top of page
Kirupakaran

உப்பும் வெளிச்சமும்


உப்பு இல்லாத உணவை நீங்கள் எப்பொழுதேனும் ருசித்து இருக்கிறீர்களா? உப்பு இல்லாமல் சாப்பிடுவது மிக மோசமான ஒன்று. உப்பு உணவுக்கு சுவை சேர்க்கும் என்று அறிவோம். சூரிய ஒளி இல்லாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்திருக்கிறீர்களா அல்லது 2 மணி முதல் 4 மணி நேரம் மட்டுமே சூரிய ஒளியிலும் மற்ற நேரத்தில் இருட்டிலும் வாழ்ந்து இருக்கிறீர்களா? ஆம், இந்த நிலை வடக்கு கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் குளிர்காலத்தில் நிலவுகிறது. அவ்வாறு நாம் வாழ்ந்தால் வாழ்க்கை சலிப்பாக இருக்கும். மேலும், அங்கு வாழும் பலர் இந்த நிலை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஏனெனில் அவர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட "டியூப் விளக்குகள்" அல்லது பிற ஒளி மூலத்தையே அதிகம் நம்பியிருக்கிறார்கள்.


மத்தேயு 5 ஆம் அதிகாரத்தில் இயேசு எனக்கு கற்பித்த விஷயங்களை உப்பும் வெளிச்சமும் என்ற இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளேன்.


'நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால்மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம்மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அதுவீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள்பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. 'மத்தேயு 5:13-16

நீங்கள்…

'நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” - இதற்கு என்ன அர்த்தம்?

இன்று நாம் வாழும் உலகம் தார்மீக ஊழல் மற்றும் ஆவிக்குரிய இருள் ஆகிய இரண்டு விஷயங்களால் வகைப்படுத்தப்படுகிறது.

தார்மீக ஊழல்

தார்மீக ஊழல் என்றால் என்ன? இதைப் பற்றி பவுல் 1 கொரிந்தியர் 6: 8-10 இல் எழுதுகிறார்

'நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச்சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடையராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. ' 1 கொரிந்தியர் 6:8-10

பவுல் விவரித்த அதே பாவங்கள் நாம் வாழும் இன்றைய உலகில் இன்னும் உள்ளன. வருடங்களும் , தலைமுறைகளும் கடந்து செல்ல செல்ல நாம் இந்த ஊழல் நிறைந்த பாவ பழக்கங்களுக்கு ஏற்ப நம்மை சரி செய்து கொண்டு "கலாச்சார மாற்றம்" என்று சொல்லி அதனோடே வாழ்கிறோம்.


ஆவிக்குரிய இருள்

பலர் இயேசுவின் மீதான நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லது இயேசுவை ஏற்றுக்கொண்ட சிலர் பரிசுத்த ஆவியின்றி ஒரு வாழ்க்கையை தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கலாம். இவைகளே ஆவிக்குரிய இருளின் நிலை.

உங்களில் இயேசுவின் ஆவி இல்லையென்றால், ஆவியின் கனிகளை உங்களால் உற்பத்தி செய்ய முடியாது.

'ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். 'கலாத்தியர் 5:22


கிருபையும் இரக்கமும்

பவுல் எழுதியது போல், ஒரு காலத்தில் நீங்களும், நானும் தார்மிக ரீதியாக ஊழல் மற்றும் ஆவிக்குரிய இருளில் இருந்தோம்.

'உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும்கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். '1 கொரிந்தியர் 6:11


  • அவருடைய கிருபையாலும் / இரக்கத்தாலும் நாம் இரட்சிக்கப்படுகிறோம்; இந்த வீழ்ச்சியடைந்த உலகிற்கு மிகவும் அவசியமான ஒன்றாக நம்மை உருவாக்கவே அவர் நம்மை காப்பாற்றினார்.

  • தேவன் நம்மை "பூமியின் உப்பாக" ஆக்குவதற்காக மீட்டுள்ளார் - இது இந்த பூமியை தூய்மைப்படுத்தி சுத்தப்படுத்துவதற்காக தான். ஏன் என்றால் இந்த உலக மக்கள் ஆன்மீக இருளில் வாழ்வதால், கடவுள் நம்மை "உலகின் வெளிச்சம்" ஆக மீட்டுள்ளார். இது இருளைத் துளைத்து, தேவைப்படுபவர்களுக்கு வெளிச்சத்தை அளிக்கிறது, இது பாவத்தை வெளிப்படுத்துகிறது, உண்மையை வெளிப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் தேவனுடைய கிருபையையும், இரட்சிப்பையும் பெறுகிறோம்.

  • 'உங்களில் சிலர்” - "உலகில் உள்ள அனைவரும் பூமியின் உப்பு மற்றும் உலகின் ஒளி" என்று அவர் சொல்லவில்லை; அவருடைய சீடர்கள், சகோதரர்கள் மற்றும் கிறிஸ்துவில் உள்ள சகோதரிகள் ஆகிய ஒரு குறிப்பிட்ட குழுவை மட்டுமே குறிப்பிடுகிறார். ஆம், உங்களுக்கு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை இருந்தால், "நீங்கள் உப்பு மற்றும் ஒளியாக இருப்பதற்காக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்" என்று சந்தோஷம் கொள்ளுங்கள்.

நீங்கள் பூமியின் உப்பு

'நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால்மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. 'மத்தேயு 5:13

நாம் உப்பைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்துகிறோம்.

  1. இது நம் உணவுக்கு ஒரு சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. சரியான அளவு உப்பு ஒரு பெரிய சுவையையும் மகிழ்ச்சியையும் தருகிறது, உப்பு இல்லையெனில் நம் உணவு சப்பென்று இருக்கும்.

  2. ஊறுகாய், இறைச்சி போன்றவற்றை கெட்டுப் போகாமல் தடுப்பதற்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது.

  3. உப்பில் முக்கிய தாதுப் பொருளான சோடியம் உள்ளது, இது நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து.

எனவே, உருவகமாகச் சொன்னால், இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களையே "பூமியின் உப்பு" என்று இயேசு குறிப்பிடுகிறார். - பாவத்தின் ஊழல் மற்றும் பொல்லாப்பு ஆகியவை கலாச்சாரத்தில் பரவுவதைத் தடுக்க, உலகம் முற்றிலும் மோசமடைவதைத் தடுக்க இயேசு நம்மைத் தேர்ந்து எடுத்தார்.


உப்பு போன்ற தன்மை

  • ஒரு உப்பு எப்படி சுவையை சேர்க்கிறதோ அதை போல நாம் மக்களின் பாவங்களில் இருந்து அவர்களை விடுபட வைக்க வேண்டும். அந்த பாவம் பெருகுவதை நம்முடைய நல்ல குணங்களினால் தடுக்க தேவன் நம்மை தேர்ந்து எடுத்து இருக்கிறார்.

  • அதேபோல், "பூமியின் உப்பு" மாதிரியே, நாம் இந்த உலகத்தின் தொலைந்த மக்களுடனும், அவர்கள் வாழும் கலாச்சாரத்துடனும் நெருக்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் இருக்க வேண்டும். இல்லையெனில், நம்மால் உப்பைப் போல் பயனுள்ளதாய் இருக்க முடியாது.

  • நாம் உப்பாக இருப்பதற்கு நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கிறிஸ்து கொடுத்த தனித்துவம் நம்மில் இருக்க வேண்டும். அதுதான் உலகத்தின் பாவம் மற்றும் ஊழலை நிறுத்த ஒரே வழி. நாம் மற்றவர்களைப் போல வாழ்ந்து கொண்டு நாங்கள் உப்பு என்று சொல்ல முடியாது. நாம் கடவுளின் தரநிலைகளின் படி வாழ வேண்டும். நமது அந்தரங்க மற்றும் வெளியரங்கமான வாழ்க்கை இரண்டிலும் தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். அதாவது தேவனுக்கும் உலகத்திற்கும் முன்னால் ஒரே மாதிரியான வாழ்க்கை.

உப்பு அதன் சாரத்தை இழக்கிறது

'நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால்மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. 'மத்தேயு 5:13


  • உப்பு கடலில் மற்றும் பாறை படிகங்களிலிருந்து எடுக்கப்படுகிறது போல, நம்மில் உள்ள உப்பு தன்மைகள் இயேசுவில் இருந்து வருகிறது. உலகம் ஊழல் நிறைந்த செயல்களால் நிரம்பியிருப்பதால் அதனோடு ஒன்றிணைந்தால் நாம் உப்பின் சாரத்தை இழந்து விடுவோம்.

  • ஆனால் நாம் நம் கலாச்சாரத்தின் கூறுகளுடன் கலக்கப்பட்டு மாசுபடும் போது உப்பாக நமது செயல்திறனை இழக்கிறோம். முடிவில், கலாச்சார மக்களிடமிருந்து பிரித்தறிய முடியாதவர்களாக ஆகிவிடுகிறோம் - "உப்பாக" பணியாற்ற கடவுள் காப்பாற்றிய மக்களாகிய நாம்!

உலகின் வெளிச்சம்

'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்திமரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம்அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. ' மத்தேயு 5:14-16

  • "உலகின் உப்பு" போலவே உலகின் வெளிச்சமாக இருக்கும்படி இயேசு நம்மை அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம்வைத்தவுடன் நீங்கள் அவருடைய ஒளிரும் விளக்காக இருப்பீர்கள்.

  • ஒளி இருளை விரட்டுகிறது. இருளால் சிறிதளவு வெளிச்சத்துடன் கூட சேர்ந்து இருக்க முடியாது. இருள் மேலும் இருட்டாக ஆக , ஒளி அதிகமாய் பிரகாசிக்கிறது. மீட்கப்பட்டவர்களுடைய அவரது தேவாலயமே "உலகின் ஒளி" என்று இங்கே, இயேசு நமக்கு சொல்கிறார்.

ஒளியை மறைக்க முடியாது

மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்”


  • முதலில், இயேசுவை ஆதாரமாகக் கொண்ட நம்மில் உள்ள ஒளியை மறைக்க முடியாது. இயேசு கூறுகிறார், "நீங்கள் உலகின் வெளிச்சம். மலையின் மீது அமைக்கப்பட்ட நகரத்தை மறைக்க முடியாது." அவர் நம்மை ஒரு பெரிய நகரத்துடன் ஒப்பிடுகிறார், அது ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. அதை பார்வையில் இருந்து மறைக்க முடியாது; இயேசு இவ்வுலகில் இருக்கும் போது அவருடைய செயல்கள் மூலமாக பலர் குணம் அடைந்தனர் இயேசுவை (அவரின் கிரியைகளை) மறைக்க முடியவில்லை. வேதம் சொல்கிறது, அவர் மக்கள் கூட்டங்களுக்குத் தெரியாமல் ஒரு ஊருக்குள் பயணம் செய்யவோ அல்லது ஒரு வீட்டில் தங்கவோ முயன்ற காலங்களில் கூடஅவரால் ஒருபோதும் மறைத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் செய்த எல்லா வேலைகளிலும் அவரது ஒளி எல்லா இடங்களிலும் பிரகாசித்தது.


உங்கள் வெளிச்சம் மற்றவர்கள் முன் பிரகாசிக்கட்டும்


இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது

  • உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது - பூலோகத்தில் நாம் செய்யும் நல்ல செயல்களைப் பார்த்து , மக்கள் பரலோகத்தில் உள்ள நம் பிதாவை மகிமைப்படுத்துகிறார்கள் என்பதே இயேசுவின் பரிசுத்தத்தை பிரகாசிப்பதும் பிரதிபலிப்பதும் ஆகும். நாம் உண்மையாக அந்த ஒளியைப் பிரகாசிக்கிறோம். மேலும் நமது நல்ல செயல்களை ஒரு கூடையின் கீழ் மறைப்பதைத் தவிர்ப்போம் - கடைசி நான்கு திருவருட்பேறுகளில் இயேசு சொன்னதைச் செய்யும்போது: அதாவது, தேவன் நமக்கு இரக்கம் காட்டியதைப் போல நாம் மற்றவர்களிடம் கருணை காட்டும்போது; விசுவாசத்தினால் தேவனுடைய பார்வையில் நாம் தூய்மையானவர்களாக அறிவிக்கப்பட்டதைப் போல, நாம் இருதயத்தின் தூய்மையை நாடும் போது; நாம் இப்போது தேவனுக்குள் சமாதானமாய் இருப்பது போல சமாதானம் செய்பவர்களாக இருக்கும்போது; மற்றும் கிறிஸ்துவுடனான நமது அடையாளத்தின் காரணமாக நீதியின் நிமித்தம் நாம் துன்புறுத்தப்படும் போதெல்லாம் , அவருடைய பரிசுத்த ஆவி நம்மைக் காத்து நமக்கு சம்மதத்தை அருள்செய்யும்.

  • நாம் கிறிஸ்துவின் அன்பைப் பெற்றோம், அன்பை மற்றவர்களுக்கு நற்கனிகளாக நம் செயல் மூலம் காட்டலாம்.

  • நாம் கிறிஸ்துவிடம் கிருபையை பெற்றோம், நம்மில் பாவம் மற்றும் அக்கிரமங்கள் இருந்தபோதிலும் நம் தந்தை நம்மீது இரக்கம் காட்டியுள்ளதால் மற்றவர்களுக்கு கிருபை காட்டுவோம்.

  • சோதனையின் போது கிறிஸ்துவின் ஒளி நம்மை உலகத்திலிருந்து எவ்வாறு வேறுபடுத்துகிறது என்பதைக் காட்ட நாம் கடந்து செல்லும் எல்லா சோதனைகளிலும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்.

564 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page