top of page
  • Kirupakaran

இரட்சிப்பின் மூலைக்கல்


ஒரு கட்டிடத்தை நிர்மாணிக்கும்போது, ​​மூலைக்கல்லானது கட்டமைப்பின் ஆதாரத்திற்கு முக்கியமானது. மேலும், இது முழு கட்டமைப்பையும் நெறிப்படுத்துகிறது. இது ஸ்திரத்தன்மை, வழிகாட்டுதல் மற்றும் ஒரு குறிப்பு புள்ளியை வழங்கும் அத்தியாவசியமான ஒன்றைக் குறிக்கிறது. நமது ஆன்மீக வாழ்விலும் இதே நிலைதான், கிறிஸ்தவ வாழ்வின் மூலைக்கல்லாக இயேசு இருக்கிறார்.

 

மூலைக்கல் என்றால் என்ன?

இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 21:42-44

  • ஒரு மூலைக்கல் (அல்லது அஸ்திபாரக்கல் அல்லது அமைக்கும் கல்) என்பது ஒரு கட்டுமானத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படுகிற முதல் கல் ஆகும். மற்ற அனைத்து கற்களும் இந்த கல்லைக் குறிக்கும் வகையில் அமைக்கப்படும், இதனால் முழு கட்டமைப்பின் நிலையும் தீர்மானிக்கப்படுகிறது.

  • மத்தேயு 21:42-44 - இந்தப் பத்தி, இயேசுவை "மூலைக்கல்" என்று விவரிக்கிறது - ஒரு பழைய கட்டிடத்தில் மிக முக்கியமான கல். இரண்டு சுவர்களை இணைப்பதன் மூலமோ அல்லது ஒரு வளைவை வைப்பதன் மூலமோ அது அனைத்தையும் ஒன்றாக இணைக்கின்றது.

  • தேவனுடைய வீடு முழுவதையும் கட்டியெழுப்புகின்ற “மூலைக்கல்”தாம் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.

 

இயேசு கிறிஸ்து - இரட்சிப்பின் "மூலைக்கல்"

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28:16

  • தேவன் இயேசு கிறிஸ்துவை மூலைக்கல்லாக முன் வைத்துள்ளார். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 7:10

  • அவர் இரட்சிப்பை எவ்வாறு நிறைவேற்றுகிறார்? மூலைக்கல்லில் பயன்படுத்த பல்வேறு வகையான கற்களைப் பயன்படுத்துதல்

    • விலையேறப்பெற்ற கல் - நம் இரட்சிப்பைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்படும் ஒரே விலையுயர்ந்த மூலைக்கல் அவர்தான். வீட்டைக் கட்டுவதற்கு நீங்கள் ஏதோவொரு கல்லைப் பயன்படுத்துவதில்லை, வீட்டைக் கட்டுவதற்கு நெருப்பில் சுடப்பட்ட  செங்கல்லைப் பயன்படுத்த வேண்டும், அதே போல் இயேசு நமது விலையேறப்பெற்ற கல்.

    • பரீட்சிக்கப்பட்ட கல் - நாம் கட்டப்பட்டிருக்கும் அஸ்திபாரமானது நம் பாவங்களுக்காக மரணத்தை ஜெயம் கொள்ள சிலுவையில் சோதிக்கப்படுகிறது. செங்கலின் சுமையைத் தாங்கிக் கொள்வதற்கான ஆற்றல் சோதனை செய்யப்படுவது போல அவர் சிலுவையில் சோதிக்கப்பட்டார். இயேசு நமக்காக பரீட்சிக்கப்பட்ட கல்.

  • இந்தக் கல்லில் பதற்றம் இல்லை - அவர் நம்முடைய விலையேறப்பெற்ற, பரீட்சிக்கப்பட்ட கல் - அதனால்தான் அவருக்குள் நமக்கிருக்கின்ற உறுதி எப்போதும் பதட்டம் அடைவதில்லை. ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28:16

  • கல்லின் வல்லமை - மூலைக்கல் கட்டிடத்திற்கு அஸ்திபாரமாக  செயல்படுவது மட்டுமல்லாமல், அது என்ன செய்ய வேண்டும் என்று அழைக்கப்படுகிறதோ அதைச் செய்யும் வல்லமையுடன் செயல்படுகிறது. பேதுரு எந்த வல்லமையினால் குணப்படுத்தினார் என்பதை விளக்கினார். அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே; பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அப்போஸ்தலர் 4:7-11

  • இயேசுவுக்கு மாற்றான மூலைக்கல் இல்லை - சுவர் கட்டும் போது, ஜிப்சம் போர்டு, செங்கல், நெருக்கி அமைக்கப்பட்ட செங்கல், களிமண் செங்கல் என நம்மிடம் பல மாற்றுகள் உள்ளன. ஆனால், ஒரு சபையோ அல்லது போதகரோ அல்லது எந்தவொரு தனிநபரோ இயேசுவிற்கு பதிலாக மூலைக்கல்லாக முடியாது. ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; எபேசியர் 2:19-20

  • இந்த அஸ்திபாரத்தின் மீது கட்டும் உடன்வேலையாட்கள் - இயேசு / அப்போஸ்தலர்கள் / அவருடைய சீடர்கள் மற்றும் இதற்கு முன்பு வாழ்ந்த பல போதகர்களால் ஏற்கனவே அஸ்திபாரம் போடப்பட்டு விட்டது, நாம் இதற்கு மேல் கட்டுபவர்கள் மட்டுமே. பயப்படவோ,நீங்கள் தான் அதை கட்டுபவர்கள், மற்றவர்கள் அந்த அடித்தளத்தை உங்களிடமிருந்து பறிக்க முடியும் என்று நினைக்கவோ வேண்டாம். நாம் வெறும் உடன்வேலையாட்கள் மட்டுமே (நாம் இணைந்துள்ள அனைத்து சபைகளும் உடன் வேலை செய்யும் அமைப்பாகும்). நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. 1 கொரிந்தியர் 3:9-11

 

இந்த "கல்" நொறுக்கிப் போடும் வல்லமை கொண்டது

இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 21:44

  • உடைக்கப்பட வேண்டும் - நாம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு துண்டு துண்டாக உடைக்கப்பட, கல்லின் மீது விழ வேண்டும். நம்மில் உள்ள வெறுமை மட்டுமே அவர் விரும்பும் பலனைத் தரும். இந்தக் கல்லில் விழ முடியாது என்று பிடிவாதமாக இருந்தால், ஆண்டவரின் நாளில் கல்லால் நசுக்கப்படுவோம். நாம் விதையைப் போல இருக்க வேண்டும், இரட்சிப்புக்கு உயிர் கொடுப்பதற்கு முன் நாம் உடைக்கப்பட வேண்டும்.

  • சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். ஏசாயா 8:13-15

  • அவருடைய பரிசுத்தத்தின் காரணமாகவும், நம்முடைய பரிசுத்தமற்ற / அநீதியின் காரணமாகவும் நாம் அவர் மீது தடுமாறுகிறோம். இந்த பாறையில் நாம் தடுமாறி விழும்போது, கண்ணாடி ஒரு கூர்மையான பொருளில் படும்போது எப்படி உடைந்து போகிறதோ, அது போல துண்டு துண்டாக உடைந்து போகிறோம். இரட்சிப்பிற்குள் நுழைய அந்த சந்திப்பை நாம் எதிர்கொண்டிருக்க வேண்டும். சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:18

  • உடைப்பது உங்களை அவமானப்படுத்துவதற்காக அல்ல, மாறாக, சிலுவையில் தேவன் செய்த தியாகத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவதற்காகவும், மற்ற விஷயங்களை நம்புவதற்கு பதிலாக அவர் மீது உங்கள் அஸ்திபாரத்தை கட்டவும் உதவுகிறது. உடைக்கப்படுவதை நாம் அனுபவிக்கும் போது, உண்மையிலேயே தேவனின் வல்லமையைக் காண்கிறோம். அதுவரை, பிரசங்கங்களும் போதனைகளும் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், ஏனென்றால் இன்னும் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அவை பைத்தியமாகத் தோன்றும்.

  • கடந்த கால பாவங்கள் உடைக்கப்பட வேண்டும், தேவனின் திட்டங்களை அழிக்கும் பெருமை / சுய ஆசைகள் உடைக்கப்பட வேண்டும். இயேசுவிடம் கேளுங்கள், உடைக்கப்பட வேண்டியதை அவர் காண்பிப்பார்.

  • உடைக்கப்படுதல் உண்மையான மனத்தாழ்மைக்கு வழிவகுக்கும், ஏனென்றால் அவருடைய முன்னிலையில் நாம் நமது ஒன்றுமில்லாததையும் அவருடைய பரிசுத்தத்தையும் உணர்கிறோம்.

    • இது ஏசாயாவின் கட்டளை - உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன்தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். ஏசாயா 6:1-5

  • இயேசு நமது மூலைக்கல்லாக இல்லாமல் இரட்சிப்பை அடைய முடியாது.

 

சுருக்கம்

நீங்கள் இயேசுவோடு நடக்கும்போது, ​​உங்களுடைய பெருமையையும், சுயநீதியான செயல்களையும், உங்களுடைய வழிகளையும் அவரிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும். நீங்கள் சரணடைந்து, உங்களை மூலைக்கல்லில் உடைக்கும்படி அவரிடம் கேட்கும்போது, ​​அவர் சிலுவையில் தாம் செய்த தியாகத்தால் உங்களைப் பலப்படுத்த தம்முடைய வல்லமையை உங்களுக்குத் தருகிறார். தாவீது சங்கீதத்தில் ஜெபித்ததைப் போன்ற எளிய ஜெபத்தை ஜெபியுங்கள்.

 

கர்த்தாவே, என்னைப் பட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். சங்கீதம் 26:2

என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். சங்கீதம் 25:18

என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். சங்கீதம் 25:17

 

கிருபையுள்ள தேவன் தம்முடைய கண்களுக்கு முன்பாக அநீதியுள்ளவைகளையெல்லாம் மூலைக்கல்லில் உடைத்து, உங்களை வெறுமையாக்கி, தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தை உங்கள் மீது பிரகாசிக்கச் செய்வார்.

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip
Philip
Aug 17

Amen

Like
bottom of page