top of page
Kirupakaran

எரிச்சலடைபவர்களுக்கான வாக்குத்தத்தங்கள்


எரிச்சல் என்பது உணர்ச்சிகரமான நடத்தையுடன் தொடர்புடையது. இந்த நிலையில், ஒருவர் தொடர்ந்து கவலையோடோ, பதட்டத்தோடோ அல்லது வருத்தத்தோடோ காணப்படுகிறார். அவர் தொடர்ச்சியாக ஏதோவொன்றைக்  குறித்த கவலையோடு அமைதியற்ற நிலையில் இருக்கிறார்.


இது ஒரு பிரச்சினையைக் குறித்து உருவாகின்ற பதட்டம். ஆவிக்குரிய வாழ்வில் சாத்தான் நம்மை பாவம் செய்ய வைப்பதற்கு இந்த எரிச்சலூட்டும் நடத்தையைப் பயன்படுத்திக் கொள்கிறான்.


தேவன் நம்மை வழிநடத்திச் செல்லும் போது, எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதற்கு எதிராகச் செயல்படச் சொல்லும் போது நாம் எரிச்சலடைகிறோம். பெற்றோர் ஒரு காரியத்தை மறுக்கும் போது அதைப் பெறுவதற்காக பிள்ளை கோபத்தோடு நடந்து கொள்வதை பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வளர்ந்தவர்களாக அதை விளக்குவது கொஞ்சம் சிக்கலானது. ஆனால், கோபத்தின் வேர்கள் குறித்து பவுல் தெளிவான விளக்கத்தை அளிக்கிறார்.


மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. கலாத்தியர் 5:17


சுயத்திற்கும் தேவனுடைய ஆவிக்கும் இடையேயான முரண்பாடான நடத்தை எரிச்சலை ஏற்படுத்துவதைக் காணலாம். வசனம் 17 ஐ இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வோம்.


மாம்ச இச்சை என்றால் என்ன?

நம் இயற்கையான சரீரம், பிறப்பிலிருந்தே நம் முன்னோர்களிடமிருந்து இந்த குணாதிசயங்களைப்  பெற்றுக் கொள்கிறது. நமது நடத்தை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:19-21


ஆவியின் கனிகள் என்றால் என்ன?

இது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து தேவன் கொடுக்கத் தேர்ந்தெடுக்கிறவர்களுக்கு வருகிறது. இவை தேவனின் பண்புகள்.

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:22-23


ஆவியில் நடப்பவருக்கு தேவன் வாக்குத்தத்தம் அளிக்கிறார். ஆவியில் உள்ளவற்றுக்கு முரணாக இருப்பதைக் காணும் போது, நாம் எரிச்சலடைகிறோம். 


உதாரணத்திற்கு., - ஒருவர் நம்மை சாலையில் முந்தி செல்லும்போது, ​​ஆத்திரம் வந்து அவரைத் துரத்தத் தொடங்குகிறோம். பழிக்குப் பழி வாங்குவதற்காக, வாகனத்தை வேகமாக ஒட்டி, அவரை நோக்கி கத்துகிறோம். அதே சமயம், தேவனின் ஆவி சுய கட்டுப்பாட்டோடு இருக்க சொல்கிறது. ஆனால்,நான் எப்படி அப்படி இருக்க முடியும்? யாரோ ஒருவர் என்னை முந்தும் போது அல்லது என்னை நோக்கி மிகவும் கடுமையாக ஹாரன் செய்யும் போது நான் அமைதியாக இருந்தால் உலகில் ஒரு முட்டாள் போல் இருப்பேன் என்று நம் சுயம் சொல்கிறது. இது தான் எரிச்சலடையும் நடத்தை.

சாத்தான் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, நம்மை ஆவியின் கனிகளுக்கு கீழ்ப்படியாமல் அதற்கு விரோதமாக நடக்க வைக்கிற நிறைய உதாரணங்களைக் கொடுக்க முடியும்.


எரிச்சல் சுபாவம் ஒருவரில் என்ன சாதிக்கிறது?

  • உலக மக்களாகிய நாம் ஆவியில் கலாத்தியர் 5:19-21 இல் கூறப்பட்டுள்ள பகைகள் / பொறாமைகள் / வைராக்கியங்கள் / சுயநல செயல்கள் போன்றவைகளால் எதிர்கொள்ளப்படுகிறோம்.

  • நாம் ஆவியில் நடப்பதை மறந்து, அவர்களின் செயலைக் கண்டு எரிச்சலைடைகிறோம்.

  • எரிச்சல் என்பது பாவத்திற்கு நம்மை கவர்ந்திழுக்கும் சாத்தானின் வஞ்சனை ஆகும்.


பொறுமை

பொறுமை என்பது எரிச்சலுக்கு ஒரு மாற்றாகும். பொறுமையாக இருப்பதன் மூலம் இந்த எரிச்சலை மேற்கொள்ள முடியும். மூன்று செயல்களை செய்வதன் மூலம், நாம் எரிச்சலடைந்து, பாவத்திற்குள் செல்வதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

 

தவிர்க்க வேண்டிய முதலாவது செயல் - பொறாமைப்படுதல் பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. சங்கீதம் 37:1

  • சாத்தான் நம்மை ஆவியின் வழிநடத்துதலுக்கு விரோதமாக உலக நடத்தைகள் மீது பொறாமை கொள்ள தூண்டுகிறான். கோபமான நடத்தை காணப்படும்போது அல்லது ஒருவரிடமிருந்து கோபம் வெளிப்படும்போது நாம் பின்பற்றுவது மோசமானது என்று சொல்லும்படி அவன் நம்மை கவர்ந்து, அனைவரின் முன்னிலையிலும் நம்மை வெட்கப்பட வைக்கிறான்.

  • தேவனுடைய பிள்ளைகளுக்கான வழிகாட்டுதல் - நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். கலாத்தியர் 5:25. நீங்கள் தேவனோடு நடக்கும்போது, ​​மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட உங்கள் கண்களை அவரிடமிருந்து எடுக்காதீர்கள். நாம் உற்று நோக்கினால் தவறு செய்யும் மற்றவரை பார்த்து பொறாமை கொள்ள நேரிடும்.

  • அவர்களின் செயல்களை கண்டு நாம் ஏன் பொறாமை கொள்ளக்கூடாது? அவர்களின் செயல்கள் புல்லைப் போல குறுகியவை என்று தேவனின் வார்த்தை கூறுகிறது. வாழ்நாள் முழுவதும் பச்சையாக இருக்கும் புல்லைப் பார்த்திருக்கிறீர்களா? அது சுட்டெரிக்கும் சூரியனுக்குப் பிறகு விரைவில் வாடிவிடும். அது போலவே, பொல்லாதவர்களும் சீக்கிரமாய் வாடி இறந்து போவார்கள். அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். சங்கீதம் 37:2

 

செய்ய வேண்டிய இரண்டாவது செயல் - தேவன் செயல்படும் வரை காத்திருங்கள்


கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே. சங்கீதம் 37:7

  • பல நேரங்களில், கோபமான நடத்தைகள், பாவச் செயல்களைச் செய்பவர்கள் வெற்றி பெறுவதையும் தேவனோடு நடப்பவர்கள் தோற்றுப்போனவர்களாக சித்தரிக்கப்படுவதையும் காண்கிறோம்.

  • தேவன் செயல்படும் வரை காத்திருங்கள், அவர்கள் வெற்றி பெற்றாலும் எரிச்சலடையாதீர்கள். அவர்களின் வெற்றியானது, எவ்வளவு காலம் நீங்கள் அவருக்காக பொறுமையாக காத்திருக்கிறீர்கள் அல்லது சொந்தமாக செயல்படுகிறீர்கள் என்று உங்களைச் சோதிப்பதற்காகத் தான்.

  • உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை பழிவாங்க தேவன் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் காலம்  மாறுபடும். அவர் தமது காலத்தில் செயல்படுவார், அவரைக் கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒன்று உறுதி, கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் ஒரு நாளும் வெட்கப்படுவதில்லை. உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடிச் செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப்போவார்களாக. சங்கீதம் 25:3

  • எண்ணாகமம் 12 ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது, ​​மிரியாமும் ஆரோனும் மோசேயை எதிர்க்கும் காரியத்தைப் பார்க்கலாம். எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர்களை வழிநடத்த தேவன்  மோசேயையும் ஆரோனையும் தேர்ந்தெடுத்தார். ஆனால் இப்போது ஆரோன் மோசேயை எதிர்த்து நிற்கிறார். இது தேவனுடைய ஆவிக்கு எதிராகப் போராடும் ஒரு எரிச்சலான செயலாகும். தேவன் மோசேயைக் காக்க மேக ஸ்தம்பமாக வந்தார். கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார். மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான். அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான். அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான். கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.எண்ணாகமம் 12:9-14

  • நம் தேவன் தாம் தேர்ந்தெடுத்தவர்கள் தாழ்த்தப்படும் போது அவர்களைக் காக்க வைராக்கியமுள்ள தேவன். எது மோசமானது, எது கெட்டது, எது பொறுத்துக்கொள்ளக் கூடியது என்பதை அவர் அறிவார். எனவே, தேவன் செயல்படும் வரை காத்திருங்கள். அவரது கோபத்தின் செயல்பாடுகள் உங்கள் கோபத்திற்கோ அல்லது நீங்கள் சுயமாக செய்யும் எந்த செயலுக்குமோ இணையாகாது. அவர் பெரிய நியாயாதிபதி. அவர் நீதிமான்.

செய்ய வேண்டிய மூன்றாவது செயல் - கோபப்படாதீர்கள்

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். சங்கீதம் 37:8

  • பொல்லாதவர்களின் இந்த வெற்றி, தேவனோடு நடப்பவரை கோபத்தின் ஆவியினால் வெறியூட்டுகிறது.

  • நீங்கள் கோபத்தில் இருக்கும் போது பாவம் செய்யாதீர்கள். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; எபேசியர் 4:26

  • இது பின்பற்றுவதற்கு மிகவும் கடினமான ஒன்று. நீங்கள் தோல்வியடைந்தால், அவரிடம் திரும்பி வந்து, தகப்பனே நான் தோற்றுவிட்டேன், போராடுவதற்கு எனக்கு மீண்டும் உதவி செய்யுங்கள் என்று கேளுங்கள். கோபப்பட வேண்டாம், உங்கள் கோபத்தை போக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். நம் தேவன் மிகவும் நல்லவர். நாம் கேட்கும் நன்மையை வைத்துக் கொள்ளாமல் கொடுப்பார், சீக்கிரமே இந்த கோபம் விலகி பொறுமைக்கு வழிவகுக்கும்.

 

நாம் தேவனுக்காக பொறுமையாக காத்திருக்கும்போது, ​​அவர் பொறுமையின் பலனைக் கொடுப்பார்.


பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான். ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.சங்கீதம் 37:9-15

 

நாம் பொறுமையாகவும், கர்த்தர் செயல்படுவதற்காகக் காத்திருக்கிறவர்களாகவும் இருப்பதால், அவருக்குக் காத்திருக்கும் பாக்கியவான்களுக்கு ஏழு வழிகளில் அவருடைய வாக்குத்தத்தம் உண்டாகிறது (சங்கீதம் 37:9-15).


  1. பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்

  2. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

  3. இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்;

  4. அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

  5. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

  6. துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான்.

  7. சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.

 

நாம் எரிச்சலடையும் போது செய்ய வேண்டியது, பொறுமையுடன் தேவனுக்குக் காத்திருப்பதாகும்.

இந்த பொறுமையை எவ்வாறு கடைப்பிடிப்பது மற்றும் எரிச்சலைத் தவிர்ப்பது?


தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை ஊற்றுங்கள். இது நமக்கு இருக்கின்ற உணர்ச்சி. அழுகை, உங்களை பாதிக்கும் வார்த்தைகளினால் உண்டான கசப்புடன் அழுவது, உறவு பிரச்சினைகளால் நீங்கள் அனுபவிக்கும் வலி போன்ற எல்லா உணர்ச்சிகளையும் நம் தேவனால் புரிந்து கொள்ள முடியும்.

  • தேவனுக்காகக் காத்திருப்பது வெறுமனே ஜெபிப்பதை விட மேலானது.

  • ஜெபத்தில் நாம் முக்கியமாக நமது கோரிக்கைகளை அவருக்கு முன்பாக வைத்து, பதிலுக்காக அவருடைய தயவை நாடுகிறோம்.

  • ஆனால், அவருக்காக காத்திருக்கும் போது நம் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நாம் மனம் திறந்து நம்மை ஒப்புக் கொடுக்கிறோம்.

  • தேவனுக்குக் காத்திருப்பது நமது தேவைகளை ஜெபத்தில் அவருக்கு முன்வைத்த பின்னரே தொடங்குகிறது.

ஜெபத்திற்கான பதிலுக்காக காத்திருப்பது, குறிப்பாக வழிகாட்டுதலுக்காக காத்திருப்பது, பெரும்பாலும் பதிலின் ஒரு பகுதியாகும்.

  • தாவீதின் சாட்சி மற்றும் பாடங்களில் இருந்து கற்றுக் கொள்வோம். ஏனெனில், தாவீதை விட பெரிய எதிரிகள் கொண்டிருந்தவர் வேறு யாரும் இல்லை. மேலும் தேவனை சார்ந்தே அவர்களில் பெரும்பாலானவர்களை வென்றார். தாவீதின் வாழ்க்கை சாட்சி : தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். சங்கீதம் 62:1,5,8

  • காத்திருத்தல் என்பது ஆவியில் தேவனோடு தொடர்ச்சியான ஐக்கியத்தில் இருப்பது. அது தேவனை மட்டுமே சார்ந்திருப்பது ஆகும்.

வேதவசனங்களில் மூழ்கியிருங்கள் - காத்திருக்கும் வேளையில் உங்களைப் பலப்படுத்த அவருடைய வார்த்தையில் மூழ்கி இருங்கள். யோபு அதையே செய்தார், யோபுவின் வார்த்தையின் மூலம் அவர் அதை எப்படி செய்தார் என்பதை பார்க்க முடிகிறது. வார்த்தைக்கு ஜீவன் இருக்கிறது, அது நம்மை ஊக்கப்படுத்துகிறது / பலப்படுத்துகிறது, அவருக்காகக் காத்திருக்க வைக்கிறது.

  • தேவனுக்காக காத்திருக்கும் காலங்களில் நாம் அவருடைய  வார்த்தையை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். சங்கீதம் 130:5

  • இயேசு தம் பொது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு வனாந்தரத்தில் கழித்த நாற்பது நாட்களில் இதைத்தான் செய்தார்.

  • தேவன் தமது திட்டத்தை வாலிபனாகிய யோசேப்பிற்கு கனவுகள் மூலம் வெளிப்படுத்தினார். ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அதற்கு நேர்மாறானது. பாலியல் துஷ்பிரயோகம் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் அவர் எகிப்தில் சிறையில்  வைக்கப்பட்டது, தம்முடைய வார்த்தையை ஒருபோதும் தவறவிடாத தேவனுக்காக காத்திருக்க அவருக்கு ஒரு சிறந்த நேரத்தை வழங்கியது.

தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்து கொண்டே இருங்கள் - அந்த கடினமான காலங்களில் தேவனுக்கு ஊழியம் செய்வதை நிறுத்தாதீர்கள், தொடர்ந்து ஊழியம் செய்யுங்கள்.

  • தேவனுக்காக காத்திருப்பது என்பது நாம் அவருக்கு ஊழியம்  செய்வதை நிறுத்துவதாக அர்த்தமல்ல.

  • ஆசாரியனாகிய சகரியா பிள்ளைக்கான தனது ஜெபத்திற்கு பதிலுக்காக காத்துக் கொண்டே, தனது முதுமை வரை தேவனுக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தார் (லூக்கா 1:5-14).

  • தாவீது தனது வாழ்க்கையின் கடினமான காலங்களில், தேவனுக்காகக் காத்திருந்த போது, ​​​​அவருக்காக பாடல்களை எழுதிக் கொண்டே இருந்தார். இதுவே மேசியா தீர்க்கதரிசனங்களாகவும், வாக்குத்தத்தங்களாகவும் மாறியது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப் போயிற்று. சங்கீதம் 69:3

 

 

2 comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
helenchandra60
22 de jul.
Avaliado com 5 de 5 estrelas.

All glory to lord Jesus to hear this message.🙏

Curtir

Philip
Philip
15 de jul.
Avaliado com 5 de 5 estrelas.

Amen

Curtir
bottom of page