ஒரு வினாடி நீங்கள் ஒரு புதிய கார் வாங்கியவாறு கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள். அது புது கார் என்பதால் நீங்கள் அதை எப்போதும் கழுவி, புதுப்பொலிவுடன் தோற்றமளிக்க, உள்ளேயும் வெளியேயும் சுத்தமாக வைத்திருப்பீர்கள். ஒரு நாள் நல்லகனமழை பெய்யும் போது, சாலையில் ஏராளமான வெள்ளம், சேறும் சகதியும் நிரம்பிய அந்த நேரத்தில் நீங்கள் உங்கள்வாகனத்தை ஒரு முக்கியமான காரியத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தினால் எடுத்துச் செல்கிறீர்கள். பயணத்தின்முடிவில் உங்கள் புதிய கார் மிகவும் அழுக்காக இருக்கும், அதைப் பார்க்கும் போது இது ஒரு புதிய காரா இல்லையா என்றுநமக்குள் ஒரு கேள்வியை எழுப்பும்? மீண்டும் கழுவி சுத்தப்படுத்திய பிறகு, அது பழைய புதுப்பொலிவுடன் தோற்றம் அளிக்கும்.
ஆமாம் நண்பர்களே, நம் ஆண்டவரும் நம்மை ஒரு புதிய காரைப் போன்று தான் பார்க்கிறார், அவர் நம் பாவங்களைக் கழுவி, பரிசுத்தமாக்கி , நம்மை நீதிமான்களாக மாற்றுகிறார். இதைப் பற்றி வேதம் சொல்லுகிறது
'உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடையஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். ' 1 கொரிந்தியர் 6:11
நாம் ஏன் பாவம் செய்கிறோம்?
நீங்கள் முந்தைய வசனங்களைப் படித்தால் உங்களுக்குத் தெரியும் (1 கொரிந்தியர் 6:9-11), பவுல், “நாம் பாவிகள் , கடவுளுடையராஜ்யத்தை சுதந்தரிக்க நமக்கு உரிமை இல்லை, ஆனால் தேவன் நம்மை அழைத்து, கழுவி, பரிசுத்தமாக்கி, நியாயப்படுத்தினார்”, என்று சொல்லுகிறார்
'அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச்சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். ' 1கொரிந்தியர் 6:9-11
' 1 கொரிந்தியர் 6:9-10 படித்தால் நாம் கண்டிப்பாக அதில் ஒரு பாவமாவது செய்து இருப்போம். சற்று ஆராய்ந்து பார்த்தால்நாம் பழைய (பாவமான ) வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதையும் காணலாம். இந்த பிரச்சினையின் வேர் சாத்தான் நம்மிடம்கொண்டு வரும் மூன்று விஷயங்கள். அவை
வஞ்சிக்கப்பட்ட நிலை
பாவத்தை சாதாரணமான முறையில் அணுகுவது
பாவத்தால் குருடாக இருப்பது
வஞ்சிக்கப்பட்ட நிலை
நாம் செய்ய விரும்புவதை சரியானதா அல்லது தவறா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் கடவுள்மனிதர்களுக்கு அறிவு திறனைக் கொடுத்தார். ஆனால் பெரும்பாலும் இந்த திறனை சாத்தான் நாம் (சுயம்) செய்வதுஉண்மையில் ஒரு பாவம் அல்ல என்று நம்மை நம்ப வைப்பான். பாவம் நம்மை ஏமாற்றும்.
உதாரணத்திற்கு - நீங்கள் நண்பர்களுடன் விருந்துக்கு வெளியே செல்கிறீர்கள், உங்கள் நண்பர் ஒருவர் உங்களிடம்குடிக்கச் சொல்கிறார்- உங்களிலுள்ள மனசாட்சி உங்களைப் பார்த்து - நீங்கள் வழக்கமான குடிகாரன் இல்லை, தினமும்குடித்துவிட்டு சாலைஓரம் விழுந்து கிடைக்கும் நபர் அல்ல என்று சொல்லும், ஒரு கிளாஸை மட்டும் குடிப்பதால் ஒன்றும்இல்லை என்று உங்களை கன்வின்ஸ் செய்யும், இந்த ஒரு கிளாஸ் உங்களை மெதுவாக பாவ வாழ்க்கைக்கு இழுத்துச்செல்லும்.
அதேபோல் நாம் ஒரு முறை பொய் சொன்னால் பரவாயில்லை, ஒரு முறை கோபம் கொண்டால் பரவாயில்லை என்று நினைக்கிறோம். ஆனால் நம் ஆண்டவர் தமது கிருபையின் நிமித்தம் நம்மை நியாயம் தீர்க்காமல் இருக்கிறார். இதைத் தான்வேதம் கூறுகிறது
'எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும்குற்றவாளியாயிருப்பான். ' யாக்கோபு 2:10
நம்முடைய பாவம் ஒரு பாவமல்ல என்று தோற்றமளிக்க நாம் நம்மை மோசமான பாவங்களோடு ஒப்பிடுகிறோம். இவ்வாறு தான் நம் வாழ்க்கையில் எல்லாப் பெரிய பாவங்களும் சிறிய பாவங்களில் இருந்து தொடங்குகின்றன.
1 கொரிந்தியர் 6:9-10 ‘'அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்
பவுல் சொல்கின்றார் , நம்முடைய பாவங்களினால் நாம் வஞ்சிக்கப்படுகிறோம் , மிகவும் உண்மை.
பாவத்தை சாதாரணமான முறையில் அணுகுவது
நம்முடைய பாவத்திற்காக இயேசு சிலுவையில் செய்த தியாகத்தை நாம் மதிப்பதில்லை. இயேசு வருவதற்கு இன்னும்கொஞ்சநாள் இருக்கின்றது என்று எண்ணி, நாம் தொடர்ந்து பாவம் செய்கின்றோம். நாம் பாவத்தை சாதாரணமாகஅணுகுகிறோம். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட, கிறிஸ்தவர்கள் ஆகிய நாம் உயர்ந்தவர்கள் என்று உணர்கிறோம், நம் இரக்கத்தின் தந்தை இயேசு இருப்பதால், நாம் அவரிடம் “மன்னிக்கவும்” என்று சொன்ன உடன் நம் பாவத்தை மன்னித்துவிடுவார், மீண்டும் மீண்டும் பாவத்தை செய்து "மன்னிக்கவும்" என்று சொல்லி , பாவத்தை சாதாரணமான முறையில்அணுகுகிறோம்
'அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரைஅறியவுமில்லை. ' 1 யோவான் 3:6
1 யோவான் 3:6- பாவம் குறித்த நமது சாதாரண அணுகுமுறைக்கான காரணத்தை விளக்குகிறது, இந்த சாதாரணஅணுகுமுறைக்கு நாம் பல முறை சாத்தானைக் குறை கூறுகிறோம், இந்த பழக்கங்கள் நம் சுய இயல்பிலிருந்து வந்தவை. நாம்நம் இருதயத்திலிருந்து மனந்திரும்பி, பாவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், அது ஒருபோதும்விலகிப்போவதில்லை.
பாவத்தால் பார்வையற்றவராய் இருப்பது
நாம் கடவுளுடன் நெருக்கமாக வாழ்கிறோம் என்று நினைக்கிறோம், ஆனால் நாம் செய்யும் செயல்கள், பாவங்கள் அல்ல என்றுநினைக்கிறோம். அதேனெனில் பல நேரங்களில் நாம் செய்யும் பாவம், பாவம் இல்லை என்பதை உணர சாத்தான் நம்கண்களை மறைக்கிறான்.
உதாரணத்திற்கு- என் வாழ்க்கையில் நடந்ததை கடவுள் சமீபத்தில் வெளிப்படுத்தினார். நான் வாகனம் ஓட்டும்போது, ரோட்டில் யாரேனும் குறுக்கே சென்றால் நான் கத்துவது உண்டு, இது கோவம். ஆனால் சாத்தான் கோவம் இல்லை என்று என் கண்களைமூடிவைத்திருந்தான். நான் எப்போதும் வீட்டிலுள்ள விஷயங்களில் கோபம் கொள்ளுவது தான் கோவம் என்று எண்ணுவேன்.
'தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக்குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான். ' 1 யோவான் 2:11
நம்முடைய பாவத்தை உணராமல் இருக்க சாத்தான் நமக்கு பயன்படுத்தும் தந்திரம் இது. மற்றவர்களின் பாவத்தை நாம்அடையாளம் கொள்கின்றோம், ஆனால் மற்றவர்கள் நம் பாவங்களை சுட்டிக்காட்டும்போது நாம் அதை ஏற்கத் தயாராகஇல்லை.
பாவத்திற்கு கடவுளின் பதில்
நாம் பாவ ஆசைகளுக்குள் விழுந்து பாவத்தைத் தொடர்ந்தாலும், முழுமனதோடு “அப்பா” என்று அழைத்தால் அவர் நமக்கு உதவக் காத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் பவுல் இதை விவரிக்கிறார்
'உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடையஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். ' 1 கொரிந்தியர் 6:11
அவர் உங்களை அவருடைய குழந்தையாக தேர்ந்தெடுத்தார், நீங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நினைவில்வையுங்கள் .
அவர் உங்களைத் தேர்ந்தெடுக்கும்போது
அவர் உங்களுடைய பாவங்களைக் கழுவினார்.
அவர் நம்மை பரிசுத்தப்படுத்தினார் - இதனால் நம் இருதயங்களை / ஆன்மாவை ஒரு ஆலய பலிபீடத்தைப் போல சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் மாற்றினார் .
அவர் பரிந்துபேசினார்- அவருடைய மகிமையை நாம் குறைத்திருந்தாலும், அவருடைய பிள்ளையாய் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கடவுளிடம் பரிந்துபேசினார்.
தேவனுடைய ஆவி - அவர் தேவனுடைய ஆவியையும் நமக்குக் கொடுத்து நம்முடைய பாவத்திலிருந்து நம்மைத்தூய்மைப்படுத்தினார், மேலும் நாம் பாவம் செய்யும் பொழுது தேவனுடைய ஆவியானவர் அது பாவம் என்று நமக்குஉணர்த்தி நம்மைக் காக்கிறார்.
இத்தனைக்கும் பிறகு நாம் ஏன் மீண்டும் மீண்டும் பாவம் செய்கிறோம்? நம்முடைய பாவங்கள் நம் மாம்சத்தினால் ஏற்படுகின்றனஎன்றும் அது ஆவிக்கு முரணானது என்றும் வேதம் கூறுகிறது.
'மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள்செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. '
நம்முடைய பலவீனமான மாம்சத்திலும் தேவன் நமக்கு பலத்தைக் கொடுக்கிறார், பவுல் இதைப் பற்றி 2 கொரிந்தியர் இல்கூறுகிறார்
'அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். ' 2 கொரிந்தியர் 12:9
அவர் சொல்லுகிறதாவது “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்”, கடவுளிடமிருந்து இந்த பெலனை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது ?
மனந்திரும்புதல்
பாவத்தை தோற்கடிக்க கடவுளின் சக்தி நம்மில் வெளிப்பட ஒரே வழி மனந்திரும்புதல்தான். நாம் இதயத்திலிருந்துமனந்திரும்பி, நம் மனதளவில் “மன்னியுங்கப்பா ” என்று சொல்லிவிட்டால் மட்டுமே இது போதாது. இது இதயத்திலிருந்து வரவேண்டும், இவை இரண்டும் வேறுபட்டவை.
இதயத்திலிருந்து வரும் மனந்திரும்புதலில் பல விளைவுகள் உள்ளன.
1. பழைய வழிகள் ஒழிந்தன - பழையது போய்விட்டது, ஒரு புதிய உயிரினமாக நாம் புதுப்பிக்கப்படுகிறோம் என்று பவுல்இதை விவரிக்கிறார்.
'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம்புதிதாயின. ' 2 கொரிந்தியர் 5:17
2. குருட்டுத்தன்மை பறிக்கப்படுகிறது - நாம் பாவத்தில் இருக்கும்போது, நாம் குருடர்களாக இருக்கிறோம், கர்த்தருடையஆவி நம்மில் உள்ள குருட்டுத்தன்மையை நீக்குகிறது.
'அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும். ' 2 கொரிந்தியர் 3:16
3. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்புக்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறார் - பலமுறை நாம் உலகவாழ்வில் சிக்கிக்கொள்கிறோம், நாம் செய்யும் செயல்களால் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம்மனந்திரும்பும்போது அவருடைய பரிசுத்தஆவி நம்மைப் பரிசுத்தமாக்கும், இதனால் நியாயத்தீர்ப்பு நாளில் நாம் அவரிடமிருந்து கருணை பெறுவோம்.
'ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும்கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ' 2 கொரிந்தியர் 5:10
நாம் நினைவில் கொள்ள வேண்டிய காரியங்கள்
கிறிஸ்து மூலம் "நீங்கள் கழுவப்பட்டீர்கள், நீங்கள் பரிசுத்தப்படுத்தப்பட்டீர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்பெயரால் நீங்கள் நியாயப்படுத்தப்பட்டீர்கள்" என்பதை நினைவில் வையுங்கள்.
உங்கள் பாவங்களுக்கு மாம்சத்தின் பலவீனமே காரணமாகும்.
மனந்திரும்புதலின் மூலம் நீங்கள் பாவத்தை வெல்ல முடியும்.
நாம் அனைவரும் பாவத்திற்கு அடிமைகள். ஆனால் பரிசுத்த ஆவியின் உதவியால் நாம் ஜெயிக்க முடியும். நாம் வெளியே வரவேண்டிய பாவம் என்ன என்பதைக் காட்டும்படி ஜெபியுங்கள், கடவுளிடம் கேளுங்கள். கொலை,கடத்தல் போன்ற மிகப் பெரியபாவம் செய்தால் தான் பாவம் என்று எண்ணாமல் பொய் சொல்வது, நம் பேச்சு (கெட்ட வார்த்தைகள், புறம்பேசுதல் ), நாம்கோபமாக இருக்கும் ஒருவரை சபிப்பது, ஒருவரிடம் கோபப்படுவது, பழைய மனக்கசப்பு வைத்திருப்பது போன்ற சிறியபழக்கங்களும் பாவங்கள் என்று அறியுங்கள். இவை நாம் முற்றிலும் புறக்கணிக்கும் பாவங்கள். இந்த பாவங்கள் உண்மையில்கடவுளுடனான நெருக்கத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன.
அந்த பாவத்தால் சாத்தான் நம்மை குருடராக வைத்திருப்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம், இவை பாவங்கள் இல்லை என்றுநம்மை நம்ப வைக்கிறான். ஆகவே, ஒவ்வொரு முறையும் நீங்கள் பேசும் விஷயங்கள் மற்றும் நீங்கள் எடுக்கும் செயல்கள்குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
நீங்கள் மனந்திரும்ப வேண்டிய இடத்தை கடவுள் உங்களுக்குக் காண்பிப்பார், உங்களை எவ்வாறு மாற்றுவது என்பது நம்கடவுளுக்குத் தெரியும். நீங்களே சரணடைந்து கடவுளிடம் கேளுங்கள், அவருடைய படைப்பின் படி நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதைப் போல அவர் உங்களை மாற்றுவார்.
Comments