இந்தியாவில், நாம் அடிக்கடி திருமணங்களுக்கு அழைக்கப்படுகிறோம். அவை நண்பர்கள் / அண்டை வீட்டார் அல்லது நமது குடும்ப திருமண அழைப்புகளாக இருக்கும். அந்த அழைப்பை நாம் ஏற்று அந்த விழாக்களுக்குச் செல்லும் விதம் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருக்கும். சில நண்பர்கள் / அண்டை வீட்டார் திருமணங்களுக்கு உறவை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், அவர்களை புண்படுத்தாமல் இருக்கவும் மரியாதை நிமித்தமாக திருமணத்திற்குச் செல்கிறோம். சுருக்கமாக கூறினால், நட்பின் கட்டாயத்தின் நிமித்தமாக மட்டுமே கலந்து கொள்கிறோம். அதே போல், சில நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வீட்டு திருமணங்களுக்கு நமக்கு அழைப்பிதழ் கூட தேவையில்லை, அந்த திருமணத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். நம் பொறுப்புக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் செய்யத் தயாராக இருப்போம்.
அதே போல், நாமும் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்துவை நீண்ட காலமாக அறிந்திருக்கலாம். இன்று இயேசு உங்களுக்கு அழைப்பு கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? "என்னிடம் வாருங்கள்" என நமக்கான அழைப்பு மத் 11:28 இல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். ' மத்தேயு11:28
நீங்களும் நானும் இயேசுவைப் பற்றி இவைகளையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவருக்குப் பதில் என்ன செய்தோம்? அவர் யார் / அவர் என்ன செய்தார் என்ற உண்மை பழைய காலத்து மக்களுக்கு இருந்ததை விட மிகத் தெளிவாக நமக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் எழுதி, பதிவு செய்யப்பட்டு, ஒழுங்காக கணக்கில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவருடைய அழைப்புக்கு உண்மையிலேயே அவரிடம் வருகிறோமா?
ஒரு கட்டத்தில், அவரைப் பற்றி பைபிள் சொல்வதை நம்பியதால், நாம் அவரிடம் “வந்தோம்” என்று நினைக்கலாம். ஒரு சிலர் "நீண்ட காலத்திற்கு முன்பே" நான் அவர் மீது ஒரு "அறிவுமிக்க" நம்பிக்கையை வைத்துள்ளேன், இன்றும் அந்த நம்பிக்கையை நான் கடைப்பிடிக்கிறேன் என்று கூறலாம். அவரது அழைப்பு தனிப்பட்டது. அவர், “என்னிடம் வா” என்கிறார்.
மத் 11:28-30 இல் சொல்லப்பட்டுள்ள "என்னிடம் வா..." என்ற இந்த அழைப்பின் வார்த்தை மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஒரு பாதுகாக்கும் அழைப்பு
ஒரு புனிதப்படுத்தும் கட்டளை
ஒரு திருப்திகரமான வாக்குறுதி
ஒரு பாதுகாக்கும் அழைப்பு
'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். ' மத்தேயு11:28
யாருக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது? - இந்த அழைப்பு யாருக்காக வழங்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது "'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களுக்கு". நியாய பிரமாணத்தின் கிரியைகளினால் தேவனுடைய நீதியைப் பெற முயற்சிக்கும் பயங்கரமான சுமையினால் வருத்தப்பட்டு, பாரம் சுமப்பவர்களுக்கு இது ஒரு அழைப்பு.
சோர்வுற்றவர்களின் சூழல் – வேதபாரகர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு இணங்குதல் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருப்பதை போதித்ததால், அவர்களுக்கு இயேசு இதை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.'பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில்உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டுசெய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத்தொடமாட்டார்கள். 'மத்தேயு 23:1-4
சுமையின் சூழல் - பாவத்திற்காக தேவனின் தீர்ப்பு தான் அந்தச் சுமை. அதை இயேசு தாமே கல்வாரி சிலுவையில் சுமந்த போது பாவத்தின் சுமையிலிருந்து நம்மை விடுபடச்செய்தார். நம்முடைய பாவங்களை இயேசு தாமே தன் மீது சுமந்தார்.
சுமையின் தற்போதைய சூழல் - நம் வாழ்வில் நாம் செய்யும் பாவங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சோதனைகள் மற்றும் தூண்டுதல்களால் நாம் பாரம் சுமந்து கொண்டே இருக்கிறோம். மாம்சத்தின் பலவீனங்களால் நாம் பாரம் சுமக்கிறோம். நோய் அல்லது வலியின் நேரங்களில் நாம் அவதிப்படுகிறோம். கவலைகள், துக்கங்கள், ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளால் நாம் பாரமாக இருக்கிறோம். நமது எதிரியான பிசாசின் தாக்குதல்களை நாம் அடிக்கடி அனுபவிக்கிறோம். அன்றாடப் போராட்டங்களால் நாம் எவ்வளவு சோர்ந்து போயிருக்கிறோம், வாழ்க்கையின் இன்னல்கள் மற்றும் சோதனைகளால் எவ்வளவு பாரத்தோடு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இவை அனைத்தையும் பற்றி இயேசு அறிந்திருக்கிறார். நாம் அவரிடம் வந்து நம் கவலைகள் அனைத்தையும் அவரிடம் சொல்வதின் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ள அவர் நம்மை அழைக்கிறார். அவர் நம்மை அற்புதமாக கவனித்து கொள்வார் என்று வேதம் கூறுகிறது. 'நீங்கள்ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும்வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள்இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’. பிலிப்பியர் 4:6-7
இயேசுவினுடைய வாக்குத்தத்தம் தேவனுக்கு முன்பான நீதியின் ஆழமான காரியங்களுக்குப் பொருந்துவது போல வாழ்க்கையின் அன்றாட சோதனைகளுக்கும் பொருந்தும்.
ஒரு புனிதப்படுத்தும் கட்டளை
'நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 'மத்தேயு 11:29
இயேசு கொடுக்கும் அடுத்த வார்த்தைகள் கட்டளை வடிவில் உள்ளன. அவருடைய அழைப்பு, அவரிடம் வந்து கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கான அழைப்பாக இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவர் கூறுகிறார், “என் நுகத்தை உங்கள் மீது எடுத்துக்கொண்டுஎன்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”. நாம் இதை ஒரு "பரிசுத்தப்படுத்தும்" கட்டளையாக பார்க்கலாம், ஏனெனில் இதில் நாம் இயேசுவோடு நெருங்கி வளர்வோம். மேலும் நாம் அதற்கு கீழ்ப்படிவதால் அவரைப் போலவே பரிசுத்தமாக்கப்படுகிறோம்.
கட்டளை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது
பகுதி 1
முதலில் "என் நுகத்தை உங்கள் மீது எடுத்துக் கொள்ளுங்கள்", இயேசு தன்னிடம் வருபவர்களிடம் தம் "நுகத்தை" எடுத்துக்கொள்ளும்படி கட்டளையிடுகிறார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்களைப் போல நம்மில் பலருக்கு நம் கலாச்சாரத்தில் நுகம் என்றால் என்ன என்பது தெரியாது. நுகம் என்பது ஒரு பெரிய மர குறுக்குவெட்டு ஆகும். அது சுமை தூக்கும் எருதுகள் போன்ற விலங்குகளின் கழுத்தில் பொருத்தப்படும் வகையில் கவனமாக செதுக்கப்பட்டது. அது இரண்டு விலங்குகளை ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் வகையில் செய்யப்பட்டது. தோல் பட்டைகளால் பிணைக்கப்பட்டிருக்கும்.இதனால் விலங்குகள் ஒன்றாக சுமையை சுமக்க அல்லது ஒன்றாக வேலை செய்ய முடியும். இது மிருகத்தின் விருப்பத்தை அடக்கி எஜமானரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஒரு கருவியாகும்.
"நுகம்" என்ற சொல் வேறொருவருக்கு அடிபணிந்திருப்பதன் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது - ஒரு எஜமானரின் அதிகாரத்தின் கீழ் அடிமை நிலையில் இருப்பது. வேலையாட்கள் தங்கள் எஜமானரின் அதிகாரத்தை கனம் பண்ண கற்றுக்கொடுக்கும்படி அறிவுறுத்தி பவுல் தீமோத்தேயுவுக்கு கடிதம் எழுதினார். 'தேவனுடைய நாமமும் உபதேசமும்தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களைஎல்லாக்கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள். ' 1 தீமோத்தேயு 6:1
நாம் இயேசுவின் நுகத்தை எடுத்துக் கொள்ளும்போது, நாம் ஒரு பழைய பாரத்தை-அதாவது நியாயப்பிரமாணத்தின் சுமையை தேவனுக்கு முன்பாக விட்டு வெளியே வருகிறோம். நியாயப்பிரமாணம் நம்மைக் கண்டித்து சாபத்தின் கீழ் மட்டுமே கொண்டு வரும். ‘நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே’. கலாத்தியர் 3:10
நாம் இயேசுவிடம் வரும்போது, நமக்கு வாழ்வளிக்கும் ஒரு பாரத்தை எடுத்துக்கொள்கிறோம். நம் சார்பாக நியாயப்பிரமாணத்தை சரியாகக் கடைப்பிடித்தவருடன் நாம் உறவில் நுழைகிறோம். நாம் அவருடன் ஐக்கியமாக நடக்கும்போது பரிசுத்த ஆவியின் மூலம் இப்போது ஜீவனுள்ள வாழ்க்கையில் நடக்கிறோம்.
பகுதி 2
இயேசு இங்கே சொல்லும் இரண்டாவது விஷயம் என்னவென்றால், நாம் அவருடைய நுகத்தை எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, “என்னிடமிருந்து கற்றுக்கொள்ளவும் . . ."
இயேசு, நாம் அவருடைய மாணவராக, அவருடைய சீடராக ஆக வேண்டும் என்று இங்கே நமக்குக் கட்டளையிடுகிறார்.
கற்றுக்கொள்ள வேண்டியவைகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் - அவர் நமது ஆவிக்குரிய ஆசிரியர் என்ற அர்த்தத்தில். நாம் அவரிடம் வரும்போது, அவரிடமிருந்தும் அவரைப் பற்றியும் கற்றுக்கொள்கிறோம். நாம் கற்பதற்கும், நமக்கு கற்பிக்கப்படும் பாடத்திற்கும் அவர்தான் காரணம்.
ஒரு திருப்திகரமான வாக்குறுதி
'நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.' மத்தேயு 11:29-30
அவரைப் பற்றி நமக்கு ஒரு வாக்குறுதி இருக்கிறது. கடினமான பணி நிர்வாகிகள் மற்றும் பாரமான நியாயபிரமாண ஆசிரியர்களைப் போல அல்லாமல், "'நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில்கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் " என்கிறார்.
இயேசு தாம் "சாந்தமானவர்" என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறார். தம் நுகத்தின் கீழ் வருபவர்களிடம் அவர் கடுமையாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ இல்லை. அவர் தமது ஊழியர்களை அடிப்பதில்லை. அவர் அவர்களை நேசிக்கிறார். அவர்களுக்கு நல்லவராக இருக்கிறார், இரக்கம் காட்டுகிறார். அவருக்கு நம் மீதான அணுகுமுறையைப் பற்றி இது பேசுகிறது.
மேலும் அவர் “தாழ்மையான இருதயமுள்ளவர்" என்பதையும் நமக்குத் தெரியப்படுத்துகிறார். இப்போது புரிந்து கொள்ளுங்கள்: அவர் தமது இருப்பில் ஒருபோதும் "தாழ்த்தப்பட்டவர்" அல்லது "தாழ்மையானவர்" அல்ல. அவர் ராஜாக்களின் ராஜா மற்றும் பிரபுக்களின் தேவன், ஆனால் பாரம் சுமந்து களைப்போடு அவரிடம் வருபவர்களுக்கு அவர் “தாழ்ந்த இருதயம் உள்ளவர்”. ஒரு கணம் இதை நினைத்துப் பாருங்கள், ராஜாக்களின் ராஜாவாக அவருக்கு அவ்வளவு வல்லமை இருக்கிறது. இருந்தும் அவர் நம்மை ஏற்றுக் கொள்வதற்குதாழ்மையுள்ளவர் என்று கூறுகிறார்.
அவர் எவ்வளவு அற்புதமான ஆசிரியர். அவருடைய மாபெரும் அழைப்பை ஏற்க நாம் ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை. நாம் அவரிடம் வந்து, நாம் இருப்பது போலவே அவரிடம் நெருங்கி வரலாம். நாம் நெருங்கி வருவதற்கு எவ்வளவு வாஞ்சையாக இருக்கிறோமோ,அவ்வளவு நாம் அவரை நெருங்கலாம். அவர் எப்போதும் நம்மை அன்புடன் வரவேற்பார். நம்மால் தாங்கிக் கொள்ள முடியாததை அவர் ஒருபோதும் கொடுக்க மாட்டார்; ஆனால் எப்பொழுதும் நம்மைப் பலப்படுத்தி, அவர் நம்மீது சுமத்துகிற பாரத்தைச் சுமக்க உதவுவார். ஏனெனில் அவர் “உங்கள் ஆன்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஏனெனில் என் நுகம் மெதுவானது, என் சுமை இலகுவானது”என்று கூறுகிறார்.
இதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்பு, “என்னிடம் வா” என்று அவர் விடுத்த அழைப்பிற்கு உங்கள் பதில் என்ன?
அவருக்கு முன்பாக உங்கள் சொந்த உதவியற்ற தன்மையின் சுமையின் கீழ் உழைத்து, சுமையாக இருக்கும் ஒருவராக நீங்கள் ஆழ்ந்த தேவையில் அவரிடம் வந்திருக்கிறீர்களா?
"ஒருமுறை" மட்டுமே நீங்கள் அவரிடம் வந்திருக்கிறீர்களா?
தொடர்ந்து அவரில் நிலைத்திருக்கும் விதத்தில் வருகிறீர்களா?
அவருடைய நுகத்தை உங்கள் மீது சுமந்துகொண்டு அவருடைய கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனாக மாற நீங்கள் வருகிறீர்களா?
வாழ்க்கையின் ஒரு பழக்கமாக நீங்கள் உங்களை அவரிடம் ஒப்புக்கொடுக்கிறீர்களா?
நீங்கள் அவரிடமிருந்து "கற்க" வருகிறீர்களா?
உங்கள் நிலைமை எதுவாக இருந்தாலும் - நிச்சயமாக அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது; அதாவது, இப்போது நிலவும் ஓய்வின் உணர்வை உங்கள் உள்ளத்தின் மையப்பகுதி வரை அனுபவித்தால் நீங்கள் அவரிடம் வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் கடந்து செல்லும் உங்கள் சலசலப்புகளுக்கு மத்தியில் வேறு யாரும் கொடுக்க முடியாத சமாதானத்தை அவர் உங்களுக்குத் தருவார். அவருடைய அழைப்பை ஏற்று, அவருக்காக உங்கள் இதயத்தை அர்ப்பணித்து தாராளமாக வாருங்கள், நீங்கள் அவரை ஏற்கனவே அறிந்திருந்தாலும் அல்லது இன்னும் அவரை அறிந்திராவிட்டாலும் அது ஒரு பொருட்டு அல்ல.
Comments