 பேதுரு 3:10


நாக்கைத் தீமையிலிருந்து விலக்கி வைப்பதன் பலன் என்னவென்றால் அது நம்மை நீதியுள்ளப் பாதைக்கு வழிநடத்திச் செல்லும். தேவனின் கண்கள் நம் வாயிலிருந்து வெளிவரும் எல்லாவற்றின் மேலும் இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


'கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. ' 1 பேதுரு 3:12


'வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 'மத்தேயு 15:11


உங்கள் நாக்கு எவ்வளவு முக்கியமானது, அது நம்மை எவ்வாறு அழிக்கக்கூடும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நல்ல விஷயங்களைப் பேசி, நல்ல காரியங்களைச் செய்து தேவனுடைய கோபாக்கினையில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.


'நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! 'யாக்கோபு 3:6



53 views0 comments

Recent Posts

See All

Rudder

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page