நாம் ஒரு நோக்கத்துடன் இந்த உலகிற்குள் நுழைகிறோம். பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தைகளின் தனித்துவமான திறமைகளை அடையாளம் கண்டு, ஆசிரிய பணி, மருத்துவம், விமானம் ஓட்டுதல், பொறியியல் போன்ற தொழில்கள் அல்லது அவர்கள் செழிக்கக்கூடிய துறை எதுவோ அதில் அவர்களை வளர்க்கிறோம். இதே அணுகுமுறையையே நம் நித்திய பிதாவும் நம்மை அற்புதம் செய்பவர்களாக மாற்ற நம் வாழ்வில் செய்கிறார்.
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. எபேசியர் 4:11-16
நாம் கிறிஸ்துவின் விசுவாசிகளாக கிறிஸ்துவில் பிறக்கிறோம். இது பெற்றோருக்குப் பிறக்கின்ற குழந்தையைப் போன்றது. இந்தக் குழந்தை ஒரு "ஆசிரியர்" / "பொறியாளர்" / "மருத்துவர்" ஆக வளரும் அல்லது வேறு ஏதாவது ஒரு திறமையோடு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே நாமும் "அப்போஸ்தலர்களாகவோ, தீர்க்கதரிசிகளாகவோ, சுவிசேஷகர்களாகவோ, போதகர்களாகவோ அல்லது மேய்ப்பர்களாகவோ” வளர வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
ஆனால், பிரதான கிறிஸ்தவர்களில் பலர் தேவாலயத்திற்குச் செல்பவர்கள், இருந்தும் அவர்கள் கிறிஸ்துவுக்காக எதுவும் செய்வதில்லை. கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்த நாள் முதல் இன்று வரை நாம் ஒரு சாதாரண விசுவாசியாகத் தான் இருக்கிறோம். பலர் வயதான பிறகும் கூட இன்னும் குழந்தைகளாகவே தொடர்கின்றனர்.
நாம் கிறிஸ்துவின் குடும்பத்தில் விசுவாசிகளாக இருப்பதற்கு மட்டும் அழைக்கப்படாமல், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவுக்கான ஊழியம் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள் மூலம் நடக்கிறது.
அற்புதம் செய்பவர்
நாம் கிறிஸ்துவின் வேலையாட்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் வல்லமையின் மூலம் நாம் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள், மேய்ப்பர்கள் என்று ஒரு அற்புதம் செய்பவராக மாறுகிறோம்.
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:13
"அவர், சிலரை .... ஏற்படுத்தினார்" என்று வேதம் கூறுகிறது.
கிறிஸ்து தம்மைப் பொதுவாகக் கொடுக்கவில்லை, அவருக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் உள்ளது - அவர் நம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாகக் கொடுக்கிறார். ஒரு நபரிடம் அவர் உருவாக்க விரும்பும் போதகர் அதே தேவாலயத்தில் அவர் உருவாக்கும் மற்ற போதகர்களிடமிருந்து வேறுபட்டவர்.
நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் ஆவியால் வேறுபடுகிறோம் - நாம் ஒவ்வொருவரும் எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அறியும், அவரது சர்வ அறிவாற்றலின் தன்மையின்படி, அழைப்பு தேவனால் செய்யப்படுகிறது.
நான் ஒரு சுவிசேஷகனாகவோ அல்லது போதகராகவோ அல்லது வேறு எந்த ஊழியராகவோ இருக்க விரும்புகிறேன் என்று சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை, அவருடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும் என்பதே தேவனின் விருப்பம். இந்த ஊழியத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்தைப் பெற்றுள்ளோம், அது அவருடைய வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே.
மனிதர்களாகிய நாம், “அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள்” ஆகியோரை சபை அல்லது ஊழியம் அல்லது இறையியல் அனுபவத்தின் திறன் ஆகியவற்றைக் கொண்டே பார்க்கிறோம். இந்த வகையான வேலைக்கு, இறையியல் அறிவு இருக்க வேண்டும் என்று எப்போதும் கூறுகிறோம், இது பெரும்பாலும் உண்மை தான். ஆனாலும், இறையியல் அறிவால் மட்டுமே ஒருவர் அப்போஸ்தலராகவோ, தீர்க்கதரிசியாகவோ, சுவிசேஷகராகவோ, போதகராகவோ ஆக முடியாது.
"அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள்" குறித்த இயேசுவின் விளக்கம் முற்றிலும் வேறுபட்டது.
தேவன், தாழ்ந்த மற்றும் சாதாரண மக்களைத் தேர்ந்தெடுத்து, தமது ஊழியத்தை செய்வதற்கு நியமிக்கிறார்.
அவர் மீனவர்களைத் தமது சீடராக தேர்ந்தெடுத்தார் (பேதுரு / யாக்கோபு / யோவான் - லூக்கா 5:10).
பானபாத்திரக்காரரைத் தமது தீர்க்கதரிசியாக தேர்ந்தெடுத்தார் (நெகேமியா தீர்க்கதரிசி - நெகேமியா 1:11).
பெரும்பாலான நேரங்களில், ஊழியத்தில் நுழைவதற்கு ஒரு இறையியல் பள்ளி படிப்பு தேவை என்று சாத்தான் நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறான். ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் இந்த பொய்யை விதைத்து, பல வருடங்களாகியும் கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாகவே இருக்க வைக்கிறான்.
இறையியல் அறிவு மட்டுமே ஒருவரை அப்போஸ்தலராகவோ, தீர்க்கதரிசியாகவோ, சுவிசேஷகராகவோ, போதகராகவோ, மேய்ப்பராகவோ ஆக்குவதில்லை. அழைப்பு மற்றும் "அவர், சிலரை .... ஏற்படுத்தினார்" என்ற பகுதி நம் ஒவ்வொருவரையும் அவருடைய பணியை செய்ய வைக்கிறது. அவரால் ஒரு மீனவரை அவருடைய சீடராகப் பயிற்றுவிக்க முடியுமானால், உங்களையோ என்னையோ ஏன் அப்படி செய்ய முடியாது. நீங்கள் இறையியலில் இளங்கலை அல்லது முதுகலை செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம் என்றால், அவர் அதையும் செய்வார், அது நம் மனதில் ஒரு தடையாக இருக்கக்கூடாது.
இது நடைபெறுவதற்கு தேவனை சார்ந்து இருப்பது தான் நமது வேலை.
அற்புதம் செய்பவர்களின் பணி
இப்போது நாம் அவருடைய பணியைச் செய்ய அழைக்கப்பட்டிருப்பதால், பல கேள்விகள் வரலாம்.
a) எவ்வளவு காலத்திற்கு அவருடைய பணியைச் செய்ய அழைக்கப்படுகிறோம்?
b) நான் எங்கிருந்து வழிகாட்டுதலைப் பெறுவேன்?
c) எனக்கு யார் உதவுவார்கள்? இன்னும் பல கேள்விகள் நம் மனதில் எழலாம்.
1. அழைப்பு
"பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,". எபேசியர் 4:12
அழைப்பு - கிறிஸ்து இதைச் செய்தார், அதனால் அவருடைய ஊழியத்தின் வேலைகளைச் செய்ய நாம் தயாராக இருக்கிறோம், "பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்,".
நாம் நிறைவேற்றும்படி அவர் நம்மிடம் கேட்கும் ஊழியம் என்ன? மத்தேயு 28 மற்றும் மத்தேயு 9 இல் என்ன எழுதப்பட்டுள்ளது?
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28:19-20
அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். மத்தேயு 9:36-38
இந்த ஊழியம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது, "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்”, மற்றும் "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்".
தேவன் நமக்குக் கொடுத்த வாக்குறுதி என்னவென்றால், அவர் செய்ய அழைத்ததைச் செய்ய நாம் பாரத்தோடு தொடங்கும்போது, அவர் நம் ஒவ்வொருவரையும் அவரது சித்தத்தின்படி அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் மேய்ப்பர்களாக மாற்றுவார்.
2. இது எவ்வளவு காலத்திற்கு வழங்கப்படும்?
இது கிறிஸ்துவால் எவ்வளவு காலம் நமக்குக் கொடுக்கப்படும்? – நாம் அனைவரும் விசுவாசத்தில் ஒருமைப்படும் வரை கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படும்.
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும், எபேசியர் 4:11
"வரைக்கும்" - இது நித்தியத்தை குறிக்கிறது - காலத்திற்குட்பட்டதல்ல. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது, "நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, .... வரைக்கும்".
இங்கே முக்கியமானது "விசுவாசத்தில் ஒற்றுமை" - நாம் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுடன் விசுவாசத்தின் மூலம் வாழ்கிறோம், விசுவாசம் உடைந்தால் அது நின்றுவிடும். கிறிஸ்துவில் உள்ள விசுவாசமே கிறிஸ்துவிடமிருந்து போதனையைப் பெறுவதற்கான திறவுகோல்.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரேயர் 11:6
எனவே, விசுவாசம் வைப்பதும், அவரை முழுமையாக சார்ந்து அவரோடு நடப்பதும் தான் முக்கியமானது.
பல போதகர்கள் ஆரம்பத்தில் உண்மையுள்ளவர்களாகவும், பின்னர், விசுவாசத்திலிருந்து விலகும்போது பின்வாங்கி செல்வதையும் காண்கிறோம். ஊழியம் இன்னும் இருந்தாலும் கர்த்தருடைய பிரசன்னம் அங்கே இருப்பதில்லை. திருச்சபையானது, வணிக ஊழியமாகவும் ஆசீர்வாத ஊழியமாகவும் மாறுகிறது. தேவனின் கிருபையை இழக்கிறார்கள்.
3. அவருடைய ஊழியத்தில் நமக்கு என்ன வழங்கப்படும்?
மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும், எபேசியர் 4:11
தேவனைப் பற்றும் அறிவு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது - "தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும்", இது பரிசுத்த ஆவியின் மூலம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டது, தேவ ஆவி நம்மை வழிநடத்துகிறது.
அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. லூக்கா 10:21
“கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்”, இது வழங்கப்படுகிறது. நாம் முதிர்ச்சியடையும் வரை இது நமக்கு வழங்கப்படுகிறது.
நமக்கு வயதாகும்போது, நாம் அனுபவங்களை பெற்றுக் கொள்ளும் போது முதிர்ச்சி வருகிறது - அதே போல், கிறிஸ்துவிலும், நாம் அவருடன் எவ்வளவு காலம் நடக்கிறோமோ, அவ்வளவு முதிர்ச்சியடைகிறோம். கிறிஸ்துவில் நம்மை ஒரு சிறந்த அற்புதம் செய்பவராக மாற்றுவதற்கு, தேவனின் அறிவுறுத்தல் / கடிந்து கொள்ளுதல் / ஆலோசனையைக் கற்றுக்கொள்கிறோம்.
மூத்த போதகர்கள் தங்கள் வேலைப்பளுவின் நடுவே பிரசங்க பீடத்தில் பிரசங்கிக்க தினசரி மன்னாவை எப்படிப் பெறுகிறார்கள் என்று நான் எப்போதும் யோசித்திருக்கிறேன். “பில்லி கிரஹாம் தனது மன்னாவை எவ்வாறு பெற்றார் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? அது இந்த வாக்குத்தத்தத்தினால் தான். ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக இருக்க பல போதகர்கள் எபேசியர் 4:11 இன் படி வாழ்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சரியான வேளையில் ஆவியின் வரங்களை கொடுப்பதற்கு இயேசு நம்மை பக்குவப்படுத்துகிறார். 1 கொரிந்தியர் 12:7-11 இல் எழுதப்பட்டுள்ளபடி, அவர் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை, ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட வரங்களோ தாம் தேர்ந்தெடுப்பவர்களுக்குக் கொடுக்கிறார்.
ஞானத்தின் ஆவி
அறிவின் ஆவி
விசுவாசத்தின் ஆவி
குணமாக்கும் ஆவி
அற்புதங்களின் ஆவி
தீர்க்கதரிசனத்தின் ஆவி
ஆவிகளைப் பகுத்தறியும் ஆவி
பற்பல பாஷைகளைப் பேசும் ஆவி
பாஷைகளை வியாக்கியானம் பண்ணும் ஆவி
· ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12:7-11
இவை அனைத்தும் தேவனின் அற்புதம் செய்யும் ஊழியக்காரரின் ஒரே நோக்கத்தை நிறைவேற்றவும், தேவ சித்தத்தை உலகில் செய்யவும் தேவனை மகிமைப்படுத்தவும் வழங்கப்படுகின்றன. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12:11
தேவனின் விருப்பப்படி அவர் இலவசமாகக் கொடுக்கிறார், அதை நம் கிரியைகளால் வாங்க முடியாது. ஸ்கேவாவின் குமாரர் பவுலைப் போல நடப்பதற்கு எப்படி செய்தார்கள் என்பதை அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 19:11-16)
4. "கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க" எபேசியர் 4:13 - என்றால் என்ன?
நாம் முதிர்ச்சியடையும் வரை மட்டுமல்ல, கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சி நமக்குள் வரும் வரை கொடுக்கப்பட்டது.
கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சி "ஆவியின் கனிகளுடன்" வருகிறது - கலாத்தியர் 5:22-23.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:22-23
அற்புதம் செய்பவரின் ஆதாயங்கள்
நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. எபேசியர் 4:14-16
நாம் அற்புதம் செய்பவரான பிறகு, எப்படி வடிவமைக்கப்படுகிறோம்?
நீங்கள் இனிமேலும் ஒரு குழந்தை அல்ல - "நாம் இனிக் குழந்தைகளாயிராமல்".
நீங்கள் இனி வெறுமனே கிறிஸ்துவின் விசுவாசிகளாக மட்டும் இராமல் நீங்களும் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் மேய்ப்பர்களாகும்படி முதிர்ச்சியடைகிறீர்கள் - கிறிஸ்துவின் அற்புத ஊழியர்கள்.
எதிரியை எதிர்த்துப் போரிடும் வல்லமை - நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், எபேசியர் 4:14
சாத்தானின் தந்திரம் - தந்திர குணம் சாத்தானிடமிருந்து வருகிறது, இது 1 கொரிந்தியர் 3:19 இல் உள்ள வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், 1 கொரிந்தியர் 3:19
போலியான ஆவிகள் / போதனைகளை எதிர்த்துப் போராடுங்கள் - கிறிஸ்துவைப் போல நடித்து நம்மை ஏமாற்ற போலி ஆவிகள் நம்மில் இருக்கும்.
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 1 யோவான் 4:1-3
வஞ்சக ஆவிக்கு எதிராகப் போராடுங்கள் - சத்திய ஆவி vs வஞ்சக ஆவி
அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவர்களைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். 1 யோவான் 4:5-6
இந்த ஊழியத்தின் பலன் "கிறிஸ்துவில் வளர்வதும் / கிறிஸ்துவைப் போல் செய்வதும்” ஆகும்.
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. எபேசியர் 4:15,16
பலன் இந்த உலகில் இல்லை. தேவன் இதற்கு நித்தியத்தில் பலன் அளிப்பார். நாம் “கிறிஸ்துவிற்காக ஊழியம் செய்பவர்களாக” இருப்பதால், அவருக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு சிறிய செயலையும் அவர் கனம் பண்ணுவார். வெளிப்படுத்தின விசேஷத்தைப் படிக்கும்போது, தேவன் அற்புதம் செய்பவருக்காக இதைச் செய்வதை வாசிக்கலாம்.
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். வெளிப்படுத்தின விசேஷம் 21:1-6
தேவனின் நமக்கான நித்திய பலன், ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். வெளிப்படுத்தின விசேஷம் 21:7
Comentarios