top of page
Kirupakaran

குருடரும் செவிடரும்


பெரும்பாலும் நாம் கேட்க விரும்புவதை மட்டுமே கேட்கிறோம், மற்றவற்றைப் புறக்கணிக்கிறோம். இதேபோல், நாம் பார்க்க வேண்டியதை மட்டுமே பார்க்கிறோம், மற்ற விவரங்களை கவனிக்காமல் விடுகிறோம்; இது மனித இயல்பு. வீட்டிலிருந்து வேலைக்கு சென்றபோது, என்னவெல்லாம் கடந்து சென்றீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் - நீங்கள் பார்த்த அனைத்தும் உங்களுக்கு நினைவில் இருப்பதில்லை. மேலும், உங்கள் மனம் போக்குவரத்து சிக்னலில் கவனமாக இருக்கும் போது அருகில் நிற்கும் பிச்சைக்காரனின் குரல் உங்களுக்கு கேட்பதில்லை. அதே கோட்பாடு நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் பொருந்தும். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; கண் உள்ளவன் காணக்கடவன் என்று தேவன் கூறுகிறார்.

 

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ... ". வெளிப்படுத்தின விசேஷம் 2:7. இந்த வசனம் வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு சபைகளுக்கும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது.

 

வெளிப்படுத்தின விசேஷம் என்றால் என்ன?

சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். வெளிப்படுத்தின விசேஷம் 1:1-2

  • இந்த வெளிப்படுத்தல் புத்தகம் இயேசு கிறிஸ்துவிடமிருந்து வந்தது. இது என்ன சம்பவிக்கப்போகிறது என்பதை தம் ஊழியர்களுக்குக் காட்டுவதற்காக பிதாவாகிய தேவனால் கொடுக்கப்பட்டது.

  • இந்தப் புத்தகம் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்ட அனைத்து மக்களுக்குமானது.

  • இந்த சாட்சி யோவானுக்கு ஒரு தேவதூதன் கூறியது - தான் கண்ட ஒவ்வொரு காரியத்தையும் அதாவது இயேசு கிறிஸ்துவின் வார்த்தையையும் சாட்சியையும் குறித்து சாட்சியமளித்தார்.

  • இந்தப் புத்தகம் அடிமை மனப்பான்மை கொண்ட யாவருக்குமானது,  அவர்களுக்கு இது ஒரு ஆழ்ந்த அறிவைத் தருகிறது. நீங்கள் இயேசுவின் அடிமையாக இருந்தாலோ, அவரிடம் எதையும் கோராமல் அவருக்கு உங்களை முழுமையாகக் கொடுத்திருந்தாலோ மட்டுமே இந்தப் புத்தகத்தைப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் அவருடையவர்களாக இருந்தால், அவர் உங்களுக்குச் எதையும் செய்தாலும் செய்யாவிட்டாலும், நீங்கள் வேண்டுமென்று கோர மாட்டீர்கள். 

  • இது நம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு அழைப்பு. நான் ஏற்கனவே ஆவிக்குரியவன் / தேவாலயத்திற்குச் செல்பவன் / தாராளமாகக் கொடுப்பவன் / நல்ல ஜெபவீரன் / ஞானஸ்நானம் பெற்றவன் / அந்நியபாஷை பேசுபவன் / பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவன் / ஒரு போதகர் / ஞாயிறு பள்ளி ஆசிரியர் / ஊழியக்காரன் / களப்பணியாளர் / இளம் கிறிஸ்தவன் என்று நீங்கள் கூறலாம். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், இது நமக்கான ஒரு விழிப்புணர்வு அழைப்பு (என்னையும் சேர்த்து). இந்தச் செய்தியைக் கேட்க தேவன் உங்கள் காதுகளைத் திறக்கும்படி அவரிடம் ஜெபியுங்கள்.

 

வெளிப்படுத்தின விசேஷம் உறுதியளிக்கும் ஆசீர்வாதங்கள் யாவை?

இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 1:3

  • இங்கே ஒரு சிறப்பு ஆசீர்வாதம் வாக்குப்பண்ணப்பட்டுள்ளது - “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும்... பாக்கியவான்கள்…".

  • நீங்கள் சத்தமாக வாசிக்கும்போது, ​​வார்த்தை உங்கள் காதுகளுக்குள் சென்று இருதயத்தை நனைக்கிறது. வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும். யோபு 34:3

  • கிறிஸ்தவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிப்பதை பிசாசு ஏன் விரும்பவில்லை என்பதை இப்போது காண்கிறீர்கள். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்தப் புத்தகத்தைப் புறக்கணிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் இதை ஒரு ஊழியனின் மனப்பான்மையிலிருந்து படிக்காததால் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

  • கீழ்ப்படிபவர்களுக்கே ஆசீர்வாதம் வருகிறது. இந்தப் புத்தகத்தில் உள்ள எல்லா தீர்க்கதரிசனங்களையும் நீங்கள் புரிந்து கொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, இதில் சொல்லப்பட்டுள்ள கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் மட்டுமே ஆசீர்வாதம் உண்டாகும்.

 

இயேசு கிறிஸ்து யார்?

உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1:5-6

  • இயேசு கிறிஸ்து நமக்கு யார்? “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும்…”

  • அவர் நம்முடைய உண்மையுள்ள சாட்சி - நம்முடைய விசுவாசம் அவரிடமிருந்து வருகிறது.

  • அவர் மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர் - அவர் உயிர்த்தெழுந்த இராஜா.

  • அவர் பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி - அவர் பூமியிலும் பரலோகத்திலும் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கிறார்.

  • நாம் அவரை விசுவாசிப்பதற்கு கர்த்தராகிய இயேசு நமக்காக என்ன செய்தார்? “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக...” வசனம் 6.

  • நாம் அவரில் அன்புகூராமல் இருந்த போது அவர் நம் மேல் அன்புகூர்ந்தார் - நம்மிடத்தில் அன்புகூர்ந்து

  • பாவத்தின் அடிமைத்தனம் அவருடைய இரத்தத்தால் விடுவிக்கப்பட்டது - தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி

  • அவருடைய ராஜ்யத்திற்கு மீட்டுக் கொண்டார் - இரண்டு ராஜ்யங்கள் உள்ளன (தேவனுக்கு ஒன்று, சாத்தானுக்கு ஒன்று). - இங்கே அவர் தம்முடைய  இரத்தத்தால் தேவனின் ராஜ்யத்திற்கு நம்மை மீட்டுக் கொண்டதைக் குறிப்பிடுகிறார் -  நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின.

  • நம்மை பிச்சைக்காரரிலிருந்து போதகராக்கி, பிதாவாகிய தேவனுக்கு  போதகராக ஊழியம் செய்ய வைத்தார் - பிரதான ஆசாரியர் மட்டுமே பிதாவாகிய தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும்,  மீட்பின் ஒரே நோக்கம் பிதாவாகிய தேவனுக்கு ஊழியம் செய்வதே – …தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின…

வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு சபை செய்தி

கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 1:10

அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. வெளிப்படுத்தின விசேஷம் 1:11

  • ஆவியில் மட்டுமே தேவன் வெளிப்படுத்தும் விஷயங்களைப் பற்றி நாம் புரிந்துகொள்ள முடியும். நாம் ஆவியில் இருக்கும்போது, ​​அவரது சத்தம் எக்காளத்தைப் போல உரத்த சத்தமாகவும் தெளிவாகவும் ஒலிக்கும்.

  • வானொலியில் சத்தத்தைக் கேட்க தக்கவாறு சரிப்படுத்துவது போல, அவரது சத்தத்தைக் கேட்பதற்கு நம் இருதயம் தேவனுடனும் மனிதர்களுடனும் தெளிவான மனசாட்சியுடன் இருக்க வேண்டும்.

  • வெளிப்படுத்துதலில் முதல் 3 அதிகாரங்களில், அவர் ஏழு சபைகளோடு பேசுகிறார்.

  • இந்த வார்த்தைகள் சபைகளுக்கு எழுதப்பட்டிருப்பதால், இது சிலருக்கானது என்று தயவுசெய்து புறக்கணிக்காதீர்கள்.

  • சபையில் நீங்களும் நானும் அவருடைய சரீரமாக இருக்கிறோம். ஒவ்வொரு சபைக்கான வார்த்தையும் நம் ஒவ்வொருவருக்குமானது.



#

சபை  பெயர்

வாசிப்பு

சபை  தன்மை

சபையின்  நல்லதன்மைகள்

சபையின் கறைபடிந்த தன்மைகள்

தேவனின் மதிப்பீடு

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கானஆசீர்வாதங்கள்

1

எபேசு சபை

 

வெளி2:1-7

 

அன்பற்றசபை

1. கடின உழைப்பு

2. விடாமுயற்சி

3. தீமைக்கு எதிரானபோராட்டங்கள்

4.  கள்ளத்தீர்க்கதரிசிகளுக்குஎதிர்த்து நிற்றல் 

ஆனாலும், நீ ஆதியில்கொண்டிருந்த அன்பை விட்டாய்என்று உன்பேரில் எனக்குக் குறைஉண்டு. வெளி 2:4

அவர்களுக்கு நல்ல குணாதிசயங்கள்இருந்தும் தேவன்  மீதான அன்புபோய்விட்டது.

ஆவியானவர் சபைகளுக்குச்சொல்லுகிறதைக் காதுள்ளவன்கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோஅவனுக்கு தேவனுடைய பரதீசின்மத்தியிலிருக்கிறஜீவவிருட்சத்தின் கனியைப்புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. வெளி 2:7

2

சிமிர்னா சபை

வெளி2:8-11

பாடுகள்கொண்டசபை

1. உபத்திரவம்

2. தரித்திரம்

3. ஆயினும் அவர்கள்தேவனின்  பார்வையில்ஐசுவர்யவான்களாகஇருந்தனர்.

நீ படப்போகிற பாடுகளைக்குறித்துஎவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள்சோதிக்கப்படும்பொருட்டாகப்பிசாசானவன் உங்களில் சிலரைக்காவலில் போடுவான்; பத்துநாள்உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீமரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தைஉனக்குத் தருவேன். வெளி  2:10

1.  பாடுபடுவதற்கு பயப்படுதல்

2.  பாடுகள்  குறுகிய காலத்திற்கு மட்டுமே (10 நாட்கள்) இருக்கும்

3.  மரண பிரியந்தம் உண்மையாயிருங்கள்

ஆவியானவர் சபைகளுக்குச்சொல்லுகிறதைக் காதுள்ளவன்கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன்இரண்டாம் மரணத்தினால்சேதப்படுவதில்லை என்றெழுது. வெளி  2:11

3

பெர்கமு சபை

வெளி2: 12-17

உலகப்பிரகாரமானசபை

1. தேவனின்  நாமத்திற்கு  உண்மையாகஇருத்தல்

2. உபத்திரவத்தில்  விசுவாசத்தைகைவிடமால்இருத்தல்

தேவனுக்குபயனுள்ளசாட்சியாகஇருத்தல்

ஆகிலும், சிலகாரியங்களைக்குறித்து உன்பேரில்எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப்படைத்தவைகளைப் புசிப்பதற்கும்வேசித்தனம்பண்ணுவதற்கும்ஏதுவான இடறலை இஸ்ரவேல்புத்திரர் முன்பாகப் போடும்படிபாலாக் என்பவனுக்குப்போதனைசெய்த பிலேயாமுடையபோதகத்தைக்கைக்கொள்ளுகிறவர்கள்உன்னிடத்திலுண்டு. அப்படியேநிக்கொலாய் மதஸ்தருடையபோதகத்தைக்கைக்கொள்ளுகிறவர்களும்உன்னிடத்திலுண்டு; அதை நான்வெறுக்கிறேன். வெளி 2:14-15 

1.  பிலேயாமின் பொல்லாத போதனைகளைப் பின்பற்றினார்கள் 

2.  விக்கிரக ஆராதனை 

3.  வேசித்தனம்

4.  நிக்கொலாய் மதஸ்தருடைய போதனைகள்

ஆவியானவர் சபைகளுக்குச்சொல்லுகிறதைக் காதுள்ளவன்கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான்மறைவான மன்னாவைப்புசிக்கக்கொடுத்து, அவனுக்குவெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல்எழுதப்பட்டதும் அதைப்பெறுகிறவனேயன்றிவேறொருவனும்அறியக்கூடாததுமாகிய புதியநாமத்தையும் கொடுப்பேன்என்றெழுது. வெளி  2:17

4

தியத்தீரா சபை

வெளி  2:18-26

வேசித்தனம்உள்ள  சபை

1.  உங்கள் அன்பு

2.  உங்கள் விசுவாசம்

3.  உங்கள் ஊழியம் உங்கள் பொறுமை

4.  முன்பு செய்த கிரியைகளிலும் அதிக கிரியைகள்

ஆகிலும், உன் பேரில் எனக்குக்குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்றுசொல்லுகிற யேசபேல் என்னும்ஸ்திரீயானவள் என்னுடையஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும்விக்கிரகங்களுக்குப்படைத்தவைகளைப் புசிக்கவும்அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீஅவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும்பும்படியாய்அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டுமனந்திரும்ப அவளுக்குவிருப்பமில்லை. வெளி 2:20-21

1.  யேசபேல் என்ற பெயருக்கு ஒரு சக்திவாய்ந்த தொடர்பு இருந்தது. நாம் ஒருவரை யூதாஸ் அல்லது ஹிட்லர் என்று அழைத்தால்,அது வலிமையானதாக பொருள்படுகிறது. அதே போல இந்தப் பெண்ணை யேசபேல் என்று அழைப்பதும் வலிமையானதாக    இருந்தது.

2.  தீர்க்கதரிசி அல்லாத யேசபேலை தீர்க்கதரிசி என்று அழைத்ததை சபை  பொறுத்துக் கொண்டது

3.  அவள் சபையை வேசித்தன மார்க்கத்திற்கு நேராக வழிநடத்தினாள்

4.  விக்கிரக ஆராதனை நடைமுறைகள்

ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம்என் கிரியைகளைக்கைக்கொள்ளுகிறவனெவனோஅவனுக்கு நான் என்பிதாவினிடத்தில் அதிகாரம்பெற்றதுபோல, ஜாதிகள்மேல்அதிகாரம் கொடுப்பேன். அவன்இரும்புக்கோலால் அவர்களைஆளுவான்; அவர்கள்மண்பாண்டங்களைப்போலநொறுக்கப்படுவார்கள். விடிவெள்ளி நட்சத்திரத்தையும்அவனுக்குக் கொடுப்பேன். வெளி  2:26-28

5

சர்தைசபை                 

வெளி  3:1-6

கபட சபை

1. ஜீவனோடு இருப்பதன் புகழ்

2. தேவனின் பார்வையில் தூய்மையான மற்றும் தகுதியானசிலர் உண்டு

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளைஸ்திரப்படுத்து; உன் கிரியைகள்தேவனுக்குமுன்நிறைவுள்ளவைகளாக நான்காணவில்லை. வெளி 3:2

விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளைஸ்திரப்படுத்து

ஜெயங்கொள்ளுகிறவனெவனோஅவனுக்கு வெண்வஸ்திரம்தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்துஅவனுடைய நாமத்தை நான்கிறுக்கிப்போடாமல், என் பிதாமுன்பாகவும் அவருடைய தூதர்முன்பாகவும் அவன் நாமத்தைஅறிக்கையிடுவேன். வெளி  3:5

6

பிலதெல்பியாசபை

வெளி  3:7-13

உண்மையுள்ளசபை

1.  கொஞ்சம் பெலன் தான் உண்டு 

2.  இருந்தும் வசனத்தைக் கைக்கொண்டீர்கள்

3.  உண்மையான ஊழியக்காரராக தேவனுடைய நாமத்தை மறுதலிக்கவில்லை

உன் கிரியைகளைஅறிந்திருக்கிறேன்; உனக்குக்கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என்நாமத்தை மறுதலியாமல், என்வசனத்தைக்கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாகவைத்திருக்கிறேன், அதை ஒருவனும்பூட்டமாட்டான். வெளி 3:8

அவர் தாவீதின் திறவுகோல்களைவைத்திருக்கிறார், அவர் திறப்பதையாராலும் பூட்ட  முடியாது, அவர்பூட்டுவதை யாராலும் திறக்கமுடியாது

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்;ஒருவனும் உன் கிரீடத்தைஎடுத்துக்கொள்ளாதபடிக்குஉனக்குள்ளதைப்பற்றிக்கொண்டிரு. ஜெயங்கொள்ளுகிறவனெவனோஅவனை என் தேவனுடையஆலயத்திலே தூணாக்குவேன்,அதினின்று அவன் ஒருக்காலும்நீங்குவதில்லை; என் தேவனுடையநாமத்தையும் என் தேவனால்பரலோகத்திலிருந்திறங்கிவருகிறபுதிய எருசலேமாகிய என்தேவனுடைய நகரத்தின்நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல்எழுதுவேன். வெளி  3:11-12

7

 

லவோதிக்கேயாசபை

வெளி  3:14-21

மந்தமானசபை

1. உங்கள்கிரியைகள்குளிருமல்லஅனலுமல்ல;

2. நான்ஐசுவரியவான், என்னிடம் எல்லாம்உள்ளது

3. எனக்கு எதுவும்தேவையில்லை

உன் கிரியைகளைஅறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்லஅனலுமல்ல; நீ குளிராயாவதுஅனலாயாவது இருந்தால்நலமாயிருக்கும். இப்படி நீகுளிருமின்றி அனலுமின்றிவெதுவெதுப்பாயிருக்கிறபடியினால்உன்னை என் வாயினின்றுவாந்திபண்ணிப்போடுவேன். வெளி  3:15-16  ‘

1. மிகவும் பெருமையாகவும், சுயநீதியுள்ளவர்களாகவும்கருதுகிறார்கள்.

2. தேவனின் பார்வையில்நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறார்கள்.

நான் நேசிக்கிறவர்களெவர்களோஅவர்களைக் கடிந்துகொண்டுசிட்சிக்கிறேன்; ஆகையால் நீஜாக்கிரதையாயிருந்து,மனந்திரும்பு. இதோ,வாசற்படியிலே நின்றுதட்டுகிறேன்; ஒருவன் என்சத்தத்தைக்கேட்டு, கதவைத்திறந்தால், அவனிடத்தில் நான்பிரவேசித்து, அவனோடேபோஜனம்பண்ணுவேன், அவனும்என்னோடேபோஜனம்பண்ணுவான். நான்ஜெயங்கொண்டு என்பிதாவினுடைய சிங்காசனத்திலேஅவரோடேகூடஉட்கார்ந்ததுபோல,ஜெயங்கொள்ளுகிறவனெவனோஅவனும் என்னுடையசிங்காசனத்தில் என்னோடேகூடஉட்காரும்படிக்குஅருள்செய்வேன். வெளி 3:19-21


வெளிப்படுத்தின விசேஷத்தின் பொதுவான கருப்பொருட்கள் என்ன ?


  1. தேவன் கிரியைகளைப் பார்க்கிறார் - ஏழு சபைகளில், அவர் 4 சபைகளுக்கு கிரியைகளைப் பற்றி கூறுகிறார். "உன் கிரியைகளையும்...அறிந்திருக்கிறேன்" வெளி 2:2,3. மேலும் வெளி 3:1, 3:8, 3:15 ஆகிய வசனங்களிலும், “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்" என்று கூறுகிறார். கிரியைகள் நம் இருதயத்தில் இருந்து உருவாகும் செயல்கள். உலகம் பார்ப்பது போல் நமது வெளிப்புறத்தில் தேவன் ஆர்வம் காட்டுவதில்லை. நம் உள்ளத்தைத் தான்  சுத்தமாக இருக்கிறதா, அதில் அன்பு இருக்கிறதா, அவர் தேடும் நீதி இருக்கிறதா என்று பார்க்கிறார். எனவே, உங்கள் செயல்கள் அவருடைய பார்வையில் சரியாக இருக்கிறதா என்று பார்க்க அவருக்கு முன்னால் உங்கள் இருதயத்தை ஆராயுங்கள்.

  2. தேவன் நாம் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார். கறை படிந்த நடத்தையிலிருந்து மனந்திரும்ப அவர் நம்மைத் தேடுகிறார். மனந்திரும்புதல் என்பது, நாம் ஏற்கனவே உள்ள வழிகளில் இருந்து ஒரு “U TURNˮ எடுத்து அவரிடம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பாகும். வாக்குப்பண்ணப்பட்ட வெகுமதி அவர்களுக்கானது.

  3. நாம் ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும் - இந்தப் போராட்டங்கள் பூமியில் நமது கடைசி மூச்சு வரை இருக்கும், நாம் ஜெயிக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவோடு கூடிய நெருங்கிய ஐக்கியத்தின் மூலம் நாம் ஜெயம் கொண்டோம் என்று சொல்லலாம். அவர் முற்றிலும் ஜெயம் கொண்டவராயிருக்கிறார். இயேசு யோவான் 16 ஆம் அதிகாரத்தில் இவ்வாறு கூறுகிறார்என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். யோவான் 16:33

  4. ஆசீர்வாதம் என்பது கீழ்ப்படிபவர்களுக்கு வருகிறது - வெறுமனே அதை வாசிப்பவர்களுக்கு ஆசீர்வாதம் வருவதில்லை, உள்ளத்திற்கு எடுத்து சென்று அதற்குக் கீழ்ப்படிந்து மனந்திரும்புகிறவர்களுக்கே ஆசீர்வாதம் வருகிறது. அவ்வாறு செய்யும்போது நாம் கிறிஸ்துவுக்குள் ஜெயம் கொண்டவர்களாக  மாறுகிறோம். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும்,இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 1:3

 

ஒரு சிறிய ஜெபம் செய்யுங்கள். தகப்பனே, இந்த செய்தி எனக்கு புரிந்து கொள்ள மிகவும் கடினமான செய்தியாக இருக்கிறது. ஆனால் நான் உங்களுக்கு ஊழியம்  செய்யும் ஒரு அடிமையாக என்னை ஒப்புக்கொடுக்கிறேன். உமது பார்வையில் அருவருப்பான என் செயல்களுக்கு என் கண்களைத் திறவுங்கள். அந்த வழிகளில் இருந்து என்னை மனந்திரும்பச் செய்யுங்கள், அதனால் நான் இயேசுவின் நாமத்தில் ஜெயங்கொள்பவன் ஆவேன். ஜெயம் கொண்டவரும் என் விசுவாசத்தை முடிப்பவருமாகிய இயேசுவின் நாமத்தில் நான் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென் !!.

 

 

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jul 29
Rated 5 out of 5 stars.

Glory to our lord Jesus.Amen

Like

Philip
Philip
Jul 28
Rated 5 out of 5 stars.

Amen

Like
bottom of page