top of page
Kirupakaran

40/40


இது என்ன 40/40 என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பைபிளில் ஆவிக்குரிய பயணத்தில் மாற்றத்தின் முக்கிய மைல்கற்களான பல 40 சம்பவங்கள் இருந்தன.


- 40 வருடங்களாக இஸ்ரேலியர்கள் வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருந்தனர்.

- நோவாவின் காலத்தில் வெள்ளம் 40 நாட்கள் நீடித்தது.

- இயேசு 40 பகல் மற்றும் 40 இரவுகள் சோதிக்கப்பட்டார்.


இந்தப் பதிவில், நம்முடைய இயேசு அனுபவித்த சோதனைகளிலிருந்தும், அவருடைய அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

இயேசு சோதனைகளை மேற்கொண்ட அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய காரியங்கள் உள்ளன.


இந்த கதையை நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், நம் நினைவுகளை புதுப்பிப்பதற்காக இதை சேர்ந்து படிக்கலாம்.


'அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும்பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர்தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன்அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்றுஎழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல்அவரை நிறுத்தி, நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக்கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய்எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும்எழுதியிருக்கிறதே என்றார். மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகலராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். ' மத்தேயு 4:1-11


இதற்கு முந்தைய அத்தியாயம் மத் 3: 13-17 ஐ வாசித்துப் பார்த்தால் இந்த சோதனையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். அவருடைய முந்தைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம் (மத் 3 vs மத் 4).


  1. வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி "இவர் என்னுடைய நேச குமாரன்; நான் இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்தது - மத் 3:17; இப்போது சாத்தானால் தாக்கப்பட்ட நிலை.

  2. பிறகு தண்ணீரில் ஞானஸ்நானம்; இப்போது சோதனையின் நெருப்பு.

  3. மத் 4: 1 இல், "பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு இயேசு ஆவியினால் வனாந்தரத்திற்குள் வழிநடத்தப்பட்டார்" என்று வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியால் சோதிக்க முடியாது, இதை நன்கு புரிந்துகொள்ளுங்கள். ஆனால், பரிசுத்த ஆவியானவர் நம்மை சோதிக்கப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்லலாம். நம்மை ஆவிக்குரிய வாழ்விலே மென்மேலும் பலப்படுத்தவே இவ்வாறு செய்கிறார்.

  4. இயேசு ஆவியில் வளர்வதற்கு உதவியாக அவர் சோதிக்கப்படத் தேவையில்லை. எபிரேயரில் சொல்லப்பட்டது போல அவர் நம்மோடு அடையாளம் காணப்படவும் மேலும் அவருடைய குற்றமற்ற, பரிசுத்தமான தன்மையை நமக்கு வெளிப்படுத்துவதற்காகவுமே அவர் சோதனைகளை சகித்துக் கொண்டார்.

'ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்யவல்லவராயிருக்கிறார்.' எபிரெயர் 2:18


'நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல்சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். 'எபிரெயர் 4:15


நீங்கள் மத் 4: 1-11 ஐ வாசித்தால், இயேசு பிசாசால் மூன்று முறை சோதிக்கப்பட்டார் என்று அறிய முடியும். ஒவ்வொரு சோதனையின்மூலமும் ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதற்கு நாம் நிறைய காரியங்களைக் கற்றுக் கொள்ளலாம்.


முதல் சோதனை - மாம்சத்தின் இச்சைக்கு ஒரு அழைப்பு


'அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில்வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். ' மத்தேயு 4:2-3


  • "அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து" என்று மத்தேயு எழுதுவதை கவனிக்கவும். நம் வாழ்வில், சோதனைக்காரன் ஆகிய சாத்தான் எப்போது வருவான் என்பது ஒரு கேள்வி. இது ஒரு முறை நிகழும் நிகழ்வும் அல்ல, அது நமக்கு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் மரணம் வரை சோதனையை எதிர்கொள்ள வேண்டும்.

  • இயேசுவின் சோதனைக்கு முந்தைய சூழ்நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்:

    • அவரது சோதனைக்கு முன் அவர் குறிப்பாக பக்தியுள்ள மனநிலையில் இருந்தார்.

    • அவர் சோதனைக்கு முன் எல்லார் முன்னிலையிலும் தனது தந்தையின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்திருந்தார்.

    • அவர் தனது சோதனைக்கு முன் மிகவும் தாழ்மையான மனநிலையில் இருந்தார்.

    • அவரது சோதனைக்கு முன் அவருடைய மகத்துவத்தின் பரலோக உத்தரவாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டார்.

    • அவர் சோதனைக்கு முன் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்.

    • அவர் சோதனைக்கு முன் உலகத்திலிருந்து முற்றிலும் பிரிந்த நிலையில் இருந்தார்.

    • நீர் தேவனுடைய குமாரனேயானால்” - சாத்தானால் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு உண்மையில் ”நீர் தேவனுடைய குமாரனாய் இருப்பதனால்” என்றே அர்த்தம். எனவே, “நீ தேவனுடைய மகனாய் / மகளாய் இருப்பதனால்” என்று சாத்தான் நம்மிடம் கூறும் பொழுது ஜாக்கிரதையாய் இருப்போம்.

  • இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.” - சாத்தான் இயேசுவிடம் அவரது அதிசய சக்தியைப் பயன்படுத்தி அவனுக்கு உணவு கொடுக்கும்படி சொன்னான். ஆனால் சாத்தானின் தூண்டுதலின் படி கற்களை அப்பங்களாக மாற்ற இயேசு கட்டளை கொடுக்கவில்லை.

  • இயேசு தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டு சோதனையை எதிர்த்துப் போராடினார்.

'அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். ' மத்தேயு 4:4

  • தேவனுடைய வார்த்தையின் சக்தியையும், சத்தியத்தையும் சார்ந்து "என்று எழுதியிருக்கிறதே" என்று கூறினார். இயேசு இந்தப் போரில் ஒரு மனிதனாகப் போராடத் தயாராக இருந்தார். அவர் சாத்தானை எளிதாக மற்றொரு விண்மீன் மண்டலத்தில் தள்ளி கண்டித்திருக்கலாம். ஆனால், நாம் அவரைப் பின்பற்றுவதற்காகவும் நம்மோடு ஒருவராக அடையாளம் காணப்படுவதற்காகவும் அவனை எதிர்த்தார்.

  • சாத்தானின் சோதனையை எதிர்த்துப் போராட இயேசு வேதத்தைப் பயன்படுத்தினார், நம்மால் அணுகமுடியாத ஆவிக்குரிய சக்திகளைக் கொண்டு அல்ல. இயேசு இந்தப் போரில் முழு மனிதனாகப் போரிட்டார். மேலும், நமக்குக்கிடைத்த அதே வேதத்தை கொண்டு தான் போராடினார். இது நமக்கு ஒரு பெரிய உதாரணம்.


இரண்டாவது சோதனை - வாழ்க்கையின் பெருமைக்கு ஒரு அழைப்பு


'அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, நீர்தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமதுபாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்றுசொன்னான். ' மத்தேயு 4:5-6


  • இயேசு முதல் சோதனையின் போது சொன்ன பதிலாகிய “என்பதாய் எழுதியிருக்கிறது” என்ற வார்த்தையையே சாத்தான்இரண்டாவது சோதனையின் போது பயன்படுத்துகிறான். பிசாசு பைபிளை மனப்பாடம் செய்து அதை நன்கு அறிவான், மேலும் நம்மைக் குழப்ப தேவனுடைய வார்த்தையை மேற்கோள் காட்டுவதில் மிகப் பெரிய தந்திரவாதி.

  • நாம் வார்த்தையை நன்கு வேரூன்றி அறிந்திருந்தால் மட்டும் சோதனையை எதிர்த்துப் போராட முடியும், இல்லாவிட்டால் போராடுவது கடினம். சாத்தான் ஏமாற்றுவதில் வல்லவன், நாம் படித்த காரியத்தில் தெளிவு இல்லாமல் இருந்தால் அதே பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி நம்மை சற்று குழப்பி பாவத்திற்கு வழி காட்டிவிடுவான்.

  • சாத்தான் இயேசுவை சோதிக்க பெருமையை தூண்டுகிறான் "நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்". ஆனால் நம் ஆண்டவர் கடவுளின் வார்த்தையை வைத்து சாத்தானை எதிர்த்துப் போராடுகிறார்.

  • இயேசு மீண்டும் 2 வது சோதனையை வசனத்தை வைத்துப் போராடினார், “'அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். 'மத்தேயு 4:7

  • இயேசு வேதத்தைக் கொண்டே பதிலளித்தார். ஆனால் சரியாகப் பயன்படுத்தினார். சோதனையை எதிர்த்துப் போராட அவர் கடவுளின் வார்த்தையைப் பயன்படுத்தினார்.

மூன்றாவது சோதனை - கண்களின் இச்சைக்கு ஒரு அழைப்பு


'மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 'மத்தேயு 4:8-9


  • மூன்றாவது முறையாக அவன் இயேசுவுக்கு கண்களின் இச்சையைக் காட்ட விரும்பினான். எனவே ஒரு உயர்ந்த மலைக்குக்கொண்டு செல்கிறான். "'மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய்".

  • பிசாசு ஏமாற்றுவதில் தந்திரவாதி. இயேசு உலகை படைத்தவர் / உருவாக்கியவர் என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அவன்உலகத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக பாசாங்கு செய்கிறான் மற்றும் உலகின் சிறப்பைக் காட்டி இயேசுவை மயக்க சூழ்ச்சிக்கிறான்.

  • சாத்தானை வழிபடவும், அங்கீகரிக்கவும் இவையெல்லாம் செய்கிறான். “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால்”

  • ஆனால் இயேசு அவரை விட்டுத் தப்பி ஓடும் படி கட்டளையிட்டார் – “'அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். மத்தேயு 4:10-11

  • அந்த உடனடி தருணமே “அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான்”.

  • நமக்குக் கொடுக்கப்பட்ட அதே அதிகாரத்தைக் குறித்து யாக்கோபு புத்தகத்தில் பவுல் இவ்வாறு எழுதுகிறார், 'ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். ' யாக்கோபு 4:7


நம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய காரியங்கள்


  • சோதனையானது கிறிஸ்துவை நம்பாதவர்களை விட விசுவாசிகளுக்கு அதிகம் வருகிறது. காரணம் நாம் கிறிஸ்துவை வழிபடுவதை விட்டுவிட்டு சாத்தானை பின்பற்ற வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான்.

  • சில சமயங்களில் தேவனின் ஆவி நம்மை சோதிக்கப்படும் இடத்திற்கு இட்டுச் செல்லலாம். அது நமது உண்மையான இறையாண்மை கிறிஸ்துவில் இருக்கிறதா அல்லது கிறிஸ்துவுக்கு வெளியே நாம் பலவீனமான வாழ்க்கையை வாழ்கிறோமா என்று உணர்த்துவதற்காக செய்யப்படும் ஒரு செயல்

  • சோதனைகள் - பொய்கள் மற்றும் தந்திரங்களுடன் மட்டுமே வரும். அவற்றில் சில பொய் என்று நம்ப முடியாத அளவிற்கு உண்மையைப் போலவே தோன்றும். அவன் வேதத்தைக் குறிக்கோள் காட்டி அது தேவனிடத்திலிருந்து வந்தது என்றும் நாம் செய்வது ஆவிக்குரிய வழியில் சரியே என்றும் நம்ப வைப்பான்.

  • சோதனையின் நோக்கம் நம்மை பாவத்தில் விழ வைப்பதுதான். ஆனால் இயேசு பாவத்திற்கு எதிரானவர், இது சாத்தான் நம்மை இயேசுவுடன் பயன்படுத்தும் ஆவிக்குரிய போர்.

  • தேவனுடைய வார்த்தையால் ("வேதாகமம்") மட்டுமே இந்த சோதனையை எதிர்கொள்ள முடியும். உங்களுக்கு வேதம்தெரிந்திருந்தால், உங்களுக்குத் தெரிந்ததை விட இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் தெரிந்து கொண்ட அளவோடு நிறுத்தாதீர்கள். சாத்தானுக்கு நீங்கள் நினைப்பதை விட ஆழமாகத் தெரியும்.

  • சாத்தான் பலமுறை சோதிக்கிறான். இந்த தந்திரத்திற்கு உங்களை அடிபணியச் செய்வதற்கு பெரும்பாலும் 3 முறை வெவ்வேறு வழிமுறைகளில் சோதிக்கிறான். இயேசுவின் சோதனைகளிலிருந்து இது முதல் முறையாகவும், 2 வது முறையாகவும், 3 வது முறையாகவும் எப்படி சொல்லப்பட்டது என்பதைக் கவனியுங்கள்.

  • மனிதனின் ஞானம் சாத்தானுடைய பொய்களுக்கும், தந்திரங்களுக்கும் பொருந்தாது. கடவுளின் ஆவியோடு நாம் அதை எதிர்க்க வேண்டும். பரிசுத்த ஆவியினால் மட்டுமே இந்த தந்திரங்களை சவாலோடு எதிர்த்துப் போராட முடியும்.

  • ஏமாற்றத்தை எதிர்ப்பதற்கான ஒரே சிறந்த வழியை இயேசு காட்டினார்: தேவனின் சத்தியம், மனிதனின் ஞானம் அல்ல. முதலாவது சோதனை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் - அது ஒரு பொய். நாம் கடவுளின் வார்த்தையுடன் சோதனையை எதிர்த்துப் போராட வேண்டும். பிறகு, நாம் எப்போதும் நம்மை சத்தியத்தில் கட்டியெழுப்ப வேண்டும். அதை நம் இதயத்தில் வைத்திருக்க வேண்டும்.

  • " பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான்" என்று நாம் படித்தோம். அப்படி என்றால் இயேசு வெற்றி பெற்றார். சாத்தானின் தாக்குதல் முறையையும் பொய்களையும் அவர் உணர்ந்ததால் அவர் வெற்றி பெற்றார். முதன்மையாக, சாத்தான் ஒரு ஏமாற்றுக்காரன் மற்றும் சிலுவையின் வெளிச்சத்தில் வாழ்பவர்களுக்கு ஏமாற்றுதல் மட்டுமே அவனது கருவி.ஏனென்றால் தீயசக்திகளின் "உண்மையான" ஆயுதங்கள் மற்றும் அதிகாரங்கள் சிலுவையில் நிராயுதபாணியாக்கப்பட்டன.


'துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். ' கொலோசெயர் 2:15

60 views0 comments

Recent Posts

See All

40/40

Commenti

Valutazione 0 stelle su 5.
Non ci sono ancora valutazioni

Aggiungi una valutazione
bottom of page