top of page
Kirupakaran

ஆவிக்குரிய நிச்சயதார்த்த விதிகள்



நிச்சயதார்த்த விதிகள்” என்ற இந்த சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது பாதுகாப்பு துறையில் (இராணுவம் / கடற்படை மற்றும் விமானப்படை) எல்லோராலும் கடைபிடிக்கப்படும் ஒன்று. ராணுவத்தில் பணிபுரிபவர்களின் முதன்மை குறிக்கோள் நாட்டைப் பாதுகாப்பதாகும் .இதற்கு தங்களைக் கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் ஒரு போரில் எவ்வாறு இருக்கவேண்டும், ராணுவ தளத்தில் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அதை கண்டிப்பாய் கடைபிடித்தே ஆகவேண்டும்.


கிறிஸ்தவர்கள் ஆகிய நாம், நம்முடைய தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள். அவர் நமக்கு கிருபையும் / தயவும் தந்து நம்மைப் பாவத்தில் இருந்து காத்துக் கொள்கிறார். இதன் மூலம் தம்முடைய நித்தியப் பாதையில் நடக்க வழி வகுக்கிறார். இந்த கிருபையும் / தயவும் நம்மைப் பாவத்தில் இருந்து விலக்கி அவருடைய நியாயத்தீர்ப்பின் நாளில் நம்மை நித்தியத்திற்கு கூட்டிச்செல்ல உதவுகிறது.


ஆனால், நாம் இந்த உலக வாழ்க்கையில் பாவ சோதனையில் அனுதினமும் போராடுகிறோம். ஒரு புறம் கிருபை / இரக்கம் மற்றொரு புறம் பாவப் போராட்டங்கள். இப்படி இருக்க நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை இவ்வுலகில் எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஒரு ராணுவ வீரர் போர்க்களத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வாரோ அதைப் போல தான் நம்முடைய வாழ்வும் இந்த உலகத்தில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் இந்த கிருபை / இரக்கம் மூலம் நாம் நித்தியத்தை அடைய முடியும்.


'முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள்இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள். ' 1 பேதுரு 2:10


நம்மை நீதியின் பாதையில் கொண்டு செல்வதற்கு, இந்த உலகில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பேதுரு விளக்குகிறார். இதை உலகத்துடன் ஈடுபடுவதற்கான விதிகள் என நாம் அழைக்கலாம். எப்படி ஒரு இராணுவ வீரர் போரில் நடந்து கொள்வதற்கு விதிகள் உள்ளதோ அது போல கிறிஸ்தவர்களாகிய நாமும் உலகத்துடன் ஈடுபடுவதற்கான விதிகளைப் பின்பற்றி எவ்வாறு ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்செல்லவேண்டும் என்ற ஒரு வரையறையைக் காண்போம்.


உலகில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான விதிகள்


இவற்றில் பல 1 பேதுரு 2: 11-25 மற்றும் 1 பேதுரு 3 இல் கூறப்பட்டுள்ளன. அவற்றை இங்கே சுருக்கமாகக் கூறியுள்ளேன். அந்த விதிகளைப் புரிந்துகொள்ள அந்தந்தக் குறிப்புகளையும் சுற்றிக்காட்டி உள்ளேன்.


1. வெளிநாட்டினர் / அந்நியர்கள் போல வாழ வேண்டும்


'பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளைவிட்டு விலகி, புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய்நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். '1 பேதுரு 2:11-12


  • 'பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற - ஒரு நாட்டைச் சேர்ந்தவர், வேறொரு நாட்டில் எப்படி வாழ்வாரோ அதைப் போல, நாம் இந்த உலகத்தைக் கருத வேண்டும். இதைச் சொல்வது சுலபம் , கடைப்பிடிப்பது மிகக் கடினம். நாம் இந்த உலகில் வாழும் பொழுது பல காரியங்களால் கவரப்படுகிறோம். இந்த உலகில் நிரந்தரமாக இருக்கப் போகிறது போல பல காரியங்களைச் செய்கிறோம். அதனால், மரணம் நம்மை சந்திக்கும் போது நம்முடைய நித்திய வாழ்க்கையை நாம் இழந்து விடுகிறோம்.

  • வெளிநாட்டவர் போல் வாழ வேண்டும் என்றால் ஒரு சந்நியாசியைப் போல தான் வாழ வேண்டுமா?, அப்படி இல்லை, தேவனுக்கு சித்தமானதை செய்வதும், அவர் காண்பிக்கும் வழியில் நடப்பதுமே நம்முடைய பிரதான காரியங்களாக இருக்க வேண்டும். இப்படி நடக்கும் போது அவர் நம்முடைய உலக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார். இது ஒரு வேளை நீங்கள் எதிர்பார்த்த ஒன்றாக இருக்காது. ஆனால், கண்டிப்பாக உங்களைக்கைவிடமாட்டார்.

  • ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி” - ஒரு கிறிஸ்தவராக இருப்பது என்பது மாம்சத்திற்கு விரோதமாகப் போராடுவதாகும். மேலும், நாம் இந்த மாம்சத்தில் வாழும் வரை இந்தப் போர் தொடர்கிறது. பல சமயங்களில், நம் இச்சைகள் நம் உடலையும் அழிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, குடிப்பழக்கம் கல்லீரல் பாதிப்பை உருவாக்குகிறது, பாலியல் இச்சைக்கு அடிமையாதல் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்க்கு வழிவகுக்கும்.

  • அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” நாம் இவ்வாறு நடக்கும் போது, பலரால் பரியாசம் செய்யப்படுவோம். அதைக் கண்டு மனம் மாறாமல் தொடர்ந்து தேவனுக்கு சித்தமானதைச் செய்யுங்கள். அப்படி நாம் தேவனில் நிலைத்து இருந்தால், புறஜாதியினர் நம்மைக் கண்டு அவர்களும் நல்ல வழிக்கு மாறுவார்கள். அது மட்டும் அல்லாமல் நியாயத்தீர்ப்பின் நாளில் அவர்கள் வந்து நமக்கு சாட்சியாய் தேவனிடத்தில் நம்மை மகிமைப்படுத்துவார்கள். கொஞ்சம் இந்தக் காட்சியை கற்பனை பண்ணிப் பாருங்கள்.


2. உலக அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கவும்


'நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிருக்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ளராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படிஅவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. '1 பேதுரு 2:13-15

  • அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியவும், விதிகளைக் கடைபிடிக்கவும் , "கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்" என்று கூறுகிறார் 'நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிருக்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்,”

  • பல நேரம் ஆட்சியாளர்கள் / அதிகாரிகள் பல விஷயங்களைச் சரியாகச் செய்யவில்லை என்று கருதுவோம், ஆனால் தொடர்ந்து கீழ்ப்படியுங்கள். கடவுள் எது சரி / தவறு என்று தீர்ப்பளிப்பார், யாரையும் நியாயம் தீர்ப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.

  • இவ்வாறு கீழ்ப்படிவதின் மூலம், நாம் அவதூறு கூறும் பலருக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் “நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது..”


3. நம் சுதந்திரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல்


'நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிருக்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள்சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். எல்லாரையும்கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். '1 பேதுரு2:13,16-17


  • பல நேரம் இந்த சுய சுதந்திரம் மூலம் பல பாவ காரியங்கள் நம்மில் விளைகிறது, அப்படி என்றால் தேவன் ஏன் நமக்கு இந்த சுதந்திரத்தை தந்தார் ? இது தராமல் இருந்தால் நாம் பாவம் அற்றவர்களாக இருப்போம் அல்லவா?

  • “சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல் “– நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட இந்த சுய சுதந்திரத்தை நம் பாவங்களை மறைக்க உபயோகிக்கிறோம்.

  • தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்” தேவனோடு ஒரு அடிமை மனப்பான்மையுடன் வாழுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் இதயங்கள் கடவுளின் குணங்களால் நிரப்பப்படும். அது உங்கள் செயல்கள் மூலம் வெளிப்படும். பலரிடம் பேசும் போது அந்த அன்பு வெளிப்படும். சமாதானத்தை விரும்புவீர்கள். வீண் சண்டைக்குப் போகமாட்டீர்கள்.


4. உங்கள் மனித எஜமானர்களுக்கு சமர்ப்பிக்கவும்


'நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிருக்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். வேலைக்காரரே, அதிக பயத்துடனேஉங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம்ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். '1 பேதுரு2:13,18-19


  • எஜமானர்களுக்கு (நீங்கள் ஒரு நிறுவனத்தின் ஊழியராக இருந்தால் முதலாளிகள்) சமர்ப்பிக்க நம் தேவன் அறிவுறுத்துகிறார். நல்ல எஜமானர்களுக்கு கீழ்ப்படிவது நமக்கு மிக சுலபமான ஒன்று. ஆனால், "முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்." என்று வேதம் கூறுகிறது. இதை, மனித பயபக்தியால் மட்டுமல்ல, தேவனுக்குப் பயப்படுவது போல நாம் கீழ்ப்படியவேண்டும்.

  • இவ்வாறு கீழ்ப்படியும் போது நாம் பல நிந்தைக்குள் நடத்தப்படுவோம். ஆனால், அது தேவனின் பார்வையில் உகந்ததாக இருக்கும்.

5. கணவன் / மனைவி


'அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவதுதிருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத்தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகியகிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். '1பேதுரு 3:1,7


  • மனைவிகள் தங்களை கணவரிடம் சமர்ப்பிக்கும்படி பேதுரு கூறுகிறார், "'அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்" .சில கணவர்கள் தங்கள் மனைவிகளை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். சிலர் அவ்வாறு பார்த்துக் கொள்வதில்லை. ஆனால், அதனைக் காரணம் காட்டி இந்த உபதேசத்திற்குக் கீழ்ப்படியாமல் இருக்காதீர்கள்.

  • தேவனின் வார்த்தை கூறுகிறது; கணவர்களே, மனைவிமாரை மரியாதையுடன் நடத்துங்கள். உங்கள் மனைவி மூலமாக தான் குழந்தைகளை உங்களுக்கு ஆசீர்வதமாகக் கொடுத்தார். அதன் நிமித்தம் அவர்களை மரியாதை உடன் நடத்துங்கள். “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால்”, …


விதிகளைக் கடைப்பிடிக்கும் போது இருக்கும் விளைவுகள்


எல்லாம் இழந்ததை போல ஒரு உணர்வு


இந்த ஐந்து காரியங்களைக் கடைப்பிடித்தால் நான் உலகில் உள்ள அனைத்தையும் இழப்பேன், நான் பலரைப் போல இருக்க மாட்டேன், பிழைக்கத் தெரியாதவன் என்று பலர் என்னைப் பார்த்து நகைப்பார்கள் என்று எல்லாம் உங்களுக்குப் பல எண்ணங்கள் உண்டாகலாம்.


ஆண்டவருக்கு இந்த உலக வாழ்க்கை தெரியாமல் இல்லை. இருந்தும் ஏன் நம்மை இவ்வாறு இருக்கக் கூறுகிறார்? இந்த உலகத்தில் அனுதினமும் பாவப் போராட்டங்கள் உண்டு என்று பல முறை ஏசு கூறுகிறார். ஆனால் அவர் நமக்குக் கிருபையும் / இரக்கமும் தந்து இந்தப் பாவ வாழ்க்கையை எதிர்கொள்ள உதவுகிறார். ஒரு வேளை நீங்கள் இதைக் கடைப்பிடிக்கும் போது பாவத்தில் விழலாம். ஆனால், விழுந்த பிறகு மறுபடியும் தேவ மன்னிப்பைப் பெற்று அவர் கூறும் வழியைக் கடைபிடியுங்கள். கீழே விழுந்து விட்டோம் என்று அவரை விட்டுப் பின் வாங்காமல் இருங்கள்.


நம்முடைய தேவன் ஒரு நாளும் நம்மைக் கைவிடமாட்டார். தம்மைப் பின்பற்றும் பிள்ளைகளைக் கண்டிப்பாகக் கைவிடமாட்டார். பாடுகள் / உபத்திரவங்கள் வரும். ஆனால், தேவனின் கரம் நம்மைக் காத்து வழிநடத்தும். இந்தப் பாடுகளின்மத்தியிலும் உங்களுக்கு சமாதானம் இருக்கும். அது தான் அவர் உங்களோடு இருக்கிறார் என்பதற்கு ஒரே அடையாளம். தேவனிலே விசுவாசம் கொள்ளுங்கள். அவரே அனுதினமும் உங்களுக்கு ஆலோசனை கூறி வழி நடத்துவார்.


நம் தேவன் வைராக்கியத்தின் தேவன். தமது பிள்ளைகளை யாரும் ஏளனமாகப் பேசும்படி நம் நிலைமையை வைத்து இருக்க மாட்டார். கண்டிப்பாக ஒரு வழி காட்டி நம்மை கண்ணியமாக இருக்க வைப்பார்.


'நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள்நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். ' 1 பேதுரு 2:20


அவர் நமக்கு ஒரு கோட்டையும் / அடைக்கலமும் ஆனவர்


நீதியுள்ளவர்களின் பாதையில் நீங்கள் நடந்தால், ஏசுகிறிஸ்து நமக்கு அடைக்கலமாக இருப்பார்.


'கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். ' நீதிமொழிகள் 18:10


உலகின் சவால்களை நாம் அவரிடம் கொண்டு வரும் போது நீதிமான்களாகிய நம்மைப் பாதுகாக்க அவர் ஒரு அரணாய்இருப்பார்.

தொற்றுநோய் அல்லது பஞ்சம் போன்ற அனைவரையும் பாதிக்கக்கூடிய பல விஷயங்கள் இருக்கலாம், ஆனால் தேவன் உங்களைப் பாதுகாப்பார், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.


எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அவர் தமது மக்களைப் பாதுகாக்கும் வைராக்கியம் கொண்ட தேவன். யாரும் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது.


அவருடைய பிள்ளைகள் மீது கண்கள் மற்றும் காதுகள் இருக்கும்


'கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக்கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. ' 1 பேதுரு 3:12


தேவன் நீதிமான்களை தமது காதுகளாலும் கண்களாலும் கவனத்துடன் நோக்குகிறார் என்பதை நினைவில் வையுங்கள். நமக்கு தீங்கு விளைவிக்கும் பிசாசின் திட்டங்கள் எதுவும் வாய்க்காது. அவர் அனுமதிக்கும் சில போராட்டங்கள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை இன்னும் இறுக்கமாக இருக்கத்தான். எனவே, நீங்கள் படும் போராட்டங்களை குறித்துக் குழப்பம் கொள்ள வேண்டாம்.


கிறிஸ்தவ வாழ்க்கை எப்போதுமே போராட்டங்களால் நிறைந்திருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், தேவனின் சமாதானம் அந்த போராட்டத்தின் மத்தியில் நமக்கு சமாதானத்தைத் தரும்.


அனுதினமும் அவரிடம் ஜெபியுங்கள். அது தான் அவருடைய காதுக்கு எட்டும். அது தான் அவருடைய பார்வையை நம் மீது கவனம் கொள்ள செய்யும்.


எனது சொந்த வாழ்க்கையில் நிச்சயதார்த்த விதிகளை ஒப்பிட்டுப் பார்த்தேன். பூஜ்யம் மதிப்பு கொடுத்துக்கொண்டேன். சில சூழ்நிலைகளில் சிலவற்றைப் பின்பற்றி இருக்கிறேன். அநேக சமயங்களில் விதிகளைப் பின்பற்றவில்லை. பாவத்தில் சிறிய பாவம் / பெரிய பாவம் என்று எதுவும் இல்லை, பாவம் பாவம் தான். ஆகவே, தேவனின் தரநிலைகள் மிக உயர்ந்தவை என்பதால், நான் ஒருவரை விட சற்று சிறந்தவன் என்று சொல்ல முடியாது. கடவுளின் பார்வையில் உங்கள் வழிகளை உயர்த்த முயற்சி செய்யுங்கள்.


நாம் நினைப்பதை ஒப்பிடும்போது தேவனின் தரங்கள் மிக உயர்ந்தவை என்பது தேவன் எனக்குப் புரியவைத்த ஒரு விஷயம். நாம் இதில் சற்று விலகினால், நாம் தேவனின் பிள்ளைகள் அல்ல என்று அர்த்தமல்ல. ஆம், நாம் வீழ்ச்சியடையக்கூடும், ஆனால் தவறுகளை உணர்ந்தவுடன் மீண்டும் இதற்குள் செல்லக்கூடாது என்பதுதான் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் கடவுள் எதிர்பார்க்கும் அணுகுமுறை. இதுவே நித்தியத்தின் பாதைக்கு நம்மை வழிநடத்தும்.


Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page