top of page
Kirupakaran

இயேசுவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை


கிறிஸ்துமஸ் என்பது கரோல்களைப் பாடுவதற்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கேக்குகள், பரிசுகள் வழங்குவதற்கும், கிறிஸ்துமஸ் மரம் அலங்காரம் செய்வதற்கும், சாண்டா (santa) இன்னும் இதுபோன்ற பலவற்றிற்குமான ஒரு பருவமாகும். இந்த கொண்டாட்டத்திற்கான முக்கியமானக் காரணத்தை நாம் தவற விட்டுவிட்டோம். இந்த கொண்டாட்டத்திற்கான காரணம் இயேசு.



மத்தேயு / மாற்கு / லூக்கா நற்செய்தியைப் படிக்கும்போது, ​​அது இயேசுவின் பிறப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது. லூக்கா 2:1-21 இல் பதிவு செய்யப்பட்டதை கீழே கொடுக்கும்படி தேர்ந்தெடுத்துள்ளேன்.


அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக்குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். லூக்கா 2:1-21


கிறிஸ்துமஸ் பண்டிகையில் இயேசுவைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.


இயேசு பிறப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்


லூக்கா 2:1-5 “அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்”.


  • இயேசு பெத்லகேமில் பிறந்தார், அது தற்செயலாக நடக்கவில்லை. அது நிறைவேறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட ஒன்று. "எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது". மீகா 5:2

  • வேதத்தில் இயேசு எங்கே பிறப்பார் என்று சொல்லப்பட்டிருந்ததோ அதே இடத்தில்தான் அவர் பிறந்தார். அங்கு அவர் வந்தடைந்ததைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் அற்புதமானவை. மரியாளும் யோசேப்பும் நாசரேத்தில் வாழ்ந்ததாக லூக்கா 2:4 சொல்கிறது. இந்த நகரம் பெத்லகேமுக்கு வடக்கே சுமார் 70 மைல் தொலைவில் உள்ளது.

  • மேசியா சரியான இடத்தில் பிறக்க வேண்டும் என்பதற்காக, சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி தொடர்ச்சியாக காரியங்கள் அதற்கேதுவாக நடந்தன. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் புறமத பேரரசர் அகஸ்துராயன் தனது குடிமக்கள் அனைவரும் பதிவு செய்து, வரி செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான இந்த உத்தரவு வெகு தொலைவிற்கும் அனுப்பப்பட்டது. அகஸ்துராயனின் உலகம் தற்போதைய 2020 உலகத்தைப் போல் இருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பழைய தகவல்தொடர்புகள் அனைத்தும் ரோமானிய வீரர்கள் மூலமே செய்தியை அறிவிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட இந்த செய்தி நாசரேத்தில் உள்ள யோசேப்புக்கும் மரியாளுக்கும் சென்றடைந்து, அவர்களது மூதாதையரின் ஊரான பெத்லகேமுக்குத் திரும்பும்படி செய்தது.

நமக்கான கற்றல்

  • ஆரம்பத்தில் பார்க்கும் போது, அது அதிக அர்த்தமில்லாதது போல் இருக்கலாம். ராயன் ஆட்சி செய்திருக்கலாம், ஆனால் தேவன் தம்முடைய பலத்தினால் ஆட்சி செய்கிறார் என்று அது நமக்குக் கற்பிக்கிறது. தீர்க்கதரிசிகள் சொன்ன இடத்தில் இயேசு பிறப்பதற்குத் தேவையான அனைத்து காரியங்களையும் தேவன் தம்முடைய ஏற்பாட்டில் உருவாக்கினார்.

  • அவரால் அதைச் செய்ய முடிந்தால், நிச்சயமாக அவரால் நமது சிறிய தேவைகளைக் கவனித்துக் கொள்ள முடியும்! சற்று நின்று, சர்வவல்லமையுள்ள நம் தேவனின் மகத்துவத்தையும், அவர் எவ்வளவு வல்லமையானவர், எந்தளவு செல்வாக்கு செலுத்த முடியும் என்பதையும் உணர்ந்து பாருங்கள்.

  • அப்படியானால், அவரை விசுவாசிப்பதற்குக் கற்றுக்கொள்வோம். அவரை விசுவாசிப்பதற்கு உங்களிடம் உள்ள அவிசுவாசத்தை நீக்குங்கள். அவரால் இதைச் செய்ய முடியுமானால், நம் வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களைச் செய்ய முடியாதா?


இடம் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது?

“அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்”. லூக்கா 2:7

  • இயேசு ஒரு தொழுவத்தில் பிறந்தார் என்பதை நாம் அறிவோம் - தொழுவம் அல்லது தொட்டி என்பது கால்நடைகளுக்குத் தீவனம் வைப்பதற்கான ஒரு நீண்ட திறந்த பெட்டி அல்லது விலங்குகளுக்கு தீவனத்தை வைக்க பயன்படும் ஒரு அமைப்பு.

  • தேவன் தம்முடைய ஒரே குமாரன் இயேசுவைக் கொண்டு வருவதற்கு ஏன் ஒரு தொழுவத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இங்கே உள்ள சத்தியத்தின் மகத்தான தன்மையை நீங்களும் நானும் புரிந்துகொள்ள ஆரம்பிக்கக் கூட முடியாது.

  • மத்தேயு 8:20 இல் இயேசு கூறுகிறார், அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்". இயேசு பிறப்பதற்கு ஒரு சிறந்த இடத்தை அல்லது அரண்மனையைத் தேர்ந்தெடுத்திருக்க முடியும், ஆனால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததது “மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்பதை நிரூபிப்பதற்கே.

  • நம்மீது கொண்ட அன்பின் காரணமாக, அவர் மனிதனின் ஆடம்பரங்களைப் புறக்கணித்து, தம்மைத் தாழ்த்திக் கொள்ளத் தொழுவத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பது தான், தொழுவம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கான இரண்டாவது சாத்தியமான பதில். "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே". 2 கொரிந்தியர் 8:9

நமக்கான கற்றல்

  • இயேசு தம்முடைய எல்லா வல்லமையோடும், பலத்தோடும் தாழ்த்தப்பட்டிருக்கும் போது, நாம் ஏன் பெருமையுடனும், கர்வத்துடனும் வாழ்கிறோம் என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். நீங்கள் பெருமைப்படும் பகுதிககளைக் குறித்து உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.

  • அவர் பெருகும்படிக்கும், நாம் சிறுகும்படிக்கும் நம்மைத் தாழ்த்திக் கொள்வோம். "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்". யோவான் 3:30

  • கிறிஸ்துவைப் போன்ற நடத்தைகள் நமக்குள் வருவதற்கு அதே அன்பு உங்கள் இருதயங்களிலும் பாயுமாறு ஜெபியுங்கள். இயேசுவை சிலுவையில் இருந்து எழுப்பிய அதே வல்லமை நம்மில் வாழும் ஆவிக்கும் இருக்கிறது என்று சிலுவையின் நிமித்தம், நமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்". ரோமர் 8:11


நற்செய்தி முதலில் மேய்ப்பர்களுக்கே அறிவிக்கப்பட்டது

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2:8-12


  • மேய்ப்பர்கள் - இவர்கள் ஆட்டு மந்தைகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தவர்கள்.

    • இந்த வேலை அசுத்தமாகவும் கடினமாகவும் இருந்தது. ஆண்கள் தங்கள் மந்தைகளை மேய்க்க இடங்களைத் தேடி அலைந்ததால் நீண்ட காலம் வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டியிருந்தது.

    • அவர்கள் பெரும்பாலும் முரட்டுத்தனமான, விரும்பத்தகாத மனிதர்கள். பாவம் நிறைந்த வாழ்க்கை மற்றும் தீய வழிகளுக்கு பெயர் பெற்றவர்கள்.

    • மேய்ப்பர்கள் பெரும்பாலும் சடங்கு முறைகளில் அசுத்தமாக கருதப்பட்டனர். அவர்களின் தொழிலுக்குத் தேவைப்படும் கடமைகளினால் அவ்வாறு எண்ணப்பட்டனர். மேலும், அவர்களின் பணி, அவர்கள் சுத்தப்படுத்தப்படக் கூடிய ஆலயத்திற்குத் தவறாமல் வருவதைத் தடுத்தது. இதன் விளைவாக, இவர்கள் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர்.

  • இந்த மனிதர்களுக்கே கர்த்தருடைய தூதன் நற்செய்தியை அறிவித்தான். "பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்".

  • ராஜாக்களும் சாஸ்திரிகளும் - மேய்ப்பர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டாலும், பிறப்பின் அடையாளங்கள் சாஸ்திரிகளுக்கும் கொடுக்கப்பட்டன. மேய்ப்பர்களுக்கு செய்யப்பட்டது போல நற்செய்தியை அறிவிக்க அவர்களுக்கு எந்த ஒரு தூதனும் தோன்றவில்லை."ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்". மத்தேயு 2:1-2

  • மேய்ப்பர்கள் இரட்சகரின் பிறப்பு பற்றிய நற்செய்தியைக் கேட்டவுடன், அவர்கள் தங்கள் ஆடுகளை மலைகளில் விட்டுவிட்டு, கர்த்தராகிய இயேசுவைக் காண பெத்லகேம் ஊருக்குள் ஓடிவந்தார்கள். அவர்கள் வந்ததும், தேவதூதன் சொன்னபடியே அனைத்தும் இருப்பதைக் கண்டார்கள். என்ன ஒரு கிருபையின் காட்சி! தூதன் சொன்னதற்கு அவர்கள் அப்படியே கீழ்ப்படிந்தார்கள்.

  • மேய்ப்பர்கள் தாங்கள் அனுபவித்த விஷயங்களின் மகத்துவத்தை உணர்ந்தவுடன், அவர்கள் சந்தித்தவர்களிடம் எல்லாம் செய்தியைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். தொழுவத்தில் உள்ள குழந்தை, கர்த்தராகிய கிறிஸ்துவைப் பற்றி அவர்கள் அனைவருக்கும் சொன்னார்கள். மேய்ப்பர்களாலே சொல்லப்பட்டதைக் கேட்ட மக்கள், மேய்ப்பர்கள் இதுபோன்ற ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர்.

நமக்கான கற்றல்

  • பாவிகளை மீட்பதற்காக இயேசு இவ்வுலகிற்கு வந்தார். "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்". 1 தீமோத்தேயு 1:15

  • நாம் யார் என்ற காரணத்தினாலோ அல்லது நமது கடந்தகால வாழ்க்கையில் நாம் செய்தவற்றினாலோ மக்கள் நம்மை வெறுப்புடன் கீழாகப் பார்க்கக்கூடும். ஆனால், பரலோகத்தில் ஒரு தேவன் இருக்கிறார், அவர் நாம் செய்த அனைத்தையும் தாண்டி நம்மை நேசிக்கிறார், அதுதான் நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு. நாம் என்ன பாவம் செய்திருந்தாலும், நாம் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார். நாம் அவரிடம் திரும்பி வரக் காத்திருக்கிறார். அப்பொழுது தான் அவர் நம்மைத் தம் இரத்தத்தால் கழுவி, அவருடைய ராஜ்யத்திற்கு அழைத்துச் சென்று நித்திய வாழ்க்கையைத் தர முடியும்.

  • மேய்ப்பர்களைப் போல, உங்களுக்கும் அழைப்பு வந்தால், அதற்குக் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர். "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை". யோவான் 6:37

  • மேய்ப்பர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர், இது தாவீது சங்கீதம் 119:103 இல் சொல்லியதைப் போல அவர்களுடைய அனுபவத்தில் இருந்து வந்தது. "உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்". சங்கீதம் 119:103. இது இயேசுவிடம் இருந்து கிருபையை அனுபவித்தால் மட்டுமே வரும்.

  • அதைப் பற்றி அமைதியாக இருப்பது நல்லது அல்ல என்பது தான் கிருபையின் நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் ஒன்று. நீங்கள் அதன் வல்லமையை அனுபவித்தவுடன், மற்றவர்களும் அதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். உண்மையில், இயேசுவின் மூலம் இரட்சிப்பின் நற்செய்தியை அறிந்தவர்கள், அந்த நற்செய்தியை அவர்கள் வாழ்க்கையில் கடந்து செல்லும்போது சந்திக்கும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தெய்வீகக் கடமையின் கீழ் உள்ளனர்.

  • மாற்கு 16:15 - "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்".

  • அப்போஸ்தலர் 1:8 - "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்".


எனவே கொண்டாட்டத்திற்கான காரணம் கிறிஸ்துவே. உங்கள் செயல்களின் மூலமும், எப்படிப் பேசுகிறீர்கள், எப்படி செயல்படுகிறீர்கள் என்பதின் மூலமும் இயேசுவின் நாமம் பிரசங்கிக்கப்படட்டும். ஒவ்வொரு செயலும் கிறிஸ்து உலகில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை பிரதிபலிக்கிறது.


கிறிஸ்துமஸ் மரம் / கரோல்கள் / பரிசுகள் இவைகளில் கவனம் செலுத்தி, "கிறிஸ்து" தான் கொண்டாட்டத்திற்கான உண்மையான காரணம் என்பதைத் தவற விட்டுவிட வேண்டாம்.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page