சமீபத்தில் காதலர் தினம் முடிந்தது - அந்த நாளின் நிகழ்வுகளை சிந்தித்துப் பார்க்கும்போது, அன்பைச் சுற்றி எவ்வளவுவணிகம் இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். காதலர் தினம் கொண்டாட பல நிறுவனங்கள் சிறப்பு கேக்சலுகைகளைக் கொடுக்கிறார்கள் , மற்றும் பூக்கடைகள் அழகிய பூ வகைகளை வைத்து இருக்கிறார்கள், உணவகங்களில்தம்பதியினருக்கு தனிப்பட்ட முறையில் கொண்டாட முன்பதிவு செய்யும் உணவகங்கள், அழகு நிலையங்களில் காதலர்களைமிகவும் அழகாக இருக்க பல அழகு பேக்கேஜ். இது போன்ற பல விளம்பரங்களை நாம் பார்க்கலாம், இது பத்தாது என்றுபொருட்களை வாங்க கடைக்கு சென்றால் பல காதலர் தின தள்ளுபடி (சாக்லேட்டுகள் / பரிசுகள்,செல்போன், வாழ்த்துஅட்டைகள் போன்றவை) பார்க்கலாம் . அன்பைச் சுற்றி எவ்வளவு வணிகம் உள்ளது சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இதைக் குறித்து சற்று இன்னும் கொஞ்சம் சிந்தித்ததில் – அன்பைக் குறித்த உலக பார்வை என்ன ? இதை கடவுள் “அன்பு”என்று அழைக்கிறாரா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது .
இந்த “உலக அன்பு” என்றால் என்ன என்பது குறித்து நான் இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது, கிரேக்கர்கள் பரிந்துரைக்கும் எட்டு வகையான அன்பு குறித்துத் தெரிந்துகொண்டேன். இது இன்று நாம் வாழ்கின்றவாழ்க்கைக்கு உண்மையாக இருக்கலாம்.
பண்டைய கிரேக்கர்கள் எட்டு அன்பு வகைகளை நம்பினர். இந்த தகவல் இணைய ஆராய்ச்சியில் நீங்கள் காணக்கூடியபொதுவானது.
ஈரோஸ் (அன்பு, உணர்ச்சிவசப்பட்ட அன்பு) - ஈரோஸ் என்பது நம்மிடம் இருக்கும் ஆர்வம், காமம் மற்றும் இன்ப அன்பு.
பிலியா (பாசமுள்ள அன்பு) - இது நம்மிடம் இருக்கும் நட்பு அன்பு.
அகபே (தன்னலமற்ற, உலகளாவிய அன்பு) - அந்நியர்களிடம் அன்பு, இயல்பு, கடவுளின் அன்பு போன்ற தன்னலமற்றஅன்பு.
ஸ்டோர்ஜ் (பழக்கமான அன்பு) - குடும்ப உறுப்பினர்களிடையே அனுபவிக்கும் பாசத்தின் இயல்பான வடிவம்ஸ்டோர்ஜ்
பித்து (வெறித்தனமான அன்பு) – அன்பு ஆவேசமாக மாறும்போது, அது பித்து ஆகிறது
லுடஸ் (விளையாட்டுத்தனமான அன்பு) - லுடஸ் என்பது அன்பின் விளையாட்டுத்தனமான வடிவம்
ப்ராக்மா (நீடித்த அன்பு) - ப்ராக்மா என்பது அர்ப்பணிப்பு, புரிதல் மற்றும் நீண்டகால சிறந்த நலன்களின்அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அன்பு
பிலாட்டியா (சுய அன்பு) - தன்னை நேசித்தல்.
எனது தலைப்பு “அகபே” என்ற இந்த கிரேக்க அன்பிலிருந்து வந்தது –- கடவுள் மீதான இந்த அன்பு என்ன, பைபிள் நமக்குஎவ்வாறு கற்பிக்கிறது?
கடவுளின் அன்பு
மத்தேயு 22: 37-40-ல் அன்பிற்கான இயேசுவின் கட்டளையை வாசிக்கிறோம்
'இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்குஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப்பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும்தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். ' மத்தேயு 22:37-40
கடவுள்நமக்குஇரண்டுகட்டளைகளைக்கொடுக்கின்றார்
1. கடவுள் மீது அன்பு – ஆண்டவர் கூறுகிறார் “ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை “ – நம்முடைய ஆண்டவர்இங்கே குறிப்பிடும் இதயம், ஆத்துமா மற்றும் மனம் - இந்த மூன்றும் தான் புனித திரித்துவம். நாம் நம் கடவுளைநேசிக்கும்போது, இந்த “மூன்றையும்” கொண்டிருக்க வேண்டும். நாம் கடவுளை நேசிக்கும்போது இவை மூன்றும்அவசியம். அவர் தொடர்ந்து கூறுவதாவது . இது முதலாம் பிரதான கற்பனை.
2. பிறரிடத்தில் அன்புகூருவது – ஆண்டவர் கூறுகிறார் – “இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீஅன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.’. நீங்கள் மீண்டும் வசனத்தைப் படித்தால். நாம்நினைவில் கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன.
a. வசனத்தின் இரண்டாம் பாதியில் தொடங்குகிறது “இதற்கு ஒப்பாயிருக்கிற” - கடவுள் மீதுள்ள அன்பு மட்டுமே கட்டளையைப் பின்பற்றுவது என்பது அல்ல`, வசனத்தின் இரண்டாம் பகுதியையும் சேர்த்து பின்பற்றவேண்டும்.
b. பிறரிடத்தில் அன்புகூருவது - பிறர் என்றால் யார் ? பிறர் என்பது சொந்த குடும்பமாக இருக்கலாம், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள நபர்களாக இருக்கலாம், அலுவலகத்தில் வேலை செய்யும் சக தோழராக இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
c. “உன்னிடத்தில்” – நாம் வெளிப்படுத்த வேண்டிய அன்பு, நாம் நம்மை எப்படி நேசிக்கிறோம் என்பது போலஇருக்க வேண்டும். இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், ஒவ்வொரு மனிதனும் தனது குடும்பத்தினரையோஅல்லது பெற்றோரையோ விட தன்னை அதிகமாக நேசிக்கிறான், அந்த அளவு நாம் அனைவரும் சுயநலமாகஇருக்கின்றோம். கடவுள் இதை நன்கு அறிந்திருந்திருக்கிறார்`, அதனால்தான் அந்த அன்பை “உன்னிடத்தில்”என்று கூறுகிறார். இத்தகைய அன்பை நாம் மற்றவர்களிடத்தில் காட்ட கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் - இது நம் நண்பர்களுக்கு மட்டும் அல்ல நம் எதிரிகளுக்கும் கூட பொருந்தும் ..
கட்டளையின் முடிவை கடவுள் ஒரு வரியில் தொகுக்கிறார் “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும்தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.”
அன்புக்கு எதிரான சாத்தானின் ஆயுதங்கள்
அன்புக்கு எதிரான சாத்தானின் இரண்டு மிகப் பெரிய ஆயுதங்கள்
a. மனிதனின் நினைவுகள்
b. மனித உணர்ச்சிகள்
நம்முடைய மூளை எல்லா நிகழ்வுகளையும் (நல்லதும், கெட்டதும்) நினைவாக பதிவுசெய்யும் திறன் கொண்டது, இது ஒரு வீடியோ கேமரா ரெக்கார்டர் போன்றது. ஒரு நாளில் நாம் செய்யும் அனைத்து காரியங்களையும்`பதிவுசெய்கிறது. நீங்கள் ஒரு விடுமுறைக்குச் சென்று ஒரு நல்ல அழகிய இடத்தைப் பார்த்தால் , அந்த நிகழ்வுஉங்கள் மனதில் அப்படியே பதிவாகிவிடும். மறுபடியும் நீங்கள் அந்த படத்தைப் பார்த்தாலோ அல்லது நினைவு கூர்ந்தாலோ அந்த நாள் / நேரம் மீண்டும் மலரும் நினைவுகளாக வரும், இது 1 வாரம் கழித்து அல்லது 10 நாட்கள்அல்லது 20 வருடங்களுக்குப் பிறகும் கூட நினைத்தால் மலரும் நினைவுகளாக வரும். கடவுளின் என்ன ஒருஅற்புதமான படைப்பு .
இதேபோல் நீங்கள் ஒருவருடன் சண்டையிடும்போது, மற்றொருவர் பேசிய புண்படுத்தும் வார்த்தை மற்றும்செயல்கள் நம் நினைவில் சேமிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் முடிந்த பிறகு (1 நாள் அல்லது பல நாட்கள்கழித்து) – சாத்தான் இந்த சம்பவத்தைக் குறித்து நம் ஞாபகப் பக்கத்தைத் தூண்டி அந்த சண்டைக்காட்சிகளை, வார்த்தையை, சூழ்நிலையை நினைவில் கொண்டு வந்து நமக்கு ஞாபகப்படுத்துவான். இதன் மூலம்உங்கள் உணர்ச்சிகளை / உணர்வுகளைத் தூண்டுவான், அநேக நேரங்களில் அந்த கோபம் நமக்கு வெறுப்புஉணர்வை கொண்டு வரும். இது தான் அவன் செய்யும் தந்திரம். ஒருவேளை நாம் அந்த கோப சம்பவத்தைமறந்தால் மற்றவர் மூலம் அதை மீண்டும் ஞாபகப்படுத்துவான்.
இந்தக் கோபம் நம்முடைய மனதில் - கசப்பு / மனக்கசப்பு / புறம்பேசும் சுபாவம் போன்றவற்றைக் கொண்டுவரும்.அந்த நபருக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டும் - இது மூலம் பழிவாங்குதல்,பகை, மனக்கசப்பு போன்றவை உருவாகும். இவ்வாறு தான் பாவம் நமக்குள் வருகின்றது.
நம் உணர்ச்சிகளை நாம் நல்லமுறையில் நிர்வாகிக்க வேண்டும். சாத்தானுக்கு பிடித்த கருவி எதிர்மறைஉணர்ச்சிகள். அதன்மூலம் நம் வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்த பயம், மனக்கசப்பு மற்றும் கவலையைப்பயன்படுத்துவான்.
சற்று யோசித்துப் பாருங்கள்
o அந்த பழைய ஞாபகம் மீண்டும் மீண்டும் வருவது மூலம் நம் மனம் கெடுகின்றது.
o மனம் கறை ஆன பிறகு அந்த உணர்ச்சிகள் நம் இதயத்தைக் கெடுக்கின்றது.
o கடவுளின் அன்பு என்பது “உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும்
உன் முழு மனதோடும்அன்புகூருவாயாக.” என்று முன்பே நாம் பார்த்தோம் .
o மனம் கெட்டப்பிறகு - கடவுளிடம் இருக்கும் அன்பு நிறுத்தப்படுகிறது.
o இதயம் கெட்டப்பிறகு - கடவுளிடம் இருக்கும் அன்பு நிறுத்தப்படுகிறது.
o இதயமும், மனமும் கெட்டப்பிறகு – நாம் செய்யும் செயல் சரியா அல்லது தவறா (கடவுளின் பார்வையில்) என்றுசொல்லும் திறனை ஆன்மா இழக்கிறது.
கடவுளின் அன்பிலிருந்து மெதுவாக விலகி, சாத்தானின் தீய வழிகளில் சிக்கி, பாவத்தைப் பெற்றெடுக்கிறோம்.
கடவுள்மீதானநம்அன்பைநாம்இழந்தவுடன், பிறர்மீதுஇருக்கும்அன்பையும் நாம்இழக்கின்றோம். இதன்மூலம்நாம் கடவுளின்கட்டளையைக்கைக்கொள்வதிலிருந்துசாத்தான்நம்மைத் தோல்வியடையச்செய்கின்றான்
கடவுளின் பதில்
உலகில் உள்ள அனைவரையும் விட நம் கடவுள் புத்திசாலி. சாத்தானின் திட்டத்தை அவர் அறிவார், அவர் சாத்தானின் தந்திரங்களில் இருந்து நம்மைக் காப்பார். அதற்கு நாம் செய்ய வேண்டியது
1. கடவுளைச் சார்ந்திருத்தல்
2. கிருபை
3. சுதந்திரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல்
1. கடவுளைச் சார்ந்திருத்தல் – எப்போதும் கடவுளைச் சார்ந்தி`ருங்கள். அவருடைய விருப்பத்தின்படி எல்லாம்செய்யுங்கள். உங்கள் வாழ்வில் கடவுளின் அன்பு எங்கு குறைந்திருக்கிறது என்பதை அவர் காண்பிப்பார். நமக்கு கடவுளின் “அன்பின் அளவுகோல்” - ஆக இந்த 10 விஷயங்கள் 1 கொரிந்தியர் 13: 4-6 இல்சொல்லப்பட்டிருக்கின்றன.
'அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்குநினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். ' 1 கொரிந்தியர் 13:4-6
நீங்கள் ஒவ்வொன்றாக படித்தால் 10 “அன்பின் செயல்கள்” சொல்லப்பட்டிருக்கின்றது. கடவுளின் எதிர்பார்ப்புகளைபூர்த்தி செய்ய இந்த அளவுகோலை நாம் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் ஜெபிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில்அன்பு இல்லாத பகுதிகளை உங்களுக்குக் காட்டும்படி கடவுளிடம் கேளுங்கள். அவர் உங்கள் பாவங்களை மனதில்நினைப்பூட்டுவார் (சாத்தான் கொண்டுவரும் நினைவுகள்), இதயத்தை சிதைக்கும் உணர்ச்சிகளை (கோபம், கசப்பு / மனக்கசப்பு அல்லது வேறு ஏதேனும் உணர்ச்சிகள் ..) காண்பிப்பார்.
நீங்கள் பாவத்தை உணர்ந்தவுடன், உங்கள் ஆத்துமா கடவுளிடம் மனந்திரும்புதலுக்காக ஏங்கும் . நீங்கள்இருதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பைக் கேட்கும்போது, கடவுள் தம் கருணையால் நம் பாவங்களைக் கழுவி, சாத்தான் கெடுக்கமுயற்சிக்கும் இந்த எண்ணங்களிலிருந்தும், செயல்களிலிருந்தும், இருதயம் / மனம் / ஆத்துமாவைசுத்தமாக்குவார்.
உங்கள் இதயத்திலிருந்து ஆண்டவரின் மன்னிப்பைப் பெற்றவுடன் இந்த எண்ணங்கள் உங்களுக்கு மீண்டும் வராது. "கடவுளின் ஆவி" முலமாக நமக்கு அந்த பாதுகாப்பைத் தருவார் .
2. கிருபை – நீங்கள் மனந்திரும்பி, கடவுளின் பாவ மன்னிப்பைக் கேட்டவுடன் - நாம் கடவுளின் அன்பில் இருப்பதைஉறுதிப்படுத்தும் படியாக அவருடைய கிருபை எப்போதும் நம்மைப் பாதுகாக்கிறது.
'சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். '1 கொரிந்தியர் 13:7
1 கொரிந்தியர் 13: 7 ஐ நீங்கள் படிக்கும்போது – சகலத்தையும் என்கிற வார்த்தை 4 முறை சொல்லப்படுகிறது. சகலத்தையும் என்பது கிருபையைக் குறிக்கிறது.
- கடவுளின் கிருபை நம்மைப் பாதுகாக்கும்.
- கடவுளின் கிருபை கடவுளின் மீதான விசுவாசத்தை அதிகரிக்கும். நாம் செய்ய வேண்டாத காரியங்களில்இருந்து நம்மைக் காக்கும்.
- நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் நிமித்தம் நமக்காக அவர் யுத்தம் செய்வார்.`
- நாம் கஷ்டங்களைத் தாண்டிச் செல்லும்போது கடவுளின் கிருபை அதைத் தாங்கும் சக்தியை நமக்குத்தரும்.
- யாராவது நமக்கு எதிராக கோபத்தைக் காட்டும்போது அவர் கிருபை நம்மைக் காத்து நமக்குப் பொறுமையைத் தரும்.
3. சுதந்திரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல்
மனிதர்களாகிய நமக்கு சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் திறன் (நல்ல / கெட்ட) வழங்கப்பட்டுள்ளது, அதுதான் கடவுள்நமக்கு அளித்த சக்தி.
'சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். கலாத்தியர் 5:13
மனம் என்ன செய்ய வேண்டுமென்று அழைக்கிறதோ அதற்கேற்ப வாழ்வதற்கான சுதந்திரத்தை நாம் தேர்வுசெய்தால், நாம் மாம்சத்தில் வாழ்கிறோம் (நமது மனித ஆசைகள்) இது பாவத்திற்கு வழிவகுக்கும்.
'பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையைநிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள்செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ' கலாத்தியர்5:16-17
நாம் பின்பற்ற வேண்டிய மூன்று விஷயங்களை கடவுளுடைய வார்த்தை தெளிவாகக் கூறுகிறது
1. நாம் கடவுளைச் சார்ந்து இருந்தால் “ அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்”. நம்முடையசுயத்தால் (சதை) நம்மை ஆள முடியாது, மேலும் நாம் வெளிப்படுத்தும்படி கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும்அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
2. இரண்டும் மாறாக உள்ளன – ‘ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது’ இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும், கோபம் நம்மில் வரும்போது, கடவுள் ஆவியை வெளிப்படுத்தி சாத்தான் நமக்கு எதிராககொண்டுவரும் தந்திரங்களை வெளிப்படுத்துவார். குழப்பத்தின் மத்தியில் அமைதியையும் தருவார். அதிலிருந்துவெளியே வர ஒரு வழியையும் காட்டுவார்.
3. நாம் கடவுளைச் சார்ந்து இருக்கும்போது நம் விருப்பப்படி நாம் செய்யக் கூடாது, அந்த சூழ்நிலைகளில்உங்களை வழிநடத்த கடவுளிடம் கேளுங்கள், அவர் உங்களை வழிநடத்துவார்
சுருக்கம்
o கடவுள் நமக்கு இரண்டு கட்டளைகளைக் கொடுக்கின்றார்
- கடவுளின் அன்பு - இதயம் / மனம் மற்றும் ஆன்மா – இது கடவுளின் திரித்துவம்
- நம்மை நேசிப்பது போல பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும்
o அன்பை அழிக்க சாத்தானின் ஆயுதம்
- நினைவுகள் - நினைவுகள் மனதைக் கெடுக்கின்றது
- உணர்ச்சிகள் - உணர்ச்சிகள் இதயத்தைக் கெடுக்கின்றது
- இதயமும், மனமும் கெடுகின்ற போது – நாம் செய்யும் செயல் சரியா அல்லது தவறா (கடவுளின் பார்வையில்) என்று சொல்லும் திறனை ஆன்மா இழக்கிறது.
- கடவுள் மீதான உங்கள் அன்பை இழந்தவுடன், பிறர் மீது இருக்கும் அன்பையும் நாம் இழக்கின்றோம். இதன்மூலம் கடவுளின் கட்டளைகளைக் கைக்கொள்வதில் தோல்வி அடைகிறோம்.
o சாத்தானை எதிர்ப்பதற்கான கடவுளின் நடவடிக்கைகள்
- கடவுளைச் சார்ந்திருத்தல் – நீங்கள் கடவுளிடம் ஜெபியுங்கள், கடவுள் உங்களுடைய பாவங்களை உங்களுக்குஉணர்த்துவார், மன்னிப்பின் பாதையில் நடத்துவார்.
- கடவுளின் கிருபை - நீங்கள் அவரைச் சார்ந்து இருக்கும்போது அவருடைய கிருபை “எப்போதும்” உங்களைத்தொடரும்.
- உங்கள் சுதந்திரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி மாம்சத்திற்கு (உங்கள் சொந்த ஆசைகளுக்கு) இடமளிக்காதிருங்கள்.உங்களை வழிநடத்த கடவுளிடம்கேளுங்கள், அவருடைய கிருபை உங்களைக்காக்கும்.
நம்முடைய இருதயம், மனம் மற்றும் ஆத்துமாவைக் கட்டுப்படுத்தி கடவுளின் அன்பில் வழிநடத்த அவரிடம் கேட்போம்.
Comments