கொண்டாட்டங்களைப் பற்றி நினைக்கும் போது பிறந்த நாள், திருமண நாள், அன்னையர் தினம், தந்தையர் தினம், திருமணஆண்டுவிழாக்கள் போன்றவை நம் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை நாம் ஆவலுடன் எதிர்நோக்கிஇருக்கின்றோம். ஒரு சில கொண்டாட்டங்கள் நமது வாழ்வில் மைல் கல்லாக வாழ்நாள் முழுவதும் நினைவில்வைக்கப்படுகின்றன.
பைபிளில் ஒரு கொண்டாட்ட நாள் இருக்கிறது. அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
'இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். ' 1 தெசலோனிக்கேயர் 5:2
“கர்த்தருடைய நாள்”, ஆங்கில பைபிளில் 2 தெசலோனிக்கேயரின் அறிமுகத்தை நீங்கள் படித்தால் - “கர்த்தருடைய நாள்” என்பது எபிரேய தீர்க்கதரிசியின் ஒரு சொற்றொடராகும். இது ஆண்டவர் ஒவ்வொரு எதிரியின் மீதும் வெற்றியை விரிவாக்கி , அவருக்கு உண்மையுள்ளவர்களுக்கு வெகுமதி கிடைக்கும் நாள் என்று கூறப்படுகின்றது.
ஆண்டவர் ஒவ்வொரு எதிரியின் மீதும் வெற்றி கொள்ளும் நாளை ஒரு கொண்டாட்டத்தின் நாளாக நாம் பார்க்கவேண்டும். இந்த நாள் ஆண்டவரின் நியாயத்தீர்ப்பின் நாள். ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஆவலோடு எதிர் நோக்கும் நாளாக இந்த நாள் இருக்கவேண்டும். எப்படி மனிதனுக்கு ஒரு நாள் (பிறந்த நாள், திருமண நாள்..) உண்டோ, அது போல, கர்த்தருடைய நாள்ஆண்டவருக்கு உண்டான நாள். இந்த நாள் இந்த உலகத்தை நியாயம் தீர்க்கும் நாளாக இருக்கும்.
இது கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு அற்புதமான நாளாக இருக்கும். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் எப்போதுமேநியாயத்தீர்ப்பு நாள் என்பது ஒரு பயங்கரமான நாள் / பயத்துக்குரிய நாள் என்று கற்பனை பண்ணியுள்ளோம். ஆனால் நீங்கள்வார்த்தையை தியானித்து மேலும் புரிந்துகொள்ளும்போது, நம் அறிவுக்கு எட்டாத, கற்பனை செய்ய முடியாத / நாம் இதுவரைபார்த்திராத ஒரு நாளாக இது இருக்கும். அந்த நாளில் பல விஷயங்கள் நடக்கப்போகின்றன. பைபிளை ஆழமாகப்படிக்கும்போது அந்த நாள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சில முன்னோட்ட உருப்படிகள் பகிரப்படுகின்றன. இந்த"கர்த்தருடைய நாளில்"
ஆண்டவர் எனக்கு என்ன கற்பித்தார் என்பதையும், அந்த நாளை நாம் எவ்வாறு எதிர்நோக்க வேண்டும் என்பதையும் இந்தப்பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன்.
நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பார்க்கும் போது இது மிகவும்தெளிவாகத் தெரிகிறது. கொரோனா தொற்றுநோய் பல அலைகளுடன் (மார்ச் 2021 இல் அமெரிக்காவில் அதன் 4 வது அலைஎன்று அவர்கள் சொல்கிறார்கள்) உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு அலைக்குப் பின்னும் வாழ்க்கை சீர்குலைகின்றது. இன்னும் பல மரணங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
புவி வெப்பமடைதல் பிரச்சினைகள், உலகெங்கிலும் உள்ள மழை மற்றும் தீவிர வானிலை, நாம் சகித்துக்கொள்ளக்கூடியபாவத்தின் அளவு (குடி / சமூக கலாச்சாரம், ஒன்றாக வாழ்வது, ஒரே பாலினம், குடும்பத்தில் விவாகரத்து போன்றவை) மற்றும்இன்னும் பல நிகழ்வுகள் உண்மையிலேயே கடைசி நாட்களின் அறிகுறிகள்.
எனவே இந்த “கர்த்தருடைய நாளுக்காக” நாம் எவ்வாறு தயார் ஆக வேண்டும். இதற்கு நாம் மூன்று காரியங்களை புரிந்துகொள்ளவேண்டும்
அந்த நாள் எப்போது நடக்கும்?
அந்த நாள் எப்படி இருக்கும்?
அந்த நாளுக்கான ஏற்பாடுகள் என்னென்ன ?
1. அந்த நாள் எப்போது நடக்கும்?
பல கிறிஸ்தவ போதகர்கள் பிரசங்கிக்கிறார்கள். பல கிறிஸ்தவரல்லாத ஜோதிடர்கள் இந்த நாள் / நேரம் நடக்கும் என்றுகணிக்கிறார்கள். ஆனால் பைபிள் இதைப் பற்றி வேறுபட்ட விதத்தில் சொல்கிறது,
'அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும்அறியார்கள். 'மத்தேயு 24:36
'சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவுசடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. '
மத்தேயுவில் நாம் படித்தவாறு, அந்த நாள் அல்லது அந்த மணிநேரம் யாருக்கும் தெரியாது, “என் பிதா ஒருவர் தவிரமற்றொருவனும் அறியான் என்று வேதம் கூறுகின்றது” .ஆகவே யார் இதைக் குறித்து நேரம் / காலம் கூறினால்தயவுசெய்து நம்ப வேண்டாம்.
1 தெசலோனிக்கேயர் 5:2 - 'இரவிலே திருடன் வருகிறவிதமாய்க்” திருட வருவதற்கு முன்பு எந்தத் திருடனும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. இவை அனைத்தும் எதிர்பாராததாகஇருக்கும்.
நம்மிடம் உள்ள உலக பொருட்களை நாம் நம்பியிருக்கும் போது , “சமாதானமும் சவுக்கியமும் ” இருப்பதாகஉணரும்போது, அந்த நாள் ஒரு அழிவு நாளாக திடீரென வரும்.
"கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல" (இது பிரசவ வலி) என்று அந்த நாள் விவரிக்கப்பட்டுள்ளது. பவுல்வேறு ஏதேனும் ஒரு வலியை (கால் வலி / முதுகெலும்பு வலி அல்லது வேறு எந்த வடிவத்தையும்) பயன்படுத்தியிருக்கமுடியும். பிரசவ வலி ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று சிந்தியுங்கள். அனைத்து வலியிலும் மிகவும் கடுமையான / கொடுமையான வலி - பிரசவ வலி . ஆண்டவர் ஏவாளுக்கு அளித்த சாபத்தின் நிமித்தம் இது நமக்கு வந்தது என்று நாம் ஆதியாகமத்தில் படிக்கின்றோம்.
வழக்கமான பிரசவ வலி , 4 மணி முதல் 8 மணி வரை நீடிக்கும் . வேதம் கூறுகிறது, 'உமது பார்வைக்கு ஆயிரம்வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. சங்கீதம் 90:4
எனவே நம் பார்வையில் 4 மணிநேரம் சீக்கிரம் முடிந்துவிடும் என்று நினைப்போம். ஆனால், ஆண்டவரின் பார்வையில்இது இன்னும் பல நாட்கள் / வருடங்கள் ஆகும். இந்த நேரம் என்று யாருக்கும் தெரியாது. நம்மைச் சுற்றியுள்ளஅறிகுறிகள் பலவற்றைக் கொண்டு நாம் அவருடைய வருகை சமீபம் என்று அறிகின்றோம்.
நாம் அனுபவிக்கும் அனைத்து போராட்டங்களையும் (கொரோனா தொற்றுநோய் மற்றும் உலகில் உள்ள அனைத்துகொந்தளிப்புகளையும்) பிரசவ வலியைப் போன்று எண்ண வேண்டும். இவை அனைத்தும் கர்த்தருடைய நாளின்அறிகுறிகள் என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பிரசவ வலிக்குப் பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது. தாய் எல்லா வலிகளையும் மறந்து, வெளியே வந்த குழந்தையை நேசிக்கிறார். இதேபோல் அந்த நாள் கடந்துவிட்டால், நாம் அனைவரும் இறைவன் படைத்த மகிமைக்குத்திரும்புவோம்.
2. அந்த நாள் எப்படி இருக்கும்?
இரண்டு சூழலில் அந்த நாள் இருக்கும் - கொண்டாட்ட சூழலில் ஒன்று
'ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்துஇறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும்கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய்எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ' 1 தெசலோனிக்கேயர் 4:16-17
ஆண்டவர் நம் அனைவரையும் ஆரவாரங்களின் உரத்த குரலில் சந்திக்கும் ஒரு கொண்டாட்ட நாளாகஇருக்கப்போகிறது. அந்த நாளில், நாம் உயிருடன் இருந்தால், ஆண்டவரை சந்திக்க மேகங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவோம். இறந்த அனைத்து ஆத்துமாக்களும் முதலில் எழுவார்கள்.
அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதை நான், ஒரு விமானத்தில் பறக்கும் அனுபவத்தைப்போல கற்பனை செய்து பார்த்தேன். விமானம் பறந்து செல்லும் போது வெள்ளை மேகங்களைக் காண்கிறோம். ஜன்னல் இருக்கையில் இருந்து பார்த்தால் இது ஒரு விசித்திர தருணம் என்று உணருவோம்.
இறந்தவர்கள் எழுப்பப்பட்டு, நம் முன்னோர்கள் அனைவரையும் சந்திக்க இது ஒரு அற்புதமான தருணமாக இருக்கும். உங்கள் தாத்தா / பாட்டி அல்லது உங்களிடமிருந்து புறப்பட்ட உங்கள் அன்புக்குரியவர்களில் யாரையும் சந்திக்கப்போகிறோம் என்ற எண்ணத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு அற்புதமான தருணமாக இருக்கும்.
அந்த நாள் கொண்டாட்டங்களுடன் இருக்கப்போகிறது. அந்த சத்தம் கேட்கும்போது அது ஒரு நெருப்பு சைரன்என்று நாம் எப்போதும் நினைப்போம். நாம் அனைவரும் நிச்சயம் அனுபவிக்கும் ஒரு சத்தமாக நம் ஆண்டவர் நமக்குவழங்குவார். நம்முடைய ஆண்டவர் தம்முடைய சொர்க்கத்திற்கு நம்மை வரவேற்கிறார். அவர் நமக்கு ஒரு துக்கஒலியை வைக்க மாட்டார். அந்த சத்தம் அவருடைய அரவணைப்பை நமக்கு உணர்த்தும் ஒரு சத்தமாக இருக்கும்என்று நான் நம்புகிறேன்.
இரண்டு சூழலில் அந்த நாள் இருக்கும் - தண்டனை சூழலில் இன்னொன்று
'கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், '2 தெசலோனிக்கேயர் 1:8-9
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை அறியாதவர்களுக்கு தண்டனை உண்டு.
நற்செய்தியைக் (“பைபிள்”) கடைப்பிடிக்காத ஒருவருக்கு தண்டனை உண்டு.
நீங்கள் உங்களை கிறிஸ்தவர் என்று அழைத்தால், ஏசு மெய்யான தேவன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும், மேலும் இந்த தண்டனையைத் தவிர்க்கக்கூடிய ஆண்டவரின் வார்த்தையை (பைபிள்) நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
3. அந்த நாளுக்கான ஏற்பாடுகள் என்னென்ன?
ஒரு திருமண நாளுக்காக, அந்த விசேஷ தினத்தைக் கொண்டாடவும், அந்த நாளை மறக்கமுடியாத நாளாகவும் மாற்ற நாம் பல திட்டங்களை, காரியங்களை வகைசெய்கிறோம். அதேபோல் அந்த நாளில் (நியாயத்தீர்ப்பின் ) நாம் ஆச்சரியப்படாமல்இருக்க, அந்த நாளுக்காக நாம் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும் என்று நம் தேவன் எதிர்பார்க்கிறார்.
1. விழித்திருப்போம்
'ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின்நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். ' 1 தெசலோனிக்கேயர் 5:6-8
மேலே உள்ள இந்த வசனம் ஆன்மீக தூக்கமின்மையைக் குறிக்கிறது.
நம்முடைய ஆன்மீக நிலையை ஒருபோதும் தூக்கத்தால் நிறைந்து காணப்படக் கூடாது. ஆன்மீக ரீதியில் நாம்சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். எப்பொழுதும் நிதானமாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் வயிறு உணவில் நிறைந்திருக்கும் போது அல்லது நீங்கள் குடிபோதையில் இருக்கும்போது தான் நீங்கள்தூங்குவீர்கள்.
நாம் உணரமுடியாத அல்லது செயலற்ற நிலையில் இருக்கும்போது அல்லது கடவுளுடைய வார்த்தையைப்புறக்கணித்து, பாவமான உலக வாழ்க்கையை வாழும்போது, பாவத்தை லேசாக எடுத்துக் கொள்ளும்போது, ஆன்மீக உலகில் நாம் தூங்கும் நிலையில் உள்ளோம்.
ஆன்மீக ரீதியில் தூக்கம் வராமல் தடுப்பது எப்படி, “விசுவாசம், அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின்நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்”
தம்முடைய பிள்ளைகள் கடவுளின் கோபத்தை அனுபவிப்பதை கடவுள் விரும்புவதில்லை, 1 தெசலோனிக்கேயர் 5: 9-ல், யாரும் அழிந்துபோகாதபடி அவர் எல்லா மக்களுக்காகவும் இறக்கும்படி அவரை இந்த உலகிற்குத் தந்தார்என்று பவுல் கூறுகிறார்.
2. சந்தோஷம் & ஜெபம்
'எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. ' 1 தெசலோனிக்கேயர்5:16-18
எப்போதும் (நம் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலையிலும் ) தேவனுக்கு நன்றி ஜெபத்தை ஏறெடுக்கும்படி அவர்நம்மை அறிவுறுத்துகிறார்.
அநேக நேரங்களில், சூழ்நிலைகள் நம்மைக் கவலையுடனும், பதட்டத்துடனும் ஆக்குவதால் நாம் குழப்பத்துடன்காணப்படுகின்றோம். இது சாத்தான் செய்யும் தடுப்பு முயற்சிகள். நீங்கள் சோர்ந்து இருக்கும் போது எல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபம் செய்யுங்கள். அவர் நம்முடைய பலவீனத்தில் நம்முடைய பெலனாய் இருக்கிறார்.
3. நல்லதை சோதித்துப் பிடித்து மீதமுள்ளவற்றை நிராகரிக்கவும்
'ஆவியை அவித்துப்போடாதிருங்கள். தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும்சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும்விட்டுவிலகுங்கள். ' 1 தெசலோனிக்கேயர் 5:19-22
ஆண்டவருடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படி கேளுங்கள். ஒவ்வொரு நாளும் ஆவியால் வழிநடத்தப்படவேண்டும் என்று ஜெபியுங்கள்.
ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் இருக்கும் இடத்தில் ஒருபோதும் திருப்தி அடைய வேண்டாம். ''ஆவியைஅவித்துப்போடாதிருங்கள்.” தாகமுள்ள ஒருவர் எப்படி தண்ணீரைக் கேட்பார். அது போல, அவருடைய பரிசுத்தஆவியைத் தேடவும். அவர் நம்மை வழிநடத்துவார் .
நீங்கள் பார்க்கும் / மற்றும் கேட்கும் எல்லா கடவுளின் வார்த்தையையும் சோதித்துப் பாருங்கள், நீங்கள் படிக்கும் இந்த் வார்த்தை கூட சோதித்து கடவுளின் சரியான வார்த்தையா என்று ஆராய்ந்து பாருங்கள் .
நிறைய தவறான உபதேசிகள் உள்ளனர். கடவுளின் பரிசுத்தாவியால் வழிநடத்தக் கேளுங்கள். அந்தபோதனைகள் கடவுளிடமிருந்து வந்ததா அல்லது சாத்தானிடமிருந்து வந்ததா என்று சோதித்துப் பார்க்கவும். சாத்தானிடத்தில் இருந்து வரும் வார்த்தை சத்தியத்திற்கு மாறாக இருக்கும். தேவனின் சிலுவைக்கு எதிரியாகஇருக்கும்.
உங்கள் ஆன்மாவை / சரீரத்தைக் குற்றமற்று வைத்திருங்கள்.
உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர், அதைச் செய்வார். 'உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 1 தெசலோனிக்கேயர் 5:24
4. உலகின் முனைகளுக்கு அவருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ளுங்கள்
'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனைஅடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவேஅவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ' யோவான் 3:16-18
யாரும் அழிந்து போவதை கடவுள் விரும்புவதில்லை “'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனைவிசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு”…” தேவனுடையஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று”
ஒவ்வொருவரும் அவரை விசுவாசிப்பது முக்கியம். கிறிஸ்துவை அறியாத மற்றும் கடவுள்மீது நம்பிக்கை இல்லாதநிறைய பேர் இன்னும் நம்மில் உள்ளனர்.
கிறிஸ்துவை அறிந்த கிறிஸ்தவர்களாகிய நாம், அவனுடைய வார்த்தையைப் ஆண்டவரை அறியாத மக்களுக்கு நாம் எடுத்துக்கூற கடமைப்பற்றுகிறோம்
நாம் அழிந்துபோக இயேசு சிலுவையில் மரிக்கவில்லை. நாம் மீட்கப்படுவதற்கும், அவருடன் மகிமையில்இருப்பதற்கும் அவர் நமக்காக சிலுவையை ஜெயித்தார் .
எனவே நாம் அனைவரும் கர்த்தருடைய நாளுக்காக நம்மைத் தயார் செய்வோம்
'சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள்அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே, '1 தெசலோனிக்கேயர் 5:4
நம் ஆண்டவர் வரும் போது ஆச்சரியத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. நாம் அனைவரும் அந்த நாளை ஆவலுடன்எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.
நாம் யாவரும் வெளிச்சத்தில் நடப்போம். நாம் அனுதினமும் ஆண்டவரிடம் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவி நம்மை ஆன்மீக தூக்கமின்மையையில் இருந்து ஆண்டவர் காத்துக்கொள்வர்
コメント