top of page
Kirupakaran

அடிப்படைகளுக்குத் திரும்புவோம்


நாம் ஏதாவது விளையாட்டில் ஈடுபட்டிருந்தால், ஒவ்வொரு நாளும் பயிற்சிக்கு வரும்போது நாம் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை காரியங்களை பயிற்சியாளர் வலியுறுத்துவார். அதுபோலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நாம் கிறிஸ்துவோடு நடக்கும்போது சில அடிப்படை உண்மைகளை மறந்து சறுக்கி விடுகிறோம். எனவே, புதிய உடன்படிக்கையின் அடிப்படைகளை நாம் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.


கிறிஸ்து நம்மில் என்ன திட்டமிட்டிருக்கிறார், நாம் பிரகாசிக்கும்படி நம் வாழ்வில் அவர் விரும்பும் ஒளி, நம் ஒவ்வொருவருக்கும் அவர் திட்டமிட்டுள்ள ஆசீர்வாதங்கள் இவை எல்லாவற்றையும் உணர்ந்து அதன் முழுமையைப் பெற நாம் அடிப்படை உண்மைகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். கிறிஸ்துவின் முழுமையில் நடக்க நாம் இந்த அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். 2 கொரிந்தியர் 4:7-10 வரையிலான வசனங்களில் பவுல் மூன்று விஷயங்களை வெளிப்படுத்துகிறார்.


“இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்”. 2 கொரிந்தியர் 4: 7-10


மாம்சம் / ஆவி தொடர்பு

நமது மாம்சம் தேவனோடு எவ்வாறு இணைக்கப்பட வேண்டும் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் அடிப்படை ஆகும். இதைப் புரிந்து கொள்ள, வசனம் 7 ஐ வாசிக்கலாம்.

“இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்”. 2 கொரிந்தியர் 4: 7


மண் பாண்டம்

  • இதைப் படிக்கும் போது நம் கண்கள் பொக்கிஷங்களைக் கவனித்து அந்த ஆசீர்வாதத்தை எப்படிப் பெறுவது என்று தேட முற்படுகிறோம், ஏனென்றால் நம் மனம் முதலில் ஆசீர்வாதத்தை மட்டுமே தேடுகிறது. பொக்கிஷங்களைப் பார்ப்பதற்கு முன் "மண் பாண்டங்கள்" என்ற வார்தையைப் பாருங்கள். மண் பாண்டம் என்பது களி மண்ணால் செய்யப்பட்ட ஒரு பானை.

  • இங்கே பவுல் சொல்வது என்னவென்றால், நாம் யாவரும் வெறுமையான களிமண் பானைகள் தான். ஆவியானவர் நம்மில் வாசம் செய்யாமலும், தேவனின் வல்லமையை ஆவியானவர் நம் மூலம் கிறிஸ்துவின் குணாதிசயமாகவும், ஜீவனாகவும் வெளிப்படுத்தாமலும் இருந்தால், நாம் வெறும் மண் பானைகளாக இருப்போம்.

  • நீங்கள் காலையில் எழுந்ததும், கண்ணாடியைப் பார்த்து, “காலை வணக்கம், நான் வெறுமையான மண் பானை, கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் தான் பொக்கிஷம். இன்று நீங்கள் என் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள்.

பொக்கிஷம்

  • இப்போது "பொக்கிஷம்" என்ற வார்த்தையைக் குறித்து பார்க்கலாம். இது நாம் செல்வத்தை சேகரிக்கும் வார்த்தை. இது உலகில் இருந்து ஒரே இரவில் குவிக்கக்கூடிய செல்வம் அல்ல. அதாவது, ஒரே இரவில் செல்வத்தை சேகரிக்கவும் செய்யலாம். ஒரே இரவில் அது இல்லாமலும் போய்விடலாம்.

  • இந்தச் செல்வம் நிதானமாக சேகரிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான், என்றைக்கும் நிலைத்து நின்று செல்வமாகத் தொடரும். பொக்கிஷம் என்பது விலைமதிப்பற்ற மதிப்புமிக்க பொருட்களையும் குறிக்கிறது. கிறிஸ்து நம்மில் இருக்கும்போது கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்று இங்கே பவுல் குறிப்பிடுகிறார். தேவனுடைய நகைகள் விசுவாசிகளின் வாழ்க்கையில் செல்வமாக சேர்த்து வைக்கப்படும். கிறிஸ்துவின் வாழ்க்கை, அன்பின் ஒளி, மண் பாண்டங்களில் பரிசுத்த ஆவியாக நம்மில் வாழ வந்துள்ளது.

மேம்பட்ட வல்லமை

நம் சுயத்தை சார்ந்திருக்காமல் அவரையே சார்ந்திருக்கும் படி அவருடைய வல்லமையைக் காட்டுகின்ற தேவனின் இந்த பொக்கிஷம் நம்மிடம் உள்ளது. நீங்கள் உங்களை ஒப்புக்கொடுத்து "ஆண்டவரே, என்னால் முடியாது, என் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள் அப்பா" என்று கூறுங்கள்.


நினைவில் கொள்ளுங்கள்

  • நீங்கள் ஒரு காலியான களிமண் பானை.

  • தேவன் நமக்குள் பொக்கிஷமாக வாழ்கிறார்.

  • ஆண்டவருடைய அதீத வல்லமை உங்களுக்குள் வெளிப்பட வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவருடைய பொக்கிஷத்திற்கு விட்டுக் கொடுங்கள்.

வாழ்க்கைப் பாடுகளை எதிர்நோக்குங்கள்

“நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.” 2 கொரிந்தியர் 4: 8-9

  • பொக்கிஷத்தை வெளிப்படுத்த நாம் கற்றுக் கொள்ளும்போதும், நம் சுயத்தை சாராமல் அவருடைய பலம் மற்றும் வல்லமையை சார்ந்திருக்கக் கற்றுக் கொள்ளும்போதும் யுத்தம் தொடங்குகிறது என்று 8-9 வசனங்களில் பவுல் காட்டுகிறார்.

  • இந்தப் போராட்டங்களைத் தானே கடந்து சென்ற பவுல் இதை விளக்குகிறார். இந்த சத்தியத்தை நமக்குக் கற்பிக்க பவுலை விட சிறந்த நபர் யாரும் இல்லை. அவர் மண் பானையின் பாதிப்பைக் காட்டுகிறார். நாம் களிமண் பானைகள், நாம் பலவீனமாக இருக்கிறோம். இந்தப் போராட்டங்களில் நாம் ஓடும்போது, என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நேரங்கள் வரப்போகிறது. பல சமயங்களில், நாம் நசுக்கப்பட்டு தொலைந்து போனது போல நிற்கப் போகிறோம் என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

  • கிறிஸ்து அவருடைய பொக்கிஷங்களுடன் நம்மில் வெளிப்பட அனுமதிக்கும்போது, ஒளி பிரகாசிக்கத் தொடங்கும். எந்த ஒரு காரணமும் இல்லாமல் மக்கள் நீங்கள் செய்யும் செயலை வெறுக்கலாம், சில சமயங்களில் உங்களோடு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள் உங்களை வெறுக்கவும் எதிர்க்கவும் செய்வார்கள். இதற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இயேசுவின் ஒளி உங்கள் வழியாக பிரகாசிப்பதால் தான் இந்த எதிர்ப்பு. பவுல் இதை எவ்வாறு விளக்குகிறார் என்று பாருங்கள்.

    • எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை;

    • கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;

    • துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை;

    • கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.

  • எல்லாப்பக்கத்திலும் நெருக்கம், கலக்கம், துன்புறுத்தல், தள்ளப்படுதல் என உங்களுக்கு எல்லா போராட்டங்களும் உண்டு. மண் பாண்டங்கள் இயேசுவிலுள்ள பொக்கிஷங்களை நம்பி இருப்பதால் ஒடுங்கிப்போகிறதில்லை, மனமுறிவடைகிறதில்லை, கைவிடப்படுகிறதில்லை, மடிந்துபோகிறதில்லை.

  • இதை பேதுரு, 1 பேதுரு 4:14-16 இல் நன்கு பதிவு செய்கிறார்.

“நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்”. 1 பேதுரு 4: 14-16

  • “நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்”; இது பேதுரு குறிப்பிடும் அதே பொக்கிஷம்.

  • பல சமயங்களில் நாமும் நம் மாம்சத்தின் கிரியைகளால் துன்பப்படுகிறோம். இதைத்தான் அவர் குறிப்பிடுகிறார். “உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது”.

  • “ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்”. நாம் துன்பப்படுகையில், தேவனுடைய நாமம் மகிமைப்படுத்தப்படுவதற்கும் அவருடைய திட்டம் நம்மில் வெளிப்படுவதற்கும் துதிக்க வேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள்

  • “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.” மத்தேயு 10:22. இயேசு இந்த வார்த்தைகளை தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்தார்.

  • இயேசுவும் உலகத்தில் இருந்தபோது பல துன்பங்களை அனுபவித்தார், எனவே நீங்கள் கடந்து செல்வது உங்களுக்கு மட்டும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. எனவே நாம் தைரியமாகச் சொல்வோம், “அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே”. எபிரேயர் 13:6


பாடுகள் வாழ்வின் பலனைத் தரும்

“கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.” 2 கொரிந்தியர் 4:10

  • நம்முடைய சுயத்தின் நிமித்தம் வரும் பாடு, தேவனை பின்பற்றுவது நிமித்தம் வரும் பாடு, இரண்டு பாடுகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இயேசுவின் நிமித்தம் உண்டான பாடுகள் மற்றும் நம்மால் உண்டான பாடுகள். பேதுரு இதை நன்றாக விளக்கியுள்ளார். “உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது”. 1 பேதுரு 4: 15

  • உலகம் உங்கள் பின்னால் வருகிறது. அவர்கள் அவரை (இயேசுவை) வெறுத்ததால், அவர்கள் நம்மையும் வெறுக்கிறார்கள், ஏனென்றால் அவர் பொக்கிஷங்கள் மற்றும் அதன் நிமித்தம் வெளிப்படும் செயல்கள் மூலம் நம்மில் வாழ்கிறார். இயேசு யோவான் 15 இல் இதை விளக்குகிறார் – “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது”. யோவான் 15:18-19

  • நமது பெரிய வாயை மூடிக் கொள்ளாமல், நமக்கு நாமே வரவழைத்துக் கொள்ளும் பாடுகளை விட கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்பது முக்கியம். தேவன் விரும்பும் செயல்களை செய்ய அழைக்கும் போது அதற்குக் கீழ்ப்படியுங்கள். அதன் விளைவாக பாடுகள் வரலாம். பரவாயில்லை, ஆனால் அந்த செயல்களை செய்வதனால் உங்கள் சரீரத்தின் மூலம் தேவனை மகிமைப்படுத்துகிறீர்கள்.

  • பவுல் நடக்கின்ற காரியங்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கொரிந்து சபையில் நடந்த பிற வழிபாட்டு முறையைக் குறித்து பேசுவதற்கு ஆவியானவரின் மூலம், அவருக்குத் தைரியம் இருந்தது. அவர் பல கஷ்டங்களைச் சந்தித்தார், சிலர் அவர் இறந்துவிட்டார் என்று கூட நினைத்தார்கள். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நற்செய்தியைத் தொடரும்படி தேவன் அவருடைய பாடுகளைப் பயன்படுத்திய விதத்தைப் பாருங்கள். நம்மை வழிநடத்தும்படி அதே ஆவி தான் தொடந்து நமக்கும் இருக்கிறது. ஆவியானவர் கட்டளையிட்டதை பவுல் செய்யாமல் இருந்திருந்தால், சிலுவையின் செயல்கள் அனைத்தும் வீணாகிப் போயிருக்கும். இதைத்தான் பவுல் 2 கொரிந்தியர் 4:10 இல் விளக்க முயற்சிக்கிறார்.

நினைவில் கொள்ளுங்கள்
  • எப்பொழுதும் இயேசு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறாரோ, நம்முடைய சுயம் அதற்கு எதிராக இருந்தாலும் கூட, அதை எடுத்துச் செல்ல வேண்டும்.

  • நீங்கள் பாடுகளை அனுபவிக்கலாம். ஆனால், பாடுகள் அவருடைய கிரியைகளின் மகிமையை நம் மூலம் வெளிப்படுத்துகிறது.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page