குஷ்டரோகி என்பவர் "தொழுநோய்" என்ற கொடிய நோயைக் கொண்ட ஒரு நபர். தற்போதைய உலகில், நம் சமுதாயத்தில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் அவர்களை அதிகம் காண முடிவதில்லை. ஆனால் நீங்கள் அவர்களை காண விரும்பினால் தேவாலயம் / மசூதி அல்லது கோவிலின் நுழைவாயிலில் பார்க்க வாய்ப்பு உள்ளது.
இன்றைய எனது பதிவு மத்தேயு 8: 1-4 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அங்கு இயேசு ஒரு குஷ்டரோகியையும் அவனது செயல்களையும் சந்திக்கிறார் மற்றும் இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம். நம்முடைய ஆவிக்குரிய பக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு முன், தொழுநோய் பற்றிய சில புரிதல்.
பண்டைய காலத்தில், தொழுநோய் ஒரு பயங்கரமான, அழிவுகரமான நோயாக இருந்தது - இன்னும் உலகின் சில பகுதிகளில் உள்ளது. உடலின் சில பகுதிகளில் உணர்வுகளை இழப்பதன் மூலம் தொழுநோய் தொடங்கலாம். நரம்பு மண்டலங்களை பாதிக்கும், தசைகள் வீணாகிவிடும், கைகள் நகங்கள் போல மாறும் வரை தசைநார்கள் சுருங்கும். கைகள் மற்றும் கால்களில் புண் ஏற்படும். பின்னர் கை மற்றும் கால் விரல்களில் சிறிது சிறிதாக இழப்பு ஏற்பட்டு இறுதியில் ஒரு முழு கை அல்லது ஒரு முழு கால் விழும் வரை ஒருவரை பாதிக்கும் . ஒருவருக்கு தொழுநோயின் பாதிப்பு இருபது முதல் முப்பது ஆண்டுகள் வரை நீடிக்கும். இது ஒரு வகையான பயங்கரமான சித்திரவதை. இது ஒரு மனிதன் உயிரை கொஞ்சம்/ கொஞ்சமாக சித்திரவதையுடன் கொல்வது போன்றது.
யூத சட்டம் மற்றும் பழக்கவழக்கங்களின்படி, ஒரு தொழுநோயாளியிடம் இருந்து 6 அடி (2 மீட்டர்) தூரம் விலகி இருக்க வேண்டும். ஒரு தொழுநோயாளியிலிருந்து ஒருவரை நோக்கி காற்று வீசுகிறது என்றால், அவர்கள் 150 அடி (45 மீட்டர்) தொலைவு விலகி இருக்க வேண்டும். தொழுநோயாளியுடன் தொடர்புகொள்வதை விட தீங்கு விளைவிக்கும் ஒரே விஷயம் இறந்த உடலைத் தொடுவது தான்.
இந்த எல்லா காரணங்களுக்காகவும், தொழுநோயின் நிலை பாவம் மற்றும் அதன் விளைவுகளின் மாதிரியாகக் கொள்ளப்பட்டது.
இது பலவீனப்படுத்தும் ஒரு தொற்று நோயாகும். பாதிக்கப்பட்டவரை சிதைத்து, உயிருடன் இருக்கும்போதே அவரை இறந்த நிலைக்குத் தள்ளுகிறது. கிட்டத்தட்ட உலகளாவிய அளவில், சமுதாயமும், மத மக்களும் தொழுநோயாளிகளை அவமதித்தனர். ரபிகள் (யூதத் தலைவர்கள்) குறிப்பாக தொழுநோயாளிகளை வெறுத்தனர். மற்றும் அவர்களை பரிதாபத்திற்கோ , இரக்கத்திற்கோ தகுதி இல்லாத மக்களாக தேவனால் நியாயத் தீர்ப்புக் கொடுக்கப்பட்ட மக்களாகப் பார்த்தார்கள். குஷ்டரோகி எப்படி இயேசுவுடன் சந்தித்தார் என்பதை நாம் வாசிக்கலாம்.
'அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப்பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். இயேசு அவனை நோக்கி: இதை நீஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசேகட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். 'மத்தேயு 8:1-4
குஷ்டரோகியின் செயல்கள்
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
அந்த குஷ்டரோகி தனது முன்னேற்றத்தில் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல்,அவனுடைய அனைத்து ஏமாற்றங்களையும் மீறி, மிகுந்த தேவை மற்றும் விரக்தியுடன் இயேசுவிடம் வந்தான்.
அவனுடைய பிரச்சனை எவ்வளவு கொடுமையானது என்பது அவனுக்குத் தெரியும்.
நம்பிக்கை அற்ற நிலையில் மற்றவர்கள் தன்னை விட்டுக்கொடுத்ததை அவன் அறிவான்.
அவனை இயேசுவிடம் அழைத்துச் செல்லவோ, கூட்டிக்கொண்டு போகவோ யாருமே இல்லை.
அவனுக்கு நம்பிக்கை வரும்படியாக இயேசு ஒரு தொழுநோயாளியை குணப்படுத்திய முந்தைய உதாரணம் எதுவும் அவனிடம் இல்லை.
இயேசு தன்னைக் குணமாக்குவார் என்ற எந்த வாக்குறுதியும் அவனிடம் இல்லை.
இயேசுவிடம் இருந்தோ அல்லது அவரது சீடர்களிடம் இருந்தோ அவனுக்கு எந்த ஒரு அழைப்பும் இல்லை.
கூட்டத்தில் அவன் வெட்கமாகவும், தனியாகவும் உணர்ந்திருக்க வேண்டும்.
அவல நிலையில் இருந்த போதிலும், இந்த மனிதன் இயேசுவிடம் கெஞ்சியது மட்டுமல்லாமல் - அவரை வணங்கவும் செய்தான். “குஷ்டரோகிஒருவன் வந்து அவரைப் பணிந்து”
அவன் இயேசுவிடம் வந்து அவரை வணங்கி, அவனுடைய சாத்தியமில்லாத தேவையை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவராக அவரை கனம் பண்ணினான்.
அவன் இயேசுவை அவனது தோரணையால் வணங்கினான், அநேகமாக இயேசுவுக்கு முன் குனிந்து அல்லது மண்டியிட்டு "அவரைப் பணிந்து" என்று நாம் படித்தோம்.
அவன் இயேசுவை எஜமானராகவும், கடவுளாகவும் மதித்து "ஆண்டவரே" என்ற வார்த்தையால் வணங்கினான்.
அவன் இயேசுவை தாழ்மையோடு வணங்கினான். அவன் இயேசுவை கோராமல், கோரிக்கையை இயேசுவின் விருப்பத்திற்கு விட்டு அடிபணிந்தான்.
அவன் இயேசுவின் வல்லமையை மதித்து அவரை வணங்கினான். இயேசுவின் விருப்பம் மட்டுமே தேவை என்று கூறி , அவன் குணமாக்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன் சரணடைந்தான்.
இயேசு ஒருவரே தனக்கு சுகம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவன் இயேசுவை வணங்கினான்; இயேசு அவனை சுத்தமாக்க முடியும் என்ற விசுவாசத்தில் வணங்கினான்.
ஆண்டவரே, நீங்கள் விரும்பினால்: இயேசுவின் குணப்படுத்தும் திறனைப் பற்றி குஷ்டரோகிக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவனுடைய ஒரே கேள்வி இயேசு குணமாக்கத் தயாரா என்பதுதான்.
இயேசுவின் செயல்கள்
இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்குஉன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்
“இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு” இது இயேசுவின் தைரியமான மற்றும் இரக்கமுள்ள தொடுதல்.
நடந்தது என்னவென்றால், தொழுநோயாளி தம்மை இயேசுவிடம் இருந்து தூரத்தில் வைத்திருந்தான். ஆனால் அவர் கையை நீட்டி அவனைத் தொட்டார். தொழுநோயாளியைத் தொடுவது சம்பிரதாய சட்டத்திற்கு எதிரானது (வழக்கப்படி அவர் அவனிடமிருந்து 6 அடி தொலைவில் இருந்திருக்க வேண்டும்), இது பாதிக்கப்பட்ட நபருக்கு தொடுதலை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றியது. நிச்சயமாக, இயேசு அவனைத் தொட்டவுடன், அவனின் குஷ்டரோகம் இனி இல்லாமல் போயிற்று.
எனக்குச் சித்தமுண்டு: நான் தயாராக இருக்கிறேன் என்ற இயேசுவின் உத்தரவாதம் அந்த மனிதனின் கேள்விக்கு பதிலளித்தது மற்றும் இயேசு குணமாக்கத் தயாராக இருக்கிறாரா என்று நாம் ஆச்சரியப்படும் நேரத்திற்கான தொடக்க புள்ளியை நமக்குத் தருகிறது. இயேசு நமக்கு வித்தியாசமாக காட்டாத வரை குணமாக்க தயாராக இருக்கிறார் என்று நாம் கருத வேண்டும்.
“உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்” முன்னாள் தொழுநோயாளியின் வாழ்க்கை என்றென்றும் மாற்றப்பட்டது. அவன் குணமாக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவன் கேட்டுக் கொண்டபடி, "சுத்தமாக இரு" என்று சுத்தப்படுத்தப்பட்டான்.
இயேசு இரண்டு காரியங்களைச் செய்யும்படி கட்டளை இட்டார்.
1. யாரிடமும் சொல்லக்கூடாது - “இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு”
குஷ்டரோகி இயேசுவுக்குக் கீழ்ப்படியவில்லை என்று மாற்கு சொல்கிறார், அதற்குப் பதிலாக அவன் வெளியே சென்று சுதந்திரமாகப் பேசத் தொடங்கினான்.
'ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளைஅவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். அவனோபுறப்பட்டுப்போய்; இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர்வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.' மாற்கு 1:44-45
2. அதை ஆசாரியரிடம் காட்டு என்றார் - ஆசாரியர்களுக்கு சாட்சியம் அளிக்கும்படி அந்த மனிதனுக்கு இயேசு கட்டளையிட்டார். ஒரு தொழுநோயாளி குணமடைந்த பின் அதை ஆசாரியரிடம் தெரிவிக்கும் போது சில குறிப்பிட்ட பலிகளை இட வேண்டும் என்று மோசேயின் பிரமாணம் பரிந்துரைக்கிறது.
'குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில்கொண்டுவரப்படவேண்டும். ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்றுகண்டால், பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: ' லேவியராகமம் 14:1-3
இந்த சம்பவத்திலிருந்து ஆவிக்குரிய வாழ்வில் வளர நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
தினசரி அவரிடம் வந்து தாழ்த்தவும் - நாம் ஒரு குஷ்டரோகி ஆக இருக்க அவசியம் இல்லை, ஆனால் இயேசுவிடம் இரக்கம் தேடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் குஷ்டரோகி மனப்பான்மை ஒவ்வொரு நாளும் இருக்கட்டும்.
தினசரி அவரை தொழுதுகொள்ளுங்கள் - தொழுநோயாளியைப் போல நமக்கு யாரும் இல்லை என்ற உணர்வுடன் அவரை வணங்குவோம். உங்களுக்கு ஒரே நம்பிக்கை இயேசு மட்டுமே என்ற எண்ணத்தோடும் நீங்கள் செய்யும் பாவங்களை அவரால் மட்டுமே நீக்கமுடியும் என்ற எண்ணத்தோடும் தொழுதுகொள்ளுங்கள்.
உள்ளே சுத்திகரிப்பு - நமக்கு உடல் தொழுநோய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் நாம் யாரும் தொட்டு சுத்தம் செய்ய முடியாத வெறுப்பு மற்றும் அசுத்தமான விஷயங்களால் நிரம்பிய தொழுநோயாளியைப் போல இருக்கலாம், இயேசு மட்டுமே ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்த முடியும்.
அவருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுங்கள் - அவருடைய விருப்பப்படி உங்களைத் தொடும்படி அவரிடம் கேளுங்கள், உங்கள் ஒவ்வொரு செயலிலும் உங்களை நிரப்ப அவருடைய கிருபையை பெறுங்கள்.
நாம் இவைகளைச் செய்தால், அவர் ஒரு இரக்கமுள்ள தேவன், அவர் தமது கையை உங்கள் மேல் வைத்துக் காத்துக் கொள்வார், மேலும் அவர் குணமடையவும், சுத்தப்படுத்தவும், தினமும் உங்களை நடத்துவார்.
Comments