பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்காக நம் அனைவருக்கும் கிருபை தேவனால் வழங்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். கிருபை இல்லாவிட்டால், நாம் செய்யும் காரியங்களை வைத்து தேவன் நம்மை நீண்ட காலத்திற்கு முன்பே அழித்திருப்பார். சில சமயங்களில் நம்முடைய செயல்களால் தேவனை வெட்கப்படுத்துகிறோம். அப்படி இருந்தும் அவர் நம் மேல் பொறுமையாய் இருந்து நாம் மனந்திரும்பி அவரிடம் திரும்பி வர வேண்டும் என்று கிருபையை நமக்குக் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
நமக்கு வழங்கப்பட்ட இந்த கிருபையை நாம் தவறாகப் பயன்படுத்தி கிருபை துஷ்பிரயோகம் செய்கிறோம். தேவன் இதைக் குறித்து என்னோடு பேசியதாவது,
'ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடையகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்தஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. 'யூதா 1:4
பண்டைய காலத்தில், நம்முடைய ஒழுங்கு முறையை / வேத வரையறையைக் கடைப்பிடிக்காவிட்டால் அது பாவம் என்று கருதினோம். கொஞ்சம் கொஞ்சமாக நாம் அவ்வாறு வாழுவதற்கு வெட்கமின்றி, மனசாட்சி / ஒழுக்க உணர்வு இல்லாமல் இந்த பாவ வாழ்க்கையை ஒரு சாதாரணமான வாழ்வு என்று நம்மை தேற்றிக்கொண்டு இன்னும் மோசமான் பாவம் தான் பாவம் என்று கருதினோம்.இதன் மூலம் பாவம் பெருகிக் கொண்டு இருக்கிறது.
இந்தக் காலத்தில் நாம் செய்யும் பல பாவங்களை ஒரு தலைமுறை முன்பு செய்வதற்கோ,கேட்பதற்கோ கொஞ்சம் கூட இடம் கொடுத்து இருக்க மாட்டோம். இது தான் கிருபையை துஷ்பிரயோகம் செய்வது.
இந்தக் கிருபை துஷ்பிரயோகம் குறித்து 2 உதாரணங்களைக் காண்போம். இதன் மூலம் உங்களுக்கு இன்னும் தெளிவாகப் புரியும்.
எடுத்துக்காட்டு 1 - குடி/மது அருந்துதல் முதலில் ஒரு ஒயின் மூலம் தொடங்குகிறது. மெதுவாக இந்த ஒயின் குடிக்கும் பழக்கம் ஒரு கிளாஸ் பீர் குடித்தால் ஒன்றும் இல்லை என்று மாறும். இன்னும் கொஞ்ச காலம் கழித்து ஒரு கிளாஸ் பீர் என்பது ஒரு பாட்டில் ஆக மாறும். அதுவே பின்னர் ஒரு பார்ட்டி / ஒரு நட்பில் சேர்வதற்கு குடிக்கும் பழக்கமாக மாறும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்பது போய், ஒவ்வொரு வாரமும் குடிக்கும் பழக்கம் வரும். இதில் பீர் குடிப்பது ஒன்றும் இல்லை, இதற்கு பதில் ஒரு கிளாஸ் விஸ்கி / பிராந்தி குடித்தால் ஒன்றும் இல்லை என்று மனம் சொல்லும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கம் ஒரு முழு நேர குடி போதைக்கு அடிமை ஆக்கி மனிதனை அழித்து விடுகிறது.
இன்றைய உலகில் நீங்கள் குடிக்காவிட்டால், உங்களிடம் ஏதோ தவறு இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். பழைய தலைமுறையில் நீங்கள் குடித்தால் அது மிகப்பெரிய பாவமாக கருதப்பட்டது. ஆனால் இன்றைய கலாச்சாரத்தில் குடிப்பது சாதாரணமான ஒரு செயல். இன்று பல பெண்கள் குடி பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளனர்.
தேவனின் கிருபை ஒருவருக்கு முதல் கிளாஸ் ஒயின் குடிக்க ஆரம்பிக்கும் போதே இருக்கும். ஆனால் இந்த கிருபையை நாம் பெரிதுபடுத்தாமல் கிருபையை துஷ்பிரயோகம் செய்வதால், இந்தப் பழக்கம் நம்மைப் பாவ சேற்றுக்குள் கொண்டு செல்லுகிறது.
எடுத்துக்காட்டு 2 - இது சோதோம் மற்றும் கொமோரா பற்றிய உதாரணம். இந்த இரட்டை நகரங்களில் பாலியல் முறைகேடு மிகவும்மோசமாக இருந்தது. அதனால், தேவனுடைய கோபாக்கினை அவர்கள் மேல் வந்தது.
இதை நன்கு புரிந்து கொள்ள ஆதியாகமம் 19 முழு அதிகாரத்தையும் படிக்க வேண்டும். நான் முக்கிய விஷயங்களை மட்டும் இங்கே கோடிட்டுக் காட்டி உள்ளேன்.
சோதோம் மற்றும் கொமோராவின் ஆண்கள் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்தனர். தேவன் அந்த இரட்டை நகரங்களை அழிப்பதற்கு இதுவே முதன்மைக் காரணம்.
வேதம் ஓரினச்சேர்க்கையை ஒழுக்கக்கேடான மற்றும் இயற்கைக்கு மாறான பாவம் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் கண்டிக்கிறது (லேவியராகமம் 18:22; 20:13; 1 கொரிந்தியர் 6: 9). கற்பழிப்பையும் பைபிள் கடுமையாகக் கண்டிக்கிறது (உபாகமம் 22: 25-27).
தேவனின் கிருபை சோதோம் மற்றும் கொமோராவிற்கு இருந்தது. அவர் ஆபிரகாம் பிரார்த்தனைகளுக்கு இவ்வாறு பதிலளிக்கிறார், 'அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். ' ஆதியாகமம் 18:26
தேவன் எப்படிக் கோபப்படுகிறார் என்பதையும், ஆபிரகாம் எவ்வாறு தேவனிடம் மன்றாடுகிறார் என்பதையும் உங்களுக்குப் புரியவைக்க, கீழேயுள்ள வசனங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். இன்னும் நன்கு புரிந்து கொள்ள ஆதியாகமம் 18 மற்றும் 19 ஐ முழுமையாகப் படியுங்கள்.
'பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும்கொடிதாயிருப்பதினாலும், அப்பொழுது ஆபிரகாம்சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம்இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். ' ஆதியாகமம் 18:20,23-24,26
தேவன் இரண்டு தேவதூதர்களை மனிதர்களாக அனுப்புகிறார் - சோதோம் மற்றும் கொமோராவின் ஆண்கள், ஆண்களாக மாறுவேடமிட்டுள்ள இந்த இரண்டு தேவதூதர்கள் மீது ஓரினச்சேர்க்கை கற்பழிப்பு செய்ய விரும்பினர்.
இந்த பாவத்தின் நிமித்தம், தேவனுடைய கோபாக்கினை எவ்வளவு கோரமாக இருந்தது என்பதைக் குறித்து வேதம் கூறுவதாவது, 'அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். ' ஆதியாகமம் 19:24-25
தேவன் இரக்கமுள்ள தேவன். ஆபிரகாமின் ஜெபங்கள் மற்றும் வேண்டுகோளின் (ஆதியாகமம் 18: 16-33) காரணமாக, இந்தக் கோபத்தில் இருந்து, லோத் (ஆபிரகாமின் மருமகன்) காப்பாற்றப்பட்டார்.
கிருபை துஷ்பிரயோகம் குறித்த எச்சரிக்கை அறிகுறிகள்
தேவபக்தியற்ற மக்கள் உடனான உறவு - நம்முடைய நண்பர்கள் நம் நல்ல / கெட்ட பழக்கங்களை தீர்மானிக்கும் நபர்களாக இருக்கிறார்கள். அநேக நேரம் மற்றவர் செய்வதை நம்மை நாமே அறியாது அதைப் பின்பற்ற தொடங்குவோம். ஒருவேளை உங்கள் நண்பர் அல்லது உங்களுடன் சக வேலை பார்ப்பவர் கெட்ட காரியங்களைப் பேசுவார் என்றால் அவரிடம் இருக்கும் நட்பைத் தள்ளி வைத்துப் பழகுங்கள்.
'கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்றுஉங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. ' யூதா1:18-19
முணுமுணுத்தல் – தேவன் நமக்கு எவ்வளவு கொடுத்தாலும் நாம் அவருக்கு எதிராக முணுமுணுக்கிறோம். வாழ்க்கையில் அவர் நமக்குக் கொடுத்த பல விஷயங்களை நாம் மதிப்பதில்லை. நம்மிடம் இல்லாத விஷயங்களைத் தேடுகிறோம். எனக்கு அது வேண்டும், எனக்கு அது நல்லது என்று நினைக்கிறோம். எப்போதும் நமக்கு ஆசிர்வாதம் கூடிக் கொண்டே இருக்க வேண்டும், என்று எண்ணுகிறோம். இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் பாலைவனத்தில் சிறந்த உணவு / உடை மற்றும் தங்குமிடம் கொடுத்த போதிலும் இஸ்ரவேல் மக்கள் கடவுளிடம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்கள். பல நேரங்களில் நாமும் அவர்களைப் போன்று தான் வாழ்கிறோம். தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை நம் கண்கள் பார்ப்பதில்லை, மாறாக நாம் தேவனுக்கு எதிராக முணுமுணுக்கிறோம்.
புலம்புகிறவர்கள் - நம்மில் பலர் தேவனிடம் புலம்புகிறோம். நம்முடைய முணுமுணுப்பு புகார்களாக மாறுகிறது. ஒரு பக்தர் இவ்வாறு கூறினார், “புலம்பல்கள் என்பது நமக்கு எல்லாவற்றையும் கொடுத்த தேவனை அவமதிப்பதாகும்; நமக்கு என்ன நேர்ந்தாலும், அவருடைய அன்பிலிருந்து எதுவுமே நம்மைப் பிரிக்க முடியாது. நம் வாழ்வில் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து நம்மைப் பறிக்க முடியாது என்பதை மறந்து விடுவது போலாகும்.”
புகழ்ச்சி செய்யும் மக்கள் - நம்மில் பலர் இதை நம் வாழ்க்கையில் அனுபவித்து இருப்போம். மற்றவர்களிடம் இருந்து ஒரு நன்மையைப் பெற மென்மையான, புகழ்ச்சி வாய்ந்த சொற்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது சிலருக்குத் தெரியும். ஒரு நன்மையைப் பெற அவர்கள் எதையும் நல்லது அல்லது கெட்டது என்று சொல்வார்கள்.
கேலி செய்பவர்கள் - தங்கள் தேவபக்தியற்ற காமங்களின்படி நடப்பவர்கள்: தங்கள் தேவபக்தியற்ற காமங்களின்படி வாழ்பவர்கள் தேவனுடைய பிள்ளைகளை கேலி செய்ய விரும்புவார்கள். கிறிஸ்தவர்கள் இந்த வகையான கேலிகளை எதிர்பார்த்திருக்க வேண்டும், எனவே அவர்கள் அதைக் கண்டு ஆச்சரியப்படக் கூடாது என்று யோவான் கூறுகிறார். இவை அனைத்தும் தங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றினால் மட்டுமே நடக்கும். “'இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. ' யூதா 1:19
இந்தப் பழக்கங்களை நாம் பெற்றவுடன், பாவங்களுக்கு அடிமைகளாக மாறிவிடுகிறோம். தேவனுடைய கிருபையை மறந்து இன்னும் அநேக பாவங்களைப் பண்ணி கிருபையை துஷ்பிரயோகம் செய்கிறோம்.
இந்த கிருபை துஷ்பிரயோகத்தில் இருந்து எவ்வாறு காத்துக் கொள்வது?
உள்நோக்கிப் பாருங்கள்
'நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். ' யூதா 1:20-21
உள்நோக்கிப் பார்க்க யோவான் கற்றுக் கொடுக்கும் காரியங்கள்
1. தேவனின் அன்பில் நிலைத்து இருங்கள்: தேவபக்தியற்றவர்களைக் கூட கடவுள் நேசிக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆண்டவர் நம் கஷ்டங்களை கவனிப்பதில்லை என்ற பொய்யை சாத்தான் கொண்டு வந்து பிரிப்பான். 'அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். ' ரோமர் 5:6
2. உங்களை பரிசுத்த நம்பிக்கையில் வளர்த்துக் கொள்ளுங்கள்: தேவனின் அன்பில் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள இது ஒரு வழி. ஆவிக்குரிய ரீதியில் தொடர்ந்து வளர தேவனின் மீதான நம்பிக்கை / விசுவாசம் ஒரு அச்சாணி போன்றது. யோவான் நமக்கு சொல்கிறார்,
'நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, ' யூதா 1:20
3. பரிசுத்த ஆவியானவரில் ஜெபம் செய்வது: தேவனின் அன்பில் நம்மை வைத்திருக்க இது மற்றொரு வழி. தவறான வாழ்க்கை மற்றும் தவறான போதனைக்கு எதிரான ஆவிக்குரிய போரில் பரிசுத்த ஆவி நம்மை காக்கும். இதற்கு நாம் அனுதினமும் அவருடைய பரிசுத்த ஆவியை சார்ந்து இருக்க வேண்டும்.
வெளிநோக்கி பார்க்க யோவான் கற்றுக் கொடுக்கும் காரியங்கள்
'நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம்பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள். ' யூதா 1:20,22-23
1. இரக்கமுள்ளவராக இருங்கள்: இந்த குறிப்பிட்ட மனிதர்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோவான் சொல்லத் தொடங்குகிறார். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒரு நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். “சிலருக்கு இரக்கம்பாராட்டி”
2. பயத்துடன் மற்றவர்களைக் காப்பாற்றுவது: இந்த மக்களை இன்னும் வலுவாக எதிர்கொள்ள வேண்டும் - ஆனால், ஒரு புனிதமான மேன்மையோடு அல்ல பயத்தோடு எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களை நெருப்பிலிருந்து வெளியேற்ற வேண்டியிருக்கலாம். ஆனால், அதை ஒருபோதும் பெருமையுடன் செய்ய வேண்டாம். தேவனின் ஆவியின் வழிகாட்டுதலுடன் அதைச் செய்யுங்கள் “சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்
Bình luận