நம் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி மனம் திறந்து பேசுகிறோம். இருப்பினும், சில வார்த்தைகள் பின்னர் நம்மை தொந்தரவு செய்யும்படி திரும்பி, நம் ஆசீர்வாதங்களை கவர்ந்து செல்கிறது. சில நபர்கள் இயற்கையாகவே வெளிப்படையாக பேச முனைகிறார்கள், சிலரோ மிகவும் ஒதுங்கியவர்களாய் குறைவாகப் பேசுகிறார்கள். இருப்பினும், இரண்டு உச்சநிலைகளும் அதனதற்கான குறைபாடுகளைக் கொண்டுள்ளன; இரண்டுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் முக்கியம்.
நாம் எப்படிப் பேச வேண்டும் என்று வேதம் கற்பிக்கிறது.
1) நாவின் கையாளும் திறன் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். நீதிமொழிகள் 15:28
நம் மனம் நீதியானவைகள், நல்லொழுக்கமானவைகளைப் பேச விரும்பினாலும், பிரச்சனை நம் வாயின் துரிதமான, தீங்கிழைக்கும் இயல்பில் உள்ளது. இதன் விளைவாக, நாம் திரும்பப் பெற முடியாத வார்த்தைகளை அடிக்கடி உச்சரிக்கிறோம். கோபத்தின் இந்த தருணங்கள் மற்றவர்களுக்கு ஆழ்ந்த வலியை ஏற்படுத்தும் காயப்படுத்துகின்ற வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த கோபத்தின் பின்விளைவு ஆத்திரம், கசப்பு மற்றும் வதந்திகளுக்கு கூட வழிவகுக்கும். இந்தப் பாவங்களின் திரட்சி நாம் சுமக்கும்படி ஒரு பாரமான சுமையை உருவாக்குகிறது. சில சமயங்களில், வெளிப்படையாகப் பேசுவதும், கோபத்தில் பேசுவதும் நியாயமானது என்று சாத்தானால் நம்ப வைத்து ஏமாற்றப்படுகிறோம். நமது சக சகோதரர்கள் மீதான, நம்மில் மறைந்திருக்கும் தீங்கிழைக்கும் நோக்கங்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். மேலும், "வெளிப்படைத்தன்மையை" கோரும் போர்வையில் உங்களை கையாள முற்படுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
நம் மனம் நல்ல விஷயங்களைச் சொல்ல விரும்பினாலும், "நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி,” என்று யாக்கோபு அதை நன்றாக எழுதுகிறார்,
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக் கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான். நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! யாக்கோபு 3:2,6
நீ கேடுகளைச் செய்ய எத்தனம் பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. சங்கீதம் 52:2
யாக்கோபு ஒரு சரியான ஆலோசனையை வழங்குகிறார், பின்வரும் காரியங்களை செய்வதற்குத் தேடுவதன் மூலம் அனல் கக்குகின்ற நாவைக் கட்டுப்படுத்தலாம். ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. யாக்கோபு 1:19-20
கேளுங்கள் - கேட்பதற்கு முன்பாகவே பதில் பேசாதீர்கள் – “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும்”.
பொறுமையாயிருங்கள் - கேட்பதற்குத் தீவிரமாக இருக்கிற முதல் படியை நாம் கடைப்பிடிக்கும் போது, நாம் என்ன பதிலளிக்க வேண்டும் என்பதற்கு மனம் யோசிக்கும். அடுத்த கட்டம் பொறுமையாக இருக்க வேண்டும் – “பேசுகிறதற்குப் பொறுமையாயும்,கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;”.
இது முக்கியமான விஷயத்தை உருவாக்குகிறது - இது மனித ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் தேவனின் திட்டத்திற்கு வழிவகுக்கிறது.
2) இச்சையடக்கம் என்ற கனியைத் தேடுதல்
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். மத்தேயு 12:36-37
தாங்கள் வெளிப்படையானவர்கள் என்றும் வெளிப்படையாக இருப்பதால் வந்த வார்த்தைகள் என்றும் பலர் கூறுகிறார்கள். இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நியாயத்தீர்ப்பு நாளில் நம்மீது பயன்படுத்தப்படும்.
பேசப்படும் ஒவ்வொரு வீணான வார்த்தைகளுக்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும் – “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்”.
நமது வார்த்தைகளின் நிமித்தம் நாம் விடுவிக்கப்படுவதும் கண்டிக்கப்படுவதும் நம் கைகளில் தான் உள்ளது – “ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்”.
எனவே, என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும் என்று நமக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வி எழுகிறது. இது இச்சையடக்கம் என்ற தேவனின் ஆவியின் கனியிலிருந்து வருகிறது.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கலாத்தியர் 5:22-23
“ஆவியின் கனியோ, அன்பு, ... இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” என்று வேதம் கூறுகிறது. ஆவியின் முதற்கனி நம்மிடம் இருக்கும்போது, "வீணான வார்த்தைகளைப்" பேசுவதிலிருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம்.
தேவன் யோசேப்பின் காரியத்தில் இதை நிரூபித்துள்ளார். யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டார். மேலும், தனது சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டபோது, அவர் இச்சையடக்கத்தின் ஆவியினால் அமைதியாக இருந்தார்.
யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ளவந்தோம் என்றார்கள். யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள். அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான். ஆதியாகமம் 42:7,23,24
ஆதியாகமம் 45:1-5 இல், அவர் மீண்டும் பேசுகிறார்.
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள்,பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். யோசேப்பு தன் சகோதரரைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். ஆதியாகமம் 45:1-5
உங்கள் ஜெபங்களில், இச்சையடக்கத்தின் ஆவிக்காக தேவனிடம் ஊக்கமாக கேளுங்கள். அவர் நமக்கு கொடுக்கக் காத்திருக்கிறார், நம் வீணான வார்த்தைகளால் நாம் யாரும் நியாயம் தீர்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை.
3) அழைக்கப்படும் வரை பேசாதிருங்கள்
"என்ன" பேசுகிறோம் என்பது மட்டுமல்ல, "யாரிடம்" பேசுகிறோம் என்பதும் முக்கியம் - ".... உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். மத்தேயு 7:6
தேவன் கனவு மூலமாகவோ, தரிசனம் அல்லது தீர்க்கதரிசன வார்த்தை மூலமாகவோ உங்களுக்கு ஏதாவது வெளிப்படுத்தினால், உடனடியாக அதை எல்லாருக்கும் அறிக்கை பண்ண வேண்டாம்.
“உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது - விலைமதிப்பற்ற நற்செய்தியின் முத்துக்கள் / அவர்களின் பாவங்களின் வெளிப்பாடுகள் போன்றவை அவிசுவாசிகளை குழப்பமடையச் செய்யும். ஏனெனில், அவர்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டுள்ளனர்.
வெளிப்படுத்தப்பட்ட இந்த வார்த்தைகளை, குறித்த காலத்திற்கு முன்பாக நாம் பேசினால், ஒரு நபரின் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்போம் – “போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்”.
தேவனிடம் இருந்து வந்த "வெளிப்படுத்துதல்" மற்றும் பிறருக்கு "அறிக்கை பண்ணுவது" ஆகியவற்றிற்கு இடையில் நமக்குள்"தியானிப்பதற்கு" ஒரு நேரம் இருக்க வேண்டும்.
“ஆலோசிக்கவும்", "பகுத்தறியவும்" நேரம் ஒதுக்குங்கள் - தேவைப்பட்டால் சில மூப்பர்கள்/மூத்தவர்களுடன் ஆலோசியுங்கள் - அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். 1 கொரிந்தியர் 14:30. “அமைதலாயிருப்பது” - ஆவியின் கடைசி கனி!!!
தானியேலுக்கு ஒரு கனவும் வெளிப்பாடும் கிடைத்தது, அவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதை வெளிப்படுத்தவில்லை. அந்த விஷயத்தை தனக்குள்ளேயே வைத்திருந்து அமைதியாக இருந்தார். அதை யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர் தனக்குள்ளேயே தியானித்துக் கொண்டிருந்து, எப்பொழுதும் போல், ராஜாவின் அரண்மனைக்கு வேலைக்குச் சென்றார்.
தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது. அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன். தானியேல் 7:15,28
தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை. தானியேல் 8:27
சுருக்கம்
வெளிப்படைத்தன்மை என்று சொல்லிக் கொண்டு உங்களை யாரும் "கையாள" முயற்சிக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள். யாரும் உங்கள் மனதை "படிக்க" அனுமதிக்காதீர்கள் அல்லது இடம் கொடுக்காதீர்கள்!
உங்கள் நாவுகள் உங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக தேவனால் கட்டுப்படுத்தப்பட அனுமதிக்க வேண்டி அவரிடம் ஜெபியுங்கள். அவரிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு தாவீதைப் போல ஜெபியுங்கள். என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது. சங்கீதம் 141:2
Comments