நீங்கள் ஒரு உயரமான கட்டிடத்தைக் கண்டு, அதன் மேற்கூரை அல்லது உயரமான தளத்திற்குச் சென்று, அதன் சுற்றுப்புறத்தின் அற்புதமான காட்சியைப் பார்க்கும் பொழுது நீங்கள் வானத்தில் இருப்பது போல் உணர்வீர்கள். என்ன ஒரு உணர்வு!! ஆனால், பெரும்பாலும் நாம் அந்தகட்டிடத்திற்காக பொறியாளர்களால் போடப்பட்ட அஸ்திவாரத்தை மறந்துவிடுகிறோம். அந்த அஸ்திவாரத்தின் விளைவினால் தான் நாம் அங்கே நின்று அந்த காட்சிகளைக் கண்டு வியக்கிறோம். அந்த அஸ்திவாரம் மிகவும் வலுவானது / மிகவும் ஆழமானது. அது காற்று / மழை / பல சுமைகள்எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்கிறது.
அதுபோலவே, கிறிஸ்தவ வாழ்விலும், கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் தூணாகும். நான் மத்தேயு 7:24-27 ஐ தியானம் செய்தபோது ஆண்டவர் எனக்கு இதைக் கற்றுக்கொடுத்தார்.
'ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக்கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அதுவிழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்ததுஎன்றார். ‘ மத்தேயு 7:24-27
இங்கே, இயேசு வீடு கட்டும் ஒரு மனிதனின் ஒப்புமையுடன் பேசுகிறார். வெளிப்புறமாக இதைப் பார்த்தால் இது கற்பாறை மற்றும் மணலில் வீட்டைக் கட்டிய ஒரு மனிதனின் கதையைப் போன்று தோன்றும். ஆனால் நீங்கள் இந்த வார்த்தையை தியானிக்கும்போது, இயேசு போதித்த இந்த சிறிய கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பல பாடங்கள் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
ஒற்றுமைகள்
இயேசு சித்தரித்த - இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒரே செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் வீடு கட்டுகிறார்கள். அவர்கள் கட்டும் வீடுகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. நமக்குத் தெரிந்தபடி, வீடுகள் ஒரே மாதிரியாகத் தான் உள்ளன.
உண்மையான கிறிஸ்தவர்களான "கிறிஸ்துவில் வேரூன்றியவர்கள்" மற்றும் "பெயருக்காக கிறிஸ்தவர்கள்" என்ற இந்த இரண்டு வகையான கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். இன்று இதை நம் வாழ்க்கையில் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, சில நேரங்களில் வித்தியாசத்தை சொல்வது மிக கடினம். அவர்கள் இருவரும் தேவாலயத்திற்கு செல்கிறார்கள். இருவரும் ஒரே பிரசங்கங்களைக் கேட்கிறார்கள் அல்லது ஒரே வேதாகம வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலும், அவர்கள் இருவரும் தாங்களாகவே வேதாகமத்தைவாசித்துப் படிக்கிறார்கள். அதே ஜெபங்களில் அவர்கள் தலை வணங்குகிறார்கள். அவர்கள் அதே வழியில் ஜெபம் கூட சொல்கிறார்கள். அவர்கள் ஒரே மாதிரியான பேச்சை பேசுகிறார்கள். இயேசு சித்தரித்த கதையில் வெளியில் இருந்து பார்த்தால் இந்த இரண்டு வீடுகளும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
வேறுபாடுகள்
வித்தியாசம் உடனடியாகத் தெரியாது. ஆனால் வித்தியாசம் இருக்கிறது மற்றும் அது ஆழமானது!
இயேசுவின் ஒப்புமை விஷயத்தில், வீட்டின் அஸ்திபாரம் எங்கு இருக்கிறது என்பதில் வேறுபாடு காணப்படுகிறது. மேலோட்டமான மட்டத்தில் வீட்டைப் பார்த்தால் அது நீங்கள் அவசியம் பார்க்கக்கூடிய காரியம் ஒன்றும் அல்ல. வெளிப்புற தோற்றங்களில் வீடுகள் ஒரே மாதிரியாக இருக்கலாம்; ஏனெனில், ஒரு வீட்டைப் பார்க்கும் போது அதன் அஸ்திவாரத்தை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் வீட்டின் அஸ்திவாரத்தை நீங்கள் பார்த்தால் ஒருவனின் வீடு - அதாவது புத்திசாலி மனிதனுடையது கற்பாறையில் கட்டப்பட்டுள்ளதையும், மற்றொருவனின் வீடு - புத்தி இல்லாத மனிதனுடையது மணலில் கட்டப்பட்டு உள்ளதையும் அறியலாம்.
இதை இன்னும் ஆழமாய் தியானிக்கும் போது, புத்தி இல்லாத மனிதன் ஏன் வீட்டை மணலில் கட்டவேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், பலர் வாழ்வில் இது ஒரு நடைமுறை உண்மை.
தோற்றத்திற்காக ஒரு வீட்டை எழுப்புவதில் மட்டுமே அவர்கள் அக்கறை கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் (உலகப் பார்வையில் மட்டும் கிறிஸ்தவர்கள்). “இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிதல்” என்ற அஸ்திவாரம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் "வாழ்க்கையை" உருவாக்கியதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
ஒரு உண்மையான கிறிஸ்தவ நம்பிக்கை நீண்ட காலத்திற்கு அதன் நன்மைகளைக் காட்டும் ஒன்று என்பதை அவர்கள் உணரவில்லை.
தினமும் இயேசுவோடு நடக்கின்ற காரியம் அதில் உள்ளடங்கியிருப்பதை அவர்கள் உணரவில்லை, அதில் அவர் - அவருடைய காலத்திலும், அவரது வழியிலும் பிரச்சினைகளை கையாளுகிறார்.
அத்தகைய அஸ்திவாரம் அமைவதற்கு பலர் காத்திருக்க விரும்புவது இல்லை; ஏனென்றால், உண்மையான கிறிஸ்தவ விசுவாசம் என்பது, கர்த்தர் சொல்வதை நாம் செய்யும்போது, காத்திருக்கக் கற்றுக் கற்றுக்கொள்வதே ஆகும்.
ஒரு நல்ல அஸ்திவாரம் போடப்படும் போது, அது பாறைகள் / தேவையில்லாத மண் அழுக்குகளை அகற்றுதல் மற்றும் நிலத்தை சமன் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையின் அஸ்திவாரத்தை அமைக்க பலர் விரும்புவதில்லை, ஏனெனில் அதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது மற்றும் அவ்வாறு செய்ய அதிக நேரம் செலவு ஆகிறது.
மற்றொரு முக்கியமான காரணம், அவர்கள் இயேசுவின் போதனைகளை இயேசு இல்லாமல் பெற விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த "கிறிஸ்தவ" வாழ்க்கையின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்புகிறார்கள்; மற்றும் அவர்களின் வாழ்வின் முழுமையான கட்டுப்பாட்டை இயேசுவிடம் விட்டுவிட விரும்பவில்லை.
இன் முடிவுகள்
நாம் சோதனைகளை எதிர்கொள்ளும் போது அஸ்திவாரத்தின் பலன் வெளிப்படுகிறது.
அஸ்திவாரத்தின் உண்மையான தன்மையை நிரூபிக்க தேவன் விசுவாசியின் வாழ்க்கையில் சோதனைகள் வர அனுமதிக்கிறார். கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையில் நாம் பெரிதும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
'இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம்பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும்அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப்புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 1 பேதுரு 1:6-7
உலகம் வித்தியாசத்தைப் பார்க்கிறது. மேலும், நாமும் வித்தியாசத்தைக் காண முடியும். முடிவுகள் உண்மையிலேயே வியக்கத்தக்கது. மழை, வெள்ள நீர் மற்றும் காற்றின் சோதனைகள் மணலில் கட்டப்பட்ட வீட்டிற்கு எதிராகத் தாக்கும் போது வீடு விழுகிறது.
உங்கள் அஸ்திவாரம் மூன்று வழிகளில் சோதிக்கப்படும்:
1. இது சோதனை நேரத்தில் சோதிக்கப்படும்
2. தீர்ப்பு நாளில் அது சோதிக்கப்படும்
3. உங்கள் சொந்த சுய பரிசோதனை மூலம் இப்போதே சோதிக்க முடியும். நம் சுயத்தை சோதிக்க வேதாகமம் நம்மை அழைக்கிறது. பவுல் கூறுகிறார், 'இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத்தந்தவரும் அவரே. '2 கொரிந்தியர் 5:5
கிறிஸ்துவில் உள்ள அஸ்திவாரத்தை நீங்கள் எவ்வாறு சுய பரிசோதனை செய்து பலப்படுத்த முடியும்? இந்தக் கேள்விகளை உங்களைநீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
“என் அஸ்திவாரம் என்ன? என் வாழ்வு எதன் மீது கட்டப்பட்டுள்ளது? இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் என் நம்பிக்கை இருக்கிறதா? அது இப்பொழுதும் மற்றும் தொடர்ச்சியான வழியில் உள்ள எனது முக்கிய நம்பிக்கையா?
நான் என் வேதாகமத்தை எடுத்து, அதில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதை படிக்கும்போது, நான் அதை உண்மையாக செய்கிறேனா? ஒருவேளை நான் சில நேரங்களில் தோல்வியடையலாம்; ஆனால் பிறகு, நான் மீண்டும் எழுந்து அவருடைய மன்னிப்பு மற்றும் உதவியின் மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் கீழ்ப்படிதலில் முன்னோக்கி செல்கிறேனா?
சோதனைகள் என்னை வீழ்ச்சியடையச் செய்கிறதா?அல்லது கிறிஸ்து அளிக்கும் பெலத்தின் மூலம் நான் அவைகளில் இன்னும் வலுவாக நிற்கிறேனா? சிறிய விஷயங்களிலிருந்து நான் அதிகமாக விலகி, அவரிடம் திரும்புகிறேனா?"
நாம் செயல்பட ஒரு அழைப்பு
நம்முடைய வேர்களை / அஸ்திவாரங்களை வலுவாக்க நமக்கு இரண்டு அடிப்படை விஷயங்கள் உள்ளன. இது இயேசு விவரிக்கும் ஒரு எளிய அழைப்பு.
'ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன்வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். 'மத்தேயு 7:24
என்னுடைய வார்த்தைகள்
இயேசு கூறுகிறார், “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு,” இது இயேசுவிற்கு அவருடைய வார்த்தைகளுடனான (வேதாகமம்)முக்கிய உறவை எவ்வாறு காட்டுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த வார்த்தைகள் நமக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவை வலியுறுத்துகிறது.
இவைகளின்படி செய்கிறவன் எவனோ
இந்த வார்த்தைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும் " நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு."பின்னர் “இவைகளின்படி செய்கிறவன் எவனோ”. இதன் பொருள் (கேட்டு & கீழ்ப்படிதல்) இரண்டு பகுதிகளும் அவசியம் என்பதாகும்.
நீங்கள் அதைக் கடைப்பிடித்து உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். தேவனுடைய வார்த்தையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள உண்மை வெறுமனே "படிக்க" மட்டும் அல்ல. அது "நடைமுறையில்" இருக்க வேண்டும் மற்றும் " செயல்படுத்தப்பட வேண்டும்". அப்போஸ்தலர் யோவான் இவ்வாறு கூறினார், 'நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலேநடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். '1 யோவான் 1:6
Kommentarer