top of page
Kirupakaran

ஐஸ்வர்யமும் & இரட்சிப்பும்


இன்றைய உலகில் ஐஸ்வரியம் மற்றும் ஆசீர்வாதம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. பல பிரசங்கிகள் ஐசுவரியத்தின் மீதும் மற்றும் ஆண்டவர் நம்மை எப்படி பணக்காரர்களாக்குவார் என்பதிலுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அநேக நேரங்களில் இந்த உலகில் வசதியாகவும், செழிப்பாகவும் இருப்பதுவே ஆண்டவரின் ஆசீர்வாதம் என்று தவறாகப் புரிந்து கொண்டு அவர் நம்மை நீதிமானாக இருப்பதற்காக உண்மையாகவே அழைத்ததை மறந்துவிடுகிறோம். எனவே உலகில் ஐஸ்வரியமும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா?


மத்தேயு 19: 16 முதல் 26 வரையிலான ஆண்டவரின் வார்த்தையை நான் தியானித்தபோது, அவரிடமிருந்து ஒரு வேறுபட்ட கண்ணோட்டத்தைப் பெற்றேன். ஐஸ்வர்யம் மற்றும் இரட்சிப்பின் இந்த சந்திப்பிலிருந்து நான் கற்றுக்கொண்டதை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.


எனவே இந்த பத்தியை இரண்டு பகுதிகளாகப் படிப்போம். முதல் பகுதி , ஒரு பணக்காரர் இயேசுவிடம் வந்து “நித்திய ஜீவனைப் பெற என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியைக் கேட்கிறார், அவருடைய பதிலைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். இரண்டாம் பகுதி, இயேசு தமது சீடர்களுடன் பேசுவது மற்றும் அந்த பணக்காரருக்கு அவர் அளித்த பதிலை விளக்குவது. நாம் இரண்டையும் பார்த்து, ஆவிக்குரிய விதத்தில் நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வோம்.


பாகம் 1 - இயேசுவின் பதில்

'அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்றுகேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில்பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன்தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாகஎன்பவைகளையே என்றார். அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும்என்னிடத்தில் குறைவு என்ன என்றான். அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்தவாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். 'மத்தேயு19:16-22


இயேசுவின் பதிலில் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

  • இயேசு அந்த மனிதனுக்குக் கூறுவதாவது “நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்”, இங்கே அவர் ஒரு கற்பனை மட்டும் என்று சொல்லவில்லை, "கற்பனைகளை" என்று வலியுறுத்துகிறார். அதாவது கடவுளிடமிருந்து நீதியைப் பெற அனைத்து கற்பனைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

  • அந்த வாலிபன் இயேசுவிடம் "எது?...இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்" என்றான். "இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்?", அவனுடைய உலகப் பார்வையிலிருந்து, ஆண்டவரிடம் இருந்து நீதியைப் பெறும்படி அவை அனைத்தையும் தான் கடைப்பிடித்து வருவதாக அவன் உணர்கிறான்.

  • இயேசுவின் பதில் அந்த வாலிபன் எதிர்பார்க்காத ஒன்று "நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்."

  • நீங்கள் உட்கார்ந்து ஆழ்ந்து சிந்தித்தால், ஏசு கூறியது நம் கிறிஸ்தவ மண்டலத்தில் கற்பிக்கப்படுவதற்கு முற்றிலும் எதிரானது.

  • இயேசு கூறுகிறார் "... பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார் ”, இயேசு சீடர்களுக்குச் சொன்னதும் “என்னைப் பின்தொடருங்கள்”என்பதே.

  • இயேசு தமது சீடர்கள் பலரை அழைக்கையில் "என்னைப் பின்தொடரவும்" என்று இதே மொழியைப் பயன்படுத்திய போது (மத்தேயு 4: 19-20), அவர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டு உடனடியாக அவரைப் பின்தொடர்ந்தனர் 'என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். ' மத்தேயு 4:19-20

  • இந்த மனிதன் பெரும் செல்வந்தன் / பணக்காரன் என்று படித்தோம், "இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்", அவனது இதயம் உலகின் செல்வத்தின் மீது இருந்ததால் அவன் தேவன் கூறியதை ஏற்க மறுத்து துக்கமடைந்தான்.


பாகம் 2 - சீடர்களுக்கு இயேசுவின் பதில்


'அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவேஉங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின்காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும்ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். ' மத்தேயு 19:23-26


  • எனவே, சீடர்கள் எதிர்கொள்ளும் ஐஸ்வர்யம் மற்றும் நீதி பற்றிய கேள்விக்கு இது மீண்டும் வருகிறது, இதை இயேசு 23 ஆம் வசனத்தில் ஒப்புமையாக விளக்குகிறார். "ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்...". பணக்காரர்கள் பரலோக ராஜ்யத்தில் நுழைவது கடினம் என்று இயேசு கூறுகிறார். அவர் அவர்களை உயரமான ஒட்டகம் ஊசியில் நுழைவதோடு ஒப்பிடுகிறார். இது நேரடி அர்த்தம் அல்ல, தேவனின் நீதியில் நுழைவது எவ்வளவு கடினம் என்று அவர் நம்மை சிந்திக்க வைக்கிறார். பணம் / செல்வத்தை மனிதன் சார்ந்து இந்த செயலை செய்ய இயலாது.

  • நம்மைப் போலவே, ஒட்டக விளக்கத்தின் ஒப்புமையைப் புரிந்து கொள்ளாமல், சீடர்களும் அதே கேள்வியைக் கேட்கிறார்கள் "அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?"

  • ஐஸ்வர்யமும், இரட்சிப்பும் பற்றிய கேள்விக்கு இயேசுவின் பதில் சுருக்கமாக இதில் உள்ளது “மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.”


மத்தேயு 19: 16-26 இன் இந்த வாசிப்பிலிருந்து, விசுவாசிகளாகிய நமக்கு சில நேரங்களில் இருந்திருக்கும் பல கேள்விகளை இது எனக்கு எழுப்பியது. இதைப் பற்றி நம் போதகர்களிடமோ அல்லது யாரிடமோ கேட்க நாம் ஒருபோதும் துணிய மாட்டோம்.


நான் ஆண்டவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டேன். நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றை பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார்.


இதன் பொருள் - இயேசு எல்லா பணக்காரர்களையும் வெறுக்கிறாரா?

  • தேவன் எந்த பணக்காரர்களையும் வெறுக்கவில்லை / வெறுப்பதில்லை, அவ்வாறு வெறுத்து இருந்தால் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் அனைவரும் ஏழைகளாக இருக்க வேண்டும். வேதத்திலே நாம் பல செல்வந்தர்களை குறித்து படிக்கிறோம். சகேயு, அரிமத்தியா ஜோசப் மற்றும் பர்னபாஸ் போன்றவர்களின் உதாரணங்கள் நம்மிடம் உள்ளன, இவர்கள் அனைவரும் பணக்காரர்கள்.

  • ஒருவன் செல்வந்தனாக இருந்தால், பணத்தை சார்ந்து இருக்கும் பெருமையையும் ஆணவத்தையும் பெறுகிறான், அந்த ஆணவத்தை / பெருமையை தேவன் வெறுக்கிறார். 'அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ' யாக்கோபு 4:6


தன் செல்வத்தை விற்று தன்னைப் பின்பற்றும்படி இயேசு ஏன் அந்த மனிதனிடம் கேட்டார்?

  • தன்னிடம் இருந்த செல்வத்தை / பணத்தை துறந்து இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு, இது எல்லாவற்றிலும் தேவனுக்கு முதலிடம் கொடுக்கும் அழைப்புக்கான செயல். அவரது செல்வத்தின் காரணமாக, செல்வம் மற்றும் பணம் அவருக்கு வாழ்க்கையில் முன்னுரிமையாகவும் ஆண்டவர் இரண்டாம் பட்சமாகவும் இருந்தார். ஆம், நாமும் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறோம்.

  • இது தேவனுடைய சட்டத்தின் முதல் அட்டவணைக்கு முழுக் கீழ்ப்படிதலுக்கான அழைப்பு. 'என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள்உண்டாயிருக்கவேண்டாம்’. 'யாத்திராகமம் 20:3, ஆனால் அந்த மனிதன் தனது செல்வத்தை முதன்மையாகக் கொண்டிருந்தார், அவர் கடவுளின் கட்டளையை மீறினார். ஆம், நாமும் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறோம்.

  • நீங்கள் பணக்காரர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருக்கும்போது கடவுளைச் சார்ந்திருப்பது இரண்டாம் பட்சம். பணத்தால் என்னால் அனைத்தையும் தீர்க்க முடியும் அல்லது வெல்ல முடியும் என்று சாத்தான் கொண்டுவரும் மனோபாவம் நம்மில் உள்ளது. பல நேரம் பணத்தினால் வெல்ல முடியாத போது தான் இயேசுவை சார்ந்து இருக்கிறோம். ஆம், பணம் இருக்கும்போது நம்மில் பலருக்கு இந்த மனப்பான்மை இருக்கிறது.

  • நீங்கள் பணக்காரராக இருக்கும்போது, ஆண்டவருடன் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக அல்லது அவருடைய வார்த்தையை தியானிக்காமல். உலகத்தின் செல்வங்களைப் பின்தொடர்ந்து ஓடுகிறீர்கள். "மேலும் வேண்டும்" என்ற மனப்பான்மை நம்மிடம் உள்ளது. 'உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்’. 'மத்தேயு 6:21

  • நாம் தேவனுக்கு நீதியுள்ளவர்களாக இருக்க அவர் நம் இதயம் / மனம் / ஆன்மாவை இயேசுவோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மனமும் ஆன்மாவும் மட்டுமே இயேசுவோடும் நமது இதயம் பணம்/செல்வத்தை நோக்கியும் சீரமைக்கப்பட்டுள்ளன. தேவன் அந்த இடத்தில் உள்ளே வசிக்க முடியாது. மத் 6:24 தெளிவாக விளக்குகிறது, 'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. 'மத்தேயு 6:24

எல்லாவற்றையும் விற்று தன்னிடம் வரும்படி இயேசு கேட்கிறாரா?

  • இயேசு அவரை முதலாவதாக வைத்திருக்கும் மனப்பான்மையை எதிர்பார்க்கிறார், உங்களிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் / பணத்தையும் அவரிடம் ஒப்படையுங்கள்.

  • உதாரணமாக, உங்களிடம் வங்கிக் கணக்கில் 1 லட்சம் உள்ளது. தேவனே நான் உங்களிடம் சரணடைகிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள், நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து சரணடைய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பணத்தின் மீதான அணுகுமுறை என்னவென்றால், அப்பா நீங்கள் இந்தப் பணத்தை எனக்குக் கொடுத்தீர்கள், அது உங்களுக்குச் சொந்தமானது. ஆண்டவர் தமது தேவைகளுக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த வேண்டும். இந்த பணத்தை தேவைப்படும் ஒருவருக்கு கொடுக்க ஆண்டவர் அழைத்தால், நீங்கள் இருமனத்துடன் கொடுக்க மாட்டீர்கள், மகிழ்ச்சியுடன் கொடுப்பீர்கள். ஏனெனில் அது அவருடைய பணத்தை அவரது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த தேவனுடைய அழைப்பு. அவருடைய வாக்குறுதி உண்மை என்பதால் நீங்கள் கற்பனை செய்வதை விட அதிகமாக அவர் உங்களை ஆசீர்வதிப்பார், 'உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். 'நீதிமொழிகள் 3:9-10

  • இந்த மனப்பான்மை உங்களுக்கு ஏற்பட்டால், இந்தப் பணத்தை சம்பாதிக்க அவர் உங்களுக்குக் கொடுத்த கிருபைக்காகவும், சாத்தானின் அனைத்து போராட்டங்களிலிருந்தும் விலக்கி அருளப்பட்டதற்கும், இந்தப் பணத்தை பெறுவதற்கான உலக ஞானத்திற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுவீர்கள்.

  • நாம் நிர்வாணமாக வந்தோம், இந்த உலகத்திலிருந்து நிர்வாணமாக வெளியேறுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் அவரிடமிருந்து வந்தவை, நீங்கள் அவருடைய ஆசீர்வாதங்களை நிர்வகிக்க ஒரு மேலாளராக இருக்கிறீர்கள் அல்லது ஒரு தொழிலாளி தனது முதலாளிகளின் பணத்தை எப்படி பராமரிக்கிறாரோ அதைப் போல எண்ணிக் கொள்ளுங்கள். உங்களிடம் என்ன செல்வம் இருந்தாலும் அது உங்களுடையது அல்ல, அது உங்கள் தந்தை தேவனின் கிருபையில் பெற்றீர்கள்.

  • சில சமயம், தேவனிடத்தில் இது உங்கள் பணம் என்று சொல்லி சரணடையும் மனநிலை நம்மிடம் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அவருடைய வேலைக்கு ஒரு பகுதியை அல்லது முழுவதையும் கொடுக்கச் சொல்வதன் மூலம் நீங்கள் சொல்வது உண்மைதானா என்று நம்மை சோதித்து பார்க்கலாம். அங்குதான் நம்மில் பலர் தோல்வியடைகிறோம். ஏனெனில் அது நம் சொந்த பணம், அது கடவுளின் பணம் அல்ல என்ற எண்ணம் நம்மில் உள்ளது. நாம் இங்கே ஒரு மேலாளர், உலகில் அவரது செல்வத்தின் பாதுகாவலர்களாக இருக்கிறோம் என்று மறந்து விடுகிறோம். சாத்தான் நம்மை பல நேரம் இந்த சிந்தனையில் இருந்து ஏமாற்ற முயற்சிக்கிறான். அது நம் பணம் என்று ஏமாற்றி, நம் பாசத்தை முதலாவது செல்வத்தின் மேலும் இரண்டாவது இயேசுவின் மேலும் வைக்க வைக்கிறான்.

  • நமது அன்றாட தேவைகளை நிறைவேற்ற, உலகில் வாழ பணம் தேவை என்பதை இயேசு அறிவார். தமது பிள்ளைகள் உலகில் பிச்சைக்காரர்கள் போல் இருக்க விரும்பவில்லை. அவர் அனைத்து செல்வங்களையும் வைத்திருக்கிறார், அவருடைய ராஜ்யத்தை கட்டியெழுப்ப உங்கள் பணம் தேவையில்லை.

  • நினைவில் கொள்ளுங்கள், ஆண்டவர் உங்களுக்கு ஒருபோதும் கடனாளியாக இருக்க மாட்டார். நீங்கள் அவருக்குக் கொடுத்தால், நீங்கள் கொடுத்ததை விட அதிகமாக திருப்பித் தருவார். அவர் அவருடைய வாக்குறுதியில் உண்மையுள்ளவர்.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page